Followers

Showing posts with label இஸ்ரேல். Show all posts
Showing posts with label இஸ்ரேல். Show all posts

Tuesday, October 13, 2015

மனைவியையும் மகளையும் பறி கொடுத்த பாலஸ்தீனியர்!



கடந்த 12 நாட்களில் 23 பாலஸ்தினியர்களை பாசிஸ இஸ்ரேலிய மிருகங்கள் கொன்று குவித்துள்ளன. வயிற்றில் குழந்தையுடன் இருந்த நூர் ஹஸன் என்ற தனது மனைவியையும் ரஹாப் என்ற இரண்டு வயது பெண் குழந்தையையும் ஒரே நேரத்தில் பறி கொடுத்த தந்தை கதறி அழும் காட்சி!

இறைவா! பாலஸ்தினத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவாயாக! அநியாயக்கார இஸ்ரேலிய அரசை அழித்தொழிப்பாயாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
12-10-2015

Thursday, October 08, 2015

அல் அக்ஸா பள்ளியில் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் தொழ தடை!



'அல் அக்ஸா மசூதியில் ஜூம்ஆ தொழுகைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களே வரமுடியும். பெண்களுக்கு வயது வித்தியாசம் இல்லை. ஆண்களில் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் தொழ வரக் கூடாது'

இவ்வாறு இஸ்ரேலிய செய்திப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களுக்கிடையே தொடர்ந்து பிரச்னை அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பு கூறுகிறது.

இறைவனை தொழ குறிப்பிட்ட வயதினர்தான் வர வேண்டும் என்று வந்தேறிகளான யூதர்கள் சொல்வது உலகிலேயே இஸ்ரேலில்தான் நடக்கும். இந்த மனித உரிமை மீறலைப் