Followers

Friday, December 05, 2014

சூஃபியிசம் பற்றி தமிழ் இந்துவின் கட்டுரை

சூஃபியிசம் பற்றி தமிழ் இந்துவின் கட்டுரை

//இப்படி நபிகள் நாயகத்திடம் இருந்து இன்று வரை இந்த சூபி ஞானம் வந்து சேர்ந்த அத்தொடரே தரீக்கா (வழி) என்று அழைக்கப்படுகிறது.இஸ்லாத்தில் பல தரீக்காக்கள் உள்ளன. காதிரியா, ரிபாயியா, சிஸ்தியா, நக்ஷபந்தியா, ஷாதுலியா போன்ற இன்னும் பல தரீக்காக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் உண்மையில் இஸ்லாமிய ஆன்மிகப் பள்ளி பாசறைகளே.//

//அதாவது, சூபித்துவக் கல்வியை நபிகள் நாயகம் அவர்களிடமிருந்து இன்று வரை கொண்டு வரக்கூடிய ஆன்மிகச் சங்கிலித் தொடர்களே ஆகும். இவை பல கிளைகளாகப் பிரிந்து இன்றளவும் உலகளவில் இஸ்லாமிய ஆன்மிகக் கல்வியை மக்களுக்குப் போதித்து கொண்டு உள்ளன. இதன்படி, ஒவ்வொரு தரீக்க்காகளிலும் பல ஆன்மிகத தலைவர்கள் அதாவது, ஆன்மிக ஆசான்கள் இருப்பர். இக்கல்வியைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவன் அவர்களில் ஒருவரிடம் மாணவராக ஆகி அவர் மூலம் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொள்கிறான்.//

ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைய ஒருவரிடம் பைஆத் செய்ய வேண்டும் என்று குர்ஆனோ நபிகள் நாயகமோ வழி காட்டவில்லை. குர்ஆனையும் ஆதாரபூர்வமான நபி மொழிகளையும் ஒருவன் ஆழ்ந்து விளங்கினாலே அவன் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய முடியும்.

மேலும் இஸ்லாம் ஆன்மீகத்தின் உச்ச நிலை என்பதை குடும்பத்தை துறப்பது, எந்த நேரமும் தியானத்தில் இருப்பது, சமூகத்தை விட்டு ஒதுக்கி நிற்பது என்றெல்லாம் நாம் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. இறை வணக்கம் என்பது ஐந்து நேரம் தொழுகை. அந்த ஐந்து நேரத் தொழுகையையும் கூட்டினால் அரை மணி நேரம் தான் வரும். மற்ற நேரங்களில் மனைவிக்காகவும், தனது குழந்தைக்காகவும், தனது உறவினர்களுக்காகவும் உதவ வேண்டி பொருள் தேட சொல்கிறது இஸ்லாம்.

எனவே இஸ்லாத்தில் இல்லாத தரீக்கா வழியை விடுத்து தர்ஹா வழிபாடுகளை விடுத்து குர்ஆனும் நபி மொழிகளும் காட்டித் தரும் ஓரிறைக் கொள்கையை தனது வாழ்வில் கடைபிடிப்பவனே இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான முஸ்லிமாவான்.

//இத்தகைய சிறப்பு மிக்க மனிதர்களையே முஸ்லிம்கள் “அவ்லியாக்கள்” அதாவது இறைநேசர்கள் என்று சொல்லுகின்றனர்.//

இறை நேசர்கள் யார் என்பதை இறைவனே அறிவான். பெரிய தலைப்பாகையும் பெரிய தாடியும் வைத்துக் கொண்டு உள்ளுக்குள் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுபவர்கள் பலரைப் பார்க்கிறோம். மேலும் அந்த அவுலியாக்களுக்கு தர்ஹா கட்டுவதை முகமது நபி கடுமையாக தடுத்துள்ளார். அதனை இடித்து தரை மட்டமாக்க தனது மருமகன் அலிக்கு அதிகாரமும் கொடுக்கிறார்.

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6659214.ece

இந்த இணைப்பில் சென்று உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்.

1 comment:

Dr.Anburaj said...

காதிரியா, ரிபாயியா, சிஸ்தியா, நக்ஷபந்தியா, ஷாதுலியா போன்ற இன்னும் பல தரீக்காக்கள் உள்ளன.
இவைகளுக்குள்ள வேறுபாடுகள் உள்ளன.விளக்க முடியுமா ?