சகோதர சகோதரிகளே!
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 03, 2021
சகோதர சகோதரிகளே!
Tuesday, February 02, 2021
*#இளம்வயது #மரணங்கள்.*
மாமனிதர் நபிகள் நாயகம்
அகிலத்திற்கு ஓரு அருள்கொடை அண்ணல் முகம்மது நபி (ஸல்)
03 - 02 - 2021 , புதன்கிழமை
மாமனிதர் நபிகள் நாயகம்
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.
திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.
மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.
ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.
சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.
‘நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்’ என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.
எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ‘நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது’ என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.
தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.
இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.
‘அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:16 )
எனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.
நபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.
நபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.
இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.
நபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.
மாணவ மாணவிகள் இவரைப் பார்த்து திருந்தட்டும்.
மஹாராஷ்ட்ர மாநிலம் நாந்தேட்டை என்ற இடத்தைச் சேர்ந்தவர் வஸீமா. மிகவும் வறிய குடும்பம். தாயார் வளையல் விற்று குடும்பத்தை கவனித்து வருகிறார். தனது குடும்பம் வறுமையில் இருந்தாலும் சிரமப்பட்டு படித்து இன்று காவல் துறை உயர் அதிகாரியாக பணி நியமனம் பெற்றுள்ளார். அனைத்து வசதிகள் இருந்தும் படிக்காமல் ஊர் சுற்றி திரியும் மாணவ மாணவிகள் இவரைப் பார்த்து திருந்தட்டும்.
Monday, February 01, 2021
வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பா பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்துட்டு வர்றோம். இந்த முறை கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர் சுந்தர் சில ஆலோசனைகளைச் சொல்லி இருக்காரு. அதைப் பார்க்கலாம்.
`நாம சாப்பிடுற காய்கறிகள்ல முக்கால்வாசி பந்தல்ல
விளையுறதுதான். புடலங்காய்,
பீர்க்கங்காய், சுரை,
பாகல், பூசணி,
பரங்கி
இப்படி பெரும்பான்மையான காய்கறிகள் கொடி வகை பயிர்கள்தான். மாடித்தோட்ட விவசாயிகள், அதைப் பயிர் செய்யும்போது, கொடிகள் படர்ந்து போக முறையான ஏற்பாடுகளைச் செய்யணும்.
ரொம்ப பேர், அப்படியே
தரையிலயே விட்டுடுவாங்க,
இல்லைன்னா, சுவர் மேல எடுத்து விட்டுடுவாங்க. ஆனா, முறையா கொடிகள் படர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தாதான் பூ, பூத்து காய் காய்க்கும். அதுக்காகக் காசு செலவு பண்ணி
பந்தல் போடணும்னு இல்லை. நம்மகிட்ட இருக்குற பொருள்களை வெச்சே பந்தல் அமைக்கலாம்.
மொட்டை
மாடியில மண்ணு நிரப்பின சாக்கு மூட்டையை நாலு பக்கம் வெச்சு, அதுக்கு மேல கொம்பை ஊன்றி, நூல்,
கயிறு, கம்பினு எது கிடைக்குதோ அதைக் குறுக்கும் நெடுக்குமா கட்டி
விட்டா போதும் பந்தல் தயாராகிடும். இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இப்படித்தான் பந்தல் போடணும்னு வரைமுறையே கிடையாதுங்க. கொடி
தங்கு தடையில்லாம படர்ந்துப் போகணும். அதுதான் நோக்கம். அதுக்கு வாய்ப்பு
ஏற்படுத்திக்கொடுத்தப் போதும்.
ஆனா,
பலபேரு
கொடியிலே ஒரு நூலை மட்டும் கட்டிட்டு அதோட நம்ம கடமை முடிஞ்சு போச்சுனு
நினைக்கிறாங்க. ஆனா,
கடமைக்கு
அங்க முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. நூல் மட்டும் இருந்தா போதாது. அதுல கொடி
ஏறுதான்னு தினமும் கவனிக்கணும். நுனி கீழ் பக்கம் சாய்ஞ்சு இருந்தா அதை எடுத்து
நூல்ல மறுபடியும் விடணும். கொடி பந்தலைத் தொடுற வரைக்கும் இதைக் கவனமா செய்யணும்.
மொட்டை மாடி சுவத்துல கூட நாலு குச்சிகளை வெச்சு, பந்தல் மாதிரி அமைப்பை ஏற்படுத்தலாம். இப்படி இடத்துக்கு
ஏற்ற மாதிரி,
நம்ம
கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் தட்டிவிட்டா போதும். அதிக செலவில்லாம பந்தல்
அமைச்சிடலாம். பந்தல்ல கொடி இருக்கும்போது,
அதுக்குக்
கீழே எந்தப் பைகளையும் வைக்கக் கூடாது. அங்கு போதுமான சூரிய ஒளி கிடைக்காம, காய் பிடிக்கவே பிடிக்காது. அதுல கவனமா இருக்கணும்.
மாடித்தோட்டத்துல
இருக்க ஒரு பிரச்னை என்னன்னா கீரை ரொம்ப இடத்துல பெருசா வளராது. கொஞ்சமா
முளைக்கும். அப்படியே நின்னு போயிடும். இது நல்லா வளரணும்ன்னா சில வேலைகளைச்
செய்யணும். முதல்ல பாக்டீரியாக்களை கொஞ்சம் பயன்படுத்தலாம். பாக்டீரியான்னு
சொல்றது, அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ
பாக்டீரியா, பொட்டாஷ்
பாக்டீரியாதான்.
இது மூன்றும் காற்றில், சூரிய வெளிச்சத்தில் இருக்கும் சத்துகளை எடுத்து
செடிகளுக்குச் சேர்க்கும் வேலையைச் செய்யும். அதனால இந்தப் பாக்டீரியாக்கள்
பயன்படுத்துறதால செடிகள் நல்லா வளரும். அதேப்போல சூடோமோனஸ்னு ஒரு பூஞ்சையையும்
பயன்படுத்தலாம். அது பூச்சிகளைக் கட்டுப்படுத்த மற்றும் வேர் அழுகல்
நோய்க்கட்டுப்பாட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இதைக் காய்கறிச் செடிகள் மற்றும்
கீரைகளுக்கும் பயன்படுத்தலாம்.
இதைக் கீரைச் செடிகளுக்குப் பயன்படுத்தினால் நல்ல பயன்
கிடைக்கும். கீரைச் செடிகளை விதைக்கும்போது, ஒரு முக்கியமான விஷயம்
கவனிக்கணும். பையில மண்கலவை மேல விதைகளைப் போட்டதும், அதுக்கு மேல நியூஸ் பேப்பர் போட்டு மூடிடணும். அதுக்கு மேலதான் தண்ணி
தெளிக்கணும். 3 நாளைக்கு இப்படி நியூஸ் பேப்பர் மேலேயே தண்ணிய தெளிச்சு
விடுங்க. மூணு நாள் கழிச்சு பேப்பர் எடுத்துப் பார்த்தா எல்லா விதைகளும்
முளைச்சிருக்கும். இந்த மாதிரி முயற்சி பண்ணுனா கீரைகள் சாய்ந்து போகாமல் வளர்ச்சி
நின்றுவிடாமல் நன்றாக வளரும்.
ஏன் அப்படி பண்றோம்னா ஒரு விதை முளைப்பதற்கு வெயில், நிழல்,
ஈரப்பதம்
மூன்றும் முக்கியம். பெரிய பெரிய விதைகளை மண்ணுக்குள் புதைத்து விடுவோம். அதுக்கு
வெயில், ஈரப்பதம்
கிடைக்கும். ஆனால்,
கீரை
மாதிரியான விதைகள் மேலாக இருக்கும். அதுக்கு போதுமான நிழல் கிடைக்காது. அந்த
நிழலுக்காகத்தான் கொஞ்சம் முளைக்கும் வரைக்கும் பேப்பர் போட்டு மூடி வைக்குறோம்.
கொஞ்சம் வளர்ந்த பிறகு பேப்பரை எடுத்துடலாம். இந்த மாதிரி கீரைக்கு பண்ணி பாருங்க.
சூப்பரா வளரும்.
செடி நல்லா பூப்பூக்குறதுக்கு முட்டை ஓடு நிறைய போடுங்க.
வீட்டில் வேஸ்ட் ஆகுற முட்டை ஓடுகளை ஒரு மிக்ஸியில் போட்டு அரைச்சு, அதைப் பூச்செடிகளுக்குப் போட்டா, அதிக பூக்கள் எடுக்கும். குறிப்பா ரோஜா செடிகளுக்குப்
போடும்போது அதிக பூ பூக்கும்.
மாடித்தோட்டத்தில்
நிறைய பேர் செய்யும் தவறு,
மண்ணைக்
கிளறாம விடுவதுதான். தினமும் கிளறி விட்டுக்கொண்டே இருந்தால்தான் காற்றோட்டம்
நல்லாக் கிடைச்சு,
செடிகளின்
வளர்ச்சியும் நல்லா இருக்கும். மகசூலும் அதிகம் கிடைக்கும்.
அதே போலச்
செடியைச் சுற்றி எந்தக் களைச்செடிகளும் இருக்கக் கூடாது. தக்காளிச் செடி ஒரு பையில
இருக்குதுன்னா அங்கே வெறும் தக்காளிச் செடி மட்டும்தான் இருக்கணும். வேற எந்தச்
செடிகளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்துச்சுன்னா செடியோட வளர்ச்சி பாதிக்கும்.
இன்னொன்னு பூ பூக்காது... காய்க்காது. அதே போலக் காய் காய்க்கும் நேரத்துல மீன்
அமிலம் கொடுத்த நல்லா காய் காய்க்கும். மீன் அமிலம் தயாரிக்க வாய்ப்பு இல்லாதவங்க, வீடுகள்ல மீன் கழுவுற தண்ணியை செடிகளுக்கு
ஊற்றினால் கூட போதும்.நான் சொன்ன விஷயங்களை எல்லாம் மாடித்தோட்ட விவசாயிகள் மனசுல வெச்சுகிட்டா நல்ல மகசூல்
எடுக்கலாம்."
வீட்டுத்தோட்டம்
தொடர்பான சந்தேகங்களுக்கு இவரை 95784 19307 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
வீட்டுத்தோட்டம்
தொடர்பா உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டால் கமென்ட் பாக்ஸ்ல பதிவு பண்ணுங்க.
உங்களுக்கான விளக்கம் கொடுக்கப்படும்.
Thanks Vikatan


