Followers

Tuesday, December 27, 2022

சவுத் ஆப்ரிக்கா...

 சவுத் ஆப்ரிக்கா...


ஆப்ரிக்கா கருப்பர்களின் பூர்வீக பூமி. வெள்ளையர்கள் தொழில் செய்வதற்காக குடியேறுகிறார்கள். அந்த மக்களை அடிமைகளாக்கி வெள்ளையர்கள் பெரும் பதவிகளில் அமருகிறார்கள். முடிவில் 'வெள்ளையர்கள் மட்டும்' என்று ஆங்காங்கே போர்டுகள் வைத்து கருப்பர்களை குளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. இன்றும் இது தொடர்கிறது. அதைத்தான் இந்த காணொளியில் பார்க்கிறோம்.


இதையே தமிழகததுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 4000 வருடங்களுக்கு முன்பு கைபர் கணவாய் வழியாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய கூட்டம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களை  கைக்குள் போட்டுக் கொண்டு  இங்குள்ள தமிழர்களை தீண்டத்தகாதவர்களாக மாற்றி அக்ரஹாரம் என்று உருவாக்கி மண்ணின் மைந்தர்களை ஒதுக்கி வைத்தனர். குளத்தில் குளிக்கவோ தண்ணீர் எடுக்கவோ தடுக்கப்பட்டனர். பெண்களின் மார்புக்குக் கூட வரி விதித்தனர். தங்கள் வீட்டு பெண்களின் மார்பை மறைத்து மண்ணின் மைந்தர்களின் மார்பை மறைக்க தடை விதித்தனர். சூத்திரன் பார்பனன் என்று மனிதர்களை பிரித்து சுக போக வாழ்வு இன்று வரை வாழ்கின்றனர்.


நாடும், மொழியும், இனமும் மாறினாலும் சனாதனம் என்பது உலகில் பொதுவாக உள்ளது. அரேபிய நாடுகளிலும் இதை விட மோசமாக இருந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்பு. நபிகள் நாயகத்தின் போதனையால் மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற எண்ணம் அந்த மக்களிடம் ஏற்பட்டு இன்று கருப்பர்களும் வெள்ளையர்களும் முஸ்லிம் என்ற ஒரு கோட்டுக்குள் வந்துள்ளனர். தமிழகத்திலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கிராமங்களில் இன்றும் அந்த அதிசயத்தைக் காணலாம்.












No comments: