(இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)
//இது என்னங்க புதுசா கீது யாரவது அண்ணணுக்கு மட்டுமே தெரிஞ்ச வரலாற கொஞ்சம் இந்த பச்சமண்ணுக்கு எடுத்து சொல்ரிங்களா//
-Suriya Prakssh shanmugam!
சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!
மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது.
சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதில் சமணர்கள் தோற்கின்றனர். தோற்ற சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றனர். இந்த வரலாறு மக்களுக்கு சொல்லப்படாமல் வஞ்சகமாக மறைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . முன்பு இந்த இடம் ஒரே சாம்பல் திட்டுகளாக குன்று போல் காட்சியளிக்குமாம். தற்போது ஓரளவு சமப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்து கட்டுரையாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மதுரை சரவணன் மேலும் சொல்கிறார்.....
எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது. மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம் என வரலாற்றை தமக்கு தெரிந்த மாட்டில் சொன்னார்.
மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் “சாம்பல் நத்தம்” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.
பெரிய புராணம் இந்த சமண கழுவேற்றம் பற்றி நிறைய பேசுகிறது. அது பற்றி தனி பதிவாக படங்களோடு ஆதாரங்களோடு பதிகிறேன்.
தகவல் உதவிக்கு நன்றி
மதுரை சரவணன்