Followers

Tuesday, January 11, 2011

நண்பர் கல்வெட்டின் சந்தேகங்களுக்கு சில மாதிரிகள்!

//ஆனால் சக காலத்தில் பிறந்த சில குழந்தைகள் துரதிர்ஷ்டத்தால் , உடல் வளர்ந்திருந்தாலும் மூளை வளர்ச்சி இல்லாமல் அதே 7 வயதின் அறிவு நிலையிலேயே தேங்கிவிட்டார்கள் ( எல்லாம் இறைவன் செயல். அவன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. சாந்தி நிலவட்டும்) அவர்கள் இன்னும் பாட்டி வடை சுடுவதாக நம்புகிறார்கள். :-(((

நான் அவர்களிடம் தோற்கவே விரும்புகிறேன்.\\

நண்பர் கல்வெட்டு தனது பின்னூட்டத்தில் முஸ்லிம்கள் எல்லாம் நிலவில் பாட்டி வடை சுடுவதாக நம்புவதாகவும் அவர் தெளிவாக இருப்பதாகவும் கூறுகிறார். இது முஸ்லிம்களின் நம்பிக்கை அல்ல நண்பரே! அது இந்துக்களின் நம்பிக்கை.

பல நல்ல கருத்துக்களை கூறிய வள்ளுவர் கூட

கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று. – குறள்

பொருள்: நான் என் காதலரைக் கண்டது ஒருநாள்தான். ஆனால் அதனால் உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

அவர் காலத்தில் நமது நாட்டில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு நிலாவை முழுங்குவதால்தான் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வள்ளுவரும் உதாரணத்தை எடுத்தாண்டிருக்கிறார். இதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார் நண்பர் கல்வெட்டு.

அதே நேரம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்ட குர்ஆனில் இது போன்ற அறிவியலுக்கு முரணான ஒரு கருத்தையும் காண முடியாது. வான் வெளியைப் பற்றி குர்ஆன் கூறும் சில கருத்துக்களைப் பட்டியலிடுகிறேன் நண்பர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

பூமியின் வடிவம் எத்தகையது?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.

ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.

உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

இனி குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164


மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.

அறிவியல் அறிஞர்களையே திகைக்க வைத்த குர்ஆன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் சொன்னது ஒரு உதாரணம் மடடுமே! இது போல் பல நுர்று வசனங்களை என்னால் பட்டியலிட முடியும். புவியீர்ப்பு விசை, மனிதன் நிலாவுக்கு செல்ல முடியும், பெரு வெடிப்பு கொள்கை என்று அறிவியலில் எந்த துறைக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆனை 'நிலவில் பாட்டி வடை சுடும்' கதைக்கு கல்வெட்டு ஒப்பிடுகிறார். யாருடைய அறிவு இன்னும் வளராமல் இருக்கிறது என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.

Friday, January 07, 2011

நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்?-1

நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்?-1

சமீபத்தில் நண்பர் தருமியின் பதிவிற்கு சென்ற போது 'நான் ஏன் முஸ்லிமாக இல்லை?' என்ற தலைப்பில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அதிகமான குற்றச்சாட்டுகளுக்கு பலரும் பல முறை பதில் அளித்து விட்டார்கள். இன்னும் இவர்கள் அதே பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளில் பல முகமது நபியின் பெயரால் புனையப் பட்ட கட்டுக் கதைகளே! இதை ஆதாரத்தோடு பல முறை விளக்கயும் இருக்கிறேன். ஆதாரப் பூர்வமான குற்றச் சாட்டுகள் சிலவற்றையும் அந்தப் பதிவிலே காண முடிந்தது. அவற்றிற்கு மட்டும் என்னால் முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிவுகளாகத் தருகிறேன். இதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை என்றாலும் எனது திருப்திக்காக இந்தப் பதிவுகள்.

//பலதார முறை, விவாகரத்து, அடிமைகள் வைத்திருத்தல் என்பவை சமுதாய தர்மத்தின் வேரினையே ஆட்டியது. தனிமனித வாழ்க்கையையும், சமூகத்தின் ஒழுங்கமைப்பையும் மாற்றியது. ஆனால் பெண்களுக்கான முகத்திரை அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. அறிவுச் சுதந்திரம், தனிமனித முடிவுகள் என்பன எல்லாமே நசுக்கப்பட்டன. (88)//

முகமது நபியின் வருகைக்கு முன்பு அரேபியாவின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் அதை உயிரோடு புதைத்து விடுவார்கள். பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டால் சமூகத்திற்க்குள் வர வெட்கப் பட்டுக் கொண்டு பல நாட்கள் தலைமறைவாகி விடுவானாம் தகப்பன். (ராமநாதபுரம்,சேலம் போன்ற மாவட்டங்களில் இன்றும் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொல்லும் வழக்கம் இருந்து வருவதை நாம் அறிவோம்.) தமிழகத்தில் பெண் குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் முஸ்லிம்களிடத்தில் இல்லை. எவ்வளவு வறுமையில் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தாலும் குழந்தையை கொல்லும் அளவுக்கு அவர்கள் செல்வதில்லை. அதற்கு காரணம் முஸலிம்கள் மறுமையை நம்புவதும் குர்ஆன் அவர்களுக்கு இடும் கட்டளையும் தான்.

'வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்' - குர்ஆன் 6:151

'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை விசாரிக்கப்படும் போது'- குர்ஆன் 81:8,9




இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு பெண்களின் நிலையே தற்போது மாறி விட்டது. ஆண்களை ஆட்டு விப்பவர்களாக இங்கு பெண்களே இருக்கிறார்கள். சம்பளம் வாங்கிய முதல் நாள் தனது முழு ஊதியத்தையும் கொடுத்து விடும் ஆண்களே இங்கு அதிகம். தற்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக விகிதாச்சாரத்தில் படிக்கின்றனர். இவை எல்லாம் அரபு நாடுகளுக்கு இஸ்லாத்தினால் வந்த நன்மைகள்.



அதே நேரம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் பெண்களைப் பற்றிய கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதையும் சற்று பார்ப்போம்.

நமது பாரத திரு நாட்டில் ஒரு சமய பெரியவர் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பலரின் கண்டனத்துக்கும் ஆளானதை நாம் மறந்திருக்க முடியாது. கணவன் இறந்தவுடன் மனைவியை அதே தீயில் சில நாட்களுக்கு முன்பு ஏன் தற்போதும் கூட தள்ளி பய பக்தியோடு கொண்டாடி வருகிறோம்.

கிறித்தவ அறிஞர் பூன பென்தூரா என்பவர் ' நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக சாத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்க்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம்தான்' என்கிறார்.

மேலும் கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாதென சட்டமே இயற்றியது. எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் பைபிளைப் படிக்கக் கூடாது என சட்டம் இயற்றியது. (பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினர் வேதம் ஓதினால் அவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னவர்கள்தானே நம் முன்னோர்கள்.?:-()

586 ஆம் ஆண்டு பிரெஞசுக்காரர்கள் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா என ஆய்வு செய்ய ஒரு சபையையும் நிறுவினர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான் எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்க்காகவே படைக்கப்பட்டவர்கள் என முடிவு செய்தது.

இனி 1400 ஆண்டுகளுக்கு முன்பு குர்ஆனும் முகமது நபியும் பெண்களைப் பற்றி கூறிய கருத்துக்களையும் பார்ப்போம்.

'ஆண்,அல்லது பெண் நம்பிக்கைக் கொண்ட நிலையில் நற்க்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.' - குர்ஆன் 4:124

'மனிதன் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறித்தியுள்ளோம்'-குர்ஆன் 46:15

முகமது நபியிடம் ஒரு மனிதர் வந்து மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். முகமது நபி அவர்கள் 'உனது தாய்' என்று கூறினார். பின்பு யார்? எனக் கேட்டார். 'உனது தாய்' என்றே கூறினார். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தந்தை எனக் கூறினார்.
-ஆதாரம் புகாரி, முஸ்லிம்.

இதை எல்லாம் நான் எடுத்து எழுதக் காரணம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை எடுத்துக் காட்டவே. இது பொன்ற வரலாறுகள் நிறைய உள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அடிமை வியாபாரத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் 'நீங்கள் நோன்பு வைக்க முடியவில்லையா? ஒரு அடிமையை விடுதலை செய்யுங்கள். மனிதன் என்ற முறையில் சில தவறுகள் செய்து விட்டீர்களா? அகற்குப் பகரமாக இத்தனை அடிமைகளை விடுதலை செய்யுங்கள்' என்று கட்டளைகளைப் பிறப்பித்து சில வருடங்களிலேயே அடிமைகளை முழுவதுமாக ஒழித்தது இஸ்லாம். பிலால் என்ற அடிமையை பணம் கொடுத்து விடுதலை வாங்கி பள்ளி வாசலில் முதன்முதலாக தொழுகைக்கு பாங்கு(அழைப்பு) கொடுக்க்ச சொன்னவர்தான் முகமது நபி. இதைப் பிற்காலங்களில் கண்ணீர் மல்க நினைவு கூர்கிறார் பிலால் என்ற அந்த கறுத்த ஆப்ரிக்கர். முகமது நபிக்கு பிரியமான தோழராகவும் கடைசி வரை இருந்தார். இன்று அரபு நாடுகளில் எங்காவது அடிமைகளை பார்க்க முடிகிறதா! ஆனால் நம் நாட்டிலே இன்றும் கொத்தடிமைகள் இருக்கிறார்களா? இல்லையா?

எனவே முகமது நபியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாத்தினால் மனித குலத்துக்கு நன்மை விளைந்ததா? தீமை விளைந்ததா? என்பதையே நாம் இங்கு சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். 'நான் ஒரு முஸ்லிம்' என்று உலகின் எந்த மூலையிலும் சென்று பெருமை பொங்க கூறுவேன். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை எனக்கு தந்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். மற்ற விமரிசனங்களுக்கு அவ்வப்போது பதிலளிக்கிறேன்.

எனவே சமூகத்தில் உள்ள பெண்களின் இந்த இழி நிலையில் உண்மையான அக்கறை தருமி போன்ற நண்பர்களுக்கு இருக்குமானால் ஒரு குழுமமாக சென்று சேலம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மக்களை திருத்த வழி வகை தேட வேண்டும். அது தான் உண்மையான பகுத்தறிவாதிக்கு அழகு.

Tuesday, January 04, 2011

என்னைக் கவர்ந்த திருமணங்கள்!

என்னைக் கவர்ந்த திருமணங்கள்!

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் எனது அத்தை மகள்களுக்கு போன மாதம் திருமணம் நடைபெற்றது. மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பெஷர்வரைச் சேர்ந்த பாகிஸ்தானியர். இளைய பெண்ணுக்கு மணமகன் ஒரு எகிப்தியர். மலேசியா அனைத்து மக்களும் கலந்து வாழும் ஒரு பண்பட்ட நாடு என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுத்து நாட்டின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுகின்றனர் மலேசிய ஆட்சியாளர்கள்.

நமது நாட்டில் சொந்தத்திலும் ஒரே ஊரிலும் திருமணம் முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி நாடு விட்டு, இனம் விட்டு இஸ்லாம் மார்க்கம் ஒன்றினால் மட்டுமே இணைந்திருக்கும் இந்த ஜோடிகளை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.

என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பழமொழிக் கேற்ப வாழ முற்ப்பட்டிருக்கும் இந்த ஜோடிகளை நாமும் வாழ்த்துவோம்.

'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்ப்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.சிந்திக்கின்ற சமுதாயத்திற்க்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
குர்ஆன் 30:21


பாகிஸ்தானில் சொந்தம் ஏற்பட்டாலும் அதிகமான பாகிஸ்தானிகள் இந்தியாவின் மீது ஒரு அதீத வெறுப்பைக் கொட்டுவதை பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகள் அந்த அளவு அந்த மக்களை மாற்றியிருக்கிறார்கள். தினம் ஒரு குண்டு வெடிப்பு. இன்று கூட பஞ்சாப் மாகாணத்தில் குண்டு வெடிப்பில் கவர்னர் இறந்திருக்கிறார். கொடுத்த நாட்டையே நிம்மதியாக வைத்திருக்கத் தெரியாத இவர்களுக்கு மேலும் காஷமீரும் வேண்டும் என்று அடம் பிடிப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. இறைவன்தான் அந்த மக்களையும் அந்த நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.

Monday, January 03, 2011

புது வருடத்தில் பொங்கட்டும் மகிழ்ச்சி!

புது வருடத்தில் பொங்கட்டும் மகிழ்ச்சி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் நேரமும் தனிமையும் கிடைத்திருக்கிறது. தமிழ் மணத்தின் பக்கம் வந்தால் பழைய முகம் யாரையும் காணவில்லை. அதிகம் புதிய பதிவர்களாக காண முடிந்தது. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பழைய நண்பர்கள் கோவி கண்ணன், டோண்டு ராகவன், செந்தழல் ரவி, நல்லடியார், முப்தி, தருமி, மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

வருட கடைசி கணக்கெடுப்பதற்க்காக சவுதி நகரங்களான கஸீம், தபுக் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. முன்பு தபுக் சென்றது விமானத்தில். இந்த முறை பேருந்தில் சென்றதால் (17 மணி நேரம)சற்று சோர்வு ஏற்பட்டது. அங்கும் பழைய நண்பர்கள் அப்துல் அஜீஸ், ஜின்னா, அய்யுப்(மும்பை) போன்றவர்களை சந்தித்ததில் களைப்பும் நீங்கியது. மூன்று நாட்களுக்குப் பிறகு ரியாத் திரும்பினேன்.

நேரம் கிடைக்கும் போது இனி பதிவுகளை எழுத எண்ணியுள்ளேன். பின்னூட்டங்களின் மூலம் நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள். நன்றி.

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷடத்தில் இருக்கிறான். நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3

Wednesday, August 04, 2010

"டார்வின் கோட்பாடு தவறு" என்பது உண்மைதானே!

"டார்வின் கோட்பாடு தவறு" என்பது உண்மைதானே!

டார்வினிஷ்டுகள் "ஓரு செல் உயிரினம் தானாக உருவாகி பிறகு பல லட்சம் வருடங்கள் பரிணாமம் ஏற்ப்பட்டு படிப்படியாக குரங்கு வரை வந்து பிறகு மனிதனாக உருவெடுத்தான்" என்று கதை விடுகின்றனர்.

பல காலமாக பலருக்கும் ஓரு சந்தேகம் உள்ளது. "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா"

இங்கிலாந்தின் ஷெப்பீல்டு மற்றும் வார்விக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கோழி முட்டையை சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

முட்டையின் ஓட்டுப்பகுதியை உருவாக்க OVOCLEIDIN (OC-17) என்ற புரோட்டீன் மிகவும் அவசியம் என்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இந்த புரோட்டீன் கருவுற்ற கோழியின் சினைப்பையில் உற்பத்தியாகிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இவர்கள் தொழில் நுட்பம் வாய்ந்த HECTOR என்ற கம்யூட்டரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். முட்டை ஓட்டின் அணுக்களின் கட்டமைப்பை ஆய்வு செய்தனர்.

புரோட்டீன் OC-17 இங்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. கோழியின் உடம்பில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற ரசாயன பொருளை கால்சைட் என்ற படிமங்களாக மாற்ற OC-17 உதவுகிறது. இந்த கால்சைட் தான் கடினமான முட்டை ஓடாக மாறுகிறது. கோழிக்குஞ்சு உருவாவதற்க்கு தேவையான கரு மற்றும் அதனைப் பாதுகாக்கும் திரவம் ஆகியவற்றை முட்டை ஓடு தன்னுள் வைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குழுவுக்கு செப்பீல்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் காலின் ப்ரீமேன் தலைமை வகித்தார்.

இந்த ஆய்வின் மூலம் ஓவ்வொரு படைப்புக்கும் படைப்பாளன் இருந்தே ஆக வேண்டும் என்பது உறுதியாகிறது.

"மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னை சீராக்கி, உன்னைச் செம்மைப் படுத்தினான். அவன் விரும்பிய வடிவில் உன்னை அமைத்தான்."
-குர்ஆன் 82- 6,7