Followers

Tuesday, December 16, 2014

தமிழனை காப்பாற்றிடலாம்! கவலைப்படாதீங்க.....



'கவலைப் படாதீங்கோ! தமிழனை காப்பாற்றி விடலாம்! மதுவுக்கு அடிமையானதால் உடல் இவ்வாறு பலஹீனமாயிருக்கு! கொஞ்ச நாள்ல குடிப் பழக்கத்தையும் நிறுத்த வெச்சுடறேன்'

'நாசமாப் போச்சு! அவன் உயிரை மட்டும் காப்பாத்துங்க டாக்டர்! குடியிலிருந்து மீண்டு சிந்திக்க ஆரம்பிச்சுட்டான்னா எங்க பாடு திண்டாட்டமால்ல போயிடும்! புரியறதா?'

----------------------------------------------------------

1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் NCAER என்ற தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு, இந்திய சமுதாயத்தின் பலவீனத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது எனலாம்.

கடந்த 2011- 12 ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த சர்வே, பொது மக்களிடையே நேரடியாக எடுக்கப் பட்டுள்ளது.பொருளாதார அளவில் வேறுபாடுகள் கொண்ட பல்வேறு தரப்பினரைக் கருத்தில் கொண்ட இந்த ஆய்வானது, இரண்டு கேள்விகளை முன் வைத்துள்ளது.

அந்தக் கேள்விகள் உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என்பதே.

பிராமணர்கள் 52 சதவீதம் பேரும் , முன்னேறிய சாதியினர் 24 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப் பட்டோரில் 33 சதவீதத்தினரும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்து மதத்தினர் 35 சதவீதத்தினரும்,ஜைன மதத்தினர் 30 சதவீதத்தினரும் சீக்கியர்களில் 23 சதவீதத்தினரும்,முஸ்லீம்களில் 18 சதவீதத்தினரும் தீண்டாமை, தங்களின் இல்லங்களில் இருப்பதை மறுக்காமல் கூறி உள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் ஹிந்தி பேசும் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதம்,உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதம்,இமாச்சலில் 50 சதவீதம், சத்தீஸ்கரில் 48 சதவீதம்,ராஜஸ்தான் பீகாரில் 47 சதவீதம்,உத்தரகாண்டில் 40 சதவீத மும் `தீண்டாமை` என்பது தங்களின் நிழல் போல ஒட்டிக் கொண்டுள்ளதை ஆய்வில் பதிலாக அளித்துள்ளனர்.

தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்கு வங்காளம 1 சதவீதம்,கேரளாவில் 2 சதவீதம் என்று சர்வே கூறுகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களின் நிலைமை பின்னர் வரவிருக்கும் விரிவான அறிக்கையில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அமித் தோரட், "சமூக அடிப்படையில் சாதிய உணர்வு, மக்களோடு ஒன்றி கலந்து உள்ளது. சமுதாயத்தில் இருந்து தீண்டாமையினை அகற்றுவது கடினமே" என்கிறார்.

தகவல் உதவி:
விகடன்.காம்
29-11-2014


No comments: