Followers

Showing posts with label FRANCE. Show all posts
Showing posts with label FRANCE. Show all posts

Saturday, December 26, 2015

'கோர்ஸிகா' தீவில் பள்ளிவாசலை தாக்கிய விஷமிகள்!




ஃப்ரான்ஸூக்கு சொந்தமான கோர்ஸிகா தீவில் உள்ள முஸ்லிம்களின் வணக்கத் தலத்தை கும்பலாக வந்த விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இது சென்ற வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது.

ஃப்ரான்ஸ் பிரதமர் மேனுவல் வேல்ஸ் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். 'இது பொன்ற செயல்களை ஃப்ரான்ஸ் கண்டிப்பாக அனுமதிக்காது. சட்டத்தை மதிக்காதவர்கள் தண்டிக்கப்படுவர்' என்று அறிவித்துள்ளார்.

பள்ளி வாசலை இடிப்பதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று விஷமிகள் நினைக்கின்றனர். எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்ததாக சரித்திரம்.

தகவல் உதவி
NDTV
26-12-2015

Tuesday, November 24, 2015

'நான் செத்து பொழச்சவன்டா!' - மொராக்கோ யுவதி




ஃப்ரான்ஸில் வசித்து வரும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபீலா தனது புகைப்படத்தை பெரும்பாலான பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 'பாரிஸ் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரி' என்ற தலைப்பில் இவரது புகைப்படம் உலகெங்கும் வலம் வந்து கொண்டுள்ளது. இது பற்றி அவர் கூறும் போது...

'எனக்கும் தீவிரவாத கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில நாட்களுக்கு முன் நானும் எனது தோழியும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். அதில் ஒன்றை எனது தோழி பத்திரிக்கையாளருக்கு காசுக்கு விற்றுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் தானும் காசு பார்க்க எனது பெயரை 'தற்கொலை குண்டுதாரியாக' மாற்றியுள்ளார். உயிரோடு நான் இருக்கும் போது இறந்தது யார்?

நான் சிறுமியாக இருக்கும் போது மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்தது எனது குடும்பம். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எனது வாழ்வு இப்போது கேள்விக் குறியாகி உள்ளது. பயத்தில் சில நாட்களாக நான் வேலைக்கும் செல்லவில்லை' என்கிறார் நபீலா!

அட விபசார ஊடகங்களா? காசு பண்ணுவதுதான் உங்களின் குறிக்கோள் என்றால் அப்பாவி பெண்ணின் வாழ்வோடு ஏனடா விளையாடுகிறீர்கள்? உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்கு எதிராக திரும்பியுள்ளன. ஆனால் இதையும் கண்டிப்பாக கடந்து செல்லும் இஸ்லாம்.

தகவல் உதவி
என்டிடிவி
24-11-2015

ஏக இறைவனை மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. அல்லாஹ், நம்பிக்கை கொண்டோருடன் இருக்கிறான்.

குர்ஆன்: 8:19

Wednesday, September 16, 2015

ஃப்ரான்சில் மேலாடையை கழற்றி பெண்கள் ஆர்ப்பாட்டம்!



சென்ற சனிக்கிழமை ஃப்ரான்ஸில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது. திடீரென 'ஃபெமின்' என்ற பெண்கள் அமைப்பைச் சார்ந்த இரண்டு பெண்கள் மேலாடை இன்றி மேடையினுள் புகுந்து மைக்கை வீசி எறிந்தனர். 'எங்களை யாரும் கட்டுப் படுத்த முடியாது' 'நான் தான் எனக்கான இறைத் தூதர்' என்ற வாசகங்களை உடலில் எழுதிக் கொண்டு காட்டுக் கூச்சலை எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விழா குழுவினர் உடன் அந்த இரண்டு பெண்களையும் அரங்கத்திலிருந்து கட்டாயப் படுத்தி வெளியேற்றினர்.

இஸ்லாம் இவர்களை எந்த அளவு கோபப்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது. மேலாடையின்றி அரங்கினுள் புகுந்த இந்த விபசாரிகளுக்கு பெயர்தான் பெண் உரிமையை பேணுபவர்கள் என்ற பெயராம். இதுதானா பெண்ணுரிமை. தாய்மைக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கழிசடைகள் இவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காத விஷமிகள் இந்த பெண்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இந்த பெண்களுக்கும் நேர் வழி கிடைக்க நாம் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
க்ளோபல் நியூஸ்
14-09-2015

Sunday, April 05, 2015

ஃப்ரான்ஸ் ஆட்சியாளர்களை ஆச்சரியப்படுத்தும் இஸ்லாம்!




சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டவுடன் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தற்போது தலைகீழாக மாறியுள்ளது. முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், போகோ ஹராம் என்று பல தீவிரவாதக் குழுக்களை இஸ்லாமிய எதிரிகள் ஏற்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த நினைத்தனர். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது. நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் இன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் செல்கின்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்கிறது.

ஃபிளாசபி மேகசின் (Philosophie magazine) என்ற பத்திரிக்கையின் டைரக்டர் ஃபேப்ரிக் ஜெர்சல்(fabric gerchel) கூறுகிறார் 'தற்போது ஃப்ரான்ஸில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மிக வேகமாக விற்பனையாகின்றன. பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பிறகு இந்த விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் குர்ஆனின் மொழி பெயர்ப்பு விற்பனையானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது'


Mathilde Mahieux, of La Procure chain of bookshops என்ற புத்தக நிறுவனமானது மத சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டுமே அச்சிட்டு விநியோகிக்கும் ஒரு நிறுவனம். இவர்கள் கூறுவதாவது 'ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற அமைப்புகள் எதை செய்தாலும் 'அல்லாஹூ அக்பர்' என்று கூறி பல கொலைகளை செய்கிறார்களே. உண்மையில் குர்ஆன் இதனைத்தான் போதிக்கிறதா? என்று தேடுதலில் பல மக்கள் ஈடுபடுகின்றனர். ஆய்வு செய்வதற்காக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றையும், குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும் ஃப்ரான்ஸ் மக்கள் அதிகமதிகம் வாங்கிச் செல்கின்றனர். இந்த எழுச்சியை முன்பு நாங்கள் கண்டதில்லை' என்கின்றனர்.

'அல்புராக்' என்ற பெயரில் புத்தக பப்ளிசராக பணிபுரியும் இஸ்லாமியரான மன்சூர் கூறுகிறார் 'தற்போது இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு நிலைமை எவ்வாறு இருந்ததோ அது போன்ற நிலையை நான் தற்போது பார்க்கிறேன்' என்கிறார்.

Yvon Gilabert யுவான் கிளாபர்ட் வெஸ்டர்ன் ஃப்ரான்ஸில் புத்தக கடை நடத்தி வருபவர். அவர் கூறுகிறார் 'கத்தோலிக்க பெண் ஒருவர் என்னிடம் வந்து குர்ஆனின் மொழி பெயர்ப்பு கேட்டார். 'நீங்கள் கத்தோலிக்கர் ஆயிற்றே! குர்ஆன் எதற்கு' என்று கேட்டேன். 'குர்ஆன் உண்மையில் வன்முறையைத்தான் போதிக்கிறதா' என்பதை ஆய்வு செய்வதற்காக இதனை வாங்குகிறேன்' என்கிறார்.

சென்ற மார்ச் மாதம் ஃப்ரான்ஸ் புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தமாக கருதப்பட்டது “A Christian Reads The Koran,” என்ற புத்தமாகும். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஜீன் ராய் சர்போர்ன் பல்கலைக் கழகத்தில் புரபஸராக வெலை செய்து வருகிறார். இவர் தனது அனுபவத்தைப் பகிரும்போது 'ஓரிறைக் கொள்கை என்ற தத்துவமானது பொதுவாக எல்லோரும் ஒத்துக் கொண்ட ஒன்று. தற்போது குர்ஆனை ஆழ்ந்து படித்து வருகிறேன். இனி எனது கல்லூரி பாடங்களில் குர்ஆனும் இடம் பெறும்' என்கிறார்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
04-04-2015

இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

Wednesday, February 11, 2015

போகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை?



