'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 18, 2022
Sunday, June 12, 2022
முதஸ்ஸிர் என்ற இளைஞனை இழந்த தாயின் பேச்சு!
முதஸ்ஸிர் என்ற இளைஞனை இழந்த தாயின் பேச்சு!
'நீங்கள் இஸ்லாமிய குழந்தைகளை பலஹீனர்களாக கருதுகிறீர்களா? சிங்கம் போன்ற தாய் ஒரு சிங்கம் போன்ற வீரம் செறிந்த மகனையே தருவாள். எனது மகன் ஒரு சிங்கத்தை போன்றவன். இஸ்லாம் உயிர்ப்புடன் அன்றும் இருந்தது: இன்றும் இருக்கிறது: இனி என்றும் இருக்கும். எந்த சக்தியாலும் இதனை தடுத்து விட முடியாது. எனது மகன் முதஸ்ஸிரைப் பார். இஸ்லாத்துக்காக தனது உயிரை கொடுத்து இன்று தனியாக சென்றுள்ளான். தற்போது நூற்றுக்கணக்கான முதஸ்ஸிர்கள் உருவாகியுள்ளனர். என்ன செய்து விட முடியும் உன்னால்'
நெஞ்சில் அடித்து உறுதியோடு அந்த தாய் சங்கிகளுக்கு பாடம் எடுக்கிறார். இன்னும் எத்தனை புல்டோஸர்கள் வந்தாலும் எத்தனை துப்பாக்கி ரவைகள் வந்தாலும் இஸ்லாம் எங்களை விட்டு அகலாது என்பதை யோகிக்களுக்கும் அமித்ஸாக்களுக்கும் மோடிக்கும் உரத்து சொல்கிறார். இஸ்லாத்தை இந்திய மண்ணிலிருந்து அகற்றி விடலாம் என்ற மனக் கோட்டை மட்டும் கட்ட வேண்டாம் என்று சங்கிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
Saturday, June 11, 2022
தமிழ்தேசியத்தின் பிதாமகன் இராசராசனின் ஆட்சி பொற்கால ஆட்சியாம்..??
தமிழ்தேசியத்தின்
பிதாமகன் இராசராசனின் ஆட்சி பொற்கால ஆட்சியாம்..??
பார்ப்பன
கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு...
தமிழகத்தில்
பொற்கால ஆட்சியான களப்பிரர்களின் ஆட்சியை இருட்டிப்பு செய்து. சமண. பௌத்த மடங்களை
இடித்து, விரட்டி. சைவ
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மேலோங்க செய்த சோழர் ஆட்சி.
பார்ப்பன
கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு.
பெரிய
கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது.
முன்னர்
தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும்
பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான்.
போரில்
தோற்றவர்களில் இருந்தும், வரி கட்ட
முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும்
போட்டு, கல்வெட்டுகளில்
பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி
தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில்
நெல் குற்ற அனுப்பினான்.
வரிக்கொடுமை
தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12
குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
வரி கட்ட
முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம்
சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம்
அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு
சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான
பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக
ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது.
அதே நேரத்தில்
வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து
தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும்
சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
சோழர்
காலத்தில் கிரேக்க ரோமானிய நாடுகளில் பொருள்களின் தரத்திற்கேற்ப சந்தைகளில் விலை
கூவி விற்ப்பதைப் போன்று அடிமை மனிதர்கள் அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப
விலைக் கூவி விற்கப்பட்டுள்ளனா. அதேபோன்று கி.பி.11-12 ஆம் நூற்றாண்டுகளில்
சோழநாட்டில் அடிமைகள் விற்கப்பட்ட செய்தி பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
அடிமைகளில் ஆண்களும், பெண்களும்
இருந்தனர்.
1. தாசியின்
மக்கள்
2. விலைக்கு
வாங்கப்பட்டோர்
3. கொடையாகப்
பெறப்பட்டோர்
4. பெற்றோரால்
விற்கப்பட்டோர்
5. வெள்ளளத்தின்
போது பாதுகாக்கப்பட்டோர்
6. பிரமாணத்தின்
மூலம் அடிமையானோர்
7. கடன் காரணமாக
அடிமைப்பட்டோர்
8. போரில்
பிடிப்பட்டோர்
9. சூதில்
வெல்லப்பட்டோர்
10. தாமே வழிய
வந்து அடிமையானோர்
11. வறுமையால்
அடிமைப்பட்டோர்
12. தன்னைத்தானே
விற்றுக்கொண்டவர்கள்
13. இறைவனுக்கு
அடிமையானோர்
14. அடிமைப்
பெண்ணை திருமணம் செய்து அதன் வழி அடிமையானோர்
15. குறிப்பிட்ட
கால அடிமைகள்
இவ்வாறு
பதினைந்து காரணங்களால் மக்கள் அடிமையாக்கப்பட்டனர். சமுதாயத்தில் இழிவானதாக
கருதப்படும் பணிகளை இம்மக்களைக் கொண்டு செய்தனர். இவர்களை தாசர், தாசன், தாசி என்று
மனு குறிப்பிடுகின்றது.
கி.பி.1201-ல்
பஞ்சம் ஏற்பட்டபோது வாழ வழியின்றி வெ___ன் ஒருவன்
தன்னையும், தன்
மனைவியையும். துன் மக்களையும் 110 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளான்.
கி.பி.1219-ல்
5 பெண்களும், 5 ஆண்களும்
வழிவழி அடிமையாக 1000 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளனர்;. கி.பி.1210-ல்
வெ___ன் ஒருவரும் அவன் மனைவியும் 110 காசுகளுக்கு மடத்திற்கு அடிமைகளாக
விற்கப்பட்டுள்ளனா;.
நாங்கூh; அந்தணன்
ஒருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உட்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றொரு
முறையும் விற்றுள்ளான். அத்துடன் 2 பெண்களும், 5 ஆண்களும் 30 காசுகளுக்கும் அடிமைகளாக
விற்கப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன
(ஆதாரம்:
இராசாராசன் துணூக்குகள் நூறு வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை / பிற்காலச் சோழர்
வரலாறு பக்கம் எண்:479,480. -தி.வை.சதாசிவ பண்டாரத்தார். அண்ணாமலைப்
பல்கலைக்கழகம்)
Thursday, June 09, 2022
முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?
முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?
வாழ்வளித்த அரேபிய மண்ணுக்கு என்றும் நன்றியுடன்! சலாம்..
வாழ்வளித்த அரேபிய மண்ணுக்கு என்றும் நன்றியுடன்! சலாம்..
சாதி மதம் பாராமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த நாடு சவுதி..
நீர் வளம் ,இயற்கை வளம் இல்லாமல் இருப்பினும் பஞ்சம் இல்லா நாடு சவுதி..
இங்கு யாரையும் அல்லாஹு அக்பர் சொல்ல கட்டாயப்படுத்துவதில்லை..
யாரை பார்த்தாலும் சலாம்..
கிளீனரை பார்த்தாலும் அரவணைக்கும் மக்கள்..
உண்மையில் I miss U so much.. Good bye Saudi
தியாகராஜன் தஞ்சாவூர்

