Followers

Sunday, July 08, 2018

அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும்.....

//நாம் தமிழர் கட்சியில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசும் நீங்க உங்க குழந்தைக்கு ஏன் அரபு மொழியில் பெயர் வச்சீங்கன்னு சிலர் என்னிடம் கேட்கின்றனர்...! உண்மையை உடைச்சே சொல்ரேன்...! நம்புவீங்களோ மாட்டீங்களோ... பெண் குழந்தை பொறந்தா “வேலு நாச்சியார்”, மலர், மகிழினி இதில் ஏதாவது ஒன்றும், ஆண் குழந்தை பொறந்தா “ஆதவன்” என்ற பெயர் தான் வைக்க விரும்பினேன்...!! நம்ம பேச்செல்லாம் குடும்பத்துல எங்க எடுபடுது...!// முஹம்மது பாரிஸ்
அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்குமே சொல்லவில்லை. இப்றாஹீம் என்ற பெயர் அரபு பெயர் கிடையாது. பாகிஸ்தானிகள் பலர் உருது பெயர்களையே வைப்பர். வட மாநிலத்தவர் கூட அதிகம் ஃபார்ஸி பெயர்களையே வைக்கின்றனர்.
தமிழகத்தில் சாதி வெறி என்பது பலரது ரத்தத்தில் ஊறியுள்ளது. இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தில் பழைய பெயரிலேயே தொடர்ந்தால் 'இவர் என்ன சாதி' என்ற கேள்வி தொக்கி நிற்கும். அதே அந்த நபர் அரபியில் பெயர் வைத்து விட்டால் 'வாங்க பாய்' என்று சாதிக்கு ஒரு முற்றுப் பள்ளி வைக்கப்பட்டு விடும். எனவே தான் தமிழக முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். தமிழகத்தில் சாதி வெறி என்று ஒழிகிறதோ அன்று அனைத்து இஸ்லாமியர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அழகிய பெயர்களான அன்பழகன், அறிவழகன், பூங்கொடி, மலர் விழி என்று பெயர் வைக்க தொடங்கி விடுவர்.

1 comment:

Dr.Anburaj said...

வழ வழ கொழ கொழ பதில் என்பார்களே அது இதுதான்.அரேபிய அடிமைகள் முஸ்லீம்கள். அவர்களால் அரபு பெயர்கள்தாம் வைப்பாா்கள். அவர்கள் அரேபிய அடிமைகள்.