நைஜீரியாவின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமான போகோ ஹராமில், வெள்ளையின பிரெஞ்சுப் படையினருக்கு என்ன வேலை?

கமெரூன் நாட்டின் வட பகுதியில், போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும், கமெரூன் அரச படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில், எட்டுப் பிரெஞ்சுப் படையினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது, கமெரூன் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எட்டு வெள்ளையின பிரெஞ்சுப் படையினரை விடுவிப்பதற்கு பிரெஞ்சு அரசு முயன்று வருகின்றது.

கமெரூன் அரசைத் தொடர்பு கொண்ட பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் Fabius, அந்த எட்டுப் போரையும் உடனடியாக விடுவித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார். அவர்களுக்கு பிரான்சில் விசாரித்து தண்டனை வழங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

கமெரூன் அரச படையில் அவர்களின் உதவிக்காக ஃப்ரெஞ்சுப் படை சென்றது என்றாலாவது அதில் அர்த்தம் இருக்கும். ஆனால் போகோ ஹராமுக்கு ஆதரவாக இந்த ஃப்ரெஞ்சுப் படை செயல்பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு தெரிவது போகோ ஹராம் என்ற பெயரில் பல அநியாயங்களை நிகழ்த்துவது. அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது. உலகுக்கு இஸ்லாம் தீவிரவாத இயக்கம் என்ற அவப் பெயரை ஏற்படுத்துவது என்பது இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

நாம் முன்பே கூறி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், இந்தியன் முஜாஹிதீன் இது போன்ற இஸ்லாமிய பெயரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் எல்லாம் யூதர்களின் வேலை என்று பல முறை சொல்லியிருக்கிறேன். அது உண்மைதான் என்பது இந்த ஃப்ரெஞ்சுப் படையினரின் கைது உறுதிப் படுத்துகிறது.

மனிதனை உயிரோடு எரிப்பதும், மனித தலையை வெட்டி அதனை இணைய தளத்தில் விடுவதும், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அந்த இடத்தில் 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி விட்டு மறைந்து கொள்வதும் குர்ஆனை பின் பற்றும் இஸ்லாமியன் கண்டிப்பாக செய்ய மாட்டான்.

இஸ்லாத்தின் வளர்சியை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுப் படுத்த இது போன்ற அராஜகங்களை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு நடத்துகின்றன. முஸ்லிம்களை அதில் சிக்க வைக்க திறம்பட காய்களை நகர்த்துகின்றன. ஆனால் இதனால் எல்லாம் இஸ்லாத்தின் வளர்சியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. மன அமைதியின்றி தவிக்கும் அமெரிக்க ஐரோப்பிய மக்களுக்கு இஸ்லாம் ஒன்றுதான் நிரந்தர தீர்வை தரும் என்று உரக்க சொல்வோம்.

இந்தத் தகவலை ஆப்பிரிக்காவில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளங்கள் வெளியிட்டுள்ளன.

L’armée Camerounaise arrête 8 soldats français combattant aux cotés de Boko Haram

http://africeleb.com/larmee-camerounaise-arrete-8-soldats-francais-combattant-aux-cotes-de-boko-haram/

தகவல் உதவி
கலையரசன்

Wednesday, January 21, 2015

அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது!




பெயரிலேயே குள்ள நரித் தனத்தைக் கொண்டுள்ள அமெரிக்க செய்தி ஸ்தாபனம் ஃபாக்ஸ் நியூஸ் சில நாட்களுக்கு முன்பு பாரிஸிலும் இங்கிலாந்திலும் சில ஏரியாக்கள் 'முஸ்லிம்களுக்கான ஏரியாக்களாக சொந்தமாக்கப்பட்டு விட்டது' என்று கூறியது. பாரிஸிலும் இங்கிலாந்திலும் குறிப்பிட்ட சில ஏரியாக்களில் முஸ்லிம் அல்லாதவர்களோ, காவல் துறையினரோ நுழைய முடியாத படி அறிவிக்கப்படாத ஒரு தடை உள்ளது என்று தனது செய்தியில் குறிப்பிட்டது. சில பகுதிகள் ஆப்கானிஸானிலும் ஈராக்கிலும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்றும் ஆதங்கப்பட்டிருந்தது.

செக்யூரிடி அனலைஸ் ஸ்டீவன் எமர்ஸன் சில நாட்களுக்கு முன்பு சொன்னதாவது 'இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் முஸ்லிம் அல்லாதவர்கள் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அறிவிக்கப்படாத தடை ஒன்று அந்த ஏரியாக்களில் உள்ளது' என்ற விஷக் கருத்தை விதைத்தார். இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் 'எமர்ஸன் கருத்து முற்றிலுமாக முட்டாள்தனமானது' என்று காட்டமாக விமரிசித்தார். இங்கிலாந்து பிரதமரின் இந்த பேச்சானது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. உண்மையை உரத்துச் சொன்ன பிரதமரை பாராட்டுவோம்.

உலகின் பல இடங்களிலும் இந்த செய்திக்கு எதிர்ப்பு கிளம்புவதைக் கண்ட ஃபாக்ஸ் நியூஸ் 'செய்தி சேகரிப்பில் சில இடங்களில் தவறு நடந்து விட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம்' என்று பல முறை இந்த மன்னிப்பை வெளியிட்டது.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள எங்கள் ஊரிலும் மாற்று மதத்தவர்கள் அதிகம் வருவதில்லை. காவல் துறையினரும் எங்கள் ஊருக்கு வந்ததில்லை. காய்கறி விற்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும்தான் மாற்று மதத்தவர்களாக எங்கள் கிராமங்களில் பார்க்க முடியும். இதற்கு காரணம் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் வசிப்பதே. அடுத்து இந்து மத கிறித்தவ மத கலாசாரங்களுக்கும் இஸ்லாமிய காலசாரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதும் காரணம். மற்றபடி திருமணம் இறப்பு போன்ற சுக துக்கங்களில் அனைத்து மதத்தவரும் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தியே வருகிறார்கள். சில நேரங்களில் இந்துத்வாவாதிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு பல கிராமங்கள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன என்ற அச்சத்தை வெளியிடுகின்றனர். அதே போன்ற தவறான ஒரு செய்தியை வெளியிட்டு ஃபாக்ஸ் நியூஸூம் தனது மன்னிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

குற்றம் நடக்கும் இடத்தில் தானே காவலருக்கு வேலை இருக்கும்? பொதுவாக இஸ்லாமிய கிராமங்களில் எழும் சிறு பூசல்களை எல்லாம் ஜமாத்துகளே கண்டித்து சரி செய்து விடுவார்கள். எனவே வெகு அரிதாகத்தான் இஸ்லாமிய கிராமங்களுக்கு காவல் துறையினர் வருவதை தமிழகத்திலும் நாம் பார்க்க முடியும். இதே போன்றுதான் ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் நகரங்களில் காவலர்களுக்கு வேலையில்லாமல் இருக்கிறது. குற்ற செயல்களும் அதிகம் நடைபெறுவதில்லை. மேற்கத்திய கலாசாரத்தில் ஊறிப் போன அந்த நகரங்கள் இன்று இஸ்லாமியர்களால் புனிதமடைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

இந்துத்வாவாதிகளின் எண்ணமும் யூதர்களின் எண்ணமும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை இங்கும் நாம் பார்க்கிறோம். :-)