Followers

Wednesday, December 24, 2014

சிறைக் கைதிகளின் மறு வாழ்வுக்கு ஒரு அழகிய திட்டம்!



தொழில் நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி என்ற அமைப்பானது (tvtc) சவுதி முழுக்க 25 தொழிற் கூடங்களை சிறைச்சாலைகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 150 மில்லியன் சவுதி ரியால்களாகும். ராஷித் அல் ஜெஹ்ரானி இந்த தகவலை பத்திரிக்கைகளுக்கு அளித்தார்.

சிறைக் கைதிகளாக உள்ள அனைவரும் தங்களின் தண்டனை காலம் முடிந்தவுடன் திருந்தி சிறந்த மனிதர்களாக மாற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக 800 ரியால் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் இவர்கள் கைதியாக காலம் கழித்தவைகள் மறைக்கப்படும். அவர்களின் எதிர்காலம் இதனால் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி விடக் கூடாது என்ற நல்லெண்ணமே இதற்கு காரணம்.

தற்போது 4422 கைதிகள் தங்களின் தொழிற் பயிற்சியை இந்த அமைப்பின் மூலம் பெற்று வருகின்றனர். எலக்ட்ரிகல், ஆடோ மெகானிக், ஆடோ பெயிண்டிங், ஏர்கண்டிஷனிங், ஃப்ரிட்ஜ் மெகானிஷம், கார்பெண்டரி, வெல்டிங், டெய்லரிங், கம்யூட்டர் டெக்னாலஜி என்று அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-12-2014

தண்டனைக் காலம் என்பது அந்த மனிதனை திருந்தியவனாக வெளியில் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடும் சவுதி அரசாங்கத்தை நாம் பாராட்டுவோம்.

இலவச திட்டங்களை எல்லாம் ஒழித்து விட்டு நமது அரசாங்கங்களும் இது போன்ற சிறந்த திட்டங்களுக்கு பொருளாதாரத்தை செலவழிக்கலாம். ஆனால் நமது தமிழக அரசோ டாஸ் மார்க் கடைகளை நடத்தி அதிகாரிகளுக்கு 'வியாபாரத்தை மேலும் பெருக்குங்கள்' என்று அழுத்தமும் கொடுத்து வருபவர்களிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியுமா? மக்கள் வெகுண்டெழுந்தாலொழிய நமது நாட்டில் மாற்றங்கள் எழ வாய்ப்பில்லை. ஒரு அரசாங்கமானது அதன் மக்களை நேர் வழியின் பால் கொண்டு வரக் கூடியதாக இருக்க வேண்டும். சாராயத்தை ஊற்றிக் கொடுத்து அவனை மிருகமாக மாற்றும் வேலையை ஒரு அரசே செய்வது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரும் தலைக்குனிவு!




No comments: