Followers

Wednesday, September 05, 2018

இஸ்லாமிய வழிகாட்டுதலை விட்டதாலேயே




மத குருவிடம் சென்று ஃபாத்திஹா ஓதும் பழக்கம் இஸ்லாமிய நடைமுறை இல்லை என்று நாம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அதன் உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். மார்க்க அறிஞருக்கும் தொழில் மேம்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவருக்கே தொழில் சரியில்லாமல்தானே ஐந்துக்கும் பத்துக்கும் உங்களிடம் யாசகம் கேட்கிறார்?
இங்கு நடந்த அனைத்து பிரச்னைக்கும் அந்த பெண் இஸ்லாமிய வழிகாட்டுதலை விட்டதாலேயே. இனியாவது கவனமாக இருப்போமாக!

'இத்தனை நடந்த பிறகும் தவ்ஹீத் ஜமாத்தை ஆதரிக்க வேண்டுமா?'

'இத்தனை நடந்த பிறகும் தவ்ஹீத் ஜமாத்தை ஆதரிக்க வேண்டுமா?'

என்று பலர் கேட்கின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஏகத்துவத்தை அடி உதை வாங்கி சொல்லி வந்தும் இன்னும் இது போன்ற மொளட்டீக இணை வைப்புகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. கபுர் முட்டிகளின் அறியாமையை போக்குவதற்காகவாவது தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் செயல்பாடு நம் சமூகத்துக்கு தேவைப்படுகிறது. இதை விட ஒரு சிறந்த ஜமாத் நமக்கு கிடைக்கும் வரை வளர்ந்த இந்த ஜமாத்துக்கு நம்மால் ஆன உதவிகளை செய்து வருவோமே.... என்ன... நான் சொல்வது சரிதானே......


Monday, September 03, 2018

கர்நாடக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

பெங்களூருவில் இருந்து 70 கிமீ தூரத்தில் இருக்கும் துமாகூரு வார்டு 70 ல் இனாயதுல்லா கான் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை கொண்டாட தனது ஆதரவாளர்களோடு ஊர்வலமாக வந்துள்ளார். ஏற்கெனவே தோல்வியில் உள்ள பாஜகவினர் இதனால் கோபமுற்று இனாயதுல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது ஆசிட் ஊற்றி விட்டு தப்பியுள்ளனர். தற்போது அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
03-09-2018


Sunday, September 02, 2018

“முதியோர்களுடன் அழகிய பெருநாள் சந்திப்பு"

“முதியோர்களுடன் அழகிய பெருநாள் சந்திப்பு"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
குமரி மாவட்டம் - 
தக்கலை கிளை சார்பாக 22/08/2018 புதன் கிழமை அன்று பெருநாள் தொழுகைக்கு பின்பு முதியோர் இல்லம் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் கிளையின் உறுப்பினர்களோடு அங்கு சென்று, உறவுகளால் கைவிடப்பட்ட நமது தொப்புள் கொடி சொந்தங்களான முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் மனம் விட்டு பேசி, கிளை சார்பாக ஆப்பிள், மாதுளை, பிஸ்கெட் போன்ற உணவு பொருடகளை அவர்களுக்கு கொடுத்து.. பல படிப்பினைகளோடு திரும்பினோம்..

எல்லா புகழும் இறைவனுக்கே...



பரிணாமவியலை ஆதரிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரின் புலம்பல்:
"ஹையோ..ஹையோ.... நானா இது!....பரிணாமவியலை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து என் நிழல் கூட குரங்கு மாதிரியே தெரியுதே! கடவுளே என்னை காப்பாத்து.."


--------------------------------------------------------------------------
நம உடலில் உள்ள அல்புமீன் என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை.. நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், சர்க்கரை போன்ற அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. நமது உடலின் ரத்தக் குழாய்கள் மூலமாக பயணித்து லிவரிலிருந்து சத்துக்களை பிரித்து கொடுத்து எந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் தேவை என்பதை தீர்மானித்து தனது வேலையை கச்சிதமாக செய்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படாமல் எந்த குழப்பமும் இல்லாமல் தனது வேலையை செய்வதை பார்த்து உயிரியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புரோட்டீன்கள் சிறந்த சேவையாற்றுகிறது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எவ்வளவு அவசியமோ அதுபோல் நமது உடலுக்கு அல்புமீன் புரோட்டீன்களின் பங்கு மிக அவசியமாகிறது. சிறு நீரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இந்த புரோட்டீன் எந்த நேரமும் தங்குவதில்லை. எப்பொழுதெல்லாம் சிறு நீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் உடன் ஓடி வந்து பிரச்னையை தீர்த்து வைத்து சீராக செய்ல்பட வைப்பதில் இதன் பங்கு முக்கியமானது. இந்த புரோட்டீன்கள் செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. ஒரு கோழி முட்டையின் வெள்ளைக் கருவிலும் உள்ளது அல்புமின் என்ற புரதம் . இதன் பலனை உணர்ந்த பலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதைப் பார்ததிருக்கிறோம். இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்?
ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லை. இது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.
மற்றொரு அதிசயத்தையும் பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?
ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.
அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏ, குரோமசோம்கள், புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் 
டார்வின்.