இதற்கு மேலுமா இஸ்லாத்தில் உள்ளீர்கள்?
//தம் மதத்தை சீர்திருத்திக் கொள்ள அல்லது தூக்கியெறிய இதை விட இஸ்லாமியர்களுக்கு வேறு காரணம் வேண்டுமா!//
-ட்விட்டரில் ஒரு பகுத்தறிவு :-) இந்துத்வாவாதியின் புலம்பல்
அதாவது பாகிஸ்தானில் சில கிறுக்கர்கள் பள்ளிக் குழந்தைகளை கொன்றதைக் காரணமாக்கி இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாத்தை தூக்கி எறிய வேண்டுமாம். ஒரு இந்துத்வாவாதி ட்விட்டரில் தனது அபிலாஷைகளை கொட்டியுள்ளார். இது போன்ற தாக்குதல்கள் நடப்பதும் அதனை கேமராவில் பதிவு செய்து உலகமெங்கும் பரவ விடுவதன் நோக்கமே முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பிடியை விட வேண்டும் என்பதற்காகத்தான். இது உலகலாவிய அளவில் மிகவும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
ஆனால் ஆச்சரியமாக இவர்கள் நினைப்பதற்கு மாற்றமாக இஸ்லாம் இத்தனை கொடூரங்கள் நடந்தும் மேலும் முஸ்லிம்களை இறுக்கி அணைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இரட்டைக் கொபுர தாக்குதல் அமெரிக்காவில் நடந்த பிறகுதான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிக வேகமாக இஸ்லாம் பரவியது. இன்று வரை அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் மேற்குலகம் தனது கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
நம் தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். சினிமா கூத்தாடிகள் அர்ஜூனிலிருந்து விஜயகாந்த், கமலஹாஸன், விஜய், டைரக்டர் முருகதாஸ் வரை திட்டமிட்டு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுக்கின்றனர். தினமலர், தினமணி, என்று அனைத்து பார்பன ஊடகங்களும் திட்டமிட்டு முஸ்லிம்களை வஞ்சிக்கின்றன. ஆனால் அதன் முடிவு என்னவாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இஸ்லாம் எந்த பிரசாரமும் இன்றி மிக வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.
பெரியார் தாசன், ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, மோனிகா, ஜெய் என்று இந்த கூத்தாடிகளின் கூடாரத்திலிருந்தே ஆட்கள் வரிசையாக இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். பெயரளவில் மாறாமல் தங்கள் வாழ்க்கையிலும் குர்ஆனின் கட்டளைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் சிறந்த முஸ்லிம்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தைப் போல் இந்த அளவு எதிர்ப்பை உலகில் எந்த மதமும் எதிர் கொள்ளவில்லை. அதே நேரம் இந்த மார்க்கத்தில் தாங்களாகவே தங்களை இணைத்துக் கொள்ளும் ஆச்சரியமும் இந்த மார்க்கத்தில் தான் நடக்கிறது.
இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவுடன் அந்த மனிதனின் வாழ்வு முற்றிலுமாக மாறி விடுவதை பார்க்கிறோம். யுவன் சங்கர் ராஜா தனது வீட்டில் இருந்த விக்ரகங்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டாராம். இதனால் தனது தந்தையோடு சில வாக்கு வாதங்களும் நடந்ததாக கேள்விப்படுகிறோம். பெரியார் தனது வாழ்நாள் முழுக்க சாதிக்காததை 'லாயிலாஹா இல்லல்லாஹ்' ஒரு வார்த்தை யுவனின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது. ஏ ஆர் ரஹ்மானோ காலை (ஃபஜ்ர்) நேர தொழுகை தவறி விடாமல் இருக்க இரவு ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு நான்கு மணி வரை தனது ஒலிப்பதிவை வைத்துக் கொள்கிறாராம். மோனிகா என்ற நடிகை சினிமாவை தூரமாக்கி இன்று ஏற்றுமதி இறக்குமதி தொழிலை நாடியுள்ளார். நாத்திகவாதியான பெரியார் தாசனோ ஊர் முழுக்க இஸ்லாத்தை பிரசாரம்பண்ணும் பணியை தனது கடைசி நாட்களில் செய்தார். புதிய முஸ்லிம்களுக்குகே இந்த அளவு பற்று இருந்தால் பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் எங்களுக்கு எந்த அளவு பற்று இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
எனவே உலகில் இஸ்லாத்தின் பேரால் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புகளும் இஸ்லாமியரால் நடத்தப்படுவதில்லை. 10 சதவீதம் இஸ்லாமியரால் நடத்தப்பட்டாலும் மற்ற 90 சதவீதம் இஸ்லாமிய பெயரில் ஒளிந்திருக்கும் இஸ்ரேலிய, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் ஏஜண்டுகளே என்பது உலக மக்களுக்கும் தெரியும். எனவேதான் இஸ்லாம் அசுர வேகத்தில் உலகமெங்கும் தனது காலை மிக திட்டமிட்டு ஊன்றி வருகிறது.
