'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, December 31, 2014
டாஸ்மாக்கில் யோகா கற்கும் தமிழன்!
தமிழன் என்றோர் இனமுண்டு!
தனியே அதற்கோர் குணமுண்டு!
சரியாக சொன்னார் நம் முன்னோர்!
தெளிவாக விளங்கினர் நம் தமிழர்!
யோகா கற்பது நம் உடலுக்கு நல்லது!
அலை பாயும் நம் மனதுக்கும் நல்லது!
உண்மையை உணர்ந்த தமிழன் இன்று
யோகா கற்கிறான் டாஸ்மாக் படியிலே!
குழந்தை அழுகிறான் தாயின் மடியிலே!
மனைவி நிற்கிறாள் மார்வாடி கடையிலே!
அரசும் கேட்கிறது அதன் ஊழியரிடத்தில்
இந்த மாதம் எத்தனை கோடி லாபம் என்று!
நாளை புத்தாண்டாம்! பலரும் சொல்கிறார்கள்!
ஒரு மாத வருமானத்தை இந்த ஒருநாளில்
கொண்டு வந்து கொட்ட தயராகி விட்டான்...
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிக்கு சொந்தமான
மறத் தமிழன்! மனிதம் மரித்து போன தமிழன்!
வாழ்க டாஸ்மாக்.... வளர்க அரசின் வருமானம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பாா்த்தேன்.படித்தேன்.ரசித்தேன்.நன்றி
Post a Comment