அலகாபாத்: திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த 5 தம்பதியர்களில், கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மனைவி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருமணத்துக்காக கணவரின் மதமான இஸ்லாமுக்கு 5 பெண்களும் மதம் மாறியிருந்தனர்.
அந்த 5 தம்பதியினரும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த மனுக்கள், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதி கூறுகையில், "கடந்த 2000 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை என்ற அடிப்படையில்லாமல், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்துக்காக மட்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இந்த மனுக்கள் மீதும் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்.
மேலும் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி கூறுகையில், இந்த திருமணங்கள் அனைத்தும், புனித குரானின் சூரா 2 அயாத் 221ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். அந்தப் பிரிவில், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாத பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் இஸ்லாமியர்கள் தங்களது மகள்களை, இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைக்காதோருக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல் செய்துள்ள பெண்கள் அனைவரும், தங்களுக்கு இஸ்லாம் குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர். திருமணத்துக்காகவே, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களின் மதம் மாறுதலை அங்கீகரிக்க இயலாது என்றார் அவர்.
மேலும், 5 தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-நன்றி விகடன்
19-12-2014
அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். குர்ஆன் என்ன சொல்கிறது. முகமது நபி என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதை எல்லாம் படிக்காமல் திருமணம் என்ற ஒரு நோக்கத்துக்காக இஸ்லாத்தை நோக்கி வருவது குர்ஆனால் தடை செய்யப்பட்ட ஒன்று.
'இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள். இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கைக் கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள்'
- குர்ஆன் 2:221
பல இடங்களில் திட்டமிட்டு திருமணம் முடிப்பது போல் முடித்து பிறகு அதனை பிரச்னையாக்கி கோர்ட்டு வரை சென்று முற்றிலுமாக மத மாற்றத்திற்கே தடை சட்டம் கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கமோ என்று சந்தேகிக் வைக்கிறது. ஆக்ராவிலும் முடிவில் 'மத மாற்ற தடை சட்டம்' நாங்கள் தயார் என்று பிஜேபி அறிவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது.
எனவே முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாற்று மத பெண்களை திருமணம் முடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். அது பிற்காலத்திழல் உங்களின் எதிர்காலத்தையே பல சிக்கல்களில் கொண்டு போய் விடலாம்.
இஸ்லாத்தை விளங்கி முஸ்லிமான சகோதரிகள்தானா இவர்கள் என்பதை நன்கு விசாரித்தறிந்து கொண்டு அதன் பிறகு முஸ்லிம்கள் திருமணம் முடிப்பதே நல்லது. பின்னால் வரக் கூடிய சட்ட சிக்கல்களை இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீர்த்து வைக்கும்..
1 comment:
//இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கைக் கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள்'// அடிமைப் பெண்ணை வளர்க்கச் சொல்கிறதா? உடனே இறைவனுக்கு அடிமையானவள் என்று மழுப்புவீர்களா?
Post a Comment