
"வெறுப்பு காரணமாகத்தான் அரசு, அன்று அப்சல் குருவை அவசர அவசரமாய் அரசியலமைப்புச் சட்ட பண்பாட்டுக்கு எதிராய் தூக்கில்போட்டது..!"
- உச்ச நீதி மன்ற முன்னால் நீதிபதி கங்குலி
நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் மன ஓட்டத்துக்கு பாதகம் ஏற்படக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக அஃப்சலை தூக்கில் இட்டது மத்திய அரசு. இதனை நாம் சொல்லவில்லை. உச்ச நீதி மன்ற முன்னால் நீதிபதி சொல்கிறார். அஃப்சல் உண்மையிலேயே நிரபராதி என்றால் சொர்க்கத்தில் இன்று எந்த கவலையும் இன்றி இருப்பார்.
ஆனால் அஃப்சல் தூக்கில் தொங்க காரணமாயிருந்த அன்றைய பாஜக அரசினரும், தூக்கில் இடும் போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசினரும் நியாய தீர்ப்பு நாளில் உலக மக்களுக்கு முன்னால் இறைவன் முன்னிலையில் தண்டிக்கப் படுவர். அந்த மகத்தான நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

