Followers

Showing posts with label பார்ப்பனர்கள். Show all posts
Showing posts with label பார்ப்பனர்கள். Show all posts

Friday, January 08, 2016

பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் இவர்கள்....



ஆட்சி மாறப் போகுதுன்னு பட்சி சொல்லுசுல்ல...

கட்சி மாறி உடனே எங்களையும் காப்பாத்திகனும்ல...

ராஜ ராஜ சோழனாகட்டும்: மொகலாயர்களாகட்டும்

வெள்ளைக்காரன் ஆட்சியாகவும் இருந்து விடட்டும்

யார் எங்கு ஆட்சியில அமர்ந்தாலும் அங்கே நாங்க

அதிகார மையத்தை எப்படியாவது புடுச்சசுடுவோம்ல...

Tuesday, September 01, 2015

பார்பனர்கள் எவ்வளவு படித்தாலும் சாதியை விடுவதில்லை!




60 வருட போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் தலித்கள் பிற்படுத்தப் பட்டோர், இஸ்லாமியர்கள் ஓரளவு அரசு உத்தியோகங்களில் நுழைந்து தங்களின் பொருளாதாரத்தை சற்று உயர்த்தியுள்ளார்கள். ஆண்டாண்டு காலமாக அரசு உத்தியோகத்திலேயே இருந்து ருசி கண்ட மேல் சாதியினருக்கு இது பொருக்குமா? எனவே எந்த வகையிலாவது இந்த இட ஒதுக்கீட்டை தூக்கி விட அயராது உழைக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களையே இதற்கு பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றனர். இந்துத்வாக்களின் திறமையே இதுதான். எந்த குற்றங்கள் நடந்தாலும் தங்கள் பெயர் வெளி வராமல் பார்த்துக் கொள்வர்.

இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கி விடலாம்! அது எப்போது? சாதி வாரியாக மத வாரியாக அந்தந்த மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ற அரசு உத்தியோகங்களை சம்பந்தப்பட்டவர்கள் என்று பெறுகிறார்களோ அன்று நீக்கி விடலாம். தங்களின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாக எந்த சாதி அரசு வேலைகளை ஆக்கிரமித்துள்ளதோ அவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் வேலைகளை உதறி விட வேண்டும். எல்லா மக்களுக்கும் சம உரிமை கிடைத்து விட்டது என்பதை அரசும் உறுதி செய்ய வேண்டும். இந்த நிலை என்று வருமோ அன்று இந்த இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக தூக்கி விடலாம்.

இட ஒதுக்கீடு இவ்வளவு நடைமுறையில் இருந்தும் இன்றும் அரசு உத்தியோகங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார் என்பதை குஷ்வந்த் சிங் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்களின் நிலை இதுதான். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள்3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!

ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

Tuesday, June 16, 2015

பிராமணாள் போட்ட அப்பளம் வாங்கறீங்களா!



சூத்திரன்: அய்யரே.... அது என்ன பிராமணாள் செய்த அப்பளம்?

அய்யர்: மத்த சாதி பெண்கள் செய்தால் எங்களுக்கு தீட்டுடா அம்பி.... அதான்..

சூத்திரன்: எங்க வீட்டு பெண்கள் செய்த அப்பளத்தை சாப்பிடக் கூடாது என்று கும்புடற சாமி சொல்லிச்சா... ஆதாரம் காமிங்க சாமி....

அய்யர்: சாமி சொல்லலடா... உங்க ஆத்துல சுத்த பத்தமா இருக்க மாட்டேள்.... அதான் காரணம்.

சூத்திரன்: நீங்க எங்க வீட்டுல வந்து பாத்திங்களா சாமி...

அய்யர்: நான் வீட்டுக்கு வரலேண்ணாலும் ரோட்டில் பார்க்கிறேனே.... அழுக்கு பிடித்த உடைகள். ஒரே வியர்வை நாத்தம்.... எப்படிடா சாப்பிட முடியும்?

சூத்திரன்: அய்யரே! உங்க ஆளுங்க எப்படியாவது ஆபீஸ் வேலையை புடுச்சுகிறீங்கோ... எங்க ஆளுங்க படிச்சு வந்தாலும் வேலை தர மாட்டேங்கறீங்கோ.... ஒண்ணு ரெண்டு பேர் இட ஒதுக்கீட்டில் அலுவலக வேலைக்கு வந்தாலும் எங்க ஆளுங்களுக்கு உரிய மரியாதை தர மாட்டேங்கிறீங்கோ....

பல உண்மைகள் வெளி வருவதை பார்த்து சுதாரித்த அய்யர் வேகமாக நடையை கட்டுகிறார்.

Monday, December 01, 2014

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?'



National Council of Applied Economic Research (NCAER) - என்ற தொண்டு நிறுவனம் 1956 ல் தொடங்கப்பட்டது. இந்தியர்களின் பொருளாதாரம் மற்றும் தீண்டாமை குறித்து அறிக்கைகளை தயாரிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும் இது. சமீபத்தில் இந்த நிறுவனம் மற்ற சில தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து 42000 வீடுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. 'நீங்கள் உங்கள் வாழ்வில் தீண்டாமையை கடைபிடிக்கிறீர்களா?' என்று கேட்டால் உடன் 'இல்லை' மறுத்து விடுகின்றனர். அடுத்த கேள்வியாக 'உங்கள் சமையல் அறையில் தலித்களை அனுமதிப்பீர்களா? உங்களின் சமையல் பாத்திரங்களை தொட அனுமதிப்பீர்களா?' என்ற கேள்விக்கு விடை தான் நாம் பார்க்கும் இந்த அட்டவணை. வழக்கமாக பார்பனர்கள் தீண்டாமையை கடை பிடிப்பதில் முண்ணனியில் இருக்கிறார்கள். மற்ற உயர் சாதி இந்துக்களும் பார்பனர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் அவர்களும் தீண்டாமையை கடைபிடிப்பதில் போட்டியிடுகின்றனர்.

இதில் ஒரு பார்பனர் தனது பின்னூட்டத்தில் 'ஆம் .... நாங்கள் சாதி பார்க்கிறோம். தலித்களை சமையல் அறை பக்கம் வர விட மாட்டோம். அது எங்களின் வழக்கம்' என்று திமிராக பதிலும் அளிக்கிறார்.

இவர்களை விடுங்கள். ஏனெனில் இந்த மக்களின் வேத நூல்கள் தீண்டாமையை வலியுறுத்துகின்றன. கால காலமாக பழக்கப்படுத்தி வந்துள்ளதால் இவர்களிடம் தீண்டாமை இருப்பதை ஆச்சரியமாக பார்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களிடமும் தீண்டாமை இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது. 18 சதமான முஸ்லிம்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக சொல்வது முஸ்லிம்களாகிய நமக்கு அவமானம் இல்லையா? குர்ஆனும், நபி மொழிகளும் தீண்டாமையை முற்றாக ஒழிக்க சொல்லி நமக்கு கட்டளையிட இந்துக்களை பார்த்து முஸ்லிம்களாகிய நாமும் தீண்டாமையை கடைபிடிக்கலாமா?

'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். மொழியாலும் நிறத்தாலும் உயர்ந்தவன் எவனும் இல்லை' என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திய ஒருவரை தலைவராக கொண்ட முஸ்லிம்கள் தீண்டாமை அனுசரிக்கலாமா? எங்கள் வீட்டில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இந்து பெண் சமையல் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீடு பெருக்குவது போன்ற பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எங்கள் கிராமத்தில் அநேக வீடுகளில் வீட்டு வேலை செய்வது தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்கள் தான். நாங்கள் யாரும் தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக விளங்காத வட மாநிலங்களில் இன்னும் தீண்டாமை தலைவிரித்தாடுவதை எண்ணி இஸ்லாமியர்கள் வெட்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு உண்மை இஸ்லாத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-11-2014

http://indianexpress.com/article/india/india-others/one-in-four-indians-admit-to-practising-untouchability-biggest-caste-survey/

Friday, August 15, 2014

யுவனின் மத மாற்றத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு!

யுவனின் மத மாற்றத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு!



கடந்த மூன்று நாட்களாக தமிழ்ஹிந்து மற்றும் தினமலர் நாளிதழில் இந்த செய்தி முதல் பக்கத்தில் வந்தாலும் வந்தது அதற்கு வரும் பின்னூட்டங்களோ 200 ஐ தாண்டி இன்றும் தொடர்கிறது. அதில் யுவனை தரக்குறைவாக திட்டியும் பல உள் நோக்கங்கள் கற்பித்தும் பார்பனர்கள் இடும் பின்னூட்டங்கள் சொல்லி மாளாது. ஏன் பார்பனர்கள் இதில் இவ்வளவு அக்கறை எடுக்கிறார்கள் என்று என்றாவது யோசித்தோமா?

சீக்கியராகவோ, பவுத்தராகவோ, கிறித்தவராகவோ நீங்கள் மாறினால் அதனால் பார்பனர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன மதங்களை எல்லாம் என்றோ இவர்கள் இந்து மதத்தின் பிரிவுகளாக மாற்றி விட்டனர். பரிசுத்த நாடாரிலிந்து அனைத்து சாதிகளையும் கிறித்துவத்துக்கு என்றோ கொண்டு வந்து விட்டனர்.

தங்களின் உயர் சாதி அந்தஸ்து கீழிறங்காமல் இருந்தால் இந்த எதிர்ப்பைக் காட்ட மாட்டார்கள். இஸ்லாத்தில் இந்த பந்தா பலிக்காது. இஸ்லாம் இங்கு அதிகரித்தால் கோவில்கள் பொலிவிழக்கும். காலப் போக்கில் மணி ஆட்ட நம்மையும் அனுமதிக்க மாட்டார்கள். பிராமணன் என்று கூறி தலையில் பிறந்தவனாக நம்மை இனி எவரும் மதிக்க மாட்டார்கள். உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்ய வேண்டி வரும். உடல் உழைப்பு இல்லாமல் இத்தனை காலம் ஓட்டி விட்டோம். சொச்ச காலத்தையும் இதே போல் ஓட்ட வேண்டும் என்றால் இஸ்லாம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே வானத்துக்கும் பூமிக்கும் யுவன் பிரச்னையை வைத்து தை தை என்று குதிக்கிறார்கள். காவல் துறையில் மேல் மட்டத்திலுள்ள பார்பனர்களை தூண்டி விட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை கைது பண்ணி மிரட்டி வைப்பதும் இதனால்தான்.

சில பின்னூட்டங்களைப் பாருங்கள்.

Suresh
எல்லாம் சொந்த சுய நல லாப காரண காரியங்களுக்கு மதம் மாற வேண்டியது மாறி விட்டு எதாவது புளுக வேண்டியது "எனக்கு இவர் வந்தார் அவர் வந்தார் அது தந்தார் இது தந்தார் " என . இந்த காரணங்களை ஒப்பு கொண்டு வரவேற்கும் ஒரு கும்பல் எப்போதும் உடனே ஒரு கும்மாளம் இடும்

kumaresan
இவரு சீக்கிரமே ஒரு அரபு பொண்ண கல்யாணம் பண்ணிப்பாரு. அதுக்கான முன்னோட்டம் தான் இதெல்லாம்..எந்த ஒரு விசயத்த பண்ணும் போது பிளான் பண்ணி பண்ணனும்....

Chinnappan
கதை நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் நம்பும்படிதான் இல்லை!

Lakshmanakumar
மதம் மாறினால் AR Rahman' i போல வரலாம் என்று நினைப்பு. மியூசிக்ஐ காபி அடிப்பதை போல. ரஹ்மான் இரவில் விழித்து மியூசிக் போடுவதை பார்த்து சில மியூசிக் டைரக்டர்கள் இரவில் மியூசிக் போட்டனர். Dont believe this.

PRABAKARA,
யுவன் பேட்டியில் தெரிவது அவருடைய பெற்றோர் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. ஆனால் அவர் என்றாவது கோவிலுக்கு போனாரா? இந்து மதம் பற்றி அவரு தெரியாதை காட்டுகிறது. இசை அறிவிற்கும் சுய வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்க்கு இந்து மதம் பற்றி தெரியாதது கேள்வி குறி தான்.

இதை விட ஆபாசமாகவும் கோபமாகவும் 250க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள். கண்ணியம் கருதி அதனை வெளியிடவில்லை.

இவ்வளவு கூப்பாடு போடும் இந்த பார்பனர்கள் தங்கள் மதத்தில் உள்ள தீண்டாமையை போக்க முயற்சிப்பதுதானே. ஸ்ரீரங்கம் கோவிலின் கர்ப்ப கிரஹத்தினுள் சென்று வழிபட இவர் தந்தை இளையராஜாவை அனுமதிக்கவில்லை. தலித் என்பதால் வெளியாக்கி விட்டனர். ஆகம விதிகள் என்று தனக்கு சமாதானம் கூறிக் கொண்டு இதனை சாதாரணமாக இளையராஜா எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கால இளைஞரான யுவனை இந்த செயல் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்? உலகம் போற்றும் ஒரு இசைக் கலைஞனான தனது தந்தைக்கே இந்த இழிவு என்றால் தான் எம்மாத்திரம் என்ற கோபம் உள்ளுக்குள் வராதா?

நாளை யுவன் மெக்காவுக்கு வரட்டும். அவரை முதல் வரிகையில் நிற்க வைத்து நாங்கள் அழகு பார்போம். சமத்துவம் எங்கு கிடைக்கிறதோ அதனை நோக்கி ஓடுவதை தடுக்க நீங்கள் யார்? அல்லது அவருக்கு ஒரு மாற்று வழியைக் கூறுங்கள்.


"ஆகம விதிகளின் படி கோவில் வழிபாடுகள் சமசுகிருததில்தான் செய்யப்படவேண்டும். தமிழை உபயோகித்தால் கோவிலின் புனிதம் அகன்றுவிடும். அகன்ற புனிதத்தை மீண்டும் கோவிலில் ஏற்படுத்த சமசுகிருதத்தில் சுத்திகரிப்பு சடங்குகளை செய்யவேண்டும்!" (use of Tamil profaned the sancttity of the temples.. To restore the sanctity purification ceremonies need to be performed) .
- ஜி.பாலசுப்ரமனிய ஐயர்

உச்ச நீதி மனறத்தில் இது குறித்து வழக்கேற்பட்டு நிலுவையில் உள்ளது,.


சமஸ்கிரதத்தை தேவ மொழியாகவும், தமிழை நீச மொழியாகவும் அதுவும் தமிழகத்திலேயே கூறிக் கொண்டு அதற்கு ஆதரவாக தடையாணையையும் பெற்று வைத்துள்ள பார்பனர்கள் இதற்கு பதில் சொல்வார்களா? தாய் மொழியான தமிழை இந்த அளவு வெறுக்கும் ஒரு மதத்தில் தமிழனான யுவன் தொடர வேண்டும் என்று எதன் அடிப்படையில் எதிர்பார்க்கிறீர்கள்? பார்பனர்களாகிய உங்களோடு தனது வாழ்நாள் முழுக்க போராடிய பெரியார் முடிவில் சோர்வடைந்து 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து' என்று கூறி விட்டு செல்லவில்லையா?

இனி பெரியார் பேசுவதை கேளுங்கள்......

“ஆதி திராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கைகையத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவு மில்லை. சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதி விட்டேன். ஏனெனில், ‘மோட்சம் அடைவதற்காக’ நான் ஆதி திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்ல வில்லை. அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றிப் பெறுவதும் சந்தேகம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதி திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல்கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5.30 மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றோம். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்து போகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால், எது எப்படி யானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றும் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில் பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோவித்துக் கெள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப் படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷமே தான். அதுவும் பயன் அளிக்கவில்லை.
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர்களையும், கிறிஸ்தவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவு படுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்த நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லா மானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாமியன் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு'

ஆம்.... இனியும் நடக்கக் கூடியது என்று அன்று பெரியார் சொன்னார். அது உண்மைதான் என்று இன்று யுவன் இஸ்லாத்தை ஏற்று அவரது வார்த்தையை மெய்ப்படுத்தியுள்ளார்.


Friday, August 08, 2014

உங்கள் தாய் மொழி தமிழா? உருதா?

சாரங்கன்!

//தாய் மொழி தமிழ்ன்னு ஏண்ணே குடுக்க மாட்டிக. உருதுன்னு எதுக்கண்ணே குடுக்குதீக//

தமிழக வரலாறு உங்களுக்கு எந்த அளவு தெரிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. தாய் மொழி உருது என்று எழுதும் முஸ்லிம்கள் யாரென்று நினைத்தீர்கள். வட நாட்டில் ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு பெரும்பான்மையான இந்துக்களால் சிறுபான்மை முஸ்லிம்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டார்கள். உயிர் பிழைக்க அங்கிருந்து குடும்பத்தோடு ஓடிய முஸ்லிம்கள் அமைதி தவழும் பல மாநிலங்களில் குடியேறினர். அதில் ஒரு பிரிவினர்தான் தமிழக உருது முஸ்லிம்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்கள் தாய் மொழி தமிழ் என்றுதான் குறிப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் தமிழ் மொழியைத்தான் சென்ஸஸில் குறிப்பிடுவோம். ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களில் 10 சதவீதத்துக்கு மேல் உருது முஸ்லிம்கள் உள்ளனர். தனது தாய் மொழியை அவர்கள் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அப்புறம் உங்களின் தாய் மொழி எதுங்கோ! சென்ஸஸில் தமிழ் என்று எழுதி கொடுத்து விட்டு உங்களின் தாய் மொழியான சமஸ்கிரத பற்று மட்டும் விட மாட்டேன் என்கிறதே. மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் என்ற பழமொழி ஒன்று சொல்வார்கள் அதுதான் ஞாபகம் வருகிறது.

சூத்திரர்களோடு நெருங்கி விடக் கூடாது என்பதற்காக உங்களின் தமிழ் மொழியையே மாற்றி 'நேக்கு, நோக்கு, அவாள், இவாள்' என்று இன்று வரை சிதைப்பது யார் என்பதும் இன்று பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருவரை யொருவர் வெட்டிக் கொண்டும் குடிசைகளை கொளுத்திக் கொண்டும் சாவதற்கு எந்த இனம் காரணம், எந்த வேதங்கள் காரணம் அதன் சூத்திரதாரி யார் என்பதெல்லாம் சாதாரண இந்துக்களுக்கும் தெரியும். இனியாவது இந்த இருபத்தி ஓராவது நூற்றாண்டிலேயாவது திருந்த முயற்சி செய்யுங்கள்.


Wednesday, July 30, 2014

பார்பனர்களை வந்தேறிகள் என்று வீரமணி கூறுவது ஏன்?

பார்பனர்களை வந்தேறிகள் என்று வீரமணி கூறுவது ஏன்?

ஹானஸ்ட் மேன்!

//அகண்ட பாரதத்தை பற்றி பேசும் அருமை நண்பா! பிராமணர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாகும்போது வேறு நாட்டிலா புதைக்கப் படுகிறார்கள்? அவனை வந்தேறி என்று கருதி உமது ஒரு மறுமொழியில் “வந்தேறிகள் யார்” என்று வீரமணியிடம் பொய் கேள் என்று எழுதிநீரே! அப்போது இந்த பரந்த மனப்பான்மை எங்கே போனது. அந்த வீரமணி சென்னையில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் “பிராமணர்களே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்”" என்று வீர முழக்கமிட்டபோது உங்களை போன்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தீர்களே!//

அதற்கு காரணம் பார்பனர்களே! இந்த மண்ணின் மைந்தர்களோடு திருமண உறவு வைத்துக் கொண்டு சந்ததிகளை உருவாக்கியிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. வீரமணியும், பெரியாரும் வேறு வேலைகளை பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள். அக்ரஹாரம் என்ற தனி குடியிருப்புகளை நாடு தோறும் உருவாக்கிக் கொண்டு உழைக்கும் மக்களை வீட்டுக்குள்ளும் ஏற்ற மாட்டீர்கள். உட்கார்ந்த இடத்தை தண்ணீர் விட்டு கழுவி தோஷத்தை நீக்குவீர்கள். நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே இந்த சம்பவம் நடந்துள்ளது. எனது வீட்டில் சுமதி என்ற இந்து பெண் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். தனது சொந்த வீட்டைப் போல் உரிமையோடு அனைத்து இடங்களுக்கும் வருவார். இந்த உரிமையை ஒரு பார்பனர் வீட்டில் அந்த பெண் பெற்று விட முடியுமா?

வரன் தேடும் பக்கங்களை பார்வையிடுங்கள். பிராமிண் ஐயர் என்று போட்டு வடமா என்ற உட்பிரிவையும் குறிக்கத் தயங்குவதில்லை. பிராமிண் ஐயர் என்று போட்டு விட்டு பிரஹாசரணம் என்ற உட்பிரிவையும் மறக்காமல் குறிப்பிடுகிறீர்கள். மற்ற சாதிகளும் அப்படித்தான். விஸ்வகர்மா, இசை வேளாளர், மறவர் என்று 1000க்கு மேற்பட்ட சாதிகளை முதலில் குறிப்பிடுகின்றனர். எனவே பார்பன எதிர்ப்பு தமிழகத்தில் ஒழிய ஒரே வழி அவர்கள் விரும்பி பிற்படுத்தப்பட்ட சாதியில் சம்பந்தம் வைத்து இந்த நாட்டு ரத்தத்தோடு கலக்க வேண்டும். அவ்வாறு செய்வார்களேயானால் 'வந்தேறிகள்' என்று வீரமணி சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

//நீங்கள் புகழாரம் சூட்டி புளகாங்கிதம் அடையும் அத்தனை அரசர்களும் இந்து பெண்களை மணந்து முஸ்லிம் புதல்வர்களை பெற்று விட்டு சென்றுவிட்டார்கள். அந்த பெண்கள் (நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல) வர்ணாசிரம் மற்றும் சாதிவெறிக்கு பயந்துதான் மதம் மாறினார்களா? (ராணி ஷாபாய் என்பவர் மரியம் உஸ்மாநியாக மாறியது போல) மதமாற்றத்திற்கு அதுதான் காரணம் என்று சதா சர்வகாலமும் இங்கே எழுதிகொண்டிருப்பது ஏன்?//

குறிப்பிட்ட ஒரு சிலர் மன்னனின் விருப்பத்திற்காக மேலும் மகாராணி ஆகி விடும் ஆசையில் மாறியிருக்கலாம். மேலும் அந்த மன்னர்கள் அந்த பெண்களை வைப்பாட்டிகளாக வைக்காமல் தனது மனைவியாக்கிக் கொண்டு சம உரிமையை கொடுத்தார்கள். ஆனால் எங்கள் ஊர் ராஜராஜனின் வைப்பாட்டிகள் தங்கியிருந்த ஒரு தெருவே தஞ்சையில் இன்றும் சான்று பகன்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை தலைமுறை கடந்தும் அந்த குடும்பங்களின் இழிநிலை போன பாடில்லை. இதுதான் வித்தியாசம்.

ஆனால் அடித்தட்டு மக்கள் மாறக் காரணம் வர்ணாசிரமக் கோட்பாடே. மிரட்டி மதம் மாறியிருந்தால் இந்துத்வ ஆட்சி நடக்கும் இந்த காலத்தில் ஏன் தாய் மதம் திரும்புவதில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

//இந்து பெண்களை மணந்து இந்து ஜனத்தொகையை குறைத்து முஸ்லிம் ஜனத்தொகையை அதிகரித்தது தவிர வேறென்ன நடந்துவிட்டது? நம் தாய் பிறப்பினால் ஒரு இந்து என்று கூட நினைக்காமல் இந்துக்களுக்கு ஜசியா வரியை விதிக்க வில்லையா?//

இந்த திருமணங்களால் சாதி வெறி இந்துக்களிடம் குறைய ஆரம்பித்தது. ஒளரங்கஜேப் சாதி ஒழிப்பிற்கு பல திட்டங்களையும் தீட்டினார். இந்து ரத்தம் தனது உடலில் கலந்ததனால் எழுந்த பாசமாகக் கூட இருக்கலாம்.

//ஜசியா வரி//

இதனை எத்தனை முறை விளக்குவது. அதைவிட அதிகமாக ஜகாத் என்ற ஒரு பெரும் தொகையை முஸ்லிம்கள் அரசு கசானாவுக்கு மாதா மாதம் அனுப்பி வந்தனரே. முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தி விட்டு இந்துக்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருந்தால் அது நியாயமாகுமா?

//கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதே ஆனால் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதா? அப்படியானால் யார் அராஜகவாதிகள்?//

பழனி பாபா கொல்லப்படவில்லையா? நமது தேசத் தந்தை காந்தியை கொன்றது யார்? எதற்காக இந்த கொலை?

//இங்கே கொல்லப்படும் இந்து ஒரு காலத்தில் உமது பாட்டன் பாட்டியின் பேரனாக இருக்கலாம். நபி அவர்களுக்காக அவனை கொல்லும் முஸ்லிம்களுக்கு நபி அவர்கள் என்ன உறவு? கொள்ளு தாத்தாவா? எள்ளு தாத்தாவா?//

சட்டத்தை மதிக்காமல் ஒரு இந்துவை ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு முஸ்லிமை ஒரு இந்துவோ கொல்வதை நான் பார்த்தால் அதனை முதலில் தடுப்பேன். என்னால் தடுக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் காவல் துறையில் புகார் செய்து நீதி மன்றத்தில் அந்த கொலையாளிகளை காட்டியும் கொடுப்பேன். இஸ்லாம் காரணமின்றி அப்பாவிகளை கொல்வதை வன்மையாக கண்டிக்கிறது.


Sunday, July 06, 2014

அய்யர் நடத்தும் அக்சயா ரகசியங்கள் அம்பலம்



2010ஆம் ஆண்டு யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் சிஎன்என் ஹீரோ (CNN Heroes) போட்டிக்கு நமது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவளியுங்கள் என்று விளம்பரம் வந்தது. உலக அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றாலும் என்ன அதிசயம் என்றும் கேட்காமல் ஓட்டுக் குத்தும் நம்மவர்கள் இந்தியரை ஆதரிப்போம் என்று கிளம்பினார்கள். அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன். இளைஞர். அய்ந்து நட்சத்திர விடுதிகளில் சமையலராகப் பணியாற்றியவர். ஆதரவற்றோர் பலர் உண்ண உணவின்றி தவிப்பதையும், ஒரு பெரியவர் தன் கழிவையே உண்ண முயற்சித்ததையும் கண்டு இந்தப் பணியைத் தொடங்கினேன். தேடித் தேடி உணவற்றோருக்கு உணவிடுவதைத் தொண்டாகச் செய்கிறோம் என்று வீடியோவில் பேசினார். ஆதரவற்றோர் காலில் விழுந்து கும்பிடுவதையும் அவர்களை அணைத்து குளிப்பாட்டுவது முதல் சேவை செய்வதையும் வீடியோவில் காட்டியதும் சிந்திய கண்ணீரோடு ஓட்டுக்குத்தி அவரை சிஎன்என் ஹீரோவாக்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள். இப்போது அவரது தொண்டு நிறுவனமான அக்சயா, அமெரிக்கா வரை கிளை பரப்பியுள்ளது. அந்த நாராயணன் கிருஷ்ணன் இப்போது கிருஷ்ணன் அய்யர்.

அன்று சிஎன்என் ஹீரோ விருது வாங்கி உலகப் புகழ் பெற்ற அக்சயா நிறுவனமும், கிருஷ்ண அய்யரும் இன்று வில்லன் படத்தின் கிட்னி திருடும் வில்லன் போல குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் அக்சயா தொண்டு நிறுவனத்தின் சுற்றுச் சுவற்றில் நிர்வாணத்துடன் ஏறிக் குதித்து, வெளியில் வேலை செய்த பெண்களிடம், தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டு ஓடிவந்துள்ளார் ஆயிஷா என்ற இளம்பெண். உடுத்த உடை கொடுத்து, சாப்பாடு கொடுத்து கிராம நல அலுவலரின் உதவியுடன் அருகில் வேலை செய்த கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அக்சயா ஆசிரமத்தில் சேவையோ தொண்டோ நடைபெறவில்லை. அனாதைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறார்கள். சுயமாகச் சிந்திக்க விடாமல் தினமும் மூன்று முறை போதை ஊசி போடுகிறார்கள். பாதி சாமத்தில் பெண்கள் அலறும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் அடுத்த அறையில் ஆபாசப் படம் வீடியோ எடுப்பதையோ நிர்வாணமா ஆடவைத்துப் படம் எடுப்பதையோ பார்க்கலாம். ஆடைகளைக் கலைய மறுக்கும் பெண்களை அடிப்பார்கள். வாரம் ஒருமுறை யாராவது வெளிநாட்டுக்காரர்களைக் கூட்டிவந்து எங்களை வரிசையா நிக்க வச்சுப் பார்ப்பார்கள். அடுத்த 2 நாளில் அவங்க காட்டுனவங்க பிணமாகிடுவாங்க. சாகிறவங்க எல்லோரும் நைட்லதான் சாவாங்க. அதுவும் மயக்க மருந்துகூட கொடுக்காமல் உறுப்புகளை அறுத்தெடுக்கும் கொலை. ராத்திரியோட ராத்திரியா எரிச்சுடுவாங்க அல்லது புதைச்சிடுவாங்க. ஜூன் 4ஆம் தேதி வந்த வெள்ளைக்காரன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனதிலிருந்து எனக்குப் பயம் வந்திடுச்சு. கூட இருந்த பொண்ணுங்க ஆயிஷா, உனக்கு அய்ந்தாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லி அழுதாங்க. குளிக்கிறதாச் சொல்லிட்டு யூனிபார்மைக் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்து இவர்களிடம் அடைக்கலம் புகுந்தேன் என்று கூறியுள்ளார்.

ஆயிஷா சொன்ன தகவல்கள் குறித்து, கொடிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, அக்சயா ஆசிரமத்தில் நிறைய தப்புகள் நடப்பது உண்மை. மதுரை பெரியாஸ்பத்திரியில்கூட இவ்வளவு பேர் சாவதில்லை. மாதத்துக்கு 20, 25 பிணங்களை நாகமலை சுடுகாட்டுல எரிக்கவோ புதைக்கவோ செய்றாங்க என்று கூறியுள்ளார்.

மேலும், ஆயிஷாவுக்கு ஆடை கொடுத்து உதவிய பெண் கூறும்போது, அந்த ஆசிரமத்தில பொண்ணுங்க அலறுகிற சத்தம் நல்லா கேட்கும். நாம யாரும் அதுக்குள்ள போக முடியாது. இப்பக்கூட போலீசு ஆபீசர்களைக்கூட உள்ள விடமாட்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே என்று கூறியுள்ளனர்.

பழைய வி.ஏ.ஓ.வும் உதவியாளரும்கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50_க்கும் அதிகமான சாவுகள் நடந்திருக்கின்றன என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியம் கூறியுள்ளார்.

உடற்கூறு பரிசோதனை இன்றி, ஊர் அலுவலருக்குத் தகவலும் இன்றி எரிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும், உடலுறுப்புகள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரித்து அறிக்கை தரவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஊடகங்கள் உருவாக்கும் ஹீரோக்களின் மீதான பிம்பமும் நிஜத்திலும் உடையும் காலமிது! கிருஷ்ணன் அய்யர் மீது உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து கோரமுகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

http://www.unmaionline.com/new/2090-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.html

Saturday, May 17, 2014

மோடி அலை என்பது உண்மையா?



இந்தியா முழுவதும் உள்ள நாட்டு மக்கள் அளித்த ஓட்டில் வெறும் 31 சதவிகத ஓட்டுக்கள் தான் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்துள்ளது. கிட்ட தட்ட 70 சதவித மக்கள் மோடியின் ஆட்சியை விரும்பவில்லை. மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மோடி அலை உண்மையாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகத ஓட்டுக்களையாவது மோடியின் பி.ஜே.பி பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டு தேர்தல் முறையில் உள்ள பலவீனங்களே இது போன்ற நபர்கள் பிரதமராகும் வாய்ப்பை தந்து விடுகிறது. விகிதாச்சார முறைப்படி தேர்தலை திருத்தி அமைத்தால்தான் சிறுபான்மை இன மக்கள், பிறபடுத்தப்ட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உண்மையான பிரதிநிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். வெறும் 30 சதவீத மக்களின் ஆதரவை பெற்று இன்று இந்தியாவையே நான் புரட்டிப் போட்டு விடுகிறேன் என்ற கூப்பாட்டோடு மோடி புறப்பட்டு விட்டார்.

எண்ணிக்கையே தர்மம்
என்று ஆகிவிட்ட
குருசேத்திரத்தில்
வெற்றிகள் எல்லாம்
கௌரவர்களுக்கே போகின்றன....

என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள்தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது.

நேற்று ஒரு டி.வி விவாதத்தில் அருண் ஷோரி ( முந்தைய பா.ஜ.க ஆட்சியில் பொதுத்த் துறை நிறுவனங்களைத் தனியார்களுக்கு விற்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்), பதவி ஏற்கவுள்ள பா.ஜ.க அரசு எல்லா அரசியல் முடிவுகளுக்கும் பாராளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிற நிலையை ஒழித்து வெறும் நிர்வாக ஆணையின் அடிப்படையிலேயே (Executive Order) ஆணைகளை இட்டு நடைமுறைப் படுத்த வேண்டும் எனச் சொன்னார். நிர்வாகத்தின் அதிகாரம் சர்வாதிகாரம் என்கிற நிலையை எட்டாமல் தடுப்பதற்கு ஒரு ஜனநாயக அமைப்பில் உள்ள இரு நிறுவனங்கள்தான் பாராளுமன்றமும் நீதிமன்றமும். பாராளுமன்றத்தின் இந்த அதிகாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறார் அருண்ஷோரி. வருங்காலங்களில் இன்னும் எத்தனை தமாஷாக்கள் அரங்கேறப் போகின்றன என்பதனையும் பார்ப்போம்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்துத்வா இனி இந்திய மக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம். இதில் ஏன் இவர்கள் இந்த அளவு உறுதியாக உள்ளார்கள்?

இன்று இஸ்லாமிய வாழ்வு முறை இந்த இந்தியாவில் எந்த தடையுமின்றி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அழகிய வாழ்வு முறையை பார்த்து பல இந்துக்கள் தங்கள் மதத்தை துறந்து இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். இன்னும் இருபது ஆண்டுகளில் பார்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடும் நிலைமையை நோக்கி இந்து மதம் சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் இஸ்லாத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்துகளான வணக்க வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

எப்படி பவுத்த மதத்தையும், சமண மதத்தையும், அதன் சட்டங்களை எல்லாம் பார்பன மயமாக்கி இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆக்கினார்களோ அது போன்ற ஒரு சூழலை இஸ்லாத்திலும் கொண்டு வர எத்தனிக்கிறார்கள். அல்லாஹ்வையும் வணங்கிக் கொள், அருகில் ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொள். குர்ஆனையும் படி: அதோடு ராமாயணத்தையும் படி: அதன் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு மதிப்பு கொடு. திருமண ஒப்பந்தம், சொத்து பாகப்பிரிவினை, போன்ற அனைத்திலும் பார்பனிய சட்டங்களை முஸ்லிம்களாகிய நீ பின்பற்று: என்று இதை நோக்கி தற்போது செல்ல ஆரம்பிப்பார்கள்.

இதற்கு இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே முதலில் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் இந்துக்களில் பலர் இறந்த உடலை எரிக்கிறார்கள்: சிலர் புதைக்கிறார்கள்: பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சாதி வழக்கத்திற்கு ஒப்ப பல கடவுள்களை வணங்குகின்றனர். பார்பனர்கள் ராமன், கிருஷ்ணன், போன்ற கடவுள்களை மட்டுமே வணங்குவர். சுடலை மாடன், போன்ற கிராமிய கடவுள்களை பார்பனர்கள் கடவுளாக மதிப்பதில்லை. தங்கள் கோவில்களில் அதற்கு இடமும் தர மாட்டார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோவில்களில் ராமனும், கிருஷ்ணனும் தெய்வங்களாக வீற்றிருக்கும். பொது சிவில் சட்டத்தில் அரசு எதனை கடவுளாக்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி திருமணம் செய்ய வெண்டும் என்பது வரை சட்டங்களாக்கி அதனை பொதுவாக்கி விடுவர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே! கிராமிய கோவில்களில் ஆடு, கோழி, மாடு போன்றவற்றை பொது சிவில் சட்டத்தில் பலி கொடுக்க முடியாது. பார்பனர்களுக்கு காளை மாடு, பசு மாடு போன்றவை தெய்வங்கள். எனவே அதனை பலி கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படும்.

இதனை சட்டமாக்க ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி தயங்குவார். ஆனால் ஆர்எஸ்எஸ் இதனை சட்டமாக்கு என்று நிர்பந்திக்கும். சட்டமாக்காது விட்டால் ஆர்எஸ்எஸ் மோடியை உயிரோடு விட்டு வைக்காது என்பதும் தெரியும் . மஹாத்மா காந்தியையே கொலை செய்தவர்களுக்கு மோடி எம்மாத்திரம். எனவே பொது சிவில் சட்டம் அமுலாக்கப்பட்டால் நாட்டில் பல இடங்களில் கலவரம் வெடிக்கும். ஒருகால் அவசர நிலை கூட கொண்டு வரப்படலாம். சட்டம் ஒழுங்கை காரணமாக்கி மோடி அரசு கலைக்கவும் படலாம். இனி வருங்கால இந்தியாவை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கைகொள்ளப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

“இறைவா!! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

குர்ஆன்:3:26

குர்ஆனின் இந்த வசனத்தின் படி மோடியை இழிவுபடுத்துவதற்காகவே இத்தனை மெஜாரிட்டியோடு ஆட்சியை வல்ல இறைவன் கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த இழிவை இன்னும் ஒரு வருடத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!

இது சம்பந்தமாக சம்சுதீன் காசிமியின் உரையும் மிக அழகாக உள்ளது அதனையும் பார்த்து தெளிவுறுங்கள். முஸ்லிம்கள் எந்த அச்சமும் படாமல் நமது பிரார்த்தனையை ஐந்து நேரமும் நமது தொழுகையில் நமது இறைவனின் முன்னால் வைப்போமாக!

Wednesday, May 14, 2014

சஞ்சய் திவேதி என்ற பார்பனர் - அஹமத் பண்டிட்டாக இஸ்லாத்தை ஏற்றார்!





http://www.youtube.com/watch?v=3rJZWrX-fz

அகில இந்திய பார்பன சங்கத்தின் முன்னால் தலைவர். அகில இந்திய பிர்லா குழும கோவில்களின் கூட்டமைப்பின் தலைமை பூசாரி. 15 வயதில் காசிக்கு சென்று இந்து மத வேதங்கள் அனைத்தையும் படித்து தெளிவு பெற்று சான்றிதழும் பெற்றவர். உத்தராஞ்சல் மாநிலத்தின் முன்னால் முதல்வர் நாராயண தத் திவாரியின் பேரன். இவரது முன்னாள் பெயர் ஆசார்ய சஞ்சய் திவேதி. இவ்வளவு பெருமைக்குரிய இந்து மதத்தின் உயர் குலத்தில் பிறந்த இவர் இன்று தனது பெயரை அஹமத் பண்டிட்டாக மாற்றிக் கொண்டு இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சொந்த வேலை காரணமாக துபாய் வந்த போது கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் பட்கல் சமூகத்தினரின் கூட்டமைப்பான bhatkallys.com ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அஹமத் பண்டிட்டை பேச அழைத்தனர். அந்த நிகழ்ச்சியில் அஹமத் பண்டிட் பேசியதை இனி பார்ப்போம்:

'இந்து மத வேதங்களை நான் காசியில் முழுவதும் படித்து சான்றிதழ் பெற அழைக்கப்பட்டபோது எனக்கும் எனது குழுமத்துக்கும் சொல்லப்பட்ட அறிவுரை 'கற்ற இந்த வேதங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். பொது மக்களுக்கு சொல்லி விட வேண்டாம்' என்பதுதான். எங்களிடம் இது சம்பந்தமாக சத்தியபிரமாணமும் வாங்கிக் கொண்டார்கள். அப்போ நாங்கள் மக்களிடம் எதை போதிப்பது என்று கேட்டோம். அதற்கு அவர்கள் 'ராமாயணம், மகாபாரதம் இருக்கிறதே! அதை சொல்லுங்கள். பல நாட்களுக்கு அதை வைத்து கதாகாலட்சேபம் பண்ணலாம்' என்ற பதில் வந்தது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்து மத வேதங்கள் அனைத்துமே ஓரிறைக் கொள்கையையே போதிக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் வசதிக்காக இந்த உண்மைகளை மக்களிடமிருந்து காலாகாலமாக மறைத்து வருகின்றனர். வேதங்களை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்காததன் காரணம் ஏன் என்பது உங்களுக்கு இப்போது விளங்கியிருக்கும்.'

'வேதங்கள் சொன்ன இந்த ஓரிறைக் கொள்கையை இந்து மக்களின் மனத்திலிருந்து இன்று முழுவதுமாக எடுத்து விட்டனர். இந்துவாக பிறந்த எனக்கு இது மிகவும் வருத்தத்தை தந்தது. இந்து மத வேதங்களில் பல இடங்களில் முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. முகமது நபி தோன்றும் போது அவரை பின்பற்றுங்கள் என்றும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 60 சதத்துக்கும் மேலான வேத வசனங்கள் ஏக தெய்வ கொள்கையையே போதிக்கின்றன. ஆனால் இந்துக்களுக்கு 33 கோடி தேவர்களையும் கடவுளாக்கி அவர்களை பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தி விட்டனர் கற்றறிந்த பண்டிதர்கள். படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற மூன்றையும் ஒருங்கே செயல்படுத்தும் ஈஸ்வரனை வணங்கவே இந்து மத வேதங்கள் போதிக்கின்றன.

பெரும்பாலான இந்துக்கள் தங்களின் வேத நூல் என்ன கட்டளையிடுகிறது என்பதை விளங்காதவர்களாகவே உள்ளனர். பலராலும் திட்டமிட்டு வேதங்களின் உண்மை வசனங்கள் இந்துக்களை சென்றடையாமல் பார்த்துக் கொண்டதே அதற்கான முக்கிய காரணம். ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை போன்ற புராணங்கள் முன்னுக்கு கொண்டு வரப்பட்டு இறை அருளிய வேத வசனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இந்த நிலை இன்று வரை தொடர்கிறது. இன்று சிலரிடம் இருக்கும் வேதங்கள் கூட 23 லிருந்து 30 அத்தியாயாங்கள் வரையே. 678 அத்தியாயங்கள் மக்களுக்கு சொல்லாமலேயே திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.

குர்ஆன், பைபிள், இந்து மத வேதங்கள் என்று இவற்றை எல்லாம் ஆய்வு செய்து அதன் உண்மையான அர்த்தங்களை அனைத்து மதத்தவரும் விளங்கி தங்களின் வாழ்வை சீர்படுத்திக் கொள்வார்களாக!'

Sunday, May 11, 2014

மோடி பார்பனராக சாதி மாறி விட்டாராமே! உண்மையா?



"With the authority vested in me I hereby appoint Namo as a Brahmin since he has Brahminical gunas," Swamy tweeted from his handle @Swamy39, opening the floodgates of both scorn and back-slapping from fans and dissenters online.

'பார்பனர்களுக்கு உரிய அனைத்து குண நலன்களும் மோடிக்கு இருப்பதால் அவரை இன்று முதல் பார்பனராக அங்கீகரிக்கிறேன்' - சுப்ரமணிய சுவாமி.

மோடி தனது இருப்பை இருத்திக் கொள்ள ஹரேன் பாண்டியாவை போட்டு தள்ளியது: கோத்ரா ரயில் விபத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு 2000 அப்பாவி முஸ்லிம்களை கொன்றது: தனது பெயர் மீடியாவில் எப்போதும் இருக்க தன்னை கொல்ல வந்ததாக சொல்லி இள மங்கை இர்ஷத் ஜஹானை என்கவுண்டர் பண்ணியது: தனக்கு போட்டியான அத்வானியை மிரட்டி அவரை அடி பணிய வைத்தது: தனக்கு எதிராக கருத்து சொன்ன சஞ்சீவ் பட் என்ற ஐபிஎஸ் அதிகாரியை பைத்தியம் என்று முத்திரை குத்தி வீட்டுக்கு அனுப்பியது: குஜராத் ஒளிர்கிறது என்று வண்டி வண்டியாக பொய்களை அரங்கேற்றி பிறகு அம்பலப்பட்டுப் போனது: ஹேமந்த் கர்கரேயை போட்டு தள்ள பாகிஸ்தானிலிருந்து கூலியாட்களை கொண்டு வந்து அதற்கு குஜராத் கடற்கரையை சாதகமாக்கி தனது காரியத்தை சாதித்தது: இப்படி பல குண நலன்களை கொண்டவர் மோடி. சில நேரங்களில் தன்னையும் அறியாமல் சுவாமி உண்மையை பேசி விடுவார். அதுதான் இப்போதும் நடந்துள்ளது.

முக நூலில் இது சம்பந்தமாக ஒரு உரையாடலை பார்த்தேன். ரசிக்கும்படி இருந்தது. அதனை காப்பி பேஸ்ட் செய்கிறேன்:

கேள்வி :- உங்களின் மதிப்பிற்குரிய டாக்டர். சுப்ரமணியன் சுவாமி, திரு நரேந்திர மோடி அவர்களை பார்ப்பனராக அங்கீகரித்திருக்கின்றாரே? அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன கிளிமூக்கு அரக்கனே?

பதில் :- சுவாமியின், மோடிக்கான பார்ப்பன பட்டாபிஷேகம் இயல்பான ஒன்று. பார்ப்பனர்கள் எப்பொழுதும் அதிகார மையத்திலேயே காலங்காலமாய் இருப்பதற்கான முழுமுதற் காரணம் இதுதான். மேற்கத்திய நாடுகள் நிறைவேற்றத் தடுமாறிக் கொண்டிருக்கும் Integration Policy யை ஆயிராமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சிறப்பாக செயல்படுத்தத் தொடங்கியவர்கள். தாங்கள் கொண்டு வந்த இந்திரன் முதலான கடவுள்களை தூரத் தூக்கிவைத்துவிட்டு, புகுந்த இடத்தின் தெய்வங்களை தம் தெய்வமாக்கி , சொந்தக் கடவுள்களை இரண்டாம் பட்சமாக்கி விட்டுக்கொடுத்துவிட்டு அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கடவுளுக்காக கலவரங்கள் நடைபெறும் நாகரிக உலகச்சூழலை நினைவில் கொண்டு மேற்சொன்னதைப் பாருங்கள். தமக்கு வேண்டும் என்றால், யாராயிருந்தாலும், தம்மவர் ஆக்கிக்கொள்வர். காகபட்டர் , சித்பவன் பார்ப்பனர்களைக் காப்பாற்ற, சிவாஜிக்கு செய்துவைத்த தன்னிச்சையான ஷத்திரிய அபிஷேகம் இவ்வகையே.

பார் போற்றும் இராமனுசர் கூட, சைவ அடியாட்களால், வைணவ அடி ஆட்களின் எண்ணிக்கைக் குறைந்தபொழுது, 'எல்லோரையும்' வைணவர் ஆக்கினார். புத்தமும் சமணமும் வேதமதத்தை விழுங்கியபொழுது, அதே புத்த சமணக்கொள்கைகளை வைத்து வேதத்தை மீட்டு எடுத்தவர்கள். அவ்வளவு ஏன், சமகாலத்தில், காங்கிரஸ் தனது எதிரியானவுடன் , தனக்குக் குடியரசுத்தலைவர் பதவிதராத கோபத்தில், எப்படியும் திமுக அதிகாரத்தை அடைந்துவிடும் என்று உறுதியான நிலையில், திமுகவின் தோளில் ஏறிக்கொண்டார் ராஜாஜி. ஆனால் அண்ணா, சிவாஜியைப் போன்றவர், கமுக்கமாய் உப்புசப்பில்லாத காகபட்டர் ராஜாஜியை எதிர்கால நலன் கருதி வண்டியில் ஏற்றிக்கொண்டார். 96 ஆம் ஆண்டு, சர்வசாதாரணமாக வென்றிருக்கக் கூடிய, திமுகவின் தோளில் சோ. இராமசாமி ஏறிக்கொண்டதும் இவ்வகைதான்.

சுவாமியிடம் பிடித்ததே, இலைமறை காய்மறையாய் இருக்கும் பஜகோவிந்த விசயங்களை அப்பட்டமாக செய்து, சமயங்களில் சுணங்கிப்போய் இருக்கும் திராவிடக் கருத்தியலை பீனிக்சாய் எழுப்பிவிடுவதுதான். ஒரு சூத்திரனாய் சுவாமியை கிண்டல் செய்வதைவிட , நாம் கவனிக்க வேண்டியது, யாரால் என்பதல்ல, எதற்காக என்பதுதான் நோக்கம், என்று கிடைத்த ஜீப்பில் ஏறிக்கொண்டு செய்து முடிக்கவேண்டிய காரியங்களை எப்படி கண்ணும் கருத்துமாய் அவர் செய்கிறார் என்பதை

"இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பதைத்தான் நான் இவரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றேன்.

அரசியலிலும் அகாடெமியாவிலும் ஏனைய எல்லாவகையிலும் தோற்றுப்போன சுவாமி, தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்திருக்கும் கடைசி ஆயுதமே இந்த பார்ப்பன பட்டாபிஷேகம். பார்க்கலாம், சுவாமியுடன் நீண்ட நாள் நண்பர்களாக இருந்தவர்கள் மிகக்குறைவு. மோடி எத்தனை நாளைக்கு என்று? கடைசியாக சில சந்தேகங்கள், சுவாமி ஒரு தமிழ்ப்பார்ப்பனர், நரேந்திராவிற்கு என்ன பார்ப்பனப் பின்னொட்டு கொடுப்பார்? ஐயர் , ஐயங்கார், குருக்கள் ? அவரின் கூட்டணியில் இருக்கும் பாமகவினர் ஏற்கனவே ஷத்திரியர்கள் ஆகிவிட்டதால், வைகோவும் பார்ப்பனர் ஆவாரா என்பதை அறியவும் ஆவலாக இருக்கின்றேன்.

--கிளிமூக்கு அரக்கன்

Tuesday, May 06, 2014

பார்பனரான ஆனந்தன் இஸ்லாமியராக மாறிய வரலாறு!



'நான் ஒரு பார்பன சாதியில் பிறந்த வைதீக குடும்பத்தை சார்ந்த ஒரு இந்து. எனது தந்தை அரசு வேலையில் உள்ளவர். ஒரு கிறித்தவரின் உந்துதலால் எனக்கு குர்ஆன் கிடைத்தது. அந்த குர்ஆனை படிக்க படிக்க எனக்குள் இருந்த பல தேடல்களுக்கான விடை கிடைத்தது. உடன் முஸ்லிமாக மாறினேன். வீட்டுக்கு சென்று நான் முஸ்லிமாக மாறிய செய்தியை சொன்னேன். எனது தாயார் திட்டினார். எனது தந்தை என்னை கொல்ல வந்தார். எனது சொந்தங்கள் எல்லாம் என்னை தாறுமாறாக அடித்தனர். முடிவில் எனது தந்தை 'இப்படி பண்ணிட்டியேடா' என்று தனது தலையிலேயே தனது கைகளால் அடித்துக் கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். இன்ஜினியரான எனது சான்றிதழ்களை எனது சொந்தங்கள் தீயிட்டு கொளுத்தி விட்டனர். வெறும் 130 ரூபாயோடு வீட்டை விட்டு வெளியேறி கோயம்பத்தூரில் உடலால் உழைத்து எனது வருமானத்தை பெருக்கிக் கொண்டேன். எவ்வளவோ கஷ்டங்களை பல ஆண்டுகளாக அனுபவித்தேன். அவ்வளவு கஷ்டத்திலும் இஸ்லாத்தின் மீதான எனது ஈடுபாடு இன்னும் இறுக்கமானது. தற்போது எனது முயற்சியால் 27 பேருக்கு உண்மை இஸ்லாத்தை விளக்கி அவர்களை முஸ்லிம்களாக மாற்றியிருக்கிறேன். எனது பள்ளியிலும் கல்லூரியிலும் எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் இருந்தும் ஒருவரும் எனக்கு இஸ்லாத்தை போதிக்கவில்லை. அப்படி அவர்கள் அன்றே போதித்திருந்தால் 27 பேர் என்ற இந்த எண்ணிக்கை 200 ஐயும் தாண்டியிருக்கும்.'



Saturday, December 14, 2013

பாரதியின் ஆரியப் பற்றும் சாதி வெறியும்!



தமிழ் மொழியின் கவிதைகள் என்று வந்தால் அங்கு பாரதிக்கு தனி இடமே உண்டு. எளியவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாரதியின் ஆக்கங்கள் இருக்கும். வார்த்தைகள் இவரிடம் துள்ளி விளையாடும். ஆனால் இவ்வளவு அழகிய கவிதை ஆற்றல் உள்ளவரிடம் ஆங்காங்கே ஆரியர் மேலானவர் மற்றவர் கீழானவர் என்ற பார்பன பொது புத்தியும் ஆங்காங்கே தலை காட்டத் தயங்குவதில்லை. இனி ஒரு சில கவிதைகளை பார்ப்போம்.

மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1


மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2

இவ்வளவு அழகாக தாய் நாட்டின் பெருமைகளை சொல்லி வரும்போது கூடவே ஆரிய மேலாண்மையும் தலைகாட்டுகிறது. அதையும் பார்ப்போம்.


இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்

ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தூக்கிப் பிடித்த பாரதி பாடுகிறார்

நாலு குலங்கள் அமைத்தான் – அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

இவ்வவளவு நச்சுக் கருத்துக்களையும் சொல்லி விட்டு சாதிகள் இல்லை என்று உடனே பிளேட்டை மாற்றிப் போடுகிறார் பாரதி!

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

என்று தனது இனத்தை தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை.

இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும் கஞ்சாவை உள்ளே அடிக்கடி தள்ளிக் கொள்வார் என்றும் படித்திருக்கிறேன். போதை தலைக்கேறாத போது ஒரு பாரதியாகவும், போதை தலைக்கேறியவுடன் ஆரியப் பித்து பிடித்து அலைந்த ஒரு கவியாகவும்தான் நான் பாரதியை பார்க்கிறேன்.

இதிலிருந்து கவிஞர்களின் கருத்துக்களையும், கவி புனையும் திறன்களையும் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவாகிறது. எனவே தான் வைரமுத்து கூட 'கவிதைக்கு பொய்யழகு' என்று பாடினாரோ!

Thursday, December 12, 2013

தமிழர்கள் அறிவியல் அறிவு அற்றவர்கள் - தி ஹிந்து

அறிவியல் பார்வை அறவே இல்லாமல், தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் வன்மம் மட்டுமே மேலிட எழுதும் கட்டுரையாளர்களின் களமாக தி இந்து தமிழ் நாளிதழ் திட்டமிட்டே செயல்படுகிறது. ஏற்கெனவே எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் வரி வடிவத்திற்கு எதிரான கருத்து இவ்விதழில் வெளிப்பட்டது. இப்போது பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘அறிவியலும் தொழில் நுட்பமும் ஒன்றா” என்ற தலைப்பிலான கட்டுரை 28.11.2013 ஏட்டில் வந்துள்ளது.

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் வந்துள்ள ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்ற பாடமே பி.ஏ.கிருஷ்ணனின் வன்மப் பாய்ச்சலுக்குக் காரணமாகும்.

‘தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது…. அறிவியலும், தொழில்நுட்பமும் ஒன்றல்ல…………

தமிழர்கள் அணைகள் கட்டியிருக்கிறார்கள்.
கோயில்கள் கட்டியிருக்கிறார்கள்.
சிற்பங்கள் செதுக்கியிருக்கிறார்கள்.
உலகம் வியக்கும் செப்பு சிலைகள் செய்திருக்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் செய்வதற்கு அறிவியல் ஞானம் தேவையில்லை. தொழில் நுட்பம் போதுமானது” என்று தனது மோதாவித்தனத்தை காட்டுவதாகக் கருதிக்கொண்டு அறியாமையையும், இனப்பகைக் கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் வேறுபாடு இருப்பதை இப்பாடம் மறைத்துக் குழப்பி விட்டதாக கிருஷ்ணன் மிகவும் கவலைப்படுகிறார். இப்பாடத்தின் தலைப்பே ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்பது தான். அடிப்படை அறிவியலாக (Basic Science) இருந்தாலும், தொழில் நுட்பமாக (Technology) இருந்தாலும் இவ்விரண்டு துறை அறிவிற்கும் அறிவியல் பார்வை – அறிவியல் சிந்தனை அடிப்படையானது.

ஏதோ அடிப்படை அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையில் மிக உயர்ந்த சீனச் சுவர் இருப்பதுப் போல் கிருஷ்ணன் பேசுகிறார். செயல்படும் அறிவியலே (Applied Science) தொழில் நுட்பம் எனப்படும். இந்த அரிச்சுவடிக் கூட அறியாதவர் போல் கிருஷ்ணன் எழுதுகிறார்.

தொழில் நுட்ப அறிவு என்பது முயன்று, தவறி, கற்றல் என்ற வழியில் (ட்டிரையல் அண்டு எர்ரர்) வளர்வதாகவும் அடிப்படை அறிவியல் அறிவானது கோட்பாடு (தியரி) சோதனை (எக்ஸ்பெரிமண்ட்) கண்டறியதல் (ஃபைண்டிங்ஸ்) என்ற வழியில் நிலைப்பெறுவதாகவும், கிருஷ்ணன் கூறுகிறார்.

அறிவியல் அறிவிற்கும் முயன்று – தவறி- கற்றல் என்ற வழிமுறையே செயல்படுகிறது. தான் காணுகிற அல்லது உணருகிற செய்திகளை தொகுத்தும், வகுத்தும் ஆய்ந்து ஓர் அறிவியலாளர் (விஞ்ஞானி) முதலில் ஒர் கருதுகோளைத்தான் (Hypothesis) வைக்கிறார். இது ஆய்வில் மெய்ப்பிக்கப்படலாம்; அல்லது தோற்றுப் போகலாம்.

இது அடிப்படையில் சரியானதாக இருந்து செழுமைப்படவும்ச் செய்யலாம். அதன் பிறகே அது கோட்பாடு (Thesis அல்லது Therory) ஆகிறது. இது ஒருவகை முயன்று – தவறி – கற்றல் வழிமுறைதான். இந்த அறிவு வளர்முறை குறித்த அரிச்சுவடி தெரியாதவராக கிருஷ்ணன் இருக்க முடியாது. ஆனால் தனது வாதத்தை நிலைநாட்டுவதற்காக ஒரு குழப்பமான வரையறையை முன்வைத்து அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு ‘அறிவியல் ஞானம் இல்லை” என்று நிலைநாட்ட முயல்கிறார்.

ஆனால் இவரே இக்கட்டுரையில் ‘அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்று இருக்கும் பிணைப்பு பிரிக்கமுடியாதது. அறிவியல் இல்லையென்றால் தொழில் நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் இல்லையென்றால் அறிவியலின் பல கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறுகிறார். அதாவது அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்றைய காலத்தில் தான் பிரிக்க முடியாத பிணைப்பு வந்துவிட்டதாக வலியுறுத்துகிறார். எப்போதுமே அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பிரிக்க முடியாத பின்னிப்பிணைந்த உறவு இருந்து வருவதை தன் வசதிக்காக வேண்டுமென்றே மறைக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வானுயர்ந்த தஞ்சை பெரியக்கோயில் கோபுரம் கூட இதுபோல் பல கோபுரங்கள் கட்ட முனைந்து அவை இடிந்து போன பிறகே அறிவுப்பெற்று ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக நிலைக்கவைக்க முடிந்தது என்று கூறவருகிறார். இதற்கு வரலாற்றில் ஆதாரம் ஒன்றையாவது காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சிக் கூட அவரிடம் இல்லை. வன்மம் கண்ணை மறைக்க நெஞ்சாரப் பொய் வாதம் செய்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, அவர் எடுத்துக்காட்டிய பத்தாம் வகுப்புப் பாடத்திலேயே கூட தமிழர்களின் அடிப்படை அறிவியல் அறிவு (Basic Science Knowlege) நிறையவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வசதியாக மறைத்து விட்டு வானூர்தி குறித்த தொழில்நுட்பச் செய்தியை அறிவியல் வகைப்பட்டதுப் போல கூறிவிட்டார்கள் என ஏளனம் செய்கிறார்.

உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். அதற்கும் மத நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் வழியாக ‘உலகம் உருண்டை” என்ற உண்மையை பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு திருவாசகம் சான்று கூறுகிறது.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”
என்ற திருவாசக வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது.

கடவுளை வாழ்த்திப் பாடுகிற ஒரு பாடலில் போகிறப் போக்கில் மிக அரிய அறிவியல் செய்திகள் சொல்லிச் செல்லப்படுகின்றன. ஒன்று, உலகம் அல்லது இந்த பூமி உருண்டை வடிவமானது, தட்டையானது அல்ல என்ற அறிவியல் செய்தி. இரண்டாவது, ‘நூற்றொருக் கோடி’ வான் பொருள்கள் இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில் உள்ளன என்ற அறிவியல் செய்தி. மூன்றாவது, இவை இருக்கும் வெளி விரிந்துக்கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் செய்தி.

இதற்கென்று தனித்த ஓர் அறிவியல் நூல் எழுதி அதன் வழியாகச் இச்செய்தியை சொல்வதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து பாடுகிறப் போது போகிறப் போக்கில் மாணிக்கவாசகர் இப்பேருண்மையை சொல்லிச் செல்கிறார் என்றால் இந்த அறிவியல் செய்தி மிகப்பரவலாக அக்காலத் தமிழர்களிடையே புழங்கி வந்த பரவலான அறிவு இருந்திருக்கிறது என்று பொருள்.

மணிவாசகருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இந்த அறிவியல் செய்திகளை ஏராளமாக கூறுகிறது என்ற உண்மையை ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர். (எ.கா: ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்’ முனைவர் க. நெடுஞ்செழியன் – மனிதம் பதிப்பகம் வெளியீடு -திருச்சி, 1990)

இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம் இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர்கள் கூட ‘சதுர்பூதம்’ என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற தெளிவு தமிழர்களிடம் இருந்தது.

‘ மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”
என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.

புற இயற்கைக்கு மட்டுமின்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை ‘ அண்டமே பிண்டம்” என்ற சொற்களால் தமிழர்கள் வரையறுத்தனர்.
இது கிருஷ்ணன் கூறுவதுப் போல் தொழில் நுட்ப அறிவு அல்ல, அடிப்படை அறிவியல் அறிவு.

டாப்ளர் விளைவை வைத்து 20-ஆம் நூற்றாண்டில் தான் இந்த விசும்பு – அண்டவெளி விரிவடைந்து வருகிறது என்ற உண்மையை கிருஷ்ணன் தலையில் தூக்கிக்கொண்டாடும் மேற்குலக அறிவியல் உணர்ந்தது. ஆனால் இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘அகலிரு விசும்பு” என்று தொல்காப்பியம் கூறுகிறது. ‘வளிதிரி தரு மண்டலம்” என்று காற்றே இல்லாத வெட்டவெளி விசும்பு இருக்கிறது என்ற உண்மையையும் பண்டைத் தமிழர்கள் கூறிச்செல்கிறார்கள். இதெல்லாம் மேற்குலக அறிவாளிகளுக்கு தெரிய 2000 ஆண்டுகள் ஆனது.

தமிழர்களின் கணிதவியல் அறிவை கிருஷ்ணன்கள் புரிந்துக்கொள்ளாததாலேயே அவை பொய் என்று ஆகி விடாது. ‘அறிவியல் ஞானம்” அற்றவர்களாக கிருஷ்ணன்கள் ஒதுக்குவதாலேயே தமிழினம் அறிவியல் அறிவற்ற கூட்டமாக ஆகிவிடாது.

இன்று மில்லியன் என்று மேற்குலகம் அழைக்கிற எண்ணை (106) பண்டைத் தமிழர்கள் மெய்யிரம் என்று குறித்தனர். இன்று மேற்குலகம் பில்லியன் (109) என்று கூறும் எண்ணை தமிழர்கள் தொள்ளுண் என்று குறித்தனர். இன்று டிரில்லியன் (1012) என்று குறிக்கும் எண்ணை தமிழர்கள் ஈகியம் என்றனர். இதனையும் தாண்டி நெளை (1015), இளஞ்சி (1018), வெள்ளம் (1020), ஆம்பல் (1021) என்ற எண் அளவுகளையும் தமிழர்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர்.

இதுமட்டுமின்றி 1-க்கு கீழ் உள்ள பின்ன கீழ் அளவுகளையும் இன்று மேற்குலகம் கற்பனைச் செய்ய முடியாத அளவுகளில் அன்றாடம் பயன்படுத்தி வந்தனர். இந்த அளவுகளைக் கொண்டு பலப் புதிய நுட்பங்களை வளர்த்தெடுத்தனர். எடுத்துக்காட்டாக 1/16 வீசம் அல்லது மாகாணி எனப்பட்டது. 1/32 அரை வீசம் ஆகும். இது போல் கீழ் அளவுகள் நுணுகி நுணுகி பகுக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்திது இரண்டாயிரத்து நானூறில் ஒரு பாகம் (1/102400) என்பதை கீழ் முந்திரி என்றனர். 21, இலட்சத்து 50 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு என்பதை (1/2150400) இம்மி என்றனர்.

இன்று பில்லியனில் ஒரு பங்கு அதாவது 100 கோடியில் ஒரு பங்கு என்பதை நானோ (Nano) என்று மேற்குலக நவீன அறிவியல் குறிக்கிறது. இதுதான் ஆகச்சிறிய பகுப்பு என்பதாக குதிக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைவிடக் கூடுதலாக 149 கோடியே 2 இலட்சத்து 27 ஆயிரத்து 200-ல் ஒரு பங்கு (1/1490227200) என்பதை ‘குணம்’ என்று குறித்தனர்.

இதையும் தாண்டி 3 இலட்சம் கோடி கோடியில் ஒரு பங்கு என்பதையும் தாண்டிய (1/35751146618880000000) என்ற நுண் அளவை நுண் மணல் எனக்குறித்தனர். இவ்வாறு பகுப்பதும் அதற்கு தனிப்பெயர் குறிப்பதும் விளையாட்டுக் கற்பனை அல்ல கணித அறிவின் உச்சம். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக பூனைக் கருதுவதாலேயே உலகம் இருண்டு விடுவது இல்லை. இதனை கிருஷ்ணன் அறியாவிட்டால் அது அவரது அறியாமையே தவிர தமிழர்கள் அறிவியல் அறிவு அற்றவர்களாக மாறிவிடமாட்டார்கள்.

இந்த அளவீடுகளை நடைமுறை வாழ்க்கையில் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் உலோக பற்பம் (பஸ்பம்), செந்தூரம் போன்ற மருந்துகள் தயாரிக்க மேற்சொன்ன கீழ் முந்திரி இம்மி, அடிசாரம், போன்ற நுண் அளவுகளைத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை சித்த மருத்துவம் ‘இம்மிப் பகுப்பு’ என்று வரையறுக்கிறது.

இந்த அளவீடுகளை நில அளவையிலும் தமிழர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உண்டு. சோழர்கள் காலத்தில் நிலங்கள் அளவெடுக்கப்பட்டு துல்லியமாக பகுக்கப்பட்டன. இது குறித்து தஞ்சை பெரியக்கோயிலில் இராச ராச சோழனின் கல்வெட்டு ஒன்று கீழ் வருமாறு கூறுகிறது. இது திருவாரூர் மாவட்டம் பாலையூர் என்ற கிராமத்தின் பரப்பளவை அளந்து கூறுகிறது.

‘தெக்கடு வாயான அருமொழித் தேவ வளநாட்டு
இங்ஙணாட்டு பாலையூர் பள்ளியுங் கணி
முற்றூட்டும் உட்பட அளந்தப்படி நிலம் நூற்று
முப்பத்து நான்கேய் எட்டு மாவின் கீழ் முக்காலே
மும்மா வரையறைக் காணி முந்திரிகைக் கீழ் நான்குமா”
என்பது அக்கல்வெட்டுக் கூறும் செய்தி.

இது ஏறத்தாழ 130 வேலி நிலம் ஆகும். (1வேலி = சுமார் 6.75 ஏக்கர்) தமிழர் அளவீடுகளின் படி கீழ்க் காணி (1/25600), கீழ் முந்திரி (1/102400) ஆகிய மிகச் சிறிய அளவுகளில் கூட நிலம் அளக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கணித அறிவு மக்களின் அன்றாட வாழ்வில் இயல்பாக புழங்கி வந்திருக்கிறது. (விரிவிற்கு காண்க: நிலம் அளந்த இராசராசன் – முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்- தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2010, செப்டம்பர் இதழ்)

தமிழர்களின் இந்த அறிவியல் அறிவு அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு ஆகியவை மிகப் பரவலாக மக்களிடம் புழங்கியதால் அது தமிழ் மக்களின் பன்பாட்டு நடவடிக்கைகளோடும், சடங்குகளோடும் இரண்டறக் கலந்து அவர்கள் வாழ்வியலின் பிரிக்க முடியாத கூறாக மாறிவிட்டது. இதனைக் கவனிக்காமல் அவற்றை வெறும் சடங்கு அல்லது மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவது கிருஷ்ணன் போன்றவர்களின் அறியாமையாக இருக்கலாமே தவிர அதற்காக தமிழர்களை அறிவியல் அறிவு அற்ற சமூகமாக கீழ்ப்படுத்திவிட முடியாது.

‘ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற மக்கள் வழக்கில் இருந்த பழமொழி தலைமுறை தலைமுறையான முயற்சியில் தமிழர்கள் வளர்த்தெடுத்த அறிவியல் அறிவின் ஓர் பிழிவு.

இன்று நவீன அறிவியல் உலகம் மக்களிடம் புழக்கத்தில் உள்ள அறிவியல் அறிவை அடையாளம் காணப் பெரிதும் முயன்று வருகிறது. மக்கள் குடி உயிரியல் (Ethno Biology), மக்கள் குடி மருந்தியல் (Ethno medicine), மக்கள் குடி மரபியல் (Ethno Genetics) போன்று பல அறிவியல் துறைகள் வளர்ந்து வருகின்றன. இந்த புதிய அறிவியல் போக்கை பி.ஏ. கிருஷ்ணன் அறியாமல் இருக்கலாம் அல்லது அறிந்தும் மறைக்கலாம். ஆனால் உண்மை மறைந்து விடாது.

பசுமைப் புரட்சியை திணித்து, இரசாயன வேளாண்மையைப் புகுத்திய வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் நிறுவனமான ‘எம்.எஸ் சுவாமிநாதன்’ ஆராய்ச்சி அறக்கட்டளை அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் அங்குள்ள தமிழ் மக்களிடம் நிலவிய வேளாண் அறிவியல் சிந்தனைகளை ஆய்வு செய்து அதன் அடித்தளத்தில் நின்றுக்கொண்டு நவீன் வேளாண் அறிவியலை வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஆய்வாளர் ரெங்கலட்சமி ராஜ் Hormonizing Traditional and Sceintific knowlege systems in Rainfall Predictions and Utilization என்ற தலைப்பில் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை அம்மக்களிடம் இருந்த விண்ணியல், மண்ணியல், பருவவியல், நீரியல் அறிவை வியந்துப் பாராட்டுகிறது. அதை ஒரு முறை பி.ஏ. கிருஷ்ணன் படிக்கட்டும். (www.unep.org)

கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், நிலவைச் சுற்றிய வட்டத்தின் தன்மை, பறவை, பூச்சி ஆகியவற்றின் இயக்கம் மின்னலின் தன்மை போன்ற 12 காரணிகளை ஆய்வுச் செய்து மழை வருவது குறித்து முன்னறிந்து கூறுகின்றனர்.

கிழக்கில் புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல் பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில் மழைப் பெய்யும். தென்மேற்கு மற்றும் வடமேற்கில் மின்னல் மின்னினால் இரவு நேரத்தில் மழைப் பெய்யும். நிலவைச் சுற்றி வளையமிருந்தால் சிறு தூரல் மட்டுமே விழும் சிட்டுக்குருவி கூட்டமாக தாழப்பறந்தால் அன்றைக்கே மழை வரும், கிணற்றுத் தவளை வழக்கத்தை விட அதிகமாக ஒலி எழுப்பினால் அல்லது நண்டு வளையை பெரிதாக குடைந்தால் இரண்டு நாளில் மழைவரும் என்பன போன்ற இவர்களது பருவ நிலை அறிவு இன்றைய நவீன கருவிகள் கண்டுப்பிடித்து அறிவிக்கும் அறிவிப்புகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதை ரெங்கலட்சுமி ராஜ் குறிப்பிடுகிறார்.

‘ஆடிமாதம் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்” என்பது மக்கள் மொழி. ஜுலை, ஆகஸ்ட்-ல் காற்று வலுவாக வீசினால் அட்டோபர், நவம்பரில் பருவ மழை சரியான அளவு பொழியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருவிகள் கொண்டு கண்டறிந்து கூறியதைத் தான் மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்கும் மேக மண்டல மாற்றங்களைத் தான் மக்களும் அடிப்படையாக கொண்டுள்ளனர் என்று ரெங்கலட்சுமி வியப்புடன் கூறுகிறார்.

பொன்னேறு பூட்டும் விழா என்ற பெயரில் முதல் உழவு நடத்துகிற காலத்தில் அச்சமூகத்தின் மூப்பர்கள் இளையோர்களிடம் கதையாகவும், பாட்டாகவும், பழமொழியாகவும் இதை கற்றுத்தருகிறார்கள் என்று ரெங்கலட்சமி கண்டு கூறுகிறார்.

தமிழர்களின் வேளாண் அறிவியல் மட்டும் அல்ல அவர்களின் பலவகை மரபுசார் மருத்துவமும் இன்று அறிவியல்; உலகத்தால் திரும்பிப் பார்க்கப்படுகின்றன.

டெங்கு காய்ச்சலுக்கும், சிக்கன் குனியா காய்ச்சலுக்கும் பி.ஏ. கிருஷ்ணன் கொண்டாடும் மேற்கத்திய அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை என்று மருத்துவ மனைகள் கைவிரித்ததையும், இந்நோய்க்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து இந்நோய்களை குணப்படுத்த முடிந்ததையும்; தமிழகம் பார்த்தது.

இன்று மாடுகளை தாக்கியுள்ள கொள்ளை நோயான கோமாரிக்கு மேற்கத்திய மருத்துவம் எதுவும் செய்யமுடியவில்லை என்று கால்நடைத்துறையே கைவிரித்து விட்டது. ஆனால் அதே கால்நடைத்துறை குப்பைமேனி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் அரைத்து தயாரிக்கும் மூலிகை மருத்துவத்தையே பரிந்துரைக்கிறது.

இவற்றை எல்லாம் பி.ஏ. கிருஷ்ணன் கண்டும் காணாதது போல் எழுதுகிறார்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் தமிழர்களின் மரபு அறிவியலைப் பற்றி மிக அரிதாக ஒரு மூலையில் இடம்பெற்றுள்ள பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தை எடுத்து வைத்துக்கொண்டு அறிவியல் பார்வை மறந்து தமிழ் மீதும், தமிழர் மீதும் நஞ்சு கக்கும் பி.ஏ. கிருஷ்ணன் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள வேதகணிதம் (வேதிக் மேதமேடிக்ஸ்), வேத விஞ்ஞானம் (வேதிக் சயின்ஸ்) ஆகியவை குறித்து வாய்திறக்கக் காணோம்.

கிருஷ்ணன்களுக்கு ‘பசித்துப் புசி” என்ற தமிழ் முன்னோர் வாக்கு அறிவியல் அற்றது. அதையே சமஸ்கிருதத்தில் ‘லங்கணம் பரம ஒளஷதம்” என்று சொன்னால் அதுவே ‘அறிவியல் ஞானம்”.

கிருஷ்ணன் சொல்வதுப் போல் தமிழர்கள் தங்களைப் பற்றி ‘எங்களிடம் எல்லாம் இருந்தது என்று” தம்மைத் தாமே பாராட்டிக் கொள்பவர்கள் அல்லர். ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்ற ஒளவையின் வரிகள் தான் தமிழர்களின் வழிகாட்டி.

இருந்த அறிவெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது என்ற உண்மையை பி.ஏ. கிருஷ்ணன் ஏற்க மறுக்கிறார்.

ஒரு நாட்டில் பழைய வர்க்கத்தை ஒடுக்கி ஓர் புதிய வர்க்கம் ஆதிக்கத்திற்கு வரும் போது பெரும்பாலும் ஏற்கெனவே இருந்த மக்களின் அறிவை முற்றிலும் அழித்து விடுவது இல்லை. பெரிதும் அதனை தனதாக்கிக் கொண்டு தொடரவேச் செய்யும். ஆனால் ஓர் இனத்தின் மீது அயல் இனத்தின் ஆதிக்கம் நிகழ்கிற போது அதன் அறிவுச் சின்னங்களும், நூல்களும், வரலாற்றுச் சின்னங்களும் அழிக்கப்படுவதே வரலாறு நெடுகிலும் நடக்கிறது.

தமிழினம் ஆரியர், ஆதிக்கத்திற்கு ஆட்பட்டது. அவர்களது அறிவு ஏற்கப்படாமல் அறிவு என்ற வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. இந்த அறிவை தமது பண்பியல் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த பெரும்பாலான தமிழர்கள் கீழ்நிலை சாதிகளாக அழுத்தப்பட்டு அவர்கள் அறிவாளர் வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

பிறகு விஜயநகரப் பேரரசை தொடர்ந்து வந்த நாயக்கர் ஆட்சிக்கு கீழ்ப்பட்டதாக தமிழகம் மாறியபோதும், அதைத் தொடர்ந்து மொகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட போதும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிமைப்பட்டபோதும் தமிழ் மொழி ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு அறிவியல் மொழி என்ற அந்தஸ்தையும் இழந்தது. பல நூல் நிலையங்களும், நூல்களும் அழிக்கப்பட்டன. கீழ்நிலை சாதிகளாக வைக்கப்பட்ட அறிவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தமிழர்களின் மரபான அறிவியல் அறிவு புதைக்கப்பட்டதை, புறந்தள்ளப்பட்டதை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டுமே அல்லாது ‘எல்லாம் அழிந்து விட்டது என்று கூறுவது நம்பும் படியாக இல்லை’ என போகிற போக்கில் தள்ளிச் செல்வது தமிழ் இனத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.

இந்த புறக்கணிப்பையும், மறைப்புகளையும் உடைத்துக் கொண்டு செம்மாந்த தமிழினம் தனது அறிவியில் அறிவை நவீன உலகத்தில் நிலை நிறுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது கிருஷ்ணன்களும், தி இந்து ராம்களும் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.

- கி.வெங்கட்ராமன், இணை ஆசிரியர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

டிஸ்கி: தமிழர்களை ஏசுவதிலும் அவர்களை இளக்காரமாக பல இடங்களில் குறிப்பிடுவதற்கும் மேல்குடியினர் என்று நினைத்து செயல்படும் ஆரியர்கள் என்றுமே சளைத்ததில்லை. தங்களின் இலக்கில் அவர்கள் சரியாகவே சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திராவிடர்களோ இந்த சூழ்ச்சிகளை எல்லாம் அறியாமல அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு பிரண்டால் மோட்சம் கிட்டி விடும் என்று இந்த நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டிருக்கும் வினோதத்தை என்னவென்பது?