Followers

Sunday, July 22, 2018

விரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன?

//இத்தனை வருடங்களாக பகுத்தறிவை பரப்பியும் இன்னமும் தமிழ்நாட்ல விரல் விட்டு எண்ணும் அளவுலதான் நீங்க எல்லாம் இருக்கீங்க. அப்டியே இருந்து மெலுக்காக பொழப்ப ஓட்டிகிட்டே இருங்களேன். உங்கள நம்ப ஒரு கூட்டம் இருக்கும். அவ்வப்போது தாலி அறுப்பு பூணூல் அறுப்பு, மாட்டுக்கறி விருந்து என உங்க பொழப்பு ஜாலியா ஓடிகிட்டு இருக்கும். அதுல மண் அள்ளி போட்டுக்காதீங்க.// Sabarinivas Elangovan
விரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன
இந்து மதத்தில் குழந்தை திருமணம் தான் நடந்து கொண்டிருந்தது. அதனை பெரும்பாலும் ஒழித்தாகி விட்டது .பல தார மணம்,கைம்பெண் மறுமணம் தவறு என்றிருந்த மத நம்பிக்கையை அடித்து நொறுக்கியது இந்த விரல் விட்டு எண்ணும் கூட்டம் தான்
சாலை போட கூட இந்த சாதியினர் வர கூடாது என்று நூறு வருடம் முன்பு கூட போராடி சாலை போடுவதை நிறுத்திய இந்து மத நம்பிக்கையாளர்கள் இப்போது யாராவது அப்படி செய்ய முடியுமா ?அதனை நிறுத்தியாகி விட்டது .சில இடங்களில் இன்னும் மிச்சமிருக்கும் இந்துமதவெறியால் நடைபெறும் இந்து மதம் காரணமான தீண்டாமை நிகழ்வுகளுக்கும் கூடிய விரைவில் சாவுமணி அடிக்கப்படும்.
பெண்களை படிக்க அனுப்பாதே ,சொத்துரிமை கொடுக்காதே என்று தான் மனு முதல் சங்கராச்சாரியார் வரை சொல்லியது-அதனை அடித்து நொறுக்கியாகி விட்டது
மத மற்றம் பெருங்குற்றம் ,கொலை செய்வோம் என்றிருந்த சூழலை இந்த விரல் விட்டு எண்ணக்கூடிய கூட்டம் மாற்றி பிடித்த கடவுளை தேர்ந்தெடுத்து கொள்ளும் சூழல் உருவாக்கியது.விரல் விட்டு என்னும் கூட்டத்தை தவிர மீதி இருக்கும் மிக மிக அதிக இந்து வெறியர்கள் தான் மதமாற்ற தடை சட்டம் வேண்டும்,அதனை மிக கடுமையாக்க வேண்டும் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்
மதம் கடந்த திருமண உறவுகளை பதிவு செய்ய வந்த ஸ்பெஷல் marriage ஆக்ட் கீழ் நடக்கும் திருமணங்களில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்.பதிவு செய்யப்படும் திருமணங்களில் பத்து சதவீதத்துக்கும் மேலான திருமணங்கள் இதன் கீழ் தான் பதிவு செய்யப்படுகின்றன
பெண்களுக்கு சொத்துரிமை,கல்வியில் முன்னுரிமை (தமிழ்நாட்டில் கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கும் 24 லட்சம் மாணவ மாணவியரில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் இருக்கும் சூழலை உருவாக்கியாகி விட்டது இந்த விரல் விட்டு எண்ணும் கூட்டம் )பணிகளில் இட ஒதுக்கீடு என்று மாத உத்திர போக்கு காலங்களில் அனைத்து பதவிகளிலும் பெண்கள் பங்கு பெரும் சூழலை உருவாக்கியாகி விட்டது .சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுத்து கொண்டு ஏமாற்றப்பட்டு கொண்டிருந்த பல கோடி ரூபாய் வருவாயை கண்டுபிடித்த EO ஒரு பெண் அதிகாரி.
சாதிவெறி ஊறிய உச்சநீதிமன்றம் இதனை இப்போது அடித்தாலும் வேறு வழியின்றி ஒவ்வொன்றாக இறங்கி விரல் விட்டு எண்ணும் கூட்டம் சொல்லும் அனைத்தும் சரி என்று தான் தீர்ப்பு தர வேண்டும்
மாட்டுக்கறிக்காக அடித்து கொள்ளும் மதவெறியர்கள் நிரம்பிய நாட்டில் ,விரல் விட்டு எண்ண கூடிய சிலரை தவிர தீவிர இந்துக்கள் நிரம்பிய தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் சுவையான மாட்டு கறி உணவு கிடைக்கும் சூழலை அதனை 35 சதவீதத்துக்கும் அதிகமான இந்து மதத்தின் கீழ் சுட்டி காட்டப்படும் மக்கள் உண்ணும் சூழலை உருவாக்கியாகி விட்டது
கடந்த நூறு ஆண்டுகளில் இந்த விரல் விட்டு எண்ணும் கூட்டம் சாதித்தது என்ன அவர்களை தவிர்த்த தீவிர இந்து மத பற்றாளர்கள் சாதித்தது என்ன என்பதை அலச தயார் .நீங்க ரெடியா ? Poovannan Ganapathy

2 comments:

Dr.Anburaj said...

தமிழ் பார்ப்பன ஒழிப்பு என்?று பேசியவன் எல்லாம் இன்று பெரும் கோடீஸ்வரா் ஆகிவிட்டாா்கள். தமிழ்நாட்டில் சமூக சீா்திருத்தம் என்று பேசி மக்களை ஏமாற்றியவா்கள் இன்று தங்களை பெரும் சமூக சீரதிருத்தவாதிகளாக தங்களைக் காட்டிக் கொணடிருக்கின்றார்கள்.காக்காய்பொன்னை அசல் சொக்கத்தங்கம் என்று எழுதுவது பொருத்தமானது அல்ல.
தமிழன் எமாந்து கொண்டேயிருக்கின்றான். என்று அதற்கு முடிவு வரும்
தாங்கள் குறிிப்பிட்டுள்ள சமூக பிரச்சனைகள் பிற மாநிலங்களிலும் இருந்தது.அங்கெல்லாம் தீா்வுகள் முன்னேற்றம் எப்படி யாரால் வந்தது ? சமூகமாற்றத்திற்கும் தி.க வாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Dr.Anburaj said...

தமிழ்நாட்டில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு குரானும் இசுலாமும் காரணம் அல்ல.முஸ்லீம் நாடுகளில் இன்றும் பெண்கள் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. சவுதியில் கடந்தமாதம்தான் பெண்களுக்கு கார் ஒட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிரியா மற்றும் யேமனில் அகதிகளாக மக்கள் கடலில் சமாதி ஆகிக்கொண்டிருக்கின்றார்கள்.

இறந்தவா்களுக்க கல்லறை அவஸ்தை உண்டு அதாவது கல்லறையில் இருக்கும்போது பல வேதனைக்கு அவர்கள் ஆட்படுத்தப்படுவார்கள் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது. கப்ரூ வேதனையில் சில யுதர்கள் ஒலமிட்டதை முகம்மது கேட்டு ஆயிசாவிடம் சொன்னதாக பதிவுகள் உள்ளன்.
கடலில் ஜலசமாதி அடைந்த சிரியா மற்றும் யேமன் மக்களுக்கு கபா் வேதனை உண்டா ? அது எப்படி இருக்கும் என்பதைப்பற்றி கண்மணி அரேபிய பொன்மணி எங்காவது ஏதேனும் சொன்னதுண்டா ?