Followers

Wednesday, August 14, 2013

இவ்வருடம் மட்டும் 708 நபர்களின் வாழ்வு முறை மாறியுள்ளது!



சவுதி அரேபியாவில் அழைப்பு வழிகாட்டு மையங்களின்(தாவா சென்டர்) பங்கு அளப்பரியது. இந்த வருடம் மட்டும் 708 நபர்கள் தங்கள் வாழ்வை இஸ்லாத்தோடு பிணைத்துக் கொண்டுள்ளனர். இதில் 146 பேர் இலங்கையை சேர்ந்த சகோதரர்கள். 136 பேர் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்ட இந்த உள்ளங்களை வாழ்த்தி வரவேற்போம்.

தகவலுக்கு நன்றி: அரப் நியூஸ் (13-08-2013)

A total of 708 expatriate workers, including 146 Sri Lankans and 136 Filipinos, have embraced Islam this year as a result of the efforts of the Cooperative Dawa Centers at Maader and Um Al-Hammam in Riyadh.

The new converts included 392 Ethiopians and Eritreans, 29 Europeans and Americans, and five Indians, the Saudi Press Agency reported on Monday quoting annual reports of the two centers in the capital city.

Highlighting the centers’ achievements, the report said they organized a total of 1,118 lectures and study classes in different languages at hospitals and government departments. They distributed more than 68,000 copies of the Qur’an and 545,000 copies of Islamic books and booklets in various languages.
Fuad Kawther, a Saudi engineer associated with dawa activities in Jeddah, voiced his happiness over the increasing number of people who embrace Islam as their way of life despite the strident media campaign against the religion. “This once again proves that Islam is a divine and truthful religion. It is the fastest growing religion in the world,” Kawther told Arab News. He narrated an amazing incident that took place in Germany after Yusuf Estes gave a lecture on Islam. About 1,000 people who were in the hall expressed their readiness to embrace Islam after the lecture.

“It’s a great blessing that hundreds of expats who came to Saudi Arabia for work used the opportunity to learn and embrace Islam, despite the fact that some Saudis do not represent Islam in its full spirit,” Kawther said.

Filipino workers topped the list of new converts to Islam, he said and attributed it to their country’s long Islamic history before Western colonialists occupied it. “Now the Chinese workers are competing with the Filipinos in embracing Islam,” he pointed out.

-------------------------------------------------------------------------

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு!

1



2



3



4



5



6


Tuesday, August 13, 2013

தர்மபுரி: என்று தணியும் இந்த சாதி வெறி!



சமீப காலங்களில் என்னை மிகவும் பாதித்த குறும்படங்களில் இதுவும் ஒன்று. என்ன ஒரு திட்ட மிட்ட இன அழிப்பு? பார்க்கும் போது மனது மிகவும் கனக்கிறது. சாதி மாறி காதலித்ததுதான் இத்தனை கலவரத்துக்கும் காரணம் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றதாகும். ஏனெனில் இதற்கு முன்பு பல திருமணங்கள் தலித் இளைஞர்களுக்கும் வன்னிய பெண்களுக்கும் இனிதே நடந்து வாழ்வு இன்று வரை இனிமையாகவே சென்று கொண்டு உள்ளது. சில பெண்கள் பேரன் பேத்தியும் எடுத்துள்ளார்கள். அதை இந்த குறும்படத்திலும் பேட்டியாகவே காணலாம். ஆக இந்த வன்முறைக்கு காதல் ஒரு காரணமே அல்ல. சமீப காலமாக பாமகவுக்கு தேர்தலில் அடி மேல் அடி விழுந்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் இந்த கட்சியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வன்னியர்களின் ஓட்டை கணிசமாக விஜயகாந்தும் பிரித்துக் கொண்டு சென்று விட்டார். இனி அன்பு மணியை முதல்வராக்கி பார்க்கும் ராமதாஸின் ஆசையில் மண் விழுந்துள்ளதால் அதை துடைக்க இழந்த வன்னிய ஓட்டுக்களை குவிப்பதற்காக எடுத்த துருப்புச் சீட்டே இளவரசன் காதல் விவகாரம்.

இரண்டு மணி நேரத்தில் மூன்று கிராமங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதென்பது ஏதோ உணர்ச்சி வசத்தால் நடைபெறுவதல்ல. பல நாட்கள் திட்டமிட்டு யார் யார் எந்த பணியைச் செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டே இந்த கொள்ளையிடல் நடந்துள்ளது. அவர்களின் இலக்கு அந்த மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதே! அதில் வெறறியும் பெற்றுள்ளார்கள். ஒருவர் 40 வருடம் குருவி சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் அனைத்தும் திருடு போய் விட்டது என்று சொன்னது மனதைக் கசிய செய்தது. இந்த பணம் அனைத்தும் ஏதோ கந்து வட்டியிலோ, ஊழல் செய்தோ, வந்ததல்ல. அனைத்தும் கடின உழைப்பிலே சேர்க்கப்பட்ட பணங்கள்.

அப்படி எந்த விதத்தில் தலித்களை விட வன்னியர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனர்களாவது தங்களின் நிறத்தை வைத்து, தான் பார்க்கும் தொழிலை வைத்து நான் உயர்ந்த சாதி என்று என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் தலித்களும், வன்னியர்களும் செய்யும் தொழிலும் ஒன்று: நிறமும் ஒன்று: முக சாயலும் ஒன்று: இதில் எந்த விதத்தில் வன்னியர்கள் உயர்ந்து விட்டார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

நமக்கு முன்னால் கை கட்டி வாய் பொத்தி இதுவரை சேவகம் செய்த தலித்துகள் மாட மாளிகைகளில் வாழ்வதா என்ற எரிச்சலே இந்த மக்களை இவ்வளவு அக்கிரமங்களையும் செய்யத் தூண்டியுள்ளது. கையில் கம்புடனும், பெட்ரோல் டின்களோடும் சில வன்னிய பெண்களே கூட இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது சாதி வெறியின் உச்சத்தைக் காட்டுகிறது.

ஏன் அந்த மக்கள் மாடி வீடு கட்டக் கூடாதா? இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாதா? கல்லூரிக்குச் சென்று பட்ட படிப்பு படிக்கக் கூடாதா? இவற்றை எல்லாம் அந்த மக்கள் பெறக் கூடாது என்று தடுப்பதற்கு உங்களுக்கு உரிமையை யார் கொடுத்தது? அந்த பெண்கள் தங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுத அழுகை உங்களை சும்மா விடுமா? அத்தனைக்கும இந்த ஆதிக்க சாதிகள் பதில் சொல்லியே தீர வேண்டும்.

எங்கள் கிராமத்தை ஒட்டி தலித் கிராமம் ஒன்று உண்டு. 100 அல்லது 120 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. முன்பு வயல் வேலை, வீட்டு வேலை, துணி துவைப்பபு, என்று எங்கள் கிராமத்தின் அனைத்து வேலைகளையும் அந்த தலித் மக்களே செய்து வந்தனர். ஆனால் இன்று நிலைமை வேறு. அரபு நாடுகளுக்கு செல்கின்றனர், கல்லூரி வரை சென்று படித்து நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர். சமீபத்தில் அந்த கிராமத்துக்கு சென்று கூலி வேலைக்காக மூன்று பெண்களை கூப்பிட சென்றேன். 'இப்போ எல்லாம் நாங்க வேலைக்கு போறத எங்கவூட்டுக் காரர்களெல்லாம் விரும்புறதில்லை பாய்.. நாங்க வரலை..' என்றனர். நான் திரும்பி விட்டேன். பிறகு வேறு ஆட்களை வைத்து அந்த வேலையை முடித்தேன். இதை எல்லாம் நாம் பிரச்னையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதே போல் எங்கள் கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு இஸ்லாமிய கிராமத்தில் ஒரு இஸ்லாமிய பெண்மணி ஒரு இந்து இளைஞனோடு ஓடி விட்டாள். அந்த குடும்பமும் வறுமையான குடும்பம். ஊர் பெரியவர்கள் மூலம் முயற்சித்து பார்த்தனர். அந்த பெண் அவனோடுதான் வாழ்வேன் என்று பிடிவாதமாக சொனனாள்.வேறு வழி இல்லாமல் ஜமாத்தும் அந்த பெண்ணை கை கழுவியது. பெற்றோரும் கை கழுவி விட்டனர். படை திரட்டிக் கொண்டு அந்த இளைஞனின் குடும்பத்தை எந்த முஸ்லிமும் துவம்சம் செய்யவில்லை. ஏனெனில் தவறு இரண்டு பக்கமும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கையில் ஒரு குழந்தையோடும் தனது கணவனோடும் அந்த பெண் தனது வீட்டின் கதவை தட்டினாள். கதவை திறந்த தாயாருக்கு தனது மகளும், மருமகனும், பேரக் குழந்தையும் வீட்டின் வெளியே நிற்பதைக் கண்டு ஆச்சரியம்.

'உள்ளே வரவாம்மா'

'வாம்மா'

மகளையும் மருமகனையும் அந்த தாய் உபசரித்தார். தற்போது ஓடிப் போன அந்த பெண்ணின் தொழுகை வணக்கங்கள் போன்றவற்றால் கவரப்பட்ட அந்த இந்து இளைஞன் இன்று இஸ்லாத்தை ஏற்று தனது வாழ்வையே மாற்றிக் கொண்ட செய்தியை தனது தாயாரோடு அந்த பெண் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டிருந்தாள். இவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி ஊர் முழுக்க தெரிய வரவே 'என் வீட்டுக்கு விருந்துக்கு வா' 'உன் வீட்டுக்கு விருந்துக்கு வா' என்று தினமும் அந்த தம்பதிக்கு விருந்து உபசரிப்புதான்.

மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இந்த இருவரின் குடும்பத்தாரும் ஒத்துழைத்தது போல் இளவரசன் பிரச்னையில் தலித் மக்களும், வன்னிய மக்களும் ஒன்றுபட்டிருந்தால் இன்று சாதித் தீ இந்த அளவு பரவியிருக்காது. அநியாயமாக இரண்டு உயிர் போயிருக்காது. அந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள்.

டிஸ்கி: டிராஃப்டில் சில மாதம் முன்பு எழுதி போஸ்ட் செய்யாமல் விட்ட பதிவு. இன்றுதான் அதற்கு நேரமும் கிடைத்தது.

Sunday, August 11, 2013

ரயில் பயணத்தில் ஒரு பாதிரியாரோடு கலந்துரையாடல்!



சகோ எஸ். யூ. அப்துல் ஹை அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் கிறிஸ்தவ மதம் குறித்து கேட்ட சில சிக்கலான கேள்விகள்

நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் முகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும் தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். " என்று எண்ணிக்கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.

உறங்கும் பயணிகளை தன் கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப் புகை வண்டி.

பல பல என்று விடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும் அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவு திகைத்துத்தான் போனேன். ஆம் ! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்த என் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார் .

அருகில் அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவது பேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே !

பேசத் தொடங்கினேன்! சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும் , பாளையம் கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக்கூறினார் . அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்வி, பயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன் விவரித்தார் . நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம்கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் "இன்னும் ஏதாவது கேள் " என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன ! சரி !நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார் ! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு!

" சார் !உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் ! உங்களிடம் அதைக் கேட்டுநீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ! கேட்கலாமா சார் ? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன் " என்று ஆரம்பித்தேன் !

"ஏன் ? தாராளமாகக் கேளுங்கள்" எனப் புன் முறுவல் பூத்தார் !

"சார் !எங்களுடைய வேதத்திற்கு "குரான்" என்று பெயர் ! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது ! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் "பைபிள்" என்று எங்காவது வருகிறதா ?

"இல்லை !" - அவரது பதில் .

"அப்படியானால் உங்கள் வேதத்திற்கு "பைபிள்" என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப் பட்டது ? "

"நல்ல கேள்வி; ஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்லமுடியவில்லை "

"சார் !வருத்தப் படக் கூடாது ! பதினேழு ஆண்டுகள் நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டுமா ?"

" சார் !இன்னொரு சந்தேகம் ! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது.உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார் ?"

"ஹிப்ரூ மொழியில்"

" சரி !நாங்கள் இன்ஜீல் வேதம் சுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம் ! ஆனால் அந்த மொழி உங்களுக்கு தெரியுமா ?"

"தெரியாது !"

"அப்படியானால் நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள் ?"

"ஆங்கிலத்திலும் தமிழிலும் , பிற மொழிகளிலும் "

"எங்கள் குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில்ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது ! எங்களில் சின்னஞ் சிறு வயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்தமொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள்ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள்மட்டுமே !"

"எந்த மொழியாக இருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும் ! ஆங்கிலமோ , தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான் ! ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ , இலக்கியங்களையோ எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திடமுடியாது ! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா ? "

"ஆம்....உண்மைதான்!"

"அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்துவிட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்கமுடியும் ?"

