Followers

Sunday, January 05, 2020

ஜேஎன்யுவுக்காக நிற்பது! இந்தியாவுக்காக நிற்பது!

ஜேஎன்யுவுக்காக நிற்பது

இந்தியாவுக்காக நிற்பது!
~
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கியே ஜே.என்.யு மேல் அது ஒரு கண்ணாகவே இருந்தது. ஏனென்றால் ஜெஎன்யூவின் பாரம்பர்யம் வித்தியாசமானது. சனநாயகத்தன்மை மிக்கது.
இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடியவர்கள் ஜேஎன்யூ மாணவர்கள்.
இப்போராட்டத்துக்காக மாணவர்களை திகார் சிறையில் வைத்தது இந்திரா அரசு. இருந்தபோதும் இந்திரா, மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஜென்யுவில் போராட்டம் ஏற்பட்டபோது மாணவர்களை நேரில் சந்தித்தனர்.
இன்று பிரதமர் மோடிக்கு அந்த மாண்பு இல்லை.
ஒருமுறை மொரார்ஜி ஜெஎன்யுவை கலைத்துவிடலாமா? என்றுகூட யோசித்ததுண்டு! அந்த அளவு அரசியல்வாதிகள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது ஜேஎன்யு!
ஜெஎன்யு வில் சனநாயகம் தழைத்தோங்குகிறது. அங்கு தேர்தல் நடத்தும் முறையே அலாதியானது. 15 நாட்கள் விவாதம், உரையாடல் நடக்கும். அவை தத்துவங்களுக்கான அலசலாக,தெளிவாக இருக்கும்.
பெரும்பாலும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களே,ஜெஎன்யுவின் மாணவர் தலைவரானார்கள்.
ஜேஎன்யு ஆர்டியன்ஸ் என்றே தனியான நெறிமுறைகள் இப் பல்கலைக்கென்று உள்ளது.
இங்கு இந்தியாவின் எந்த பகுதி மாணவர்களும் அவர்களது தாய்மொழியிலேயே நுழைவுத் தேர்வை எழுத முடியும்.
பால் ஏற்றத் தாழ்வுகள் விவரிவாக விவாதிக்கப்பட்டு அவை களையப்பட்டிருக்கின்றன.
ஆண், பெண் மாணவர்களுக்கிடையே இங்கு சமத்துவம் நிலவுகிறது.
முழுமையான இட ஒதுக்கீடு இங்கு பின்பற்றப்படுகிறது.
தாழ்த்தப்பட்டவர், மலைவாழ் மாணவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
இவையே இப்பல்கலைமீது சங்பரிவார்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படக் காரணம்!
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி, சீத்தாராம்யெச்சூரி போன்றோர் இங்கு படித்தவர்களே! நிர்மலா சீத்தாராம், ஜெய்சங்கர் போன்ற தற்போதைய அமைச்சர்களும் இதன் மாணவர்களே.
இந்தியாவின் மாண்புகள் அழிகிற போதெல்லாம் ஜெஎன்யு விழித்து போராடியிருக்கிறது.
தற்போது கல்விக் கட்டணம், விடுதிச் சட்டங்களில் திருத்தம் போன்றவற்றிற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
வலதுசாரி ஊடகங்கள் வழக்கம்போல மாணவர்களுக்கு எதிராக விஷத்தை கக்கி அவர்கள் மீது தவறான அபிப்ராயத்தை பொதுவெளியில் உருவாக்கியது.
ஆனாலும் ஜேஎன்யு போராட்டம் கவித்துவமாக, கவனக் கோரலாகவே நடைபெற்றது. கருத்தைக் கவரும் வாசகங்கள் அடங்கிய தட்டிகள், கேலிச்சித்திரங்கள், நாடகங்கள், உரைகள் என பல வடிவங்களில் இந்தப் போராட்டம் இருந்தது.
கடந்த பா.ஜ.க ஆட்சியில் மாணவர் தலைவர் கன்ஹையாகுமார் மற்றும் அவரது தோழர்கள், இடதுசாரி மாணவர்கள் தாக்கப்படுவதற்கு சங்பரிவார் கூட்டம் காரணமாக இருந்தது.
இப்போது மாணவர் தலைவர்
ஒய்ஷி கோஷ் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
சங்பரிவார் கூட்டத்துக்கு ஜெஎன்யுவின் கதவுகளை திறந்துவிட்டதில் மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது. ஹெச்.ராஜா ஓரிரு நாட்களுக்கு முன்தான் மாணவர்கள் விடுதியில் குண்டு வீசுவோம் என்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை, பாபர் மசூதி தீர்ப்பு, குடியுரிமை திருத்தம், கல்வி காவி மயமாவது என அனைத்துக்கும் JNU போராடியுள்ளது.
அதாவது, அது இந்தியாவுக்காக போராடியுள்ளது. நாங்கள் இந்துக்களுக்காக போராடுகிறோம் என்பவர்கள் JNU மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்.
சங்பரிவார் கூட்டம் பார்ப்பன, பனியா உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் நலனையே இந்து நலன் என்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இந்தியாவுக்காக போராடுபவர்களோடு இருப்போம்!
-Karikalan R


1 comment:

Dr.Anburaj said...

அந்த அளவு அரசியல்வாதிகள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது ஜேஎன்யு!
பதில் தவறு.மாணவர்களின் ஒரே குறி படிப்பது.தகுதியை உயா்த்துவது.

ஆட்சி சம்பந்தப்பட்ட விசயங்களில் தலையிட்டு ஏதையம் சாதிக்க முடியாது.தோ்தல்தான் அதை சாதிக்க முடியும். முட்டாள்தனமாக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு காரணம் குழு ஆதிக்கம் குழு அகம்பாவம்.இப்படிப்பட்ட முட்டாள் கூட்டங்களை திரு.மோடி அவர்கள் கண்டு கொள்ள மாட்டாா்.
-------------------------------------
தாழ்த்தப்பட்டவர், மலைவாழ் மாணவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு. இவையே இப்பல்கலைமீது சங்பரிவார்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படக் காரணம்!

பதில் முட்டாள்தனமாக பேசுவதில் வல்லவா் சுவனப்பிரியன்.சுவனத்திரல் கிடைப்பது பெண்கள் உடல்தான்.ஒரு அணுக்கு 73 பெண்கள். சுவனப்பிியன் என்றால் பெண்கள் பிரியன் என்று அர்த்தம்.சங்பரிவாா் அமைப்புகள் இடஒதுக்கீடுக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.ஆகவே தவறான செய்தியை பரப்புவதால் யாரும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை.
-------------------------------------
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை, பாபர் மசூதி தீர்ப்பு, குடியுரிமை திருத்தம், கல்வி காவி மயமாவது என அனைத்துக்கும் JNU போராடியுள்ளது

பதில் பாராளுமன்றத்தின் முடிவு, மக்கள் பிரதிநிதிகளின் முடிவுகளில் தலையிட இந்த சிறு குழந்தைகளுக்கு என்ன தகுதி ? பணமதிப்பு இழப்பால் யாருக்கும் தீமையில்லை.பாக்கிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய பணத்தை அச்சிட்டுவந்த அச்சகங்கள் முடப்பட்டுள்ளது. வேறு என்ன நட்டம்.

முத்தலாக்கிற்கு மட்டும் அல்ல நிக்கா ஹலாலா விற்கும் விரைவில் தடை வரப்போகின்றது.

முஸ்லிம் பெண்கள் ஒரு தாயாக முஸ்லிம் ஆண்கள் ஒரு தந்தை நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தை வரவேற்று வருகின்றார்கள். வெண்டி தலிபான் கூட்டம் ஏதோ கூச்சல் போட்டு வருகின்றது. சுவனப்பிரியனும் ஒரு முட்டாள்தான்.
----------------------------------------------------------------
மாணவர்களின் குறி படிப்பதும் கல்வித்தகுதியை உயா்த்திக் கொள்வது மட்டும்தான்.பாராளுமன்றத்தை கேள்வி கேட்பது.... நியாயமானது அல்ல.