Followers

Showing posts with label பாலஸ்தீன். Show all posts
Showing posts with label பாலஸ்தீன். Show all posts

Tuesday, October 13, 2015

மனைவியையும் மகளையும் பறி கொடுத்த பாலஸ்தீனியர்!



கடந்த 12 நாட்களில் 23 பாலஸ்தினியர்களை பாசிஸ இஸ்ரேலிய மிருகங்கள் கொன்று குவித்துள்ளன. வயிற்றில் குழந்தையுடன் இருந்த நூர் ஹஸன் என்ற தனது மனைவியையும் ரஹாப் என்ற இரண்டு வயது பெண் குழந்தையையும் ஒரே நேரத்தில் பறி கொடுத்த தந்தை கதறி அழும் காட்சி!

இறைவா! பாலஸ்தினத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவாயாக! அநியாயக்கார இஸ்ரேலிய அரசை அழித்தொழிப்பாயாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
12-10-2015

Thursday, October 08, 2015

அல் அக்ஸா பள்ளியில் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் தொழ தடை!



'அல் அக்ஸா மசூதியில் ஜூம்ஆ தொழுகைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களே வரமுடியும். பெண்களுக்கு வயது வித்தியாசம் இல்லை. ஆண்களில் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் தொழ வரக் கூடாது'

இவ்வாறு இஸ்ரேலிய செய்திப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களுக்கிடையே தொடர்ந்து பிரச்னை அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பு கூறுகிறது.

இறைவனை தொழ குறிப்பிட்ட வயதினர்தான் வர வேண்டும் என்று வந்தேறிகளான யூதர்கள் சொல்வது உலகிலேயே இஸ்ரேலில்தான் நடக்கும். இந்த மனித உரிமை மீறலைப் பற்றி எந்த நாடும் வாய் திறக்காது. எந்த ஊடகமும் வாய் திறக்காது.

உன்னை வணங்குவதற்கு கூட அனுமதி மறுக்கும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களை இறைவா! நாசமாக்குவாயாக!

இந்த ஜூம்ஆவில் பாலஸ்தீன மக்களுக்காகவும் நமது நாட்டு இந்துத்வ அராஜக ஆட்சிக்காகவும் ஒரு முடிவு கட்ட இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்திப்போமாக!

தகவல் உதவி
dailysabah.com
09-10-2015

Saturday, September 12, 2015

பாலஸ்தீன் கொடி இனி ஐநாவில் பறக்கும்!





193 உறுப்பினர்களில் 119 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாலஸ்தீன் கொடியை ஐநாவில் பறக்க விட அனுமதி பெறப்பட்டது. வழக்கமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இவர்களோடு சேர்த்து எட்டு ஐரோப்பிய நாடுகளும் எதிராக வாக்களித்தன. ஆனால் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன் பக்கம் நின்றதால் வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்தது. ஃப்ரான்ஸ் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

'இந்த முயற்சியானது வருங்காலத்தில் ஐநாவில் முழு அங்கீகாரத்துடன் தனது கோரிக்கைகளை பாலஸ்தீன் வைக்க மிக ஏதுவாக இருக்கும். இது அதற்கான முதல் படி' என்கிறார் பாலஸ்தீன் பிரதமர் ரமி ஹம்துல்லா.

ஐநாவின் அமெரிக்க தூதர் தனது கருத்தாக சொல்லும் போது 'கொடி பறந்து விடுவதாலேயே இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீன மக்களும் ஒற்றுமையாகி விட மாட்டார்கள்' என்று சொல்லியுள்ளார். இவர்களுக்கு அமைதி என்பதே உலகில் இருக்கக் கூடாது. எந்த குடி கெட்டாலும் அதில் தனது நாடு சுரண்டி கொழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலைபவர்கள் இந்த அமெரிக்கர்கள். இந்த அரசியல் சூழ்ச்சிகள் ஒரு நாள் அமெரிக்காவுக்கு எதிராகவே திரும்பக் கூடும். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை. நம் காலத்திலேயே அமெரிக்காவுக்கு தக்க பாடத்தை இறைவன் புகட்டுவானாக!

தகவல் உதவி
கார்டியன்


Monday, August 31, 2015

ஸ்பெயின் விழாவில் யூத கலைஞன் பங்கு கொள்ள தடை!




மெட்ரிட்: ஸ்பெயினில் நடந்து கொண்டிருக்கும் கலாசார விழாவில் யூத அமெரிக்கரான பிரபல கலைஞர் மதிஸ்யாஹூவின் நிகழ்ச்சியும் ஏற்பாடாகியிருந்தது. பாலஸ்தீனத்தில் மண்ணின் மைந்தனுக்கு எதிராக இஸ்ரேல் செய்து வரும் காட்டு தர்பாரை எதிர்த்து பெரும் போராட்டம் மெட்ரிட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு யூதர் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை வலுவானதாக இருக்கவே வேறு வழியின்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மதிஸ்யாஹூவின் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ரத்துக்கு யூதர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகமெங்கும் இஸ்ரேலின் அடாவடித்தனத்தினால் யூதர்கள் அவமானப்படுவது தொடர்கதையாகி வருகிறது. உலக முடிவு நாள் வரை இஸ்ரேலியர்கள் திருந்தப் போவதில்லை. அவர்கள் வழி வந்த நம் நாட்டு இந்துத்வாவாதிகளும் திருந்தப் போவதில்லை.

தகவல் உதவி
சவுதி கெஜட்
19-08-2015

Friday, May 01, 2015

பாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்!



எத்தனை கொலைகள்: எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை காயங்கள்: எத்தனை வீடு இடிப்புகள்: அனைத்தையும் தங்களின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி இடிந்த பள்ளி அறையிலும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பாலஸ்தீன மக்களிடம் நமக்கும் பாடம் இருக்கிறது. இத்தனை தோல்விகள் கண்டும், அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பாவும் வஞ்சகமாக பாலஸ்தீனியர்களை பழி வாங்கினாலும் கிடைக்கும் சந்தர்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் பாலஸ்தீனியர்கள்.

தோற்றத்திலும் நிறத்திலும் நம் ஊர் பார்பனர்களை ஒத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எப்பாடு பட்டாவது ஒரு டிகிரி எடுத்து விடுவார்கள். கல்வி கற்பதை அந்த அளவு நேசிப்பர். அதிகமாக அலுவலக வேலைகளையே விரும்புவர். சவுதியில் பல பாலஸ்தீனியர்களை நண்பனாக பெற்றவன். பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். மிக தைரியசாலிகள்: பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் போட்டி போடுவர். அதே வேகத்தில் தொழுகையிலும் மிக கவனமாக இருப்பர்.

தோல்விகளையும் சிரமங்களையுமே வாழ்க்கையாக கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச நம்முடைய பிரார்த்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!

குர்ஆன் 20:114

Wednesday, February 11, 2015

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் சுட்டு கொலை!







அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. பரகத் வயது 23, அவரது மனைவி யூசுர் சாலிஹா வயது 21, தங்கை ரிஜான் அபு சாலிஹா வயது 19 இந்த மூன்று இளம் தளிர்களை வீட்டீன் உள்ளே வந்து தலையில் சுட்டு கொன்றிருக்கிறான் ஒரு கொடியவன். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 46 வயதான ஸ்டிபன் ஹீக்ஸ் என்று போலிஸாரால் அறியப்பட்டுள்ளான்.

இந்த மூன்று பாலஸ்தீனியர்களுமே எப்போதும் சமூக சேவைகளில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இந்த குடும்பம் பொது மக்களுக்கு சாரிட்டி மூலம் உணவு விநியோகத்திலும் அதிகம் ஈடுபடும். பாலஸ்தீனிலும் ஒரு மருத்துவ மனையை நிர்வகிக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பரகத் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார்.அவரது மனைவியும் கல்லூரியில் படித்து வரும் மாணவி. இரண்டு மாதம் முன்பு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. வாழ வேண்டிய இந்த இளம் குருத்துகளை பாவிகள் அழித்து விட்டனர்.

இவர் நடத்தி வரும் சமூக வலை தளம் ட்விட்டரில் ஒரு வாரம் முன்பு அவர் பதிந்த ஒரு செய்தி:

'பாலஸ்தீனியர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் 'யூதர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் அவரவர் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது மிகவும் தவறான அணுகு முறை. இது போன்ற கொலைகளால் எந்த பிரச்னையும் தீரப் போவதில்லை.' என்று ட்விட் செய்துள்ளார்.

இவர்கள் சமூக சேவை செய்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த மூன்று பேரையும் கொல்வதற்கு இது போதும் இஸ்ரேலியர்களுக்கு.

வாழ வேண்டிய இளம் தளிர்கள் இன்று கருகி விட்டன. இவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய நாமும் பிரார்திப்போம்.

தகவல் உதவி
INDEPENDENT.CO/NEWS
11-02-2015

Saturday, January 10, 2015

சிரிய பாலஸ்தீன மக்கள் பனிப் புயலில்......



பாலஸ்தீன் ஹிப்ரான் குன்றுகளில் அல் முபாகரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது மகனுக்கு குளிர் தாக்காமல் இருக்க போர்வையைக் கொண்டு போர்த்துகிறார். வளைகுடா முழுக்க கடுங் குளிர். சில இடங்களில் பனிப் புயலும் வீசுகிறது.

ரியாத்திலும் குளிர் அதிகமாக உள்ளது. தொழுகைக்கு 15 நிமிடம் வெளியில் சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பாதுகாப்பான வீடு. ஹீட்டர் வசதி. கம்பளி போர்வைகள். குளிரைத் தாங்கக் கூடிய மேலாடைகள். காலுறை: அதற்கு மேல் ஷூ. கைகளுக்கு உறை: என்று இத்தனை ஏற்பாடுகளை செய்தும் நம்மால் குளிரைத் தாங்க முடியவில்லை.

ஆனால் சிரியா, பாலஸ்தீன் போன்ற நாடுகளில் இதை விட அதிக குளிர். பனிப் புயலும் வீசுகிறது. மின்சாரம் சுத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சிலர் மலைகளின் குகைக்குள்ளே தஞ்சம் புகுந்துள்ளார்கள். இரவு நேரத்தில் சாப்பாட்டுக்கு சிறிது நேரம் மெழுகு திரிகளை ஏற்றுகிறார்கள். அதன் பிறகு எங்கும் இருள் மயம். ஒரு ஆண்டுக்கு முன்னால் சகல சவுகரியங்களோடும் வாழ்ந்த சிரிய மக்கள் இன்று ஒரு துண்டு ரொட்டிக்காக அலைகின்றனர்.

வல்லரசுகளின் பொருளாதார ஆசையால் இன்று அழகிய இரண்டு நாடுகளும் சின்னா பின்ன மாக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்கள் ஒரு புறம், தீவிரவாத கும்பல்கள் ஒரு புறம், வல்லரசுகள் ஒரு புறம் என்று நாற்புறமும் அவர்களை துன்பம் சூழ்ந்துள்ளது.

வீடில்லை: வாசலில்லை: செல் போன் இல்லை: லேப் டாப் இல்லை: சிறந்த உடை இல்லை என்றெல்லாம் நாம் அங்கலாய்த்துக் கொள்கிறோம். ஒரு துண்டு ரொட்டிக்காக பலரும் போட்டியிடும் இந்த மக்களை நினைத்துப் பார்போம். இறைவனுக்கு நமது நிலைக்கு நன்றி சொல்வோம்.

நமது ஒவ்வொரு தொழுகையிலும் இந்த மக்களின் நல் வாழ்வுக்காக பிரார்த்திப்போம். பல வருடங்களாக தொல்லைகளை அனுபவித்து வரும் இவர்களுக்கு நிரந்தர அமைதி நிலவ இறைவன் சிறந்த தலைமையை அந்த மக்களுக்கு கொடுப்பானாக! குளிரிலிருந்து சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள் வயோதிகர்களுக்கு பாதுகாப்பை நல்குவானாக!