Followers

Tuesday, September 29, 2026

குஜராத் முஸ்லிம்களின் வியத்தகு வளர்ச்சி சங்கிகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

 







குஜராத் முஸ்லிம்களின் வியத்தகு வளர்ச்சி சங்கிகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

 

இந்த ஆய்வுக் கட்டுரை, குஜராத்தில் உள்ள முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் கல்விப் போக்குகள் மற்றும் சமகால சவால்களை ஆராய்கிறது; இந்த சமூகம் அம்மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 9% ஆகும். குஜராத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு கல்விப் பின்னணிகளைக் கொண்ட 360 பதிலளிப்பவர்களை மாதிரியாகக் கொண்டு, கலப்பு-முறைகள் ஆராய்ச்சி வடிவமைப்பைப் பயன்படுத்தி, இந்த ஆய்வு சமூக-பொருளாதார காரணிகள், சமூகக் கண்ணோட்டங்கள் மற்றும் கல்வி விளைவுகளுக்கு இடையிலான உறவை ஆராய்கிறது. தொடர்பு மற்றும் t-சோதனை புள்ளிவிவர நடைமுறைகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு முரண்பாடான சூழ்நிலையை வெளிப்படுத்துகின்றன:

 

 குஜராத்தில் முஸ்லிம் எழுத்தறிவு விகிதம் (73.5%) தேசிய சராசரி (59.1%) மற்றும் மாநிலத்தில் உள்ள இந்து எழுத்தறிவு விகிதம் (68.3%) ஆகிய இரண்டையும் விட அதிகமாக உள்ளது பிஜேபியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

இத்தனை கலவரங்கள்... இத்தனை இன ஒதுக்கல்கள்.. தொடர்ந்து பிஜேபி ஆட்சியில் இருப்பது என்று முஸ்லிம்களுக்கு எதிர்மறையான போக்காக இருந்தாலும் அந்த சவால்களை முஸ்லிம்கள் முறையாக சமாளித்து வெற்றி பெற்று வருகிறார்கள்.

 

தாங்கள் அரசியல் கட்சிகளை நம்பியிருந்தால் ஓரம் கட்டப் படுவோம் என்ற முடிவுக்கு வந்து இன்று கல்வி வேலை வாய்ப்புகளில் இந்துக்களை விட அதிக சதவீதம் எடுத்து வருகின்றனர்.

 

நமது தமிழகத்தில் பார்பனர்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டபோது அவர்களும் கோவில் பூசாரி வேலைகளை விடுத்து அமெரிக்கா ஐரோப்பா என்று கடல் கடந்து இன்று ஒரு முன்னேறிய சமூகமாக வலம்வருகிறார்கள்.

 

அதே போன்றுதான் குஜராத்தில் முஸ்லிம்கள் மோடியால் ஒதுக்கப்பட்டாலும் கடினமாக உழைத்து இன்று ஒரு சிறந்த நிலையை அடைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றனது.

 

குஜராத் ஹைவேயில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. போட்டிக்கு மற்ற சமூகங்களும் வைத்து முடிவில் தோல்வியையே தழுவியுள்ளனர்.  அதோடு ப்ளம்பர், எலக்ட்ரீஷியன், கார்பெண்டர், மேஷன், எம்ப்ராய்டரி, துணி வியாபாரம், டயர் சம்பந்தமான வேலைகள், எல்லாம் இன்று நல்ல சம்பளத்தில் முஸ்லிம்கள் முன்னேறி வருகின்றனர்.

 

நமது சங்கிகளோ மோடியும் அமித்ஷாவும் பார்த்துக் கொள்வார்கள் என்ற மமதையில் கல்வி வேலை வாய்ப்புகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதனை முஸ்லிம்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

எனவே மோடி அமித்ஷா தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் முஸ்லிம்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து விடுவார்கள் என்று சங்கிகள் மனப்பால் குடிக்க வேண்டாம்.

 

கோத்ரா கலவரத்தில் வீடிழந்த முஸ்லிம்களில் பலர் இன்றும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் குஜராத் இஸ்லாமிய செல்வந்தர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

 

திறமையுள்ள மக்கள் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தங்களின் முத்திரையை பதிப்பார்கள் என்பதற்கு குஜராத் முஸ்லிம்கள் சிறந்த எடுத்துக் காட்டுகளாய் திகழ்கின்றனர்.

 

ஆக்கம்

 

சுவனப்பிரியன்

 

 

 

 

 

 

 

 

No comments: