Followers

Showing posts with label பார்பனியம். Show all posts
Showing posts with label பார்பனியம். Show all posts

Wednesday, January 20, 2016

எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!





எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!

கடந்த 4 ஆண்டுகளில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்!

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!

தமிழ் இந்து நாளிதழ்
21-01-2016

Monday, September 28, 2015

சாய் ராம் பொறியியல் கல்லூரியின் சுற்றறிக்கை!



'ஈக்கள், கொசுக்கள், குரங்குகள் மற்றும் நாய்கள் கல்லூரி வளாகத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மாணவ மாணவிகள் கொண்டு வரும் புலால் உணவுகளேயாகும் என்று அறியப் படுகிறது. எனவே வரும் 21-09-2015 முதல் அனைத்து மாணவ மாணவிகளும் மாமிச உணவுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவ மாணவிகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'

-சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரி

தயிர் சாதம், புளி சாதம், போன்ற மற்றும் எண்ணெய் நெய்க்களால் பொறிக்கப்பட்ட பதார்த்தங்களைக் கொட்டுவதால் கொசு, ஈ பெருகாதா? குரங்கு மாமிசப் பட்சிணி அல்லவே? நாய் சைவம் அசைவம் இரண்டையும் சாப்பிடுமே...

இவர்களின் அக்கறை தூய்மையாக்குவதில் இல்லை. 'நான் என்ன சாப்பிடுகிறேனோ அதனையே நீயும் சாப்பிட வேண்டும்' என்ற அதிகார மமதை தவிர வேறொன்றுமில்லை.

இவர்கள் இனிமேலும் திருந்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

Thursday, August 13, 2015

கூகுளின் சுந்தர் பிச்சை பிராமிண் ஐயங்காராம்!



கூகுளின் CEO வாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால் நாராயணன் நல்லப்பா என்ற பார்பனர் வேறு விதமாக சிந்திக்கிறார். அவரது பக்கத்தில் இது பற்றி எவ்வாறு பெருமைபட்டுக் கொள்கிறார் என்று பாருங்கள்.

'வாழ்த்துக்கள் மிஸ்டர் சுந்தர் பிச்சை! மற்றுமொரு தமிழ் பிராமிண் ஐயங்கார் மிக உயரிய இடத்தை எட்டியுள்ளார்...... வீரமணிக்கும், கருணாநிதிக்கும் வயிறு எரியுதா? வயிறு எரிந்தால் கூகுள் அலுவலகம் சென்று போராடவும்' என்று கிண்டலடித்துள்ளார்.

பார்பனர்களாகிய உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தின் மற்ற சாதியினரையும் சரி சமமாக நடத்தி வந்திருந்தால் உங்களுக்கு எதிராக பெரியாரும், வீரமணியும், கருணாநிதியும் எந்த காலத்திலும் எதிராக பேசியிருக்க மாட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் இன்று நீங்கள் உங்களின் வர்ணாசிரம சித்தாந்தை வேறு வழியின்றி குறைத்துக் கொண்டுள்ளீர்கள். சிறிது இடம் கிடைத்தாலும் பழைய படி பார்பனன் சூத்திரன் என்ற பேச்சை ஆரம்பித்து விடுவீர்கள்.

பார்பனர்கள் என்றுமே தமிழர்களோடு ஒட்ட மாட்டார்கள் என்பதற்கு நாராயணன் நல்லப்பாவின் பதிவு ஒரு சான்று. என்னதான் மொழி, நாடு என்று பேசினாலும் ஆரிய குழுமத்தில் இருந்து கொள்வதற்கே அவர்கள் பெருமைபடுவார்கள். இது இன்று நேற்றல்ல..... பல ஆயிரம் வருடங்களாக இந்த ஆரிய பித்து அவர்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. இது மாற்ற முடியாத ஒன்று என்பதை இது போன்ற பதிவுகள் நமக்கு நிரூபிக்கின்றன.

கூகுளின் உயரத்தை எட்டி பிடித்த நீங்கள் எந்த இனமாக இருந்தாலும் தமிழன் என்ற முறையில் உங்களை நானும் வாழ்த்துகிறேன் மிஸ்டர் சுந்தர் பிச்சை!

வாழ்த்துக்கள்!

Wednesday, June 17, 2015

தலித் சிறுமியின் நிழல் மேல் சாதியினர் மீது விழுந்ததால் அடி உதை...



தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி :

உயர்சாதி பயில்வான் மீது தலித் சிறுமியின் நிழல் விழுந்ததாக கூறி அடி உதை

தலித் சிறுமியின் நிழல் ஒரு உயர்ந்த சாதி மனிதர் மேல் விழுந்ததாக கூறி அந்த சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர்.

இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் மத்திய பிரதேசம் கணேஷ்புரா கிராமத்தில் நடந்து உள்ளது. கடந்த் 13 ந்தேதி இது குறித்து காடி மல்ஹெர்ர போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யபட்டு உள்ளது. இந்த புகாரை சிறுமியின் தந்தை அளித்து உள்ளார்.

சிறுமி கிராமத்தில் இருந்த ஒரு குழாயில் தண்ணீர் எடுத்து கொண்டு வரும் போது உயர்சாதியை சேர்ந்த பூரண் யாதவ் என்ற பயில்வான் மீது சிறுமியின் நிழல் விழுந்து விட்டதாக கூறி சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பயில்வானின் குடும்பத்தை சேர்ந்த பெண்களும் சிறுமியை அடித்து உதைத்து இந்த தண்ணீர் குழாய்க்கு மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

யாதவ் குடும்பம் பதிக்கபட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்வதை தடுத்து உள்ளனர் ஆனால் அதையும் தாண்டி அவர்கள் வந்து புகார் கொடுத்து உள்ளனர்.

போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தினத்தந்தி
16.06.2015

http://www.dailythanthi.com/News/India/2015/06/16173542/MP-Dalit-Girl-Beaten-Up-As-Her-Shadow-Falls-On-

-----------------------------------------------------------------

Chattarpur(Madhya Pradesh): In a shocking incident, a minor Dalit girl was allegedly beaten up by higher caste women in Ganeshpura village in Chattarpur after the victim's shadow fell on a muscleman belonging to their family, police said on Tuesday.

The incident took place on June 13 and the complaint was also filed on the same day at Gadi Malhera police station, Additional Superintendent of Police (ASP), Neeraj Pandey said.

According to the complaint lodged by the girl's father, the problem began when his daughter was fetching water from a village hand pump and her shadow fell on muscle-man Puran Yadav (belonging to a higher caste) when he happened to pass from there, the ASP said.

The episode enraged the family of the muscle-man to such an extent that the women of the family severely beat the girl and threatened that if she was spotted again at the hand pump, they would kill her, he said.

Yadav's family also prevented the victim from going to police station, but they somehow managed to reach there.

A case under sections 323, 341, 506 of the IPC has been registered against the accused and further investigation is underway.

In several remote pockets of India, where untouchability is still prevalent, people from the lower caste are forbidden to come in contact with those belonging to the higher rung so much so that they can't share their food, cook for them or even look them in the eye. It is even forbidden for their shadow to fall on higher caste people, who consider it as defiling or polluting.

IBN live
16-06-2015

http://www.ibnlive.com/news/india/madhya-pradesh-dalit-girl-beaten-up-as-her-shadow-falls-on-high-caste-muscleman-1007282.html

http://www.hindustantimes.com/bhopal/dalit-girl-beaten-up-after-her-shadow-spoils-upper-caste-man-s-lunch/article1-1359380.aspx

Wednesday, May 13, 2015

தலித் குதிரையில் ஏறக் கூடாதா? சாதி வெறியின் உச்சம்!



பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் ரத்லம் ஊருக்கு அருகில் உள்ளது நெக்ரன் என்ற கிராமம். இந்த கிராமம் உயர் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். பவன் என்ற தலித் இளைஞரின் திருமணம் இந்த கிராமத்துக்கு அருகில் நடந்தது. அவர்கள் சாதி வழக்கப்படி பவனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கிராமத்தில் அழைத்துச் சென்றனர். வர்ணாசிரமத்தில் ஊறிய மேல் சாதியினருக்கு இது பொருக்குமா? உடனே இதனை எதிர்த்தனர். 'தலித் குதிரையில் ஏறி வருவதா?' என்று பல மேல் சாதி இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது பற்றி மணமகன் பவன் கூறும் போது 'மேல் சாதி இளைஞர்கள் நான் குதிரையில் ஊர்வலம் வருவதை விரும்பவில்லை. பிரச்னையாகும் என்பதால் இது பற்றி காவல் துறையில் புகார் செய்தேன். போலீஸ் பாதுகாப்பும் கொடுத்தனர். ஊர்வலம் மேல் சாதியினர் தெருக்களில் நுழைந்த போது என் மேல் கற்களை வீச ஆரம்பித்தனர். உடன் போலீசார் எனக்கு ஹெல்மட் அணிவித்து எனது தலையை காப்பாற்றிக் கொள்ள அறிவுறுத்தினர். அதன் பிறகு ஹெல்மட் அணிந்து பாதுகாப்போடு எனது குதிரை பயணம் அந்த தெருவைக் கடந்தது' என்கிறார் பரிதாபகரமாக...

உதவி தாசில்தார் ஜெயின், தால் காவல் நிலைய கண்காணிப்பாளர் சுரேஷ் பாலாஜி போன்று பல அதிகாரிகளும் தலித் மக்களும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். மேல் சாதி இளைஞர்கள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. எதிர்த்த மேல் சாதியினரை அடித்து விரட்ட காவல்துறை முயலவில்லை. மாறாக பாதுகாப்புக்கு மணமகனுக்கு ஹெல்மட் தருகிறது. :-) ஏனெனில் மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது பிஜேபி ஆட்சி. எனவே காவல் துறை தனது அதிகாரத்தை பயன் படுத்தாமல் சற்று அடக்கி வாசித்துள்ளது.

இது போன்ற அடக்கு முறைகளை கண்டு வெறுத்து இஸ்லாத்தை நோக்கி செல்பவர்களை சென்னி மலை ராம் நிவாஸ் போன்றோர் கொச்சைபடுத்துகின்றனர். இவ்வாறு மதம் மாறியவர்களை வசைபாடுவதை விட்டு விட்டு இந்து மதத்தில் உள்ள இது போன்ற தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து குரலெழுப்பினால் அதுவே அவர்கள் இந்து மதத்துக்கு செய்யும் நன்மையாக அமையும்.

அறிவியலில் மனிதன் எங்கெங்கோ சென்று விட்டான். ஆனால் நமது நாட்டில் சக மனிதன் மனிதனாக வாழ நமது சமூகம் சம்மதிப்பதில்லை. என்று ஒழியும் இந்த வர்ணாசிரம வெறி?

தகவல் உதவி
தி இந்து ஆங்கில நாளிதழ்
13-05-2015

http://www.thehindu.com/news/national/dalit-groom-attacked-for-riding-a-horse-in-madhya-pradesh/article7198539.ece

Wednesday, April 29, 2015

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுதான்.!

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுதான்.!

சென்னி மலை!

//" கீதை சொன்னவன் - இடையன்
கண்ணன் ,
"நேரடியாககேட்டவர்கள் - சத்ரிய அர்ச்சுனன்,
தேரோட்டி சஞ்சயன்,"
"தேரோட்டி சொல்ல கேட்டவன் சத்ரிய திருதராஷ்டிரன், "
"இவற்றை எல்லாம் எழுதி வைத்தவர்
மீனவ பெண்ணிற்கு பிறந்த வியாசர்"//

எல்லாம் சரிதான். இதை எல்லாம் கேட்டு தெளிந்து இந்து மதத்துக்குள் வந்தவர்களை “நான் தலையில் பிறந்தேன். நீ காலில் பிறந்தாய்: காலம் முழுக்க எனக்கு சேவகம் செய்வதே உனது பிறவிப் பலன்” என்று சென்னி மலையை கோவிலில் இருந்து வெளியாக்கி விட்டு உள்ளே மணி ஆட்ட நமது பார்பனர்கள் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டனர்.

இதைக் கண்டு வெகுண்டெழுந்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட சென்னி மலை, ராம் நிவாஸ் போன்றோர்களின் பெற்றோர் இந்து மதத்திலேயே தங்கி விட்டனர்.

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த வரலாறு இதுதான்.!

Thursday, February 12, 2015

'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்!' - வாதம் வெற்றியைக் கொடுக்குமா?



'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்!' - வாதம் வெற்றியைக் கொடுக்குமா?

திரு ஆனந்தன்!

//தமிழர் வழிபாட்டு முறையில் பார்ப்பனியத்தைப் புகுத்தினான் ஆரியன்... தமிழர் வழிபாட்டு முறையோடு சேர்ந்து தமிழர் கட்டடக் கலை., சிற்பக் கலை., கட்டடக் கலையின் தமிழின் அறிவியல் போன்ற பலவற்றை இருட்டடிப்பு செய்தது திராவிடம்...

புகுத்தப்பட்ட பார்ப்பனீய வழிபாட்டு முறையை பிரித்து தமிழர் வாழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கும் செயலா பார்க்கக் கூடாதா...?

குறிஞ்சி நில மக்களின் தெய்வமான முருகனை சுப்பிரமணிய சாமியாக்கி., வலப்பக்கம் தெய்வானை என்ற மனைவியைச் செருகி., சிவனை அப்பனாக்கி., பிள்ளையாரை அண்ணனாக்கிய வரலாற்றுப் புரட்டை உடைத்தெரியும் செயலாகக் கருதக்கூடாதா...?//

நீங்களும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்பனர்களிடமிருந்து தமிழ் கடவுள்களை மீட்கப் போகிறேன் என்று கிளம்பியுள்ளீர்கள். நோக்கம் நல்லதாக இருக்கிறது. ஆனால் இதில் வெற்றி கிடைக்குமா என்றால் கிடைக்காது என்பது தான் பதிலாக இருக்கும். ஏனெனில் ஆதியிலிருந்து அந்தம் வரை கடந்த 3000 வருடங்களாக சிறுக சிறுக தமிழர்களின் கலாசாரம், பழக்க வழக்கங்கள், தெய்வ வழிபாடுகள் அனைத்தையும் பார்பனியம் விழுங்கி விட்டது. அனைத்து கோவில்களிலும் அவர்களின் மொழியான சமஸ்கிரதம் புகுந்து விட்டது. தமிழர்களின் வேத கால நூல்கள் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டு பார்பனர்களின் நூல்களே புனிதம் என்ற பொது புத்திக்கு பெரும்பாலான தமிழர்கள் வந்து விட்டனர். ராமாயணமும் மகாபாரதமும் மனு ஸ்ருமதியும் தமிழனின் வேதங்களாக உருமாறி இன்று எழுதப்படாத விதியாகவும் மாறிவிட்டது. வள்ளுவரும், வள்ளலாரும், திருமூலரும் இன்று தமிழனுக்கு அந்நியமாக்கப்பட்டு பல வருடங்களாகிறது.

ஆட்சி அதிகாரம் என்று தமிழகத்திலிருந்து டெல்லி வரை அவர்களின் அதிகாரமே செல்லுபடியாகிறது. சிதம்பரத்தில் தமிழில் பாட அனுமதி கேட்ட ஆறுமுகசாமிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நீங்களும் அறிவீர்கள். இன்றும் சிதம்பரத்தில் ஒரு வாசல் பூட்டப்பட்டே உள்ளது. சிதம்பர ரகசியம் என்பதுதான் அதுவா? :-) என்றும் தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கொவிலிலும் உங்களின் போராட்டம் எந்த அளவு பிசுபிசுத்துப் போனது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. தமிழக கோவில்கள் அனைத்தும் பார்பனர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. நீங்கள் என்னதான் போராட்டங்களை எடுத்துச் சென்றாலும் அது வன்முறையில்தான் முடியும். இது பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.

சட்டத்தைப் பாதுகாக்கும் காவல்துறை உயரதிகாரிகளும் நீதி துறையில் தலைமை நீதிபதிகளாக சட்டம் இயற்றும் இடத்தில் அமர்ந்திருப்பதும் பெரும்பாலும் பார்பனர்களே! எம்எல்ஏ, எம்பிக்கள் வேண்டுமானால் எண்ணிக்கையை கணக்கில் வைத்து உங்கள் சாதியை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் அந்த எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மந்திரிகளும் போடும் உத்தரவுகளை செயல்படுத்தும் உயரதிகாரிகள் பெரும்பாலும் பார்பனர்களே!

வறுமையில் வாடும் சிறுபான்மையினருக்கு முந்தய காங்கிரஸ் அரசு படிப்பு உதவி தொகையாக பல கோடிகளை தமிழகத்துக்கு தந்தது. ஆனால் அதிகார வர்க்கம் இங்கு யாரும் அந்த நிலையில் இல்லை என்று காரணம் காட்டி வழங்கப்பட்ட உதவித் தொகையை டில்லிக்கே திருப்பி அனுப்பியுள்ளது. சிறுபான்மை மக்கள் கல்வி வேலை வாய்ப்பு பெற்று விடக் கூடாது என்பதில் அவர்கள் எந்த அளவு கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அவர்கள் பார்வையில் அந்நியர்களே.

பிறகு இதற்கு என்னதான் வழி என்று கேட்கலாம். வர்ணாசிரமத்தோடு மல்லு கட்டாமல் கத்தியின்றி ரத்தமின்றி உங்கள் முன் உள்ள ஒரே வழி இஸ்லாத்தை ஏற்பதுதான். கிறித்தவம் பவுத்தத்திலும் இதே சாதிப் பேய் குடி கொண்டு பல நாட்களாகிறது.

கலெக்டர் உமா சங்கர் கூட 'நான் ஐஏஎஸ் ஆக பதவியில் இருந்தாலும் கிருத்தவர்கள் பார்வையில் நான் தாழ்த்தப்பட்டவன்தான். உயர் சாதி கிருத்தவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் கிடைப்பதில்லை' என்று பரிதாபமாக தொலைக்காட்சி பேட்டியில் கூறியதை மறந்து விட முடியாது. ஒரு கலெக்டருக்கே அங்கு இந்த நிலைமை.

இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். நமது முன்னோர்கள் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையின் அடிப்படையில்தான் வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாத்தை ஏற்பதால் நமது மொழியான தமிழுக்கு எந்த இழுக்கும் வந்து விடாது. ஏனெனில் தேவ மொழி என்று குர்ஆனில் எந்த மொழியையும் குறிப்பிடவில்லை. நமது தாய் மொழி கலாசாரம் போன்றவை பாதுகாக்கப்படுவதோடு முக்கியமாக சூத்திரன் என்ற இழிச் சொல்லும் எடுக்கப்படுகிறது. சுய மரியாதை கிடைக்கிறது. பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களாகிய நாங்கள் அந்த சுய மரியாதையை ஒவ்வொரு நாளும் பெற்று வருகிறோம். எனவே எங்கள் தொப்புள் கொடி உறவான உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்.

சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே......

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதை இங்கு நினைவு கூறுகிறேன். இஸ்லாமியருக்காக பாடியதாகவே இதனை நான் எடுத்துக் கொள்கிறேன். எங்களின் முன்னோர்கள் இந்த அடிமை சங்கிலியை உடைக்க ரத்தம் சிந்தினர். தமிழகம் என்ற இந்த வேரிலே எனது முன்னோர்கள் முன்பு எந்த அளவு கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பார்கிறேன். இந்த கணிணி யுகத்திலேயே சாதி வெறி இந்த அளவு தாண்டவமாடுகிறதே.... ஒரு 1000 வருடங்கள் பின்னோக்கி சென்று அன்று இந்த தமிழகம் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். அன்று எனது முன்னோர்கள் சிந்திய ரத்தம் இன்று நாங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். சுய மரியாதையை பெற்று வருகிறோம்.

'யாம் பெற்ற சுகம் பெறுக இவ்வையகம்' என்று அன்போடு உங்களை உரிமையோடு அழைக்கின்றேன்! கட்டாயம் இல்லை! சிந்தித்து முடிவெடு எனது தொப்புள் கொடி உறவே.......!



Wednesday, December 17, 2014

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா?



காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே விற்கு நாடெங்கும் சிலைவைக்க இந்துமகாசபை முடிவு செய்துள்ளது. இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலைவைக்காமல் பாகிஸ்தானிலா சிலைவைக்க முடியும்? என்று எதிர்கேள்வி வைக்கின்றன.

காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப் பைச் சேர்ந்த நாதுராம்கோட்சே என்பது நாடறிந்த செய்தியாகும். இந்த நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படும் காந்தியாரை அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக்கொலை நிரூபிக்கப்பட்டு கோட்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலகர்த் தாவாக இருந்த வி.டி.சவர்க்கார் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்த பாஜக அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், நாளுக்கு நாள் இந்துத்துவக் கொள்கையை தூக்கிப்பிடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையை திறக்க முடிவு செய்துள்ளதாம்.


இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில்

நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம். இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்கு சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக் கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலை யில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்கு சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது. விரைவில் நாடெங்கும் கோட் சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில் தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில் தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார். அவருக்குப் புகலிடமும் திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்தான். இந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தரவிட்டதாகவும், இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம். காந்தியைக் கொலைசெய்யும் முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன.

இந்தத் தகவல்களை எக்னாமிக் டைம்ஸ் (15.12.2014) வெளியிட்டுள்ளது. மற்ற ஏடுகள் திட்டமிட்டு மூடி மறைத்துவிட்டன.

காந்தியாரின் பிறந்த நாள் மக்கள் மத்தியில் விழாவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அந்த நாளை தூய்மை நாள் என்று அறிவித்து, நாட்டைத் தூய்மைப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றினார். மோடியே குப்பைக் கூட்டுவதுபோல, ஊடகங்களிலும் இடம்பெறச் செய்து, அந்த நாளில் காந்தியாரைப்பற்றி எந்தவிதத் தகவலும் வெளி வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவே பார்த்துக் கொண்டார்.


குஜராத் மாநிலத்தில்தான் காந்தியார் பிறந்தார் - ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது; மாறாக அம்மாநிலத்தில் பிறந்த வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்தில் (பீடத்திற்கு மட்டும் ரூ.200 கோடி பூங்கா மற்றும் காட்சியகத்துக்கு ரூ.500 கோடி) சிலை எழுப்ப முயலுவதில், காந்தியாரை மட்டம் தட்டும் சூழ்ச்சியே!


காந்தியாரைக் கொலை செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த காரணத்தால்தான் கீதையை இந்தியாவின் தேசிய புனித நூலாக அறிவிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

”விடுதலை” தலையங்கம் 17-12-2014

அம்பேத்காரை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கில்தான் இவர்கள் பாபர் பள்ளியை இடிக்க டிசம்பர் 6 ந்தேதியை தேர்ந்தெடுத்தனர். இது போல் தங்கள் செயல் திட்டங்களை நீண்ட கால திட்டமிடலால் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன் அடுத்த நகர்வுதான் கோட்சேயை தற்போது முன்னிறுத்துவது. இன்னும் சில நாட்களில் தேசத் தந்தையை சுட்டுக் கொன்ற கோட்சே என்ற பார்பனர் மஹாத்மா ஆக்கப்படலாம். மோடியின் ஆட்சியில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

இந்த நாட்டுக்காக தனது உயிரையே இழந்த காந்தியின் கண்ணீர் இந்த அக்கிரமக்காரர்களை இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் பழி தீர்க்கும்.

“What’s wrong if someone called Godse a patriot. Before killing Gandhi, Godse worked as a freedom fighter and towards Akhand Bharat.

- See more at: http://indianexpress.com/article/cities/mumbai/now-godse-says-he-was-a-patriot/#sthash.99AI6VY7.dpuf

On the occasion of Nathuram Godse’s 61st death anniversary on November 15,the Hutatma Nathuram Godse Icchapatra Nyas — run by his family and ideological supporters — will release an audio book based on his statement in court in the Mahatma Gandhi assassination trial.

The audio book will be released by radical outfit Shriram Sene chief Pramod Mutalik,Godse’s niece Himani Savarkar told The Sunday Express. Savarkar,who is also the president of Abhinav Bharat,said Godse’s statement in court is published in books written by her father Gopal Godse,a co-accused in the Mahatma Gandhi assassination case.

- See more at: http://indianexpress.com/article/news-archive/web/godse-court-statement-now-in-audio-book/#sthash.fAza0IvY.dpuf






Sunday, December 14, 2014

எச்சில் இலையில் உருளுவதற்கு உச்ச நீதி மன்றம் தடை!



நேற்று முக்கியமான ஒரு நிகழ்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. உருளு சேவா. கேள்விப்பட்டிருக்கக் கூடும். கர்நாடகாவின் கடற்கரையோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடக்கும் உற்சவம். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பார்பனர்களுக்கு பந்தி வைப்பார்கள். அவர்கள் வரிசையாக அமர்ந்து போஜனம் முடித்தவுடன் எச்சிலையை எடுக்க மாட்டார்கள். அப்படியே வரிசையாகக் கிடக்கும் இந்த இலைகளின் மீது பார்பனர் அல்லாதவர்கள் படுத்து உருள்வார்கள். இது வேண்டுதல். பிரம்மஹத்தி தோஷமோ அல்லது பாம்பைக் கொன்ற தோஷமோ இருந்தால் விலகிவிடுமாம். இந்தப் பாவங்களினால் உருவாகும் தோல் நோய்களிலிருந்து விடுபடவும் இந்த நேர்த்திக்கடன் முக்கியம் என நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட ஐந்நூறு வருட நம்பிக்கை இது.

சூரசம்ஹாரத்தை முடித்துவிட்டு முருகர் இந்த இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். இங்குதான் தெய்வானைக்கும் முருகருக்கும் திருமணம் நடக்கிறது. இங்கிருக்கும் குகையில்தான் கருடனிடமிருந்து தப்பிப்பதற்காக வாசுகி பாம்பு தவம் புரிந்திருக்கிறது. முருகன் வாசுகிக்கு தரிசனம் கொடுத்து காத்தாராம். அதனால்தான் பாம்பைக் கொன்ற தோஷத்தை போக்குவதென்றால் இங்கே வந்து உருள்கிறார்கள்.



அது ஏன் பார்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிற்படுத்தப்பட்ட தலித் மக்கள் உருள வேண்டும்? பார்பனர்கள் ஏன் தலித் மக்கள் சாப்பிட்ட இலைகளில் உருளுவதில்லை என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. :-)

தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாடகத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரைஞர்கள் வாதித்தனர்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி

அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண்டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

பார்பனீயம் இந்த அப்பாவி இந்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் தனது மேட்டுக்குடி இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள என்னவெல்லாம் தந்திரங்களை கையாள்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

உச்ச நீதி மன்றத்தின் தடை அமுல்படுத்தி இந்த விழாவை ரத்து செய்கிறார்களா? அல்லது பார்பனர்களின் எச்சில் இலையில் மற்ற சாதியினர் உருளப் போகிறார்களா என்று டிசம்பர் 27 ஆம் தேதி தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்போம்.

Thursday, December 11, 2014

பிராமண குல மாபெரும் வீரர் பாரதி - பிராமணர் சங்கம்




'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

என்று சாதிகளை ஒதுக்கச் சொல்லி கடைசி வரை பார்பனர்களை எதிர்த்து வந்த பாரதியையும் இன்று பார்பனர்கள் விடவில்லை. அவருக்கும் பூணூல் போட்டாகி விட்டது.

வாழ்க தமிழ் நாடு.... வளர்க அதன் புகழ்!

இன்று பாரதியின் பிறந்த நாளாம்.

"எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.” - பாரதியார்

பாரதியார் பிறந்த இந்த நாளில் அவரின் அறிவுரையை மோடி, அமீத்ஷா, எச்.ராஜா, இல கணேசன், ராம கோபாலன் போன்றோர் கடைபிடித்தால் நாடு சுபிட்சம் பெறும்.

செய்வீர்களா....? நீங்கள் செய்வீர்களா?

Saturday, December 06, 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி - பார்பனியத்துக்கு கிடைத்த வெற்றி!



"இந்த நாட்டில் உள்ள அனைவரும் ராமரின் பிள்ளைகளே, கிறிஸ்துவர், முஸ்லிம்களும் கூட ராமரின் பிள்ளைகள் தான். இந்தியாவில் இருந்து யார் ஒருவர் வெளிநாடு சென்றாலும் நாம், அனைவரும் இந்துஸ்தானி என்று தான் சொல்கிறோம். இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். டில்லியில் வரும் காலத்தில் ராமரின் மகன் ஒருவனே ஆட்சி செய்ய போகிறான் . டில்லியில் ராமரை பின்பற்றுபவர்கள் ஆட்சி வேண்டுமா ? சட்ட விரோதிகள் ஆட்சி வேண்டுமா ? டில்லி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" இவ்வாறு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசினார் என்று தினமலர் கூறுகிறது.

ஆனால் சில ஆங்கில நாளிதழ்கள் அவரது பேச்சை அப்படியே வெளியிட்டுள்ளன. இதை விட கடுமையான வார்த்தை. முறைகேடாக பிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் இந்த பெண்மணி பேசியுள்ளார்.

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?"

பிஜேபியில் அங்கம் வகிக்காத அனைவரும் முறைகேடாக பிறந்தவர்களாம். முற்றும் துறந்த ஒரு பெண் சாமியாரின் பேச்சைப் பார்த்தீர்களா? இந்த பெண்மணி யார்? இவரது பின்புலத்தைச் சற்று பார்போமா?

47 வயதாகும் சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் (நிஷாத்) என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் தாழ்த்தப்பட்ட சாதியில் சாதியில் பிறந்தவர். ஃபதேபூரில் உள்ள சுவாமி பரமானந்த கிரியின் ஆசிரமத்தில் சமயக் கல்வி கற்று, சுற்றுப்புற கிராமங்களில் ராமாயண பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். விரைவில் ஒரு சிறந்த “கதா வாசக்” (பிரசங்கி) ஆக பிரபலமடைந்தார். 1980, 90களில் அயோத்தி இயக்கத்தின் ஊடாக சாத்வி உமா பாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோருடன் இணைந்து அரசியல் களத்தில் குதித்தார். மற்ற இரு சாத்விகளும் கூட இவரைப் போன்றே தாழ்த்தப்பட்ட சமுதாயப் பின்னணி கொண்டவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த பெண்மணி இவ்வளவு அநாகரிகமாக பேச எங்கு கற்றுக் கொண்டுள்ளார் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். இனி இந்த பெண்மணியின் ராம பக்திக்கு வருவோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி ராமனின் என்ன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை ராமாயணத்திலிருந்து பார்போம்.

தலைகீழாக நின்று கொண்டு தவமிருந்த சம்புகனைப் பார்த்து ராமன் கேட்கிறான்,

"நீ எந்த ஜாதியில் பிறந்தவன்? நீ எவரை நினைத்து இந்த தவம் செய்கிறாய்? நீ யார் பிராமணனா சூத்திரனா? உண்மையைச் சொல்" என்று கேட்கிறான்.

"மகாராஜாவே நான் சூத்திர ஜாதியில் பிறந்தவன்" என்றான் சம்புகன்.

அப்பொழுது ராமன் சொல்கிறான் "சம்புகா! இந்த யுகத்தில் சூத்திரர்கள் தவமிருக்க அதிகாரம் பெற்றிலர்; ஆகவே உன்னை வதைப்பது என் கடமை!" என்று ராமன் கூறி, கத்தியை வீசி சம்புகன் கழுத்தை வெட்டினான். அப்பொழுது தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்தார்கள். (ஆதாரம் வால்மீகி இராமாயணம் _ உத்தர காண்டம் _ 79ஆவது சருக்கம்).

இந்த பெண் அமைச்சர் போற்றி புகழும் ராமன் இவரது சாதியை தனதளவில் எந்த தரத்தில் வைத்துள்ளார் என்பது இப்போது தெரிந்திருக்கும். இறைவனை நினைத்து தவம் செய்த ஒரு சூத்திரனின் தலையை கொய்த ராமன் பின்பற்றத்தக்க ஒரு அவதார புருஷனா? இந்த வரலாறை முழுமையாக உள் வாங்கியிருந்தால் இந்த பெண்மணி இவ்வாறான பேச்சை பேசியிருப்பாரா?

இங்குதான் நாம் பார்பனியத்தின் வெற்றியை பார்க்கிறோம். தவம் செய்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சம்புகனை கொன்ற ராமனை அதே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி என்ற பெண்மணிக்கு கடவுளாக்கி அதனை பிரசாரமும் செய்ய வைத்துள்ளார்கள். இது பார்பனியத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியல்லவா?

இங்கு மட்டுமல்ல.... கோவையில் நடந்தது என்ன? அங்கும் இஸ்லாமியரின் சொத்துக்களை குறி வைத்து அழிக்க மார்வாடிகளாலும், பார்பனர்களாலும் கொம்பு சீவி விடப்பட்டு களத்தில் இறக்கப்பட்டவர்கள் அருந்ததி இனத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களே! இந்தியா முழுக்க பார்பனர்களின் வர்ணாசிரமத்தைக் கட்டிக் காக்க கறி வேப்பிலையாக பயன்படுத்தப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களே ஆவர். இதனை இன்று வரை சரியாக விளங்காமல் இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் எதிராக ஆயுதம் ஏந்தும் தாழ்த்தப்பட்ட மக்களை நினைத்து ஒரு கணம் நாம் பரிதாபம்தான் பட முடியும். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்பனர்களின் பிடியிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் விடுதலையாக வாய்ப்பே இல்லை. இருக்கும் ஒரே வாய்ப்பு இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தை தழுவுவதுதான். அந்த வாய்ப்பையும் பாதிப்படைந்த தாழ்த்தப்பட்ட மக்களை வைத்தே அழிக்கப் பார்க்கிறது பார்பனியம். அதன் பல முயற்சிகளில் ஒன்றுதான் இந்த பெண் அமைச்சரின் பேச்சு!


Friday, September 05, 2014

மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!



மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.

“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.

இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.

இவ்வகையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்த்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.
172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”

------------------------------------------------------------------------

மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…

“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”

நன்றி:
______________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003

Thursday, September 04, 2014

நாயோடு திருமணம் புரிந்த இந்தியப் பெண்!





மணப்பெண்ணான மங்கள் முண்டா கூறுகிறார் : 'இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கிராமத்து மக்கள் எனக்கு தோஷம் இருப்பதாகவும் ஒரு நாயோடு திருமணம் முடித்து வைக்கப்பட்டால் அந்த தோஷம் கழியும் என்றும் சொல்கிறார்கள். இந்த திருமணத்தால் எனது கணவனின் வாழ்நாளும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். எனக்கேற்ற ராஜ குமாரனை தேடி நானும் காத்திருக்கிறேன்.சிறந்த ராஜகுமாரனை பெற்றுக் கொள்ள இன்று இந்த நாயோடு எனது திருமணம் முடிந்துள்ளது'

பெண்ணின் தகப்பன் அமின் முண்டா: "இது போல் பல திருமணங்கள் எங்கள் கிராமத்தில் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்குப் பிறகு எனது பெண்ணின் வாழ்நாள் மிகவும் பிரகாசமாக இருக்கும்".

பெண்ணின் தாய்: "கடன் வாங்கித்தான் இந்த கல்யாணத்தை நடத்தினோம். எப்படியோ என் மகளின் தோஷம் இந்த நாய் கல்யாணத்தால் கழிந்தால் சரி".

இந்த திருமணத்தை முழு கிராமமும் சேர்ந்து நடத்தி வைத்துள்ளது. உண்மையில் இந்த அழகிய மணப்பெண்ணின் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். ஒரு மனிதன் தனது வாழ்நாளை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற இறை கட்டளைகளை தூரமாக்கினால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது போன்ற திருமணங்கள் சிறந்த உதாரணம்.

மோடி ஆட்சி வந்தால் இந்தியாவில் புரட்சி வெடிக்கும் என்று பல இந்துத்வாவாதியினர் கூறி வருகின்றனர். ஒருகால் இந்த புரட்சியைத்தான் கூறுகிறார்களோ?

'அல்குத்ஸ் என்ற' அரபி நாளிதழும் இந்த செய்தியை எடுத்துப் போட்டு 'இந்தியர்களின் திருமணம் பாரீர்' என்று விளம்பரப்படுத்துகிறான். இதை பார்க்கும் இந்தியனான எனக்கு எந்த அளவு வெட்கம் பிடுங்கித் தின்னும் என்று சொல்ல வேண்டியதில்லை. அரபுகள் இதற்கு கொடுத்துள்ள கமெண்டுகளை படித்துப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். எப்படியோ மோடியின் ஆட்சி பல புரட்சிகளை செய்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.


هندية تتزوج كلبا بسبب "حظها" السيئ ...

تزوجت فتاة هندية، تبلغ من العمر 18 عاما، في احتفال ضخم الأربعاء الماضي، كلبا ضالا كجزء من طقوس قبلية تهدف إلى "دفع الشر" عن القرية.

وكانت مانغلي موندا (18 عاما)، من قرية نائية في ولاية جهارخاند بشرق الهند، تزوجت الكلب في حفل نظمه شيوخ القرية، بعد أن قال زعيمهم إن الفتاة "سيئة حظ"، وإن زواجها من شاب سيجلب الدمار لعائلتها وقريتها.

وحضر الكلب، الذي أطلقوا عليه اسم شيرو، إلى الحفل برفقة والد الفتاة، في سيارة مزينة، وعند وصوله، رحب به حضور الحفل بابتهاج كبير، وفقا لصحيفة "ديلي ميل" البريطانية.

وقالت موندا، التي لم تذهب إلى المدرسة قط، إنها ليست سعيدة بزواجها من كلب، ولكنها أصرت على أن هذا الزواج سوف يساعدها على تغيير حظها السيئ.

وأضافت "لقد تزوجت من هذا الكلب لأن شيوخ القرية يعتقدون أن حظي السيئ سينتقل إليه، وبعد ذلك ، سوف يكون للرجل، الذي سأتزوجه حياة طويلة".

-https://www.facebook.com/alqudsnewspaper?fref=nf


Thursday, August 28, 2014

"பார்பனியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது"?

//பார்பனியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது?//

நான் யுவன் சங்கர் ராஜா சம்பந்தமாக வெளியிட்ட கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக்கரிலும் முகநூலிலும் 'பார்பனியம் இளையராஜாவை எங்கு ஒதுக்கியது?' என்று பலரும் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக இந்த பதிவு அமைகிறது.



2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் போன்ற மூவருக்கும் சேர்த்து இந்த விருதுகள் வழங்கப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால் காஞ்சி ஜெயேந்திரர் தீட்டு பட்டு விடும் என்பதற்காக தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

மற்ற மூவரும் மேல் சாதிக்காரர்கள். ஆனால் இளையராஜா தாழ்ந்த சாதியை சேர்ந்தவர். மூன்று பேருக்கு மட்டும் தொட்டு விருது வழங்கி விட்டு இளையராஜாவை ஒதுக்கினால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று யோசித்தார் ஜெயேந்திரர். உடனே தனது உதவியாளரை அழைத்து அவர் கையாலேயே நால்வருக்கும் பொதுவாக விருதை வழங்க வைத்து விட்டார். விருதும் வழங்கியாகி விட்டது. ஆச்சாரமும் காப்பாற்றப்பட்டு விட்டது. வெளி உலகின் ஏசுதலுக்கும் முற்றுப் புள்ளியும் வைத்தாகி விட்டது.

சம்பந்தப்பட்ட இளையராஜா பெருந்தன்மையோடு இந்த அவமானத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். இது விருது கொடுத்தவர்களுக்கு அசிங்கம் இல்லையா? தொட்டால் தீட்டு என்ற ஜாதி அடிப்படையில் பாகு பாடு பார்த்து இந்த விருது வழங்கி இருக்கிறார் இந்த பார்பனர். இவ்வளவுக்கும் இளையராஜா இந்து மதத்தில் பெரிய ஆன்மீக வாதியாக அறியப்படுபவர். தமிழகம் மற்றும் உலக அளவில் பிரபலமாக பார்க்கப்படுபவர். இந்த அளவு உயரத்திற்கு சென்றவர் இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டு இந்த விருதை வாங்கத்தான் வேண்டுமா?

எவ்வளவு இழிவாக நடத்தினாலும் இவர்களுக்கு இந்த விருதுதான் பெரிதாக தெரிகிறது. இவர்களின் தன் மானம் காக்கப் படவேண்டாமா? 'ஜனனி...ஜனனி' பாடலை கேட்டு உருகாத இந்துக்கள் எவரும் இல்லையே! இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கிதமாக ஜாதி பார்க்கிறாரே!

இவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றபோது இந்த பார்ப்பன வர்க்கம் இவர்களை பிரித்து, ஜாதி கற்பித்து காட்டுகிறதே? இன்னும் இதற்குள் இருக்கத்தான் வேண்டுமா? சிந்திக்க மாட்டார்களா? விருது, விழா, பட்டம், பதக்கம் என்றால் யார் கொடுத்தாலும் வாங்கி விடுவதா?

யுவன் சங்கர் ராஜா தன்மான சிங்கம். எனவே தான் தனது தொழிலில் பின்னடைவு ஏற்படும்: பலராலும் ஏசப்படுவோம் என்றெல்லாம் முன்பே தெரிந்தும் துணிந்து தான் 'இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார். உங்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யுவன்! இறைவன் உங்களை மேலும் மேலும் இந்த குர்ஆனின் சுவையை உணர்வுபூர்வமாக அறிய வாய்ப்பை நல்குவானாக! நீங்கள் உணர்ந்த அந்த சுவை கூடிய விரைவிலேயே உங்கள் தந்தையையும் உணர வைக்கும். அதற்காக நாமும் பிரார்த்திப்போமாக!