Followers

Thursday, February 13, 2020

பார்ப்பனரல்லாத மற்ற சாதியினர் தீட்டு

ராமர் கோவில் ட்ரஸ்டில் பிராமணர்களைத் தவிர
வேறு யாரையும் சேர்க்கவில்லை:
- பார்ப்பனரல்லாத மற்ற சாதியினர் தீட்டு என்ற அடிப்படையில் கை கழுவி விடப்பட்டுள்ளனர்.
அம்புட்டுத்தான் இவர்களது இந்து பாசம்!
------
கீழ் சாதி என சொல்லப்படுபவர்களையும் இராமர் கோவில் ட்ரஸ்டில் இணைக்க வேண்டும் என
போர்கொடி தூக்கியுள்ள உமாபாரதிக்கு அமித்ஷாவின் பதில்:
அமீத்ஷாவின் பதில் இப்படி இருக்கலாம் : பழக்கவழக்கத்தையெல்லாம் பள்ளிவாசல இடிக்கறதோட நிப்பாட்டிக்கனும் .. கோவில் ட்ரஸ்டுல இடம் கேக்கறது பூசை செய்ய அனுமதி கேக்கறது தட்டுல உண்டியல்ல விழற சில்லறைல பங்கு கேக்கறது இதையெல்லாம் வெச்சுக்கக்கூடாது . 
------
#பாஜக RSS சங் பரிவாரத்தில் சாதி உரிமைக்குரல் வெடித்தது..
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அயோத்தி ராமர் கோயில் டிரஸ்ட்டில், ஓபிசி (BC / MBC) பிரிவை சார்ந்த ஒருவர் கூட இல்லை.. ஒரே ஒரு தலித் உறுப்பினர் தவிர, மற்ற எல்லோரும் குறிப்பிட்ட மேல் சாதி வகுப்பினர்கள்.. இதனால் கடும் கோபமடைந்துள்ள உமா பாரதி, கல்யாண் சிங் போன்ற ஓபிசி பிரிவை சார்ந்த சங் பரிவார் தலைவர்கள், வெளிப்படையாக தங்களின் குமுறலை, தாங்கள் ஒதுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க துவக்கியுள்ளார்கள்..
ராம ஜென்மபூமி பாபரி மஸ்ஜித் போராட்டங்கள் நடைபெற்றபோது, அதை களத்தில் முன்னின்று நடத்தியது ஓபிசி தலைவர்களான உமா பாரதி, வினய் கட்டியார், கல்யாண் சிங்... அது தொடர்பாக நடந்த கலவரங்களில் பாதிப்படைந்தது ஓபிசிக்கள், ஆனால், இப்போது கோயில் கட்ட அமைக்கப்படும் டிரஸ்ட்டில், ஓபிசிக்கள் புறக்கணிக்கப்படுவதா?? என உமா பாரதி, கல்யாண் சிங்க்கும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்..
பாவம் இவர்களுக்கு புரியவில்லை.. தூண்டப்பட்ட மத உணர்வால், சண்டைப்போட்டு, கலவரம் செய்து, அடிபட்டு உதைப்படும் காலாட்படைத்தான் நீங்கள்.. அதன்பின், நோகாமல் நோம்பு கும்பிடும் "அந்த" கும்பல் வந்து, இவர்களை வெளியே துரத்திவிடும் என்பது... காலம் காலமாக, கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் இதுதானே நடந்து வருகிறது..
நன்றி - பிரகாஷ். J. P முகநூல் பதிவு.


1 comment:

Dr.Anburaj said...

ராம்ர் கோவில் கட்டும் பணிக்கான அமைப்புகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கல்யாண்சிங் மற்றும் உமாபாரதி போன்று போராடியவர்களுக்கு அறக்கட்டளையில் இடம் கிடைக்க வேண்டும் என்று இருவரும் சொல்கின்றார்கள் .இவர்கள் இரண்டு பேரும் பிற்பட்ட சாதி மக்களின் பிரதிநிதி என்று யார் சொன்னார்கள் ? கல்யாண்சிங் பதவிக்கு கட்சி மாறி செல்வாக்கை இழந்தவா்.உமாபாரதி ஆவேசம் நிதானம் இல்லாதவா்.பேச்சில் கடுமை உண்டு. பாரதிய ஜனதாக கடசியில்தான் தலிக் பங்காரு லெட்சுமணன் அகில பாரத தலைவராகவும் தமிழகத்தில் ஒரு தலிக் மாநில தலைவராகவும் தொண்டு செய்தார்கள் மறந்து விட வேண்டாம்.