Followers

Saturday, February 15, 2020

அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே

அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே
அசாமில் நிகழ்த்தப்பட்ட NRCயில் 19.06 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள், அதாவது 19.06 லட்சம் பேர் சந்தேகத்திற்கு இடமானவர்கள் இவர்கள் அனைவரும் தங்களின் குடியுரிமையை இனி நிறுவ வேண்டும்.
இந்த 19,06,657 பேர் யார்???
வங்காளி இந்துக்கள் - 6.90 லட்சம்
இஸ்லாமியர்கள்- 4.86 லட்சம்
(பாங்கிளாதேஷ் / இந்தியா)
கூர்காக்கள் - 85,000
அசாமி இந்துக்கள்- 60,000
கோச் ராஜ்பன்சி- 58,000
கொரியா மரியா தேசி- 35,000
போடோ- 20,000
கர்பி- 9,000
ராஃபா-8,000
ஹஜோங்- 8,000
மிஷிங்-7,000
அஹோம்-3,000
காரோ-2500
மதக்- 1,500
திமிஷா- 1,100
சோனாவால் கராசாரி- 1,000
மாரன் - 900
பிஷ்னுபிரியா மணிப்பூர் - 200
நாகா - 125
ஹமார் - 75
குகி- 85
தாடோ - 50
பாயிட்டீ - 85
மேலே உள்ள பட்டியலில் 6,70,000 பேர் இந்துக்களும் அல்ல இஸ்லாமியர்களும் அல்ல மாறாக பல்வேறு பழங்குடி குழுக்களை சேர்ந்தவர்கள்.
மொத்தம் 19,06,657 பேரில் 4,30,000 யார் என்று இன்னும் தெரியவில்லை?? அவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்த 4,30,000 பேரில் பெரும் பகுதியானவர்கள் வட, தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவை சார்ந்தவர்கள், இதில் பெரும் பகுதியானவர்கள் வட இந்தியாவை சேர்ந்த இந்துக்கள்.
1 கோடி பேர் பங்காளாதேஷில் இருந்து அசாமில் நுழைந்துவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்களாக திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் அந்த எண்ணிக்கையை 60 லட்சம் என்றார்கள், அதன் பின்னர் 40 லட்சம் என்றார்கள். சமீபத்தில் அசாம் என்.ஆர்.சி முடிவுகள் வெளியான போது அந்த எண்ணிக்கை 19 லட்சமாக அறிவிகக்ப்பட்டது. ஆனால் இந்த 19.06 லட்சம் பேரில் பெரும் பகுதியாக குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்கள் இந்துக்களே.
இந்தியா முழுவதும் NRC,CAA வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட தொடங்கி விட்டார்கள் ஆனால் பெரும்பான்மையாக நீக்கப்பட்ட இந்துக்கள் (7 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் ) மற்றும் பழங்குடிகள் இன்னும் முழுமையாக போராட்ட களத்திற்கு வரவில்லை, ஊடகங்களும் தொடர்ச்சியாக NRC,CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலவே சித்தரித்து வருகிறது, ஆனால் உண்மையிலேயே அசாமில் NRC,CAA ஒட்டு மொத்தமாக அங்கு வாழும் இந்துக்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது என்பதை நமக்கு முடிவுகளும் புள்ளிவிரங்களும் காட்டுகிறது.
- முத்துகிருஷ்ணன்

No comments: