'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, December 14, 2014
மெஹ்தி என்ற பொறியாளர் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தாரா?
கடந்த சில ஆண்டுகளாக பகலில் வேலைக்கு செல்லும் மேக்தி, இரவு நேரத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். 'ஷமி விட்நஸ்' (@shamiwitness) என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து அதில் ஐஎஸ், ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரம் ட்விட்களை பதிவு செய்துள்ளார்.
தீவிர மத நம்பிக்கை கொண்ட மேக்தி, ஐஎஸ் அமைப்பு குறித்து அரபு மொழியில் வெளியாகும் செய்தியை உடனுக்குடன் மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்தொடர்ந்துள்ளனர். இவர்களில் 3-ல் 2 பங்கு பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள். சிலர் அதில் இணைந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுடன் மேக்தி நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளார். துருக்கி, சிரியா, லெபனான், இஸ்ரேல், எகிப்து, லிபியா நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக மாதந்தோறும் 60 ஜிபி இன்டர்நெட் டேட்டா பயன்படுத்தியுள்ளார்.
எந்த தவறும் செய்யவில்லை: கைதான மேக்தி பேட்டி:
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பெங்களூருவை சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ட்விட்டரில் செயல்படுகிறார் என பிரிட்டனை சேர்ந்த 'சேனல் 4' தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
இதையடுத்து மேக்தி எவ்வித விசாரணையும் இன்றி பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாவதற்கு முன்பாக மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் அளித்த பேட்டியில், ''எனக்கு எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை.நான் யாருக்கும் எந்த குற்றமும் செய்யவில்லை. எனது நாட்டின் சட்டத்தை எங்கேயும் மீறவில்லை. இந்தியாவுக்கு எதிராகவோ, இந்திய மக்களுக்கு எதிராகவோ எந்த வன்முறையும் நிகழ்த்தவில்லை. இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. என்னிடம் எவ்வித பயங்கர ஆயுதமும் இல்லை. இருப்பினும் என்னை கைது செய்ய வந்தால் ஓடி ஒளியமாட்டேன். என்னை பிடித்துச் சென்றால் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுத்தள்ளவும் வாய்ப்பு இருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளுடன் தொடர்பா?- நண்பர்கள் மறுப்பு:
பெங்களூருவில் மேக்தியுடன் பணியாற்றியவர்களை 'தி இந்து'சார்பாக சந்தித்து விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது:
மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸின் அப்பா மேற்குவங்க மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேக்திக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் குடும்ப சூழல் காரணமாக 2012-ம் ஆண்டு பெங்களூரு வந்தார். பொறியியல் படிப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்றதால் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
அவருக்கு தீவிர அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது என போலீஸ் கூறுவதை நம்ப முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாலை காவல்நிலையத்துக்கு வருமாறு போலீஸார் அவரை அழைத்தனர். அவருடைய செல்போன், லேப்டாப், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் எல்லாவற்றை யும் பிடுங்கிக்கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-தமிழ் இந்து நாளிதழ்
13-12-2014
ஐஎஸ் என்ற ஒரு அமைப்புக்கு ஆதரவாக ட்வீட் செய்ததும், அது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டதும் தான் இவரது கைதுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன. நமது நாட்டில் இந்தியாவின் பொருளாதாரத்தையே சீர் குலைக்கும் வேலைகளில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பேசுவதும், அதனை சமூக வலைத் தளங்களில் எழுதுவதும் அந்த அமைப்புக்கு ஆள் பிடிப்பதும் அப்பட்டமாக பொதுவெளியில் நடந்து வருகிறது. ஆனால் இந்த காரியங்களைச் செய்பவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் இரண்டு மாதம் கழித்து இந்த இளைஞரின் மேல் எந்த குற்ற செயலும் இல்லை என்று கூறி விடுவிப்பார்கள். இது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியாகி விட்டது. இதற்குள் பல இந்துத்வாவாதியினர் பின்னூட்டதில் 'என் கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்' என்று கருத்திடுகின்றனர். அவர்களை பொருத்த வரை படித்த இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை பொது மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும். அதற்கான ஒரு நடவடிக்கையே இந்த கைது படலம்.
உலகலாவிய அளவில் இஸ்லாமிய குடியரசு அமைய வேண்டும் என்று இஸ்லாம் எந்த முஸ்லிமுக்கும் கட்டளையிடவில்லை. இஸ்லாமிய எதிரிகள் அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து இஸ்லாத்தைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். அவ்வாறு உங்களை யாரும் ஐஎஸ் ஸில் இணைய சொல்லி தூதனுப்பினால் உடன் ஜமாத்தை தொடர்பு கொண்டு காவல் துறை வசம் ஒப்படையுங்கள்.
ஐஎஸ் அமைப்பு என்பதே முதலில் இஸ்லாமிய அமைப்பு அல்ல. அப்பாவிகளை கொல்வதும், பத்திரிக்கையாளர்களை கழுத்தை அறுப்பதும் அதனை வீடியோவாக்கி உலவ விடுவதும் ஒரு இஸ்லாமியன் செய்யும் செயல் அல்ல. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். இதனால் கதி கலங்கிய அந்த அரசுகள் தனது மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்கப் பார்க்கின்றன. அதன் வெளிப்பாடுகளே ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற தீவிரவாத அமைப்புகள். ஆட்சியிலிருந்த சதாம் உசேனையும், கர்னல் கடாஃபியையும் ஒரு மாதத்தில் தூக்கி எறிந்த அமெரிக்காவால் ஐஎஸ் அமைப்பை இது வரை ஒன்றும் செய்யாதிருப்பதே இதற்கு சாட்சி. பெட்ரோலையும் கோடிக்கணக்கில் இந்த தீவிரவாத அமைப்பு விற்று வருகிறது. இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமல் நடக்குமா? எனவே தீவிரவாதத்தின் முழு சூத்திதாரி அமெரிக்கா தனது செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகமெங்கும் அமைதி நிலவும். அது இல்லாத பட்சத்தில் இந்த இளைஞனைப் போல பலரும் தங்களின் வாழ்வை தொலைக்க வேண்டி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஐஎஸ் என்ற ஒரு அமைப்புக்கு ஆதரவாக ட்வீட் செய்ததும், அது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டதும் தான் இவரது கைதுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன.
இது சுவனப்பிாியனுக்கு குற்றமாகத் தொிகின்றதா? இல்லையா ?ஒரு வெளிநாட்டு காடையா்கள் கூட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது குற்றம்தான். மெஹதி குற்றவாளிதான்.
Post a Comment