ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!
'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'
-குர்ஆன்24:40
விமானத்தில் பயணிக்கும் ஒருவர் மேகத்துக்கு மேல் பறந்தால் சூரியனின் பிரகாசத்தை நன்றாக உணருவார். அதே விமானம் மேகத்துக்கு கீழே பறக்கும் போது முன்பு இருந்த சூரியனின் பிரகாசம் மட்டுப் படுவதை உணருவார். சூரியனின் கதிர்கள் மேகத்தை ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுவதால்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது.
மேகங்கள் தடுப்பதால் இன்றைய நவீன அளவைகளின் தொழில் நுட்ப உதவி கொண்டு சூரியனின் ஒளிக் கதிர்கள் 30 சதவீதம் வரை கடலின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளி நிற மாலைகளின் ஏழு வண்ணங்களையும் கடலின் மேற்பரப்பு கிரகித்துக் கொள்கிறது. நீல நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக 200 மீட்டர் ஆழத்துக்குள் உறிஞ்சப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே நீங்கள் செல்ல செல்ல நீல நிறமும் மறைந்து போய் இருள்வெளிகள் சூழ ஆரம்பித்து விடுகிறது. 1000 அடி ஆழம் வரை நீங்கள் சென்றால் எந்த ஒரு ஒளியையும் உங்களால் காண முடியாது. உங்கள் கைகளை நீங்கள் பார்க்க நினைத்தாலும் உணரத்தான் முடியுமே யொழிய கண்களால் பார்க்க முடியாது.
கடலின் ஆழத்தில் இருள் வெளிகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை விளக்கும் படம்.
இன்று நாம் கடலின் ஆழத்தையும் அதன் தன்மையையும் வெகு சுலபமாக கண்டு பிடித்து விட முடிகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு பல நாள் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்கிறோம். நீர் மூழ்கி கப்பல்களின் உதவி கொண்டு கடலின் ஆழத்தை ஓரளவு நம்மால் நெருங்க முடிகிறது. ஆளில்லா நீர் மூழ்கி சாதனங்களில் கேமராக்களைப் பொறுத்தி கடலின் தன்மைகளை அடர்த்தியை இப்பொழுது அறிந்து கொள்கிறோம். இது போன்ற சிறந்த உபகரணங்கள் இல்லாமல் மனிதனால் 70 மீட்டருக்கு மேல் கடலின் ஆழத்துக்கு செல்ல முடியாது. அந்த காலத்தில் முத்து குளிப்பவர்கள் இருந்துள்ளார்களே என்ற கேள்வியும் வரும. அவர்கள் எல்லாம் கடல் ஆழம் குறைந்த பகுதிகளிலேயே தங்கள் தொழிலை செய்து வந்தனர. நாமோ ஆயிரம் மீட்டர் ஆழத்தையும் அதற்கும் கீழான ஆழத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இருள் வெளிகள் ஆரம்பமாகும் 200 மீட்டர் ஆழம் வரை கூட மனிதனால் எந்த உபகரணமும் இல்லாமல் பயணிக்க முடியாது. இத்தனை வசதி வாய்ப்புகளும் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பிறகுதான் கடலின் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை தற்காலங்களில் கண்டறிய முடிந்தது.
மேல் அடுக்கில் உள்ள சிகப்பு நிறம் 10 மீட்டருக்குள் கிரகிக்கப்படுகிறது. பின்னர் 50 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் கதிர்கள் கிரகிக்கப்படுகிறது. 100 மீட்டர் ஆழத்தில் பச்சைக் கதிர்கள் உறிஞ்சப்படுகிறது. 200 மீட்டர் ஆழம் சென்றவுடன் நீல நிறக் கதிர்களும் மறைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் உறிஞ்சப்படும் நிறம் ஊதாவாகையால் நமது கண்களுக்கு கடலின் மேற்பரப்பு நீலமாகத் தெரிகிறது.
அடுத்து கடலின் அடியில் ஒன்றின் மேல் ஒன்றாக அலைகள் ஏற்படுவதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். இங்கு ஏற்படும் அலைகளின் கீழ் மட்ட நீரின் அடர்த்தியும் மேல் மட்ட நீரின் அடர்த்தியும் வேறுபடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இங்கு ஏற்படும் இந்த அலைகளையும் அதன் அடர்த்தியையும் நாம் நமது சாதாரண கண்களைக் கொண்டும் காண இயலாது. மேலும அதற்க்கான கடல்சார்ந்த படிப்பும், கடலின் உப்புத் தன்மையைப் பற்றிய அறிவும், கடல் நீரின் அடர்த்தியை விளங்கும் ஆற்றலும் இருந்தால்தான் உங்களால் சாத்தியப்படும்.
கடலின் கீழ் பரப்பும் மேல்பரப்பும் அடர்த்தியில் வெறுபடுவதை சுட்டிக்காட்டும் படம்.
படத்தில் கடல் நீரின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் உள்ள அலைகளை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. கீழ் அடுக்கு மேல் அடுக்கை விட அடர்த்தி அதிகமாக உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இவை எல்லாம் சமீப காலங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒளியின் வேகம் வினாடிக்கு 300000 கிலோ மீட்டராகவும் நீருக்கு அடியில் அதே ஒளியின் வேகம் 225000 கிலோ மீட்டராகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை கூட சூரிய ஒளியால் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. 200 மீட்டர் ஆழம் வரை சன்னம் சன்னமாக குறைந்துமுடிவில் ஒளியே இல்லாமல் போக காரணம் தண்ணீரின் மேல் மட்ட கீழ்மட்ட அடர்த்தியும் அதற்கு மேல் அங்கு அலைகள் தடுப்புகளாக தடுப்பதுவுமே முக்கிய காரணம். சராசரி கடலின் ஆழமாக விஞ்ஞானிகள் குறிப்பிடுவது 3795 மீட்டராகும். கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் ஆழத்தை அன்றைய மனிதனால் கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா? என்பதை இங்கு நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'
-குர்ஆன்24:40
இந்த வசனத்தை இன்னும் சற்று ஆராய்வோம்:
1.நாம் கடலின் ஆழத்துக்கு சென்றோமானால் பல அடுக்குகளை கொண்ட இருள்களை காண முடியும் என்று இந்த வசனத்தில் விளங்குகிறோம்.
ظلمات 2. என்ற அரபி வார்த்தைக்கு இருள் என்று பொருள் வரும். இங்கு இந்த வார்த்தையை இறைவன் இருள்கள் என்று பன்மையில் குறிக்கிறான். இதுவும் கூட தேர்ந்தெடுத்து போடப்பட்ட வார்த்தை. ஏனெனில் கடல் நீர் பல அடுக்குகளால் பல வேறு அடர்த்தியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த சூழ்நிலையை இருள்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
3.அடுத்து 'அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது' என்று சொல்லப்படுகிறது. மேலே நாம் பார்த்த அனைத்து உபகரணங்களும், அறிவியல் அறிவும் இருந்தால் தான் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடியும்.
ஆனால் முகமது நபியோ கடலை பார்த்திராதவர். எழுதப் படிக்கவும் தெரியாதவர். அங்கு வாழ்ந்த சமூகத்தினரும் கூட மெத்த படித்தவர்கள் கிடையாது. இந்த நிலையில் மேற்கண்ட வசனங்களை நாம் சிந்தித்து பார்ப்போம். எப்படி இந்த மனிதரால் இது போன்ற ஒரு வார்த்தை பிரயோகத்தை உபயோகப்படுத்த முடிந்தது?
அடுத்து இது போன்ற ஒரு வார்த்தையை அவர்கள் மத்தியில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் கடலின் ஆழத்தின் இருள்களைப் பற்றி அன்றைய மக்கள் முகமது நபியிடம் கேட்கவும் இல்லை. கடலையே பார்த்திராத அந்த மக்களுக்கு இது பற்றிய அறிவும் இருந்திருக்க வாய்ப்பும் இல்லை.
'இது முன்னோர்களின் கட்டுக் கதை அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும் மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது.' எனவும் கூறுகின்றனர்.
'வானங்களிலும் பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்' என முஹம்மதே கூறுவீராக! அவன் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
-குர்ஆன் 25:5,6
Professor Rao says: "It is difficult to imagine that this type of knowledge was existing at the time around 1400 years back. Maybe some of the things they have simple ideas about such, but to describe those things in great detail is very difficult. So, this is definitely not a simple human knowledge. A normal human being cannot explain this phenomenon in that much detail. So I thought the information must have come from a supernatural source."
Yes, the source of such knowledge must be from a level beyond that of man. It cannot be from nature, as Professor Rao said, but this is far beyond nature, and far beyond human capability. What Professor Rao was trying to say is that this is something which cannot be attributed to a natural being, for it is truly the speech of the one who knows nature, the universe and its secrets, as the Qur'an tells us:
Say: The (Qur'an) was sent down by Him who knows the secrets (that is) in the heavens and the earth... (Qur'an 25:6).
Prof. Ramakrishna Rao, in "Muhammad the Prophet of Islam":
"The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes! There is Muhammad, the Prophet. There is Muhammad, the Warrior; Muhammad, the Businessman; Muhammad, the Statesman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of Orphans; Muhammad, the Protector of Slaves; Muhammad, the Emancipator of Women; Muhammad, the Judge; Muhammad, the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero." ... Muhammad is the "Perfect model for human life."
1000 மீட்டருக்கும் 5000 மீட்டருக்கும் இடைப்பட்ட கடலின் ஆழத்தில் மிக சக்தி வாய்ந்த கேமராககளின் துணை கொண்டு எடுக்கப்பட்ட காணொளி. எங்கும இருட்டு. எதிலும் இருட்டு. ஆனாலும் அங்கும் உயிரினங்களை இறைவன் பரவ விட்டிருக்கிறான். அங்கு வாழும் உயிரினங்களுக்கு பிரத்தியேகமாக உடலிலேயே ஒளி உமிழும் தன்மையை ஏற்படுத்தியுள்ளான். படைத்தவனின் கருணையை என்னவென்பது. இது வரை நான் பார்த்திராத உயிரினங்கள்.
'அவனே இறைவன்! படைப்பவன்: உருவாக்குபவன்: வடிவமைப்பவன்'-குர்ஆன் 59:23
ஆம்! வடிவமைப்பவனிலெல்லாம் சிறந்த வடிவமைப்பவன். என்ன ஒரு நேர்த்தி: என்ன ஒரு அழகு: புகழ வார்த்தைகள் இல்லை. இந்த காணொளியைப் பார்த்தவுடன் என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளே இவை....
الله اكبر....الله اكبر.....الله اكبر
அல்லாஹூ அக்பர்....அல்லாஹூ அக்பர்......அல்லாஹூ அக்பர்.........
3 comments:
ஆழ்கடலின் அறபுதங்களுக்கும் குரானின் வசனங்களும் சம்பந்தப்படுத்த முடியாதவைகள். தங்களின் கட்டுரை உரு உளறல்.
முகமது கடலை பார்த்தறியாதவரா? சவுதி ஒரு தீபகற்ப நாடு. முகமது ஒரு வியாபாரி. சவுதி வியாபாரிகள் அக்காலத்தில் கடல் வழியாக பல நாடுகளுடன் வியாபார தொடர்பு வைத்துள்ளனர். முகமது மன்னராக வேறு இருந்தாராம் ஆனால் கடல் பார்க்கவில்லையாம். காதுல பூதான் சுத்துவாங்க, முகமதுவின் பக்தர்கள் பூ கூடையவே சுத்துறாங்கப்பா. மூளையை கழற்றி வைத்தால் முஸ்லீம் தான்.
கடலை பார்த்திராதவர் என்று சொல்ல முடியாது,எழுத படிக்க தெரியாதவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,இந்த குர்ஆன் வசனம் தற்கால மனிதர்களுக்கு சான்றாக அமைந்தள்ளது ,அந்தக் கால அரபுகளிடம் இறைவன் இதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,இது இன்றைய மக்களுக்காகத்தான்.
Post a Comment