Followers

Thursday, February 13, 2020

எனக்கு ஒன்று புரியவில்லை...அதெப்படி மதம் மாத்துனாதான் உதவி ....

VM Anantham
எனக்கு ஒன்று புரியவில்லை...அதெப்படி மதம் மாத்துனாதான் உதவி செய்வாங்கன்னா..அப்படியா பட்ட மதம் எதற்கு....அவன் எந்த மதத்தில் இருந்தாலும் அவனின் வறுமையை போக்க முயற்சி செய்வதே கடவுளின் பணி ..மனித தர்மம்..அத விட்டு என்னோட மதத்துக்கு வந்தா நீ நல்லா வாழலாம்னு எந்த இறைவன் சொன்னான்...அப்படி மதம் மாறித்தான் உங்கள் வறுமையை போக்கனும்னா..அதுக்கு பதிலா பிச்சை எடுக்க போகலாம்....
------------------------------------------------
Nazeer Suvanappiriyan
இங்கு வறுமை ஒரு பிரச்னையே அல்ல. முஸ்லிம்களில் இந்துக்களை விட அதிக ஏழைகள் உள்ளனர். தலித்களை விட பொருளாதாரத்தில் மோசமாக உள்ளதாக சச்சார் கமிட்டி அறிக்கையை படிக்கவில்லையா?
ஆனால் எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும் பள்ளிக்கு முதலில் வந்தால் உரிமையோடு முதல் வரிசையில் அமரலாம். யாரும் யார் காலிலும் விழ வேண்டியதில்லை. சூத்திரன், பார்பனன் என்ற பேதம் இஸ்லாத்தில் இல்லை. சாதியை வெறுத்து திருமணம் முடித்தால் பெற்றோர்களே கொன்று விடும் கவுரவக் கொலை இஸ்லாத்தில் இல்லை. பறையன் பள்ளன் என்று இழிவாக பார்க்கப்படுபவன் 'அப்துல்லா' என்று பெயர் மாற்றி இஸ்லாத்தில் நுழைந்தால் 'வாங்க பாய்...' என்று மரியாதை கொடுத்து நீங்களே அழைக்கிறீர்கள். இந்த மாற்றத்துக்காகத்தான் அந்த மக்கள் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தனர்.
தற்போது அமித்ஷாவின் கைங்கர்யத்தால் முஸ்லிம்களின் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாகி உள்ளது. குடியுரிமையே போனாலும் பரவாயில்லை நாங்கள் சுய மரியாதையோடு வாழ விரும்புகிறோம் என்று இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.

1 comment:

Dr.Anburaj said...

முற்றிலும் முஸ்லீம்கள் வாழும் ஊர் நாடுகளின் உண்மை நிலையை அறிந்தவர்க்ள் இந்த கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

முறையான சமய பயிற்சி கல்வி பிற மதத்தை வெறுத்து இசுலாமிய பேரரசை நிறுவ வேண்டும் என்ற ஆசையை சிறுவயதில் விதை்த்து விடுவதால்-ஜமாத்தில் பணம் கொட்டிக்கிடப்பதால் அதன் உதவி பெற்று வாழ்வதால் ஏழைகள் ஜமாத்தின் கோட்டை தாண்ட முடியாது தவிக்கின்றனா். உதவியு்ம் கிடைக்கின்றது என்பதும் உண்மை. உதவிக்கு பரிசு அடிமைத்தனம்.

இந்து குழந்தைகளுக்கு முறையான சமய பண்பாடு பயிற்சி இன்று வரை அளிக்கப்படவில்லை
பல பிரச்சனைகளுக்கு அதுதான் காரணம்.