Followers

Showing posts with label PRAYER. Show all posts
Showing posts with label PRAYER. Show all posts

Sunday, January 17, 2016

தொழுகையின் அவசியத்தை அழகாக உணர்த்தும் காணொளி!

யாரும் இல்லாத பாலைவனத்தில் தனியாக ஒரு இளைஞன் நடந்து வருகிறார். ஏறிச் செல்ல வாகனம் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்...

Posted by Nazeer Ahamed on Sunday, January 17, 2016

யாரும் இல்லாத பாலைவனத்தில் தனியாக ஒரு இளைஞன் நடந்து வருகிறார். ஏறிச் செல்ல வாகனம் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தோடு நடந்து போகிறார். எதிர்பாராமல் எதிரே ஒரு மகிழூந்து வருகிறது. ஆசையோடு அதில் அமர லிஃப்ட் கேட்கிறார். வண்டியும் இவரை ஏற்றிக் கொள்ள அருகில் வந்து நிற்கிறது. அதே நேரம் அவரது செல் போனிலிருந்து தொழுகைக்கான நேரத்தை நினைவூட்டும் வண்ணமாக 'அல்லாஹூ அக்பர்' என்ற பாங்கொலி சப்தமும் கேட்கிறது. அது அஸர் என்ற மாலை நேரத் தொழுகை. நாம் தற்போது அந்த வண்டியில் ஏறுவதை விட தொழுகையை நேரத்தோடு முடிப்பதே சிறந்தது என்று அந்த இளைஞர் முடிவெடுக்கிறார். உதவ வந்த அந்த நண்பர்களிடம் 'நன்றி' என்று கூறி விட்டு தொழுவதற்கு ஆயத்தமாகிறார்.

தன்னை படைத்த இறைவனை அமைதியாக வணங்கி விட்டு தொழுகையை முடித்தால் என்ன ஆச்சரியம். இவர் தொழுவதைப் பார்த்து வழியில் சென்ற பலரும் வாகனத்தை ஓரமாக்கி விட்டு தொழுது கொண்டிருக்கிறார்கள். இவர் ஒரு நன்மையை செய்யப் போய் அதன் மூலம் பலர் நன்மையை அடைய உந்து சக்தியாக இருந்திருக்கிறார்.

விளம்பரப் படமாக இருந்தாலும் அதன் மூலம் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் இந்த விளம்பரதாரரை நாமும் பாராட்டுவோம்.

---------------------------------------------------

'இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் முஸ்லிமான அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116

---------------------------------------------------

'நமக்கும், இறை மறுப்பாளாருக்கும் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் இறை மறுப்பாளாராகி விட்டார்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859
‪#‎தொழுகை‬

Thursday, August 27, 2015

தொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்!





கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை.

சவுதி அரேபியன் ஏர் லைன்ஸின் விமானியின் பொறுப்பும், ஐரோப்பிய வீதிகளில் அந்த மக்களையே ஆச்சரியப்பட வைத்திருக்கும் அந்த இஸ்லாமியரின் பொறுப்பும் நமக்கு எப்போது வரப் போகிறது நண்பர்களே!

கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

அல் குர்ஆன் 23:1,2.3

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

அல் குர்ஆன் 23:9

Saturday, August 15, 2015

தொழுகையில் காட்டும் அசட்டையை அகற்றுவோம்!












இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை வலியுறுத்துகிறான். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்றும் இறைவன் கூறுகிறான். ஆனால் அந்த தொழுகையில் நாம் பெரும்பாலும் அலட்சியமாகவே இருக்கிறோம். நாம் இறைவனை தொழுவதனால் இறைவனின் மதிப்பு ஒன்றும் கூடி விடப் போவதில்லை. மாறாக அதனால் நாம் தான் அதிக நன்மைகளை பெறுகிறோம். மறுமையில் இறைவனை சந்திக்கும் போது தொழுகையாளிகளுக்கு அவன் தரும் கண்ணியத்தையும் காணப் போகிறோம். உலகிலேயே பல பாவ காரியங்களிலிருந்து தொழுகை நம்மை தடுக்கிறது. தொழுவதனால் மன அமைதி கிடைக்கிறது. ஐந்து வேளை முறையாக தொழுபவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு என்றுமே வர மாட்டார். மேலும் இந்த தொழுகையானது பல நிலைகளில் நமது உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. அதன் பலன்களைத்தான் நாம் மேலே பார்கிறோம்.

ஒரு நாளில் நமக்கு கிடைக்கும் 24 மணி நேரத்தில் அரை மணி நேரத்தை இந்த தொழுகைகளுக்காக நம்மால் ஒதுக்க முடியாதா? தொழாதவர்கள் இனியாவது ஐவேளை தொழுகைக்கு முயற்சிப்போமாக!


இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:, ” இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. தொழுகையை நிலைநாட்டுவது 3. ரமளானில் நோன்பு நோற்பது. 4. ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஃபாவில் ஹஜ் செய்தல்’

(புஹாரி: 4514, முஸ்லிம்)

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை மனிதரை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும்.

குர்ஆன்(29:45)

அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி: 528, முஸ்லிம்)