Followers

Wednesday, February 19, 2020

அதாகப்பட்டது டியர் சங்கிஸ்...

அதாகப்பட்டது டியர் சங்கிஸ்... நீங்க என்ன சொன்னலும் நல்லா முட்டு குடுப்பிங்க. எனக்கு தெரியும். நான் ஊதற சங்கை ஊதுறேன்.
மனிதனோட அடிப்படை உணவு ஊட்ட வகை நாலு. Carbohydrate எனும் சர்க்கரை பொருள், lipids எனும் கொழுப்புச்சத்து, proteins எனப்படும் புரதம், vitamins& minerals எனப்படும் விட்டமின்களும் தாது உப்புக்களும். ஆச்சா?
சரி. இது நாலும் ஒவ்வொரு விதங்கல்ல நமக்கு அவசியம். தேவையை பொறுத்து அளவு மாறும். உதாரணமா ஒரு நீச்சல் வீரருக்கு உடனடி ஆற்றலுக்கு அதிக சர்க்கரை தேவை ஆனால் ஒரு வளரும் குழந்தைக்கு அதிக புரதம் தேவை. இப்படியாக மாறும்.
அடிப்படையில் நம் ஜீரண மண்டலம் ஒரு என்சைமை சர்க்கரைக்கும், ஒரு என்சைமை கொழுப்பிற்கும் வைத்து, அவற்றை சீரணித்துவிடும். ஆனால் புரதங்களை முழுமையாக உட்கிரகிக்க ஐந்து என்சைம்கள் உள்ளன.
இது எதனைக் காட்டுகிறது என்றால், பரிணாம வளர்ச்சியில் மனிதன் சமைக்காத இறைச்சி உண்ட போது கடினமான ஜீரணப்பணிகளுக்காக இவை தோன்றியிருக்கலாம்.
ஆக, மனுசன் அதிகம் உண்டது இறைச்சிதான்.
நீங்கள் உண்ணும் பருப்பிற்காக இவ்வளவு என்சைம்கள் தேவைப் படாது. மேலும் பருப்பு விளைவித்து உண்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இறைச்சி உண்ணலும் அதற்குரிய என்சைம்களும் உடலில் வந்தாச்சு.
இந்த அறிவியலை ஏத்துக்கோங்க.
நீங்க என்னடான்னா இப்ப வந்து வெங்காயம், பூண்டு இல்லாத சுத்தமான சைவ சாம்பார்ங்கறிங்க. திக்குனு இருக்கு. ஏற்கனவே நோய்தடுப்பாற்றல் குறைந்து டெங்கு கொரோனானு செத்துக்கிட்டு இருக்கும்போது நீங்க சொல்ற புல்லையும் கோமியத்மையும் தின்னுட்டு நீங்க கும்புடற கோமாதா கூட வாழாது.
மேலும் எல்லாரும் சைவமா மாறினா அத்தனை பேருக்கு விளைவித்தல் என்பது சாத்தியமில்லை. அத்துனை பேர் ஆற்றல் தேவை ஊட்டச்சத்து தேவை பூர்த்தி ஆகாது. உணவுச்சங்கிலி உணவு வலை உடைபடும். அதையும் தாண்டி அதிக வேளாண்மை செய்ய தண்ணி இல்லை. அவ்வளவு அதிக வேளாண்மை செய்தால் மீத்தேன் அதிகமாகி குளோபல் வார்மிங் அதிகமாயிடும் ( மரம்தான் கார்பன் டை ஆக்சைடு எடுத்துக்கும். வயல் மீத்தேனை வெளிவிடும். அது கார்பன் டை ஆக்சைடை விட அதிக வெப்பம் தரும். மேலும் விவசாயமே நாம் கண்டறிந்த செயற்கை முறை. அதுனால விவாசயம் , ஆர்கானிக்கு வராதிங்கப்பா).
நீ சைவம் அசைவம் தின்னுட்டு இத பேசுனு எனக்கு சொல்லாதிங்க. எனக்கு சின்னதுல இருந்து பழகிருச்சு. சொல்றவள விடுங்க. விசயத்த கவனிங்க.
ஜீவகாருண்யம் அடிப்படையில் இதை சொல்பவர்களுக்கு பிராக்டிகாலிட்டி என்ற பதிலை தவிர வேறு சமதானம் இல்லை.
பாய்ங்க ரம்சானுக்கு அசைவ நோம்பு கஞ்சிதந்து மதத்தை திணிக்கறாங்கனு வராதிங்க. அவங்க எந்த சைவரையும் வற்புறுத்தல. அசைவம்னு தெரிஞ்சு தான் தேவை உள்ளவங்க வாங்கறாங்க.
எல்லாத்துக்கும் மேல அவரவர் உணவு அவரவர் உரிமை.
எனிமோர் முட்டு??

2 comments:

vara vijay said...

Hey suvi had became a kaffir like me. Heaccepted evolution.

Dr.Anburaj said...


நயவஞ்சகமாக ஆயிரம் பேசுவார சுவனப்பிரியன்.

மனிதனின் பல் அமைப்பு இறைச்சி உண்ணும் நாய்கள் சிங்கம் புலி போன்றவை போல் அல்ல

என்பதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றாா் சு....ன்.?

ஆதாம் ஏவாள் கூட அம்மணமாக இருந்தார்கள் .நாமும் இருக்கலாமா ?

சைவ உணவு மனிதனாய் பிறந்த அனைவருக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. கல்வி ஆராய்ச்சி போன்ற அறிவுக்கு அதிக பளு கொடுக்கும் துறைகளில் உள்ளவர்களுக்கும் அதிக நேரத்தை சமய துறையில் செலவு செய்பவர்களுக்கு சைவ உணவு அதிக பயன் தரும் என்பதுதான் தத்துவம்.
சீனாக் காரன் தின்கிறான் தினகிறான் பாரு.நாய் நரி புளு கரப்பான் ......அம்மையும் அப்பனை விட்டு விட்டான் . ஆச்சரியமாக இருக்குது. படைக்கப்பட் உயிரினங்கள் அனைத்தையும் -மனிதனைத்தவிர - உண்கிறான்.
தாங்களும் சாப்பிடுங்களேன்.
அரேபிய நாடுகளில் விவசாயம் கிடையாது. அரேபிய நாட்டு புத்தகங்களை படித்த அறிவு இந்தியாவிற்கு பொருந்தாது.