தாயைப் போல பூமியின் அரவணைப்பு!
'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26
பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.
அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.
இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.
அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.
இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம். அடுத்து குர்ஆன் இந்த ஈர்ப்பு விசையை நேரிடையாக ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியும் வரலாம். 1400 வருடங்களுக்கு முன்பு பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையே நம்புவதற்கு அன்று ஆள் இல்லை. அதோடு சேர்த்து அறிவியல் புதினங்களையும் சொல்ல ஆரம்பித்தால் விளங்கவில்லை என்று ஓட ஆரம்பித்து விடுவர். எனவேதான் பல இடங்களில் குர்ஆன் அறிவியலை மிக எளிமைபடுத்தி அதனை நம் வாழ்வோடு சம்பத்தப்படுத்தி பல அரிய கருத்துகளை வெகு சாதாரணமாக சொல்லிச் செல்கிறது.
மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும். மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.
பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா? ஒரு ரயிலில் சென்றாலோ அல்லது ஒரு பேரூந்தில் சென்றாலோ நம் உடம்பு எந்த அளவு குலுங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனால் மொத்த கேலக்சியும் அசுர வேகத்தில் இடம் பெயர்ந்தாலும் ஒரு இம்மி அளவு கூட அதன் தாக்கத்தை நாம் உணராமல் தூக்கத்தையும் தொலைத்து ஃபேஸ் புக்கில் மூழ்கிக் கிடக்கிறோம். :-)
ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?
'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26
3 comments:
என்னங்க சுவன அண்ணே, இவ்ளோ பெரிய அறிவியல் குரான்ல இருக்கு இத்தன நாள் எங்களுக்கு தெரியாம போச்சே. நீங்க இத கல்லுல செதுக்கி ஊர் ஊருக்கு வச்சீசங்கண்ணா வருங்கால சந்நிதிகள் இத படிச்சி குரானையும் படிச்சி நியூட்டனை விட பெரிய விஞ்ஞானிகளிளா வருவாங்க. உங்க மதத்துக்கும், அலை போல, புயல் போல, நீங்க திணறும் அளவுக்கு ஓடி வருவாங்க. எம்மாடி, எம்மாம் பெரிய அறிவியலு.
பாவம் நியுட்டன் இப்போது இருந்திருந்தால் நொந்து போயிருப்பார். எங்களுக்கெல்லாம் பூமியை பற்றி சிறுவயதில் இருந்தே "பூமி தாய் " என்று தான் சொல்லி வந்திருக்கிறார்கள். எம் முன்னோரும் பூமியை தாயாக தான் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு இப்படி எல்லாம் தோணலியே. ஜஸ்ட் மிஸ்.
ஏனுங்க அண்ணா, உண்மைய சொன்ன வெளியிட மாட்டீங்களா. இதுவே தெரியுதே உங்க குரானோட லட்சணம். இத பரப்ப தான் துடிச்சிட்டு இருக்கீங்களா
Post a Comment