Followers

Showing posts with label சாதி வெறி. Show all posts
Showing posts with label சாதி வெறி. Show all posts

Wednesday, October 16, 2019

முதுகில் பிளேடால் கிழிக்கப்பட்ட சரவணக்குமார்

#SamuelRaaj

முதுகில் பிளேடால் கிழிக்கப்பட்ட சரவணக்குமாரை மருத்தவமனையிலும்
இல்லத்திலும் சந்தித்தோம்...

"எதுக்கு வம்பு வழக்கைத் திரும்பப் பெறுன்னு சொல்ராங்க, போலீசும் அப்படித்தான் நடந்துக்குது. அப்படி விடமுடியுமா சார்.

அவங்க தெரு பையனுக்கு இப்படி நடந்தா என்னவெல்லாம் செய்திருப்பாங்க" என்றார் அவனது தாயார்.

"அவன் மட்டுமல்ல சார், ஊரில் உள்ள எல்லோரும் மாறணும்" என்றான் சிறுவன் #சரவணக்குமார்.

என்ன தம்பி என்றதும்,
"எத்தனை தடவை ஊரில் புகுத்து அடிச்சிருக்காங்க, ஒரு மாதிரியா நினைக்கிறத மாத்தணும் சார்" என்கிறான். #முதுகில்_மட்டுமல்ல #மனதிலும்_எவ்வளவு_பெரியகாயம் பாருங்க.

ஒரு ஆறுதல்... பள்ளியின் தலைமை ஆசிரியர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
*
- கே.சாமுவேல்ராஜ்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.


Monday, March 14, 2016

ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!











ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!

ஒரு மதம் அதனை பின்பற்றும் மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் கருத்துக்களை குறைந்த பட்சம் நீக்கவாவது முயற்சிக்க வெண்டும். கவுரவக் கொலைகள் இனியும் நடைபெறாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

82 கவுரவக் கொலைகள் இதுவரை நடந்துள்ளது. ஜாதி தீண்டாமை என்பது 'இந்து மத அடிப்படைகளில்' கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து இந்து மதத்திலிருந்து தங்களை நிரந்திரமாக 'மத மாற்றத்தின்' மூலம் துண்டித்து கொள்வதே நமக்கு சிறந்த தீர்வு....

Sunday, March 13, 2016

உடுமலையில் சாதி வெறியில் மற்றொரு கொலை!



காதலித்து திருமணம் செய்தவர்களை உடுமலையில் பட்டப்பகலில் கூலிப்படையினர் வெட்டியதில் பொறியியல் மாணவரான காதலன் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குமரலிங்கத்தில் வசித்து வருகின்றனர். சின்னராஜின் மகள் தனியார் கடையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே பொதுமக்கள் கூடியதால் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

’பெண்ணின் உறவினரே திட்டம்’

கொலைக்கு பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரே திட்டம் தீட்டியது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். வாகனத்தில் தப்பிச் சென்ற மூவரையும் விரைவில் பிடிப்போம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-03-2016

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பட்ட பகலில் பொது மக்கள் முன்னிலையில் சராமாரியாக வெட்டி விட்டு போகின்றனர். பொது மக்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் சாதி வெறியை இந்த மக்களிடம் இருந்து அகற்ற முடியாது. எனவே சாதி மாறி திருமணம் புரிவதை தடை செய்ய சட்டம் இயற்றி இந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அல்லது மதம் விருப்பமுடைய மதத்துக்கு மாறி திருமணம் புரிய வேண்டும். அல்லது சொந்த பந்தங்கள் இல்லாத வெளி மபநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட வேண்டும். இதை செய்யாத பட்சத்தில் இந்த கவுர கொலைகள் நமது தமிழகத்தில் குறைய வாய்ப்பில்லை.

இந்த கொலை கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் அதனையும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=k8KQDbdK_6o

Thursday, January 21, 2016

திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை





26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.

நன்றி வினவு

http://www.vinavu.com/2016/01/21/thirunalkondacheri-caste-atrocity-report/

இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா? அவர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே! இறந்த பிணத்தை தெரு வழியாக தூக்கிச் செல்வதில் அப்படி என்ன கௌரவம் குறைந்து போய் விடும். திட்டமிட்டு பிணம் அழுக வேண்டும் என்பதற்காக மின்சாரத்தையும் துண்டித்திருக்கிறார்கள்? வயல் பாதை கரடு முரடாக இருக்கும் என்பதால் மணல் மூட்டைகளை போட்டு தற்காலிக சாலை அமைத்துள்ளதை பாருங்கள். சிரமப்பட்டு மணல் மூட்டை கொண்டு சாலைகள் அமைப்பார்கள். ஆனால் தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். என்னவொரு அழகிய மனிதாபிமானம்.

மனித குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வு இது.

Wednesday, January 20, 2016

எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!





எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!

கடந்த 4 ஆண்டுகளில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்!

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!

தமிழ் இந்து நாளிதழ்
21-01-2016

Wednesday, January 13, 2016

அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!





அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!...

திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!

அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!

இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
—————————-

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…

”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.

”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
—————————

மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.

மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.

”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”

தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.

”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. ‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், ‘ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!” என்கிறார் ஆறுமுகச் சாமி.

மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி :ஆனந்த விகடன்

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100456

Thursday, January 07, 2016

முதியவரின் பிணத்தை தெரு வழியாக அனுமதிக்காத சாதி இந்துக்கள்!



நேற்று மயிலாடுதுறை அருகே திருநாள் கொண்டச் சேரியில் ஒரு முதியவர் இறந்து விட்டார். இறந்த முதியவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தங்கள் தெரு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. அங்கு பெரும் பதட்டம் நிலவியது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காவலர்கள் தாழ்த்தப்பட்டவர்களை விரட்டி விட்டு பிணத்தை தாங்களே வேறு மார்க்கமாக (வடுவூர் வழியாக) வேறு வழியின்றி எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு அந்த காவலர்களே சுடுகாட்டில் பிணத்தை புதைத்துள்ளனர்.

'நாமெல்லாம் இந்துக்கள்' என்று வழியும் மோடி, அமீத்ஷா, இல கணேசன், இராம கோபாலன் எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டார்கள்?

மண்ணின் மைந்தனின் பிணத்தை அவனது நாட்டு தெருக்களில் எடுத்துச் செல்வதையே அனுமதிக்காத சமூகங்களின் மத்தியில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

Tuesday, December 29, 2015

தலித் மக்கள் மீதான தாக்குதலில் 7 பேர் கைது:



கர்நாடகத்தில் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியதில் கர்ப்பிணி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந் தனர். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 22 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் துர்விஹால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் தலித் அமைப்பினர் வைத்திருந்த பேன‌ர் மீது, கடந்த 24-ம் தேதி வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தினார். மேலும் அந்த பேனரில் இருந்த அம்பேத்கரின் படத்தையும் அவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலித் அமைப்பை சேர்ந்த‌ இளைஞர்கள் மறுநாள் விசாரித்தபோது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, “ஊருக்கு நடுவில் அம்பேத்கரின் பேனரை வைக்கக்கூடாது. மீறி வைத்தால் தலித் மக்களை ஊரை விட்டே விரட்டுவோம்” ஆதிக்க சாதியினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலித் மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கு மாறு துர்விஹால் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, அங்குள்ள தலித் காலனிக்குள் நுழைந்து, தலித் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 3 மாத கர்ப்பிணி உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து 29 பேர் மீது துர்விஹால் போலீஸார் 5 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 பேரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரெய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், காவல் கண்காணிப்பாளர் சேத்தன் சிங் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பீர் பாஷா தலைமையிலான உண்மை ஆராயும் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-12-2015

ஒரு சுதந்திர நாட்டில் தனக்கு பிடித்தமான தலைவரின் படத்தை வைக்கக்கூட அனுமதி இல்லை என்றால் ஆதிக்க சாதியினரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

Friday, November 13, 2015

சாதி வெறியர்களே! எப்போது திருந்தப் போகிறீர்கள்?



உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப் படுத்தலாமா? பொது மக்களில் மற்ற சாதிகள் வரலாம், மற்ற மதங்கள், மார்க்கங்கள் வரலாம். ஆனால் தலித் மட்டும் வந்து விடக் கூடாது இல்லையா? இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை.

Friday, October 09, 2015

கோகுல்ராஜ் கொலையில் ஜாமீனில் வந்துள்ளவர்களுக்கு கோவிலில் மரியாதை!






தலித் இனத்தை சேர்ந்த கோகுல்ராஜ் ஒரு கவுணடர் சாதி பெண்ணை காதலித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.

இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சில இளைஞர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். அந்த வீர இளைஞர்களுக்கு மாலை மரியாதை எல்லாம் கோவிலில் வைத்து செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்னும் இவர்களுக்கு ஊர் மத்தியில் சிலை வைக்காததுதான் பாக்கி. :-)

'இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?' என்று அப்பாவித்தனமாகவும் மேலும் விஷமத்தனமாகவும் கேட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் ராம் நிவாஸ், அன்புராஜ் போன்ற இந்துத்வாவாதிகளுக்கு இந்த பதிவு சமர்பணம்.

Sunday, September 20, 2015

தலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை!




புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தின் பிஜேபி எம் எல் ஏ வாக உள்ளவர் காசினாத் மல்லிக்....

ஜீலை 20 ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி சம்பந்தமான ஒரு கூட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து மேலும் மூன்று எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் மாவட்ட ஆட்சியரும் அழைக்கப்பட்டிருந்தனர். மதியம் அரசு செலவில் உணவு பரிமாறப்படும் நேரமும் வந்தது. அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை பிடிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு காசிநாத் மல்லிக் கொடுத்த பேட்டியை பார்போம்:

'மற்ற மூன்று எம்எல்ஏக்கள், கண்டமால் எம்பி, மாவட்ட ஆட்சியர் என்று இந்த ஐந்து பேருக்கும் அறையின் உள்ளே கவுரமாக உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அறைக்கு வெளியே தனியாக எனக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு தொடர்ச்சியாக ஆளும் வர்க்கத்தால் அவமானம் ஏற்படுத்தப்படுகிறது' என்று பரிதாபமாக கேட்டார்.

தகவல் உதவி
NDTV.com
23-07-2015


பாவம் அந்த எம்எல்ஏ! எதனால் இவருக்கு மட்டும் இப்படி அவமானம் ஏற்படுகிறது என்பதை இன்னும் விளங்காமல் இருக்கிறார். அவர் தலித்தாக பிறந்து விட்டார் அல்லவா? அதுதான் காரணம்.

படிப்பு, ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தால் தீண்டாமை காணாமல் போய் விடும் என்று சொல்பவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? ஒட்டு மொத்த மக்களின் மனதில் மாற்றம் முழுவதுமாக ஏற்படாதவரை நமது நாட்டுக்கு தீண்டாமையிலிருந்து விடுபட எந்த முகாந்திரமும் இல்லை. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறப் போவதில்லை.

இங்கு இரண்டே நிலைப்பாடுதான் இருக்கிறது. ஒன்று தீண்டாமை என்ற இழிவை சுமந்து கொண்டு இந்து மதத்திலேயே இருப்பது.

மற்றது ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாம், கிருத்தவம், பவுத்தம் போன்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவது. இதைத் தவிர வேறு மூன்றாவது வழி இல்லை.

http://www.ndtv.com/bhubaneshwar-news/dalit-orissa-mla-served-food-separately-alleges-caste-discrimination-462586?site=full

Monday, August 17, 2015

சங்கராபுரம் தலித் வீடுகளின் கோரக் காட்சி!



தலித் மக்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான்: வீட்டை கொளுத்திய வன்னியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். இரண்டு சாதிகளின் கடவுளும் ஒருவன்தான். ஆனால் அந்த கடவுளுக்கு மரியாதை செய்ய ஒரு தரப்பு மறுக்கப்பட்டு காலகாலமாக உதாசீனப்படுத்தப்படுகிறது. எரிக்கப்பட்ட அந்த வீடுகளில் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என்று பாருங்கள்.

கூலி வேலை செய்து பிழைத்து வரும் அந்த தலித் இனி தனது வீட்டை நிர்மாணிக்க எத்தனை வருடம் உழைக்க வேண்டும்? வீட்டை கொளுத்தியதில் தாய்மார்களும் குழந்தைகளும் கூட பங்கெடுத்தார்களாம். சாதியின் கொடூரம் பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. பாதுகாப்புக்கு வந்த காவல் துறையையும் இந்த கும்பல் தாக்கியிருக்கிறது. உழைத்து வாழ்ந்தாலும் வாழ அனுமதிக்காத சமூகத்தின் மீது அவனது கோபப் பார்வை திரும்பினால் அதன் பின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாதியை வைத்து அரசியல் நடத்தும் அனைத்து தலைவர்களையும் சமூகத்தில் இருந்து மக்கள் ஒதுக்கினாலேயே இது போன்ற கொடூரங்களை குறைக்க முடியும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கணக்கில் வைத்து தன் மக்களை வேறெங்கும் சென்று விடாமல் காக்கும் ஒரு உக்தியாகவே இதனை பார்க்கிறேன்.

Monday, July 20, 2015

இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்த பள்ளி நிர்வாகம்!





பண்டாரவாடை TNTJ கிளை துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி நர்கீஸ் பானு அவர்கள் 19/07/15 காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள். பல காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள். இறைவனின் அழைப்பு வரவே அவனிடத்திலேயே சேர்ந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

வழக்கம் போல் இறந்த உடலை அடக்கம் செய்ய பண்டாரவாடை பெரிய பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதே பண்டாரவாடை மர்கஸில் சில ஆண்டுகளுக்கு முன்பு 'முதியோர் இல்லம்' நடத்தி வந்தோம். அதில் தங்கியிருந்த மூதாட்டி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அதற்கும் இந்த பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. வெளியூர்காரர்களுக்கு அனுமதி தர மாட்டார்களாம். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட அந்த மூதாட்டியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள சுன்னத் ஜமாத்பள்ளிக்கு சென்று அடக்கி விட்டு வந்தோம். அந்த ஊர் பள்ளி நிர்வாகி 'அடக்க மறுத்தார்களா? நான் அந்த பாவத்தை சுமக்க மாட்டேன். உடன் அடக்கம் செய்யுங்கள்' என்று அனுமதி கொடுத்தார். தமிழகத்தில் எந்த கிராமங்களிலும் இது போன்று இறந்த உடலை அடக்கம் செய்ய தவ்ஹீத் ஜமாத்தை காரணம் காட்டி மறுக்கும் ஊர்கள் கிடையாது. ஆனால் விசேஷமாக ராஜகிரி, பண்டாரவாடை பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுப்பதையே வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். இறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!

இதற்குள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வெளியூர்களில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர். விஷயத்தை கேள்விப்பட்டவுடன் வெளியூர் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குழும ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரிகள், சப் கலெக்டர் போன்றோர் அடக்க இடம் கொடுங்கள் என்று எவ்வளவோ அமைதியாக கேட்டுப் பார்த்தனர். எதற்கும் நிர்வாகம் மசியவில்லை. சுன்னத் ஜமாத் முறைப்படித்தான் அடக்கம் செய்வோம். எங்கள் இமாம்தான் தொழ வைப்பார். சுன்னத் ஜமாத் முறைப்படி அடக்கம் செய்கிறேன் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். சரியான வெயில் வேறு. இறந்த உடல் வைக்கப்பட்டிருக்கும் ஷாகுல் வீட்டருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது தஞ்சையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் என்னிடம் 'பாய்.... 6 நோன்பு வைத்திருக்கிறோம். நோன்பு கஞ்சியும், சாப்பாடும் கொண்டு வந்துள்ளோம். நோன்பு திறக்க ஒரு இடம் தயார் செய்து கொடுக்க முடியுமா?' என்று கேட்டனர்.

நேரமோ மணி 6:30. உடன் நான் “எனது வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. நம் வீட்டிலேயே நோன்பு திறக்கலாம் வாருங்கள்” என்று அழைத்து சென்றேன். விஷயத்தை எனது தாயாரிடம் சொன்னேன். 'நோன்பு வைத்துக் கொண்டு போராட்டத்துக்கு வந்துள்ளார்களா' என்று ஆச்சரியப்பட்டுப் போய் வேக வேகமாக ஜூஸ் கரைக்க ஆரம்பித்தார். கேக் பணியார வகைகள், பேரித்தம் பழம், நோன்பு கஞ்சி, சூடாக்கப்பட்ட பிரியாணி என்று திருப்தியாக நோன்பை நோற்றனர். எனது தாயார் 'பார்த்தால் கல்லூரி மாணவர்கள் போல தெரிகிறது. இந்த வயதில் இவ்வளவு ஈடுபாடா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டார். மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்த தஞ்சை சகோதரர்களோடு பண்டாரவாடை பெரிய பள்ளியை நோக்கி சென்றோம்.

இரவு 10 மணி வரை நிலைமை சரியாகவில்லை. முடிவில் கலெக்டர் 'இவர்கள் ஒத்து வரவில்லை. உங்கள் பள்ளியின் பின் பக்கம் உடலை அடக்கம் செய்து கொள்ளுங்கள். அதற்கான ஆணையை நாளை எழுத்து பூர்வமாக தரச் சொல்கிறேன்' என்று சொன்னார். மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி நபி வழிப்படி தொழுகை தவ்ஹீத் பள்ளியின் வெளியில் வைத்து நடத்தப்பட்டு 5000 க்கும் அதிகமான கொள்கை சகோதரர்களின் பிரார்த்தனையோடு தொழுது முடித்தோம். பிறகு அங்குள்ள இளைஞர்களில் ஐந்து பேர் சென்று குழி வெட்ட ஆரம்பித்தனர். இதற்குள் வெளியுர் சகோதரர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், டீ, காபி என்று சகோதரர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். உடலை அடக்கம் பண்ணி விட்டு நான் வீட்டுக்கு வரும் போது இரவு இரண்டு மணி. பசியும் இல்லை. சாப்பிடாமலேயே படுத்து விட்டேன்.

தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தவ்ஹீத் பள்ளியின் கொல்லையிலேயே அடக்கம் செய்ததை நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அந்த வீட்டை அன்பளிப்பாக கொடுத்த ஒரு பாகஸ்தரை அணுகி பிரச்னை பண்ணுகிறார்கள். "அங்கு அடக்கிய உடலை தோண்டி எடுப்போம். எடுத்து வேறு இடத்தில் அடக்கம் பண்ணுவோம்' என்கிறார்களாம்.

மக்காவிலிருந்து தொல்லை தாங்காமல் தனது தோழர்களோடு மதினா சென்றனர் நபிகள் நாயகம். ஆனால் எதிரிகள் அங்கும் படை திரட்டிக் கொண்டு பெருமானாரை கொல்ல வந்தனர். ஏனோ இங்கு எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வருகிறது.

அரபியன் அரபி அல்லாதவன் கருப்பன் வெள்ளையன் என்ற பேதமேது இங்கே!



இஸ்லாத்தை விளங்காத ஒரு சில முஸ்லிம்கள் பல பிரிவுகளை இஸ்லாத்தில் உண்டாக்கி விட்டனர். ஷாஃபி, ஹனபி என்ற சாதிகளையும் இஸ்லாத்தில் உருவாக்கி விட்டனர். ஆனால் குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ இந்த சாதிப் பிரிவுக்கு எந்த இடமும் இல்லை. இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்றே குர்ஆன் கூறுகிறது. அதனை செயலிலும் காட்டுவதை உலகில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் காணலாம்.

இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபு மொழியே உலகில் உயர்ந்த மொழி என்ற எண்ணம் அந்த அரபுகளிடம் இருந்தது. மற்ற மொழிகள் பேசுபவர்களை ஊமையர்கள் என்று அழைத்தனர் அன்றைய அரபுகள். நபிகள் நாயகம் வந்தவுடன் சாதி வெறி, மொழி வெறி, இன வெறி என்ற அனைத்தையும் தனது காலடியில் போட்டு மிதிப்பதாக பிரகடனப்படுத்தினர்.

அன்று முதல் ஒழிந்தது சாதி வெறி: இன வெறி: மொழி வெறி. அந்த காட்சிகளையே மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த பெருநாள் தொழுகையில் காண்கிறோம்.

Friday, July 10, 2015

சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?



ஓர் ஆதிக்க சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் இடையே பிரச்சினை என்றால் அது தமிழகத்தின் தென் பகுதியிலேயேதான் நடந்திருக்க வேண்டும் என அறியப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது.

இதுநாள்வரை இருந்த அந்த கண்ணோட்டத்தை பொய்க்கச் செய்துள்ளது, அண்மையில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாள்ர் பெருமாள் முருகன் எழுத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சம்பவமும்.

மேற்கு மண்டலத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும், தமிழகத்தின் அப்பிராந்தியம் சாதியம் சுடச்சுட பொங்கும் மையமாக உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

1990-களில் நடந்த சாதிச் சண்டைகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் எதிரொலியாக அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, அனைத்து பொது போக்குவரத்துக் கழகங்கள், அரசாங்க சாலைகள், அரசு கட்டிடங்களுக்கும் சாதித் தலைவர்கள் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. சாதியின் பெயரில் பிளவு ஏற்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

என்றாலும், இதுமட்டுமே சாதிய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது அல்லவா? அப்படித்தான், கொங்கு மண்டலத்தில் அரங்கேறும் சாதிய அடக்குமுறைகள் இவ்விவகாரத்தில் தென் மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

பெருமாள் முருகனுக்கு என்ன நேர்ந்தது. அவரை சொந்த மண்ணில் இருந்து வெளியேற எது உந்தியது? சில சாதி அமைப்புகளால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் எதிர்க்கப்பட்டது எதற்காக? கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? இதற்கான பதில்கள் கொங்கு மண்டலத்தில் சாதியத்தின் தாக்கத்தை விளக்கும்.

இவற்றுக்கெல்லாம் பலம் சேர்ப்பதுபோல், சாதி அமைப்புகள், சமூக வலைத்தளங்கள் தங்களது வகுப்புவாத தர்க்கங்களை பெரும் பிரிவினரிடம் எடுத்துச் செல்ல வெகு நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்கின்றன.

கொங்கு மண்டலத்தின் சாதியம் குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கொங்கு மண்டலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தோற்றப்பிழை. கொங்கு மண்டலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநேரங்களில் சத்தமில்லாமலும், பல நேரங்களில் மிகுந்த வன்மத்துடன் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பெருமாள் முருகனின் புறக்கணிப்பும், கோகுல்ராஜின் படுகொலையும் போதும் ஆதிக்க சாதியினரின் எண்ண ஓட்டத்தை எடுத்துரைக்க" எனத் தெரிவித்துள்ளார்.

அறியப்படாத அருந்ததியர்...

தலித் சமூகத்தின் இரு பெரும் பிரிவினரான பள்ளர், பறையர் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகளவில் இருக்கின்றனர். கல்வியும், நிலமும் பள்ளர்களுக்கு ஒரு விதத்தில் சமூக அந்தஸ்தை அளித்திருக்கிறது என்றால், வடக்குப் பகுதியில் சில தலித் தலைவர்களால் பறையர் இனத்தவர் அரசியல் அடையாளம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவர்கள் இருவருக்கும் கிடைத்த இந்த அடையாளம்கூட அருந்ததியர் இனத்தவருக்கு கிடைக்கவில்லை. அருந்ததி இனத்தவர்கள் இன்னமும் இச்சமூகத்தினரால் அறியப்படவில்லை. அருந்ததி இனத்தவர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அருந்ததி இனத்தவரை இழிவுபடுத்தும் சொலவடைகள் கொங்கு மண்டலத்தில் பரவலாக, சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன.

அருந்ததி இனத்தவர் புறக்கணிப்பு குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலையீடு அரசின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், கோகுல்ராஜூக்கு ஏற்பட்ட நிலை கொங்கு மண்டலத்தில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்ததால், விவகாரம் இதே அளவிளான வீச்சை பெற்றிருக்கும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது" எனக் கூறியுள்ளார்.

அதேவேளையில் கொங்கு மண்டலத்தின் போக்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கே.சுப்பராயன் கூறும்போது, "கொங்கு மண்டலத்தை தென் மண்டலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது. கொங்கு மண்டலத்தில், அண்மைகாலமாக உருவாகிவரும் சாதிய அடக்குமுறைகளுக்கு சில சாதிய சக்திகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே காரணம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது "ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த பிராமண, தலித் தோழர்கள் கொங்கு மண்டல ஜவுளி தொழிற்சாலைகளில் பாகுபடின்றி பழகுவதையும், சமமாக அமர்ந்து உணவு உட்கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன். உழைக்கும் வர்க்கத்தினரிடம் எந்த பாகுபாடும் இல்லை.

ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்க்காது என்பதால் அவர்களே உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் வகுப்புவாதத்தை தூண்டுகின்றனர். மாஞ்சோலை, வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே. ஆனால், காலப்போக்கில் அரசியல் அடையாளத்துக்கான வேட்கை தொழிலாளர்கள் சாதி சார்ந்த யூனியனில் இணைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
09-07-2015

Saturday, June 27, 2015

கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்



தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற்கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்...

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)


Thursday, June 25, 2015

சாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை!



திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த கோகுல் ராஜ் வேறொரு வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் உதவி
ஜூனியர் விகடன்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. காதலிப்பது குற்றம் என்றால் சட்டம் போட்டு அதனை தடை செய்யுங்கள். அல்லது காதலர்களை பிரித்து விடுங்கள். கொலை செய்வது எந்த வகையில் நியாயம்? அந்த தலித் இளைஞன் பெரிய ஆளாகி வயதான காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுவான் என்ற எதிர் பார்பில் இருந்த பெற்றோருக்கு என்ன பதிலை இந்த சமூகம் வைத்துள்ளது?

சாதி வெறி என்று ஒழியும் நமது சமூகத்தில்?

Monday, June 22, 2015

அமெரிக்காவில் நிற வெறி! சர்சில் புகுந்து 8 பேர் சுட்டுக் கொலை!





அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் உள்ள எமானுவேல் ஆப்ரிக்கன் சர்சில் புகுந்து கண்மூடித்தனமாக வெள்ளை இன இளைஞன் சுட்டதில் 9 பேர் இறந்துள்ளனர். டெய்லான் ரூஃப் என்ற வெள்ளை நிற இளைஞன் இந்த காரியத்தை செய்துள்ளான். நிற வெறியால் இந்த கொடூர கொலைகள் நடந்துள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். சொந்தங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பெயரும் வயதும்

Cynthia Hurd, 54

Rev Clementa Pinckney, 41

Rev Sharonda Coleman-Singleton, 45

Tywanza Sanders, 26

Ethel Lance, 70

Rev Depayne Middleton-Doctor, 49

Susie Jackson, 87

Rev Daniel Simmons Sr, 74

Myra Thompson, 59

தகவல் உதவி
பிபிசி
21-06-2015

கொலையை அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு நீதியைக் கொண்டு உதவி செய்யப் பட்டவராவார்.
(அல்-குர்ஆன் 17:33)

Wednesday, June 17, 2015

தலித் சிறுமியின் நிழல் மேல் சாதியினர் மீது விழுந்ததால் அடி உதை...



தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி :

உயர்சாதி பயில்வான் மீது தலித் சிறுமியின் நிழல் விழுந்ததாக கூறி அடி உதை

தலித் சிறுமியின் நிழல் ஒரு உயர்ந்த சாதி மனிதர் மேல் விழுந்ததாக கூறி அந்த சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர்.

இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் மத்திய பிரதேசம் கணேஷ்புரா கிராமத்தில் நடந்து உள்ளது. கடந்த் 13 ந்தேதி இது குறித்து காடி மல்ஹெர்ர போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யபட்டு உள்ளது. இந்த புகாரை சிறுமியின் தந்தை அளித்து உள்ளார்.

சிறுமி கிராமத்தில் இருந்த ஒரு குழாயில் தண்ணீர் எடுத்து கொண்டு வரும் போது உயர்சாதியை சேர்ந்த பூரண் யாதவ் என்ற பயில்வான் மீது சிறுமியின் நிழல் விழுந்து விட்டதாக கூறி சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பயில்வானின் குடும்பத்தை சேர்ந்த பெண்களும் சிறுமியை அடித்து உதைத்து இந்த தண்ணீர் குழாய்க்கு மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

யாதவ் குடும்பம் பதிக்கபட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்வதை தடுத்து உள்ளனர் ஆனால் அதையும் தாண்டி அவர்கள் வந்து புகார் கொடுத்து உள்ளனர்.

போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தினத்தந்தி
16.06.2015

http://www.dailythanthi.com/News/India/2015/06/16173542/MP-Dalit-Girl-Beaten-Up-As-Her-Shadow-Falls-On-

-----------------------------------------------------------------

Chattarpur(Madhya Pradesh): In a shocking incident, a minor Dalit girl was allegedly beaten up by higher caste women in Ganeshpura village in Chattarpur after the victim's shadow fell on a muscleman belonging to their family, police said on Tuesday.

The incident took place on June 13 and the complaint was also filed on the same day at Gadi Malhera police station, Additional Superintendent of Police (ASP), Neeraj Pandey said.

According to the complaint lodged by the girl's father, the problem began when his daughter was fetching water from a village hand pump and her shadow fell on muscle-man Puran Yadav (belonging to a higher caste) when he happened to pass from there, the ASP said.

The episode enraged the family of the muscle-man to such an extent that the women of the family severely beat the girl and threatened that if she was spotted again at the hand pump, they would kill her, he said.

Yadav's family also prevented the victim from going to police station, but they somehow managed to reach there.

A case under sections 323, 341, 506 of the IPC has been registered against the accused and further investigation is underway.

In several remote pockets of India, where untouchability is still prevalent, people from the lower caste are forbidden to come in contact with those belonging to the higher rung so much so that they can't share their food, cook for them or even look them in the eye. It is even forbidden for their shadow to fall on higher caste people, who consider it as defiling or polluting.

IBN live
16-06-2015

http://www.ibnlive.com/news/india/madhya-pradesh-dalit-girl-beaten-up-as-her-shadow-falls-on-high-caste-muscleman-1007282.html

http://www.hindustantimes.com/bhopal/dalit-girl-beaten-up-after-her-shadow-spoils-upper-caste-man-s-lunch/article1-1359380.aspx

Tuesday, June 16, 2015

பிராமணாள் போட்ட அப்பளம் வாங்கறீங்களா!



சூத்திரன்: அய்யரே.... அது என்ன பிராமணாள் செய்த அப்பளம்?

அய்யர்: மத்த சாதி பெண்கள் செய்தால் எங்களுக்கு தீட்டுடா அம்பி.... அதான்..

சூத்திரன்: எங்க வீட்டு பெண்கள் செய்த அப்பளத்தை சாப்பிடக் கூடாது என்று கும்புடற சாமி சொல்லிச்சா... ஆதாரம் காமிங்க சாமி....

அய்யர்: சாமி சொல்லலடா... உங்க ஆத்துல சுத்த பத்தமா இருக்க மாட்டேள்.... அதான் காரணம்.

சூத்திரன்: நீங்க எங்க வீட்டுல வந்து பாத்திங்களா சாமி...

அய்யர்: நான் வீட்டுக்கு வரலேண்ணாலும் ரோட்டில் பார்க்கிறேனே.... அழுக்கு பிடித்த உடைகள். ஒரே வியர்வை நாத்தம்.... எப்படிடா சாப்பிட முடியும்?

சூத்திரன்: அய்யரே! உங்க ஆளுங்க எப்படியாவது ஆபீஸ் வேலையை புடுச்சுகிறீங்கோ... எங்க ஆளுங்க படிச்சு வந்தாலும் வேலை தர மாட்டேங்கறீங்கோ.... ஒண்ணு ரெண்டு பேர் இட ஒதுக்கீட்டில் அலுவலக வேலைக்கு வந்தாலும் எங்க ஆளுங்களுக்கு உரிய மரியாதை தர மாட்டேங்கிறீங்கோ....

பல உண்மைகள் வெளி வருவதை பார்த்து சுதாரித்த அய்யர் வேகமாக நடையை கட்டுகிறார்.