"..........................." (பதில் இல்லை )

"இரவா வரம்பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள் வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா ? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்கமுடியும் ?

"................................."(பதில் இல்லை)

சிறிது நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் !

மீண்டும் தொடர்ந்தேன்!

"சார் ! இன்னும்ஒரு சந்தேகம் ! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான் என்று வைத்துக் கொள்வோம் .அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும் , இந்தத் துப்பாக்கியால் அல்லவா என் தந்தை கொல்லப்பட்டார் என்றஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா ?"

"துப்பாக்கியைப் பார்க்கும் போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீதுவெறுப்புதான் ஏற்படுமே தவிர "ஆஹா ! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா ! என் கண்ணே! " என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா ?ஏற்படாதே ! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான் !கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை . அல்லவா ?"

"ஆம் !சொல்லுங்கள் "

" ஆனால்உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை ! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்றுநீங்கள் சாதிக்கிறீர்கள் ! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக்காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும் ? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே !எப்படி ? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலைசெய்த கொலைக் கருவியான

சிலுவையின் மீதுபிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?இதுமனித இயல்புக்கே முரண் அல்லவா ?"

"அது மட்டுமல்ல! சாதாரணமாக கொலைக் கருவி யார் கையில் இருக்கிறதோ அவன்தான் கொலைகாரனாய் இருக்கமுடியும் ! அல்லது அவனுக்கும் கொலைக்கும் எப்படியேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் . இல்லையா ? சாதரணமாக இந்த முடிவுக்கே எல்லோரும் வருவர் !"

"ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்று கிறீர்களே ! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவைநீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா ?"

"இயேசுகிருஸ்துவைசிலுவையில் அறைந்துகொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிர கிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? "

"......................................" (பதில் இல்லை)

" சார்நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன் ! நீங்களோ மௌனம் சாதிக்கிறீர்கள் ! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல் தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான்இனி கேட்கவில்லை ! சரியா சார் ?"

"இல்லை; வருத்தம் இல்லை ! ஆனால் எங்கள் கிருஸ்த்துவமதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாகஅறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு ! அதற்காக ரொம்ப தேங்க்ஸ் ! நீங்கள்கேட்ட கேள்விகள் எனது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது ! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றிசொல்லவேண்டும் ! "

பாதிரியாரான அந்தரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது, கைலாகுகொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.

(சிலேடைக் கவிஞர் சிராஜ்அப்துல் ஹை -என்ற நூலிலிருந்து பீ. எம் கமால், கடையநல்லூர்)



Saturday, August 10, 2013

தமிழ்நாடு வெளங்கிடும்...தலைவா படத்துக்காக தூக்காம்!



துடியலூர்,ஆக.10

கோவை துடியலூர் கே.ன்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் விக்ரம் (எ) விஷ்ணுகுமார் (வயது 20). கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஜய் படம் எப்போது ரிலீசானாலும் உடனே பார்த்து விடுவார்.

நேற்று நடிகர் விஜய் நடித்த தலைவா படம் ரிலீஸ் ஆக வில்லை. படம் பார்க்கும் ஆவலில் விஷ்ணுகுமார் கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு நேற்று காலை 6 மணிக்கே வந்தார். அங்கு படம் திரையிடப்படவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மன வேதனையடைந்தார்.

கேரளாவில் தலைவா படம் ரிலீஸ் ஆனதால் பாலக்காட்டுக்கு படம் பார்க்க சென்றார். அங்கு உள்ள தியேட்டர்களிலும் தலைவா படம் பார்க்க விஷ்ணுகுமாருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

மனவேதனையுடன் கோவை திரும்பினார். மீண்டும் கோவையில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று படம் ரிலீசாகியுள்ளதா என்று பார்த்தார். எந்த தியேட்டரிலும் தலைவா படம் திரையிடப்படவில்லை. மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பிய விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் விஷ்ணு குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

நன்றி மாலை மலர்



இது போன்று கூத்தாடிகளை அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுத்து இன்னும் எத்தனை இளைஞர்களை பலி கொடுக்க போகிறோம். முதலில் ரசிகர் மன்றங்களுக்கு தடை விதித்து பெரும் கட்அவுட் வைப்பதற்கும் தடை விதித்தால் ஓரளவாவது இவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியும். ஒவ்வொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளத்தைப் பெற்று சுகமாக வாழ்ந்து வரும் இந்த கூத்தாடிகளின் வாழ்க்கையை இறந்த அந்த இளைஞன் நினைத்துப் பார்த்திருப்பானா? தற்கொலைக்கு செல்லும் இந்த கோழைகளை தடுத்து நிறுத்த ஏன் எந்த சமூக சீர்திருத்தவாதிகளும் தமிழகத்தில் முயலுவதில்லை?

இந்து மத காவலர்களாக காட்டிக் கொள்ளும் பிஜேபி இந்து முண்ணனியினர் இது போன்று சினிமா நடிகர்களால் சீரழியும் இளைஞர்களை நேர் வழி படுத்த முயற்சிக்கலாம். அதன் மூலம் தங்கள் கட்சியை வளர்க்க முயற்ச்சிக்கலாம். இதனால் நமது நாடும், இந்து மதமும் செழுமையடையும். அதை விடுத்து கந்து வட்டி பிரச்னை, காதல் பிரச்னை, நிலப் பிரச்னை, குடும்ப பகை காரணமாக விழும் கொலைகளை இஸ்லாமியர்களோடு இணைத்து தங்கள் கட்சியை வளர்க்க பிஜேபியும், இந்து முண்ணனியும் முயல்கிறது. இதனால் பிஜேபி வளர துளியும வாய்ப்பில்லை. எனவே இஸ்லாமிய வெறுப்பை தூர வைத்து விட்டு இந்து மத சீர்திருத்தத்தை கையிலெடுத்தால் வரும் தேர்தலில் ஏதோ டெபாசிட்டாவது பிஜேபிக்கு கிடைக்கலாம் என்று சொல்லி வைக்கிறோம்.

Friday, August 09, 2013

தமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்!

தமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்!



தற்போது தமிழகத்தில் பரவலாக பேசப்படும் ஒரு செய்தியாக 'இந்து தீவிரவாத' அமைப்புகளின் உறுப்பினர்கள் கொல்லப்படுவதை முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கிறோம். நிலத் தகராறு, பெண் தகராறு, பணத் தகராறு, குடி போதையில நிகழும் தகராறுகள், காதல் தகராறுகள், என்று தினமும் பத்திரிக்கைகளில் நாம் கொலைளை பார்த்து வருகிறோம். ஆனால் கொல்லப்படுபவர் இந்து தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவராக இருந்தால் அதற்கு மத சாயம் பூசப்பட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் விநோத காட்சிகள் தற்போது நடந்து வருகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது. எத்தனை முறை முயற்சித்தாலும் தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்ற முடியவில்லை. இந்த முறை எப்படியும் இரண்டு மூன்று சீட்டுகளாகவது பெற்று விட வேண்டும் என்று ஆலாய் பறக்கிறது பாஜக. அதற்கு இந்துக்களை எப்படி ஒன்றாக்குவது? சாதிகளாலும், மொழிகளாலும் பிரிந்து கிடக்கும் அவர்களை முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி ஒன்றாக்க முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே முடியும் என்பதை பாவம் ஏனோ உணருவதில்லை. சகோதர இந்து மக்களின் பெரும் பான்மையோர் 'இந்து தீவிரவாத' அமைப்புகளைப் பற்றிய சரியான புரிதலிலேயே உள்ளனர். இந்த கொலைகளெல்லாம் யாரால் நடத்தப்படுகிறது? என்ன காரணத்துக்காக நடத்தப்படுகிறது? என்பதை பெரும்பாலான இந்துக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

தற்போதய ஜெயலலிதா அரசும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று ஃபைலை க்ளோஸ் செய்யாமல் முக்கிய குற்றவாளிகளை, உண்மை குற்றவாளிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டுவது வரவேற்கத் தக்கது. இந்த நிலை தொடர்ந்தாலே இது போன்ற அரசியல் லாபங்களுக்காக செய்யப்படும் கொலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்து இயக்கங்களின் அழுத்தத்தால் பெயருக்கு சில முஸ்லிம்களை கைது பழைய படலமும் ஆங்காகங்கே தொடரத்தான் செய்கிறது.

அடுத்து இஸ்லாத்தை வளர்க்க இது போன்ற கொலைகளை ஜிஹாதிகள் செய்வதாக தமிழ் இந்து தளத்தில் பார்த்தேன். இஸ்லாத்தை இது போன்ற கொலைகளை செய்து வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அது முஸ்லிம்களுக்கு தேவையும் இல்லை. இந்து மதத்தில் உள்ள சாதிப் பிடிப்பை தினமும் அனுபவிக்கும் பலர் அதில் இருந்து விடுதலையாக தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்பதுதான் தினமும் நடந்து வருகிறது. மதம் மாறிய அன்பர்களைக் கேட்டாலே மிக அழகாக சொல்வர்.

அடுத்து தஞ்சையிலும் நாகை மாவட்டங்களிலும் அக்ரஹாரங்கள் எல்லாம் இஸ்லாமிய தெருக்களாக மாறுவதாகவும் இதை தடுக்க வேண்டும் என்றும் அங்கு பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். அரசு செலவில் இலவசமாக படித்து விட்டு டாலருக்கும் பவுண்டுக்கும் ஆசைப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்ததால் கிராமத்தில் உள்ள அம்பிகளின் வீடுகளை நல்ல விலை கொடுத்து முஸ்லிம்கள் வாங்குகின்றனர். இதற்கு ஏன் இததனை கூப்பாடு? அக்ரஹாரத்தில் இதுவரை உள்ளே வர தலித்களை அனுமதிக்காமல் இருந்தனர. முஸ்லிம்கள் பல இடங்களை வாங்கியவுடன் தற்போது தலித்கள் மிக சுதந்திரமாக அக்ரஹாரத்துக்குள் வலம் வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம் அல்லவா! சமூக ஆர்வலர்கள் இந்த மாற்றத்தை கண்டு ஆச்சரியமடைகின்றனர். இது மேலும் தொடர வேண்டும். இந்த முறையிலாவது தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம்.

----------------------------------------------

சமீபத்தில் நடந்த பாஜக பிரமுகர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களின் பத்திரிக்கை செய்தியை இனி பார்ப்போம்.

சேலம் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் பெண் உட்பட மூன்றுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் முருகன் (வயது 45). இவர் கன்னங்குறிச்சி 6–வது வார்டு கிளை கழக தலைவராக இருந்து வந்தார்.மேலும் இவர் அதே ஊரில் கறிக்கடையும் நடத்தி வந்தார்.

இந்த கொலை குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக கன்னங்குறிச்சியை சேர்ந்த அங்காயி, ராஜா, செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

முருகனுக்கு கன்னங்குறிச்சி புதுஏரிப்பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இவருக்கும், உறவினர்கள் சிலருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. எனவே இந்தக் கொலை நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

--------------------------------------------

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கொலை வழக்கு சம்பந்தமாக சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து தனிப்படை போலீஸ் உயரதிகாரி கூறுகையில், Ôஇந்த கொலை வழக்கு சம்பந்தமாக அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி முரளியை (27) தேடி வருகிறோம். அவர் சேலம் பகுதியில் கூலிப்படையை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னதானப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை உட்பட முரளி மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன.
(நன்றி தினகரன்)

இன்றைய சூழலில் தற்போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? பெரும்பான்மையான இந்து நண்பர்கள் நம்மோடு நட்போடு இருக்கவே விரும்புகின்றனர். எனவே இந்துத்வாவாதிகள் பரப்பும் அவதூறுகளை தக்க சான்றுகளோடு இந்து மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும். நம்மிடம் ஊடக வசதி அந்த அளவு இல்லை. எனவே தனி நபர்களாக ஒவ்வொரு கிராமங்களிலும் நகர்களிலும் நமக்கு பழக்கமான இந்துக்களிடம் இந்துத்வா வாதிகளின் தீவிரவாத செயல்களை முடிந்தமட்டும் அம்பலப்படுத்த வேண்டும். முஸ்லிம்களின் மேல் உள்ள கசப்பை நமது அன்பினால் களைய வேண்டும். இதுவே தற்போது நம்முன் உள்ள முக்கியமான பணி.

------------------------------------------

inneram.com

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------

முடிவாக தீவிரவாதம் அது எங்கிருந்து வந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் ஒரு நேர்மையான முஸ்லிம் தீவிரவாதத்துக்கு துணை போக மாட்டான். தவறுதலாக நம்முடைய ஒரு சில சகோதரர்கள் தவறாக யாராலாவது வழி நடத்தப்பட்டிருந்தால் அவர்களை திருத்த முயற்சிக்க வேண்டும். திருந்தாதவர்களாக தோன்றும் பட்சத்தில் அவர்களை சட்டத்தின் பிடியில் நாமே கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாமும் அதைத்தான் விரும்புகிறது.