திரு ஜடாயு!
// தமிழருக்கு சமஸ்கிருதமும், அராபியும் ஒன்றே என்பது உளறல். அது எப்படி ஒன்றாகும்? சம்ஸ்கிருதம் சங்ககாலத்தில் இருந்து தமிழர் பயின்ற மொழி.//
தமிழனைப் பொருத்த வரை அரபியும், சமஸ்கிரதமும் அவனுக்கு அந்நிய மொழிகளே! தமிழர்கள் ஆதி காலத்தில் பயின்றதால் அது தமிழனின் மொழியாக முடியாது. ஒரு இனத்துக்கு ஒரு தாய் மொழிதான் இருக்க முடியும்.
//தமிழ்ப் பண்பாட்டுடன், கலை, இலக்கியங்களுடன் இரண்டறக் கலந்த மொழி. தமிழுடன் உறவாடி, தமிழுக்கு சொற்களை அளித்து, தமிழிலிருந்து சொற்களைப் பெற்றுக் கொண்ட மொழி.//
தமிழை அதன் போக்குக்கு உங்களின் முன்னோர்கள் விட்டிருந்தால் அது இன்றளவும் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். ஆனால் உங்களின் முன்னோர்களை கதைகளையும் புராணங்களையும் சமஸ்கிரதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்ததால் இன்று தமிழ் அதன் தனித் தன்மையை இழந்து வர்ணாசிரமக் கொட்பாடுகளையும் உள் வாங்கிக் கொண்டது. இதை எல்லாம் பார்த்துதான் பெரியார் காட்டுமிராண்டிகள் மொழி என்ற ரீதியில் விமரிசிக்க ஆரம்பித்தார்.
//நம் தமிழ் மூதாதையர் "வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்" என்று போற்றிய மொழி. அதுவும் அரபியும் எப்படி ஒன்றாகும்?//
அவ்வாறு பார்பனர்கள் பாடி வைத்திருப்பார்கள். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே.
தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.
http://thathachariyar.blogspot.com/2010/11/26.html
இதை சொன்னவர் ஜடாயு தெய்வமென மதிக்கும் முன்னால் சங்கராச்சாரியார் பெரியவர் சொன்னதாக தாத்தாச்சாரி சொல்கிறார். இதை மறுக்க முடியுமா? பூஜை நேரத்தில் தமிழில் பேசினால் அது உங்களுக்கு தீட்டா? அதற்காக திரும்பவும் குளிக்க வேண்டுமா? எனது தாய் மொழி தமிழை இந்த அளவு ஒருவர் அவமானப்படுத்தி நான் பார்த்ததில்லை. தமிழ் மொழியில் அவரை நாடி வந்த ஒரு பக்தனிடம் பேசுவது அவ்வளவு அசிங்கமா அவருக்கு? பிறகு தமிழின் மேல் பொய்யான பாசம் காட்டி நீங்கள் ஏன் பூசி மெழுகுகிறீர்கள்? இது போல் பல சம்பவங்களை என்னால் காட்ட முடியும்.
//அரபி, தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் தொடர்பற்ற அன்னிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் மொழி. இஸ்லாமியப் படையெடுப்புகளின் மூலமாக தமிழகத்தில் நுழைந்த மொழி.//
சமஸ்கிரதமும் ஆரிய படையெடுப்பால் தமிழகத்தில் நுழைந்த மொழி. உருது இஸ்லாமிய படையெடுப்பால் தமிழகத்தில் நுழைந்த மொழி. அரபி மொழியோ அரபுகள் கேரள கரையோரம் வியாபாரத்துக்கு வந்து அந்த மக்களை இஸ்லாத்தில் இணைத்து அதன் மூலம் தமிழகமும் பரவிய மொழி. வரலாறை நன்றாக இன்னொரு முறை படிக்கவும்.
No comments:
Post a Comment