எங்கும் போக வேண்டாம். உங்களோடு அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக தொப்புள் கொடி உறவுகளாக உங்களோடு பழகி வரும் சக தமிழ் முஸ்லிம்களை நோட்டமிடுங்கள். இந்த இள வயதிலேயே அழகிய தாடியை வைத்துக் கொண்டு இஸ்லாம் தடுத்த அனைத்து கெட்ட காரியங்களையும் தூரமாக்கி மிக உன்னதமான வாழ்வை வாழும் இவர்கள் இது போன்ற அரக்க செயல்களை செய்வார்களா? வட்டியை ஒதுக்குகிறோம், மதுவை ஒதுக்குகிறோம், விபசாரத்தை நாடுவதில்லை, திருடுவதில்லை, பொய் பேசுவதில்லை என்று கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழும் ஒரு இஸ்லாமியன் அப்பாவி பொது மக்களை கொல்வானா? உலகமெங்கும் இது தான் நிலை. உலக ஊடகத் துறை மேற்குலக மீடியாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுவர். நமது இந்திய ஊடகங்களின் நிலையும் அதுதான்.
பாகிஸ்தானில் பல அரபி மதரஸாக்களில் ஷியாக்கள் ஊடுருவி இஸ்ரேலின் பண பலத்தால் பல இளைஞர்களை ஜிஹாதிகளாக மாற்றுவதாக எனது பாகிஸ்தானிய நண்பன் சொன்னான். அரசு சிலரை கைதும் செய்துள்ளது. எனவே நாம் பத்திரிக்கைகள் தரும் செய்தியின் அடிப்படையில்தான் முடிவெடுக்கிறோம். ஆனால் உண்மையோ வேறு விதமாக உள்ளது.
எனவே தாலிபான்களாகட்டும், ஐஎஸ்ஐ ஆகட்டும், போகோ ஹராமாகட்டும், இன்னும் எத்தனை பேர்களில் ஒளிந்து கொண்டு அராஜகங்களை ஏற்படுத்தினாலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை இஸ்லாமியரிடமிருந்து எந்த காலத்திலும் பிரித்து விட முடியாது. ஏனெனில் இது இறை மார்க்கம். இதனை காப்பாற்றும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.
"அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்."
குர்ஆன் 61:8
3 comments:
இந்தியாவில் இருந்தாலும் அரேபிய மத விசுவாசம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதற்கு தங்களின் இக்கருத்து நல்ல நிரூபணம்.
”10 சதவீதம் இஸ்லாமியரால் நடத்தப்பட்டாலும் மற்ற 90 சதவீதம் இஸ்லாமிய பெயரில் ஒளிந்திருக்கும் இஸ்ரேலிய, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் ஏஜண்டுகளே என்பது உலக மக்களுக்கும் தெரியும்”
மக்களை முட்டாள்கள் என்று கருதி குற்றத்தின் இருப்பிடம் அரேபிய நூல்கள் என்ற உண்மையை மறைக்க சதா இஸ்ரேல் அமொிக்கா என்று புலம்புவது அறீவீனம். பாக்கிஸ்தானை ஆள்வது யுதா்களா? அரேபிய மதத்தைப் பினபற்றும் பாக்கிஸ்தானியா்களா ? என் இந்தப் பிதற்றல்.
அல்ஹம்துலில்லாஹ்....அருமையான விளக்கம்..தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்...
இந்தியாவில் இருந்தாலும் ஏகத்துவ இறை விசுவாசம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதற்கு தங்களின் இக்கருத்து நல்ல நிரூபணம்.
சகோதரர் அன்புராஜ் தங்கள் பதிவு இவ்வாறு இருந்திருக்க வேண்டும்.
Post a Comment