Followers

Thursday, December 18, 2014

அட்லாண்டிக் நகரத்தில் மனித நேய சேவை - முஸ்லிம்கள்



https://www.youtube.com/watch?v=6FT6TaagOCA

ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி ஏதாவது ஒரு குற்ற செயலை செய்து விட்டால் உடன் அவனை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி முகமது நபி வரை அங்கலாய்ப்பவர்களை தினமும் பார்த்து வருகிறோம். அதே முஸ்லிம்கள் உலகமெங்கும் பல இடங்களில் மனித நேய சேவைகளை செய்து வந்தாலும் அதனை மீடியாக்கள் திட்டமிட்டு மறைத்து விடுகின்றன.

அமெரிக்காவில் அட்லாண்டிக் நகரத்தில் 300 ஏழை குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்களை அளித்து இஸ்லாமியர்கள் 'வறியவர்க்கு உதவுதல்' என்ற தங்களின் மத கட்டளையை மகிழ்வோடு நிறைவேற்றினர். அமெரிக்கா முழுவதும் 49 மில்லியன் மக்கள் பசியால் வாடுவதாக கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் அமெரிக்க அரசோ தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஆயுத தொழிற் சாலைக்கு திருப்பி விட்டு சொந்த மக்களை பட்டினி போடுகிறது.

இந்நகரில் உள்ள 'மஸ்ஜித் முஹம்மது' என்ற பள்ளியின் நிர்வாகிகளும், அட்லாண்டிக் முனிசிபாலிடியும் இணைந்து இந்த அழகிய மனித நேய பணியைச் செய்துள்ளனர். 'ஜூபைதா ஃபவுண்டேஷன்' என்ற இஸ்லாமிய அமைப்பு இதற்கான நிதி உதவியை கொடுத்துள்ளது. இந்த நிகழ்வானது வருடா வருடம் இந்த பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அருகிலேயே ஒரு மினி இஸ்லாமிய நூலகமும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் மனித நேய சேவையைப் பார்த்து வியந்த ஒரு பெண் அந்த இடத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். 'நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை. நீங்களாக விரும்பித்தான் உண்மையை உணர்ந்துதான் இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?' என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பல முறை கேட்கிறார்.

'ஆம்.... நான் எனது விருப்பத்தின் பேரில்தான் இஸ்லாத்தை ஏற்கிறேன்' என்று சொன்னவுடன் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தில் இணைக்கப்பட்டார்.

மன மாற்றம் என்பது இந்த வகையில் ஏற்பட வேண்டும். ரேஷன் கார்டு தருகிறேன், ஆதார் அட்டை தருகிறேன் என்று ரோட்டோரம் குடிசைகளில் வாழும் ஏழைகளை ஆசை காட்டி நம் நாட்டில் இழுப்பது போல் இங்கு எதுவும் நடைபெறவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

No comments: