Followers

Monday, January 04, 2021

தாஜ் மஹாலை குறி வைக்கும் இந்துத்வா!

 பாஜக அரசின் ஆதரவின் கீழ், நாடு வெறுப்பின் நெருப்பில் தள்ளப்படுகிறது

தாஜ் மஹாலை குறி வைக்கும் இந்துத்வா!

பல கோடி அன்னிய செலாவணியை கொட்டித் தருகிறது தாஜ் மஹால். வெளிநாட்டவர் அதிகம் நமது நாட்டுக்கு வருவது தாஜ் மஹாலை பார்க்கவே. அங்கும் இந்துத்வாக்கள் சென்று கொடி ஏற்றுவதும் குங்குமப்பூவை வைப்பதுமாக அதன் இயற்கை அழகை கெடுக்க முயலுகின்றனர். அந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது அல்ல. அது அரசுக்கு சொந்தமானது என்று இந்த மூளை வறண்ட காவிகளிடம் யாராவது எடுத்துச் சொல்லுங்களேன்.

தாஜ்மஹால் என்பது நாட்டின் பாரம்பரியம், இந்து-முஸ்லிமின் சொத்து அல்ல

நாட்டின் பாரம்பரியமான தாஜ்மஹால் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

தாஜ்மஹால் மீது குங்குமப்பூ, மற்றும் கொடியை ஏற்றி எதை சாதிக்கப் போகிறார்கள்?



அழிவை நோக்கி செல்வதை காண மனம் கனக்கிறது.

 மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஜிராபூர் என்ற ஊரில் பள்ளியும் மதரஸாவும் அருகருகே அமைந்துள்ளது. நேற்று இந்த இடத்துக்கு வந்து காவிக் கும்பல் 'ராமர் கோவில் கட்டியே தீருவோம். ஜெய் ஸ்ரீராம்' என்று வெறியுடன் கலவரம் பண்ணும் நோக்குடன் கூடினர். ஆனால் முஸ்லிம்கள் எந்த எதிர் வினையும் ஆற்றாமல் அமைதி காத்தனர். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து இது நான்காவது சம்பவம். மத்திய அரசும் மாநில அரசும் வேடிக்கை பார்க்கின்றன. 


எனது தாய் நாடு இந்துத்வா நாசகாரர்களால் அழிவை நோக்கி செல்வதை காண மனம் கனக்கிறது. இப்படி எல்லாம் பயமுறுத்தி முஸ்லிம்களை அடிமைபடுத்த இந்த கூட்டம் முயல்கிறது. அது கனவிலும் நடக்காது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.




இஸ்லாமிய மதரஸாவை இடித்துத் தள்ளிய யோகி அரசு!

 இஸ்லாமிய மதரஸாவை இடித்துத் தள்ளிய யோகி அரசு!


உபியில் உள்ள ஆஜம்கர் மாவட்டத்தில் உள்ள கிராமம் சாந்த் பட்டி. கடந்த 70 வருடமாக 'தர்ஸ்கா இஸ்லாமிக் ஸ்கூல்' 600 மாணவ மாணவிகளைக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய கல்வியோடு அரசு பாடத்திட்டங்களையும் சேர்த்து கல்விப் பணி ஆற்றி வருகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஐந்து வகுப்பறைகளையும் நூலகத்தையும் கட்டியுள்ளனர் நிர்வாகிகள்.

முகமது அலி என்ற உள்ளூர்வாசி நிர்வாகத்தோடு உள்ள சில தனிப்பட்ட பகையினால் 'மைதானத்தில் எப்படி கட்டிடம் கட்டலாம். அரசு ஆவணத்தில் அது விளையாட்டு மைதானம்' என்றுதானே குறிப்பிடப்பட்டுள்ளது என்று வழக்கு தொடர்ந்தார். இவர் சமீபத்தில் பிஜேபியில் சேர்ந்துள்ளார். கிராம மக்கள் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பலன் இல்லை. முஸ்லிம்களுக்கு எந்த வகையிலாவது தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு ஆணையை பயன்படுத்தி கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை இடித்து தள்ளியுள்ளது யோகி அரசு. அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவியர் வகுப்பறை இல்லாமல் உள்ளூரில் உள்ள பெரிய வீடுகளில் அமர்ந்து பாடங்களை பயின்று வருகின்றனர்.

இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வியறிவு பெற்று விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக காய் நகர்த்துகிறது யோகி அரசு. யோகியைப் போல் கஞ்சா அடித்துக் கொண்டு போதையில் மிதந்தால் மிகவும் சந்தோஷப்படுவார் போல. இவரைப் போன்ற காவிகள் எந்த அளவு திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்களோ அதை விட வீரியமாக முஸ்லிம்கள் தங்களின் கல்வியை மேம்படுத்திக் கொள்வார்கள். எங்கு அதிக எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் மிக வேகமாக வளரும். அந்த காட்சியை நாமும் நமது கண்களால் இறைவன் நாடினால் பார்க்கத்தான் போகிறோம்.

விலை போன இந்திய ஊடகங்கள் இதனை உலகுக்கு கொண்டு வரப் போவதில்லை. நாம் தான் இணையத்தின் வாயிலாக ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்

தகவல் உதவி
India tomorrow
02-01-2020





Sunday, January 03, 2021

அவர்களின் உதவியைப் பெற நாம் கொடுத்த விலை மிகப்பெரியது...

 அவர்களின் உதவியைப் பெற

நாம் கொடுத்த விலை மிகப்பெரியது...
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
(எமக்கு பாடமான ஒரு மாணவியின் உருக்கமான வார்த்தைகள்)

நாங்கள் உயர் தரத்தில் கற்றுக் கொண்டிருந்த வேளை...

வகுப்பு நண்பிகள் அனைவரும் இடைவேளை நேரத்தில் காலை உணவுக்காக ஒன்று கூடுவது வழமை. யார் யார் எதைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியாத அளவுக்கு அனைவரது உணவையும் கலந்து விடுவோம்.

ஆனால் ஒரேயொரு ஏழை மாணவி மட்டும் எதையும் கொண்டு வருவதுமில்லை; எங்களோடு கலந்து கொள்வதுமில்லை. வெட்கத்துடன் ஒதுங்கியே இருப்பாள்.

அவளை அழைத்து யார் என்ன கொண்டு வந்தது என்று யாருக்கும் தெரியாது. எப்போதும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து சாப்பிடு என்று கூறி அவளை சம்மதிக்க வைத்து உட்கார வைத்தேன். அன்றிலிருந்து எங்களுடனேயே சாப்பிட ஆரம்பித்தாள்...

இது பல மாதங்கள் தொடர்ந்தன. திடீரென அவளது தந்தையும் மரணித்தார். அதன்பின் அந்த மாணவியின் நிலையும் மாறியது.நல்ல ஆடை, பணம் என முன்பிருந்ததை விட நல்ல நிலையில் இருந்தாள்.

அவளை நெருங்கி காரணத்தைக் கேட்டேன்.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு சற்றூ நேரம் அழுதாள். பின் " அல்லாஹ்வின் மீது ஆணையாக. நாங்கள் பல நாட்கள் இரவுச் சாப்பாடு இல்லாமல் தூங்கியிருக்கின்றோம். உங்களோடு காலை உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பாடசாலைக்கு வரும் நேரத்தை எதிர்பார்த்திருப்பேன்.

எங்கள் தாய் இரவு உணவுக்கான ரொட்டியை எங்கள் காலை உணவுக்காக எடுத்து வைப்பார். என் பங்கையும் என் சகோதரர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக காலையில் நேர காலத்துடன் நான் பாடசாலைக்கு வந்து விடுவேன்.

தற்போது என் தந்தையின் மரணத்தின் பின் எல்லோரும் எங்களை ஆதரிக்கின்றனர்; உறவினர்கள் வருகின்றனர்; உதவிகள் பல செய்கின்றனர். நிறுவனங்கள் தேடி வந்து உதவுகின்றன... தற்போது நாங்கள் அனாதைகள் என்ற காரணத்தினால்...

எம் தேவையை உறவினர்களும், நிறுவனங்களும் உணர்ந்து கொள்ள நாம் கொடுத்த விலைதான் மிகப்பெரியது... எங்கள் தந்தையின் மரணம்.

(மரணத்துக்கு முன் என் தந்தை ஒரு முறையாவது வயிறு நிறைய சாப்பிட்டிருக்கக் கூடாதா... என்று ஏங்குகின்றேன்)

இதைக் கூறும் போது அவளால் அவளது அழுகையை அடக்க முடியவில்லை. சத்தமிட்டே அழுது விட்டாள்...

அன்றுதான் அவளின் கஷ்டம் எனக்கும் தெரிந்தது.

அவளது வார்த்தைகளும் அழுகையும் என்னையும் அழ வைத்தன. இன்று வரை அவளது அழுகையின் ஆழத்தை நினைத்துப் பார்க்கின்றேன்.

அவளுக்கு வகுப்பு நண்பிகள் நாங்களும் உதவ நினைத்தோம். ஆனால் மரணிப்பதற்கு முன்னரான அவளது தந்தையின் பசிக்கு என்ன செய்வது...

மரணித்ததன் பின் "நாங்கள் இருக்கின்றோம்" என்று கூறுவதில் பயனில்லை...

ஒருவரோடு சண்டையிட்டு பல வருடங்கள் உறவைத் துண்டித்து, மரணத் தருவாயில் " என்னை மன்னித்து விடு" என்பதில் பயனில்லை...

ஒருவரின் முன்னேற்றத்தில் எவ்வித பங்கும் எடுக்காது " உன்னால் பெருமை அடைகிறேன்" என்பதில் பயனில்லை...

கவலைக்குள் ஒருவரைத் தள்ளிவிட்டு " உன் கண்ணீர் என்னைக் கொல்கிறது" என்று கூறுவதில் பயனில்லை...

உரிய நேரத்தில் சொல்லப்படாத இந்த வார்த்தைகளால், உதவியால் என்ன பயன்தான் இருக்கின்றது...

என்று கூறுகிறாள் அந்த மாணவி...

நாம் உணர வேண்டிய தருணம் இது...

எமக்கு பல பாடங்களை கற்பிக்கும் வரிகள் இது.



Saturday, January 02, 2021

கோவிலை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.

 சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இந்து கோவிலை சில சமூக விரோதிகள் இடித்துவிட்டனர். பாகிஸ்தான் அரசு அதே போன்று கோவிலை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. வெளி நாடு வாழ் பாகிஸ்தானியர்கள் அங்கு கோவிலை கட்டித் தர வலியுறுத்தி ஊர்வலம் சென்றுள்ளனர். சிறு பான்மை மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது ஒரு சிறந்த அரசின் கடமை. அதனை சரியாக பாகிஸ்தானிய அரசு செய்து கொடுக்கும் என்று நம்புவோம்.