பல ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்டமே இயற்றியுள்ளனர். பிரான்சில் அரசு ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் செயலைக் கண்டித்து பெரும் போராட்டமே நடந்துள்ளது. அங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்க முன் வர வேண்டும். நியுசிலாந்து உருகுவே போன்ற நாடுகளில் சட்ட பூர்வ அந்தஸ்து தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் இப்படி என்று நாம் கேட்டால் 'தனி மனித சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்' என்ற பதில் வரும்.
ஒரு மனிதன் பலரோடு சேர்ந்து சிரித்தும் பேசிக் கொண்டும் இருந்தால் அது இயற்கை! அதே மனிதன் தனிமையில் செல்லும் போது சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சென்றால் அவனை எங்கு கொண்டு போய் விடுகிறோம்? அதே போல் இறைவன் (அல்லது உங்கள் பார்வையில் இயற்கை)மனிதனைப் படைத்து அவன் இன்பம் அடைவதற்கு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் படைத்திருக்கிறான். இதனால் அந்த மனிதனுக்கு மன அமைதியும் சந்ததி பெருக்கமும் ஏற்படுகிறது. இது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வழக்கம். இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் இன்று நானும் நீங்களும் கணிணியின் முன்னால் உட்கார்ந்திருக்க மாட்டோம். மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களினாலும் இயற்கைக்கு மாற்றமாக உறவு வைத்துக் கொள்ளும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களை திருத்துவது மருத்துவர்களின், சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா?
தவறிழைக்கும் தன் குழந்தைகளை கண்டிக்கும் பெற்றோரைப் பார்த்து 'ஏன் அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்?' என்று நாம் கேட்பதில்லை. கண்டிப்பதன் காரணம் தன் மக்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற விருப்பம் தான். அதே போல் தன் மக்கள் தவறிழைக்கும் போது கண்டிக்க வேண்டியதும் ஒரு அரசின் கடமையல்லவா?
இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனி மனித சுதந்திரம் என்று ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க நாடுகளிலும் இந்த ஓரினச் சேர்க்கையை அனுமதிக்கும் கொடுமையை நாம் பார்த்து வருகிறோம். மனிதனின் மனம் என்றுமே தவறை நோக்கியே இழுத்துச் செல்லும். அந்த வகையில்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான். சூழ்நிலைகள் சிலரை ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றி விடுகின்றனது. அநத பரிதாபத்திற்குரிய அன்பர்களை கவுன்சிலிங் கொடுத்து, முற்றியவர்களை மன நல மருத்துவ மனையிலும் சேர்ப்பித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இஸ்லாமிய நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சட்டம் தளர்த்தப்பட்டால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைப் போன்றே அரபு நாடுகளும் மாறி விடும் ஆபத்து உண்டு.
எங்கள் கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இது போன்ற ஒரு பிரச்னை. அவர்கள் வீட்டில் ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காததால் பம்பாய் நகருக்கு ஓடி விட்டான். வயதுக்கு வந்த இரண்டு சகோதரிகள். கஷ்டப் பட்டு அந்த பெண்களை உறவினர்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்வித்தார்கள். பம்பாய் ஓடியவன் அங்கு அரவாணிகளோடு சேர்ந்து கொண்டான். விபரம் தெரிந்து யாரும் அழைக்க பம்பாய் சென்றால் நம்மவர்களைப் பார்த்து விட்டு ஓடி விடுவான். இப்படியே இருபதுவருடம் ஓடியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனாகவே திரும்பி எங்கள் ஊருக்குவந்தான். பம்பாயிலிருந்து அவன் கூடவே கொண்டு வந்தது எய்ட்ஸையும் சேர்த்துதான். அவனது சகோதரிகள் ஒரு வாரம் மருத்துவ சிகிச்சைக் கொடுத்தார்கள். நோய்முற்றி விட்டதால் ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் நாற்பது வயதிலேயே மரணமடைந்து விட்டான். வாழ வேண்டிய வயதில் இன்றுஅவன் நம்மிடம் இல்லை.
ஓரினச் சேர்க்கையைப் பற்றி ஜூனியர் விகடனில் வந்த செய்தியை பார்ப்போம்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மத ரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன் இது ஒரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக 'கிராஃப்ட் எபிங்' என்னும் செக்ஸூவாலஜிஸ்ட் 1886-ல் மருத்துவ பாட நூல் ஒன்றை எழுதினார். இதில் 'ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும் இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மன நோயாகவே கருதியது.
டாக்டர் நாராயண ரெட்டி
ஜீனியர் விகடன்
26-03-2006
------------------------------------------
இந்த ஓரினச் சேர்க்கையைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம்.
'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.
'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.
'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.
'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.
26 : 165,166,167,168,169 - குர்ஆன்.
தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.
'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.
'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.
11 : 80,81 - குர்ஆன்.
லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.
'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்
இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்