Followers

Thursday, February 27, 2020

ஏன் இசுலாமியர்கள் இவ்வளவு விரட்டப்படுகிறார்கள்?

Shobana Narayanan
ஏன் இசுலாமியர்கள் இவ்வளவு விரட்டப்படுகிறார்கள்?
நான் போட்டித்தேர்வுகளுக்கு தயாரான காலத்தில் சிபிஎஸ்சி புத்தகத்தில் இவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியை சார்ந்த முரட்டுத்தனமான கூட்டத்தினர் என்றே அப்பட்டமாக எழுதியிருந்தார்கள்.
ஏன் இவ்வளவு வன்மம்? ஏன் இவர்கள் ஒரு நிச்சயமற்ற தன்மையுடனேயே வலம் வருகின்றனர்?
பல இசுலாமிய தோழர்கள் தோழிகள் உண்டு. எந்த வித பாகுபாடும் இன்றி பழகும் போதும் அவர்களை அறியாமல் அவர்களது இந்த நிச்சயமற்ற தன்மை மீதான உணர்வினை வார்த்தைகளாக்கியிருக்கின்றனர்.
உலக அளவில் இசுலாமியர்கள் நடத்தப்படும் விதம் அணுகப்படும் முறை என எல்லாவற்றிலும் தொடர் மாறுபாடுகளும் மறைந்திருக்கும் வன்மமும் கலந்திருக்கும்.
அதற்கு பதில் மரியாதை செய்யும் இயக்கங்களும் அவர்களுக்கு படியளக்கும் அரசுகளும் கூட உண்டு.
ஆனால் இந்தியாவில் இசுலாமியர்கள் நிலைப்பாடு என்பது என்னவோ இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல.
காந்தியன் கால வரலாற்றிற்கு முன்பான இசுலாமியர்கள் வேறு. காந்தியான் கால இசுலாமியர்கள் வேறு.
நவகாளி, பிரிவினை இதையெல்லாம் கடந்து பின் எழுபது வருடங்களுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு இன்று வரை ஆளாகி வருகின்றனர் என்பதற்கு நூறு வாதங்களும் நூறு சம்பவங்களும் உண்டு. பேசலாம்.
ஆனால் அடிப்படைக் கேள்வி இதுதான். ஏன் அவர்களை அந்நியராக்கினோம்? ஏன் அவர்களை கொடூர்ர்களாக மட்டும் சித்தரித்தோம்?
எல்லா மதங்களும் தங்களுக்கான வன்முறைகள் தங்களுக்கான கடுமைகள், தங்களுக்கான ஆள்பிடிப்புகளை தொடர்ந்து செய்த போதும் இவர்கள் மீது மட்டும் தொடர் வன்ம முத்திரை ஏன் வந்தது?
ஒரு குற்றச்செயலில் கட்டாயம் ஒரு இசுலாமியர் கூட்டாளியாக இருப்பார் என்பது இங்கு உறுதியான நம்பிக்கை.
ஆனால் இயல்பு என்னவென்றால் அதே குற்றச்செயலில் இந்துக்களும் உண்டு. ஆனால் இவர்களை நோக்கி வெளிச்சம் குவியாது.
கால காலமாக வட இந்திய மனப்பான்மை தென்னிந்திய மனப்பான்மை போல நட்புடன் இல்லை என்பது யோசித்தால் தெரியும்.
ஏன்? என்ன காரணம்?
என்வரையில் நான் உணரும் காரணம் ஒன்று உண்டு.
தென்னிந்திய இந்துக்கள் தொழிலில் இசுலாமியர்களை போட்டியாக கருதுவதில்லை. பெரும்பான்மையான இசுலாமியர்கள் அவரவரே தொழில் நடத்துபவர். அரசிடமோ தனியாரிடமோ வேலை கேட்டு நிற்பதில்லை. காரணமும் இதே இன்செக்யூர் உணர்வாக இருக்கலாம். தென்னிந்திய மக்களுக்கு தொழிலை விட கல்வி அயல்நாட்டு வேலை விவசாயம் என்பதில் ஆர்வம். நல்ல விரிந்த சமூக கட்டமைப்பு. அதனால் இவர்களால் எல்லாருடனும் கலந்து பழக முடிகிறது. மேலும் தென்னியந்தர்களுக்கு முசிலீம்களை விட சாதிப்பிரச்சனை தான் குறி.
ஆனால் வட இந்தியர்கள் பெரும்பாலும் தொழில் புரிகிறார்கள். இவர்கள் இசுலாமியர்களை கடும் தொழில் போட்டியாக கருதுகிறார்கள்.
சௌகார்பேட்டை பகுதியில் இருக்கும் வட இந்தியர்களிடம் அதிகம் பழகும் வாய்ப்பில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். தொழில் வன்மம், மத வன்மமாகி கடைசியில் நாடே உன்னுடையது அல்ல நீ அனுபவிப்பவை உனது உரிமை அல்ல உனக்கு எங்களால் வழங்கப்பட்டது என்ற உணர்வு தலை தூக்கி..
கங்கா சந்திரமுகியாக தன்னை நம்பிக்கை கொண்டது போல இவர்கள் இதை நம்பி நம்பி நம்பி அவர்கள் இந்நாட்டு குடிமக்களே இல்லை என உறுதியாக நம்பி..
தொழில் செய்யும் பெரிய பெரிய கைகள் தெளிவு. கரெக்டாக வேலை வெட்டியற்ற இந்த சங்பரிவார் கூட்டத்தை கூர் சீவி சீவி சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். முசுலீம்கள் அனைவரும் தொழிலை விட்டு விட்டு அவர்கள் கடைகளில் சம்பளம் இல்லாமல் மூட்டை தூக்க வருகிறோம் என்று சொன்னால் அப்போது பார்க்க வேண்டும் இவர்கள் தேசபக்தியை.


1 comment:

Dr.Anburaj said...

ஆனால் அடிப்படைக் கேள்வி இதுதான். ஏன் அவர்களை அந்நியராக்கினோம்?

முஸ்லீம்களின் வேதம் முஸ்லீம்களை தனிமைப்படுத்துகின்றது.பிறமதத்தவர்களைகாபீர் என்று

மனதிற்குள்

இழிவு படுத்தி தங்களை தனிமைப்படுத்தி வாழ்பவர்கள் முஸ்லீம்கள்.பிரச்சனையின் ஆரம்பமே அங்குதான். இந்தியாவில் அரேபிய வல்லாதிக்க இசுலாமிய அரசாங்கத்தை பாக்கிஸ்தானில் உள்ளது போல் உருவாக்க வேண்டும்அ என்று ஜமாத் தோறும் பள்ளி வசால் தோறும் தினந்தோறும் கெட்ட உபதேசம் நடக்கின்றதே ? அதன் விளைவுகள்தான் கோவை குண்டு வெடிப்பு..........வண்ணாா் பேட்டை முற்றுகை.

அம்மணி அறிந்துதான் பதிவு செய்தாரா ? இல்லை இதுவம் சு....ன் கட்டுக்கதைதானா?