Followers

Sunday, January 19, 2020

சேட்டன்களுக்கு ஒரு சபாஷ்

சேட்டன்களுக்கு ஒரு சபாஷ்
பள்ளிவாசலில் இந்து திருமணம்
இந்து முறைபடி திருமணம் நடத்தி வைத்த பள்ளி ஜமாத்தார்கள்.
மனிதநேயத்திற்க்கும் மத நல்லிணக்கத்திற்க்கும் எடுத்துகாட்டாய் விளங்கிய அபூர்வ திருமணம்
கேரள காயங்குளம் சேராவள்ளி கிராமத்தை சேர்ந்த அசோகன் பிந்து தம்பதிகளின் மகள் அஞ்சு. அஞ்சுவிற்கு சரத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அசோகன் காலமாகி குடும்பம் கஷ்டத்தில் இருந்ததால்,
தன்னுடைய மகளின் திருமணத்திற்கு உதவி செய்யுமாறு அண்டை வீட்டுக்காரரான நஜுமுதின் உதவியை நாடினார் பிந்து.
சேராவள்ளி ஜமாத் நிர்வாகியான நஜுமுத்தீன், ஜமாத் சார்பாகவே இந்த திருமணத்தை நடத்தி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
மணமகளுக்கு 10 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததோடு, திருமண செலவையும் ஏற்றெடுத்து, சேரப்பள்ளி ஜும்மா மசூதி மண்டபத்திலேயே இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. ஜமாத்தார்களே வந்திருந்த அனைத்து மக்களுக்கும் விருந்து அளித்து உபசரித்ததை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
இத்திருமண நிகழ்வை அறிந்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அன்போடு பழகி சுக துக்கங்களில் பங்கு கொண்டு வாழும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து நாட்டை பிளவுபடுத்த பாசிசவாதிகள் முயலுகின்றனர். இந்நேரத்தில் இந்நிகழ்வு இந்துத்வாவாதிகளுக்கு சிறந்த பதிலை கொடுத்துக் கொண்டுள்ளது.


1 comment:

Dr.Anburaj said...

ஒருநல்ல சம்பவம்.

இசுலாம் இனியமார்க்கம்.உண்மை மார்க்கம் என்று கருதி இந்து குடும்பம் முஸ்லிம் பணக்காரர்களிடம் உதவி கேட்கவில்லை.

அவர்களும் காபீர்கள் கேட்டுவிட்டார்கள் கெர்டுத்து நமது சமூக கெத்தை காட்டுவோம் என்று காட்டவில்லை.
உதவி செய்யக் கூடிய தகுதி படைத்தவன் தேவையானவர்களுக்கு செய்வது தர்மம்.
தொண்டு.புண்ணியம் தரும் வேள்வி. அதை அந்த முஸ்லீம் பெரியவர்கள் செய்துள்ளாார்கள்.
இதுபோல் நாட்டில் ஆயிரம் நடக்குது. வாழ்க மணமக்கள்.வாழ்க உதவிட்ட நல்ல உள்ளங்கள்.