'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, December 24, 2014
இயக்குனர் கே.பாலசந்தர் மறைந்தார்!
திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி பாணியை கைக்கொண்டு அதனை வெற்றியாக்கியும் காட்டியவர் பாலசந்தர். நான் சிறுவனாக இருக்கும் போதே இவரது படங்களின் மேல் ஒரு அலாதி பிரியம் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு செய்தியை சொல்லுவார். ஒரு டைரக்கடருக்காக படம் ஓடியது என்றால் அது இவருக்காகத்தான் இருக்கும்.
தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி, வறுமையின் நிறம் சிகப்பு, அரங்கேற்றம், சிந்து பைலவி போன்ற படங்கள் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டவைகளில் ஒன்றிரண்டு. தான் பார்பன சமூகமாக இருந்தாலும் அந்த இனத்தில் எந்த பொருளாதார முன்னேற்பாடும் இல்லாமல் வரிசையாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு அதனால் அந்த குடும்பம் எந்த அளவு சீரழிகிறது என்பதை 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் சமூகத்துக்கு சொன்னவர். தான் டாக்டராக வேண்டும் என்பதற்காக தனது மானத்தையே இழந்த தனது அக்காவை வீட்டை விட்டு கமலஹாசன் வெளியே துறத்துவதாகட்டும், கெட்டுப் பொன அந்த பெண்ணுக்கு வாழ்வு தருவதாக ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தங்க முத்து முன் வருவதாக காட்டியதாகட்டும் என்று பல இடங்களில் தனது முத்திரையை பதித்து விடுவார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு குடும்பத் தலைவன் சந்நியாசம் பெற்று செல்வதும் அதனால் மூத்த மகள் வேலைக்கு செல்வதையும் அவள் ஒரு தொடர்கதையில் அழகாக காட்டியிருப்பார். அதே போல் சிந்து பைரவியில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதை 'தலையை ஆட்டும் புரியாத கூட்டம்' என்று பார்பனர்களை சாடி தமிழ் மொழியில் பாடினால் என்ன தவறு? என்று கேட்டு அங்கும் தனது முத்திரையை பதிப்பார். மொழிப் பற்று இருக்கலாம் அதுவே மொழி வெறியாக மாறிவிடக் கூடாது என்பதை 'புன்னகை மன்னனில்' அழகாக சொல்லியிருப்பார். நெற்றியில் திரு நீறு பூசிக் கொண்டு அராஜக செயல்களை செய்யும் போலி ஆத்மீக வாதிகளையும் இந்த படத்தில் அவர் சாட மறந்ததில்லை.
தனது படங்கள் அனைத்திலும் நாகேஷ் என்ற ஒரு உன்னத கலைஞனை கடைசி வரை உபயோகப்படுத்தி நகைச்சுவைக்கு ஒரு புது அத்தியாயத்தையே உருவாக்கியவர். புரட்சி இயக்குனர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் இன்று நம்மிடையே இல்லை.
கூத்தாடி குழுமத்தில் ஓரளவு அறிவு சார்ந்த படங்களை எடுத்த கேபியின் மறைவு உண்மையில் இழப்பே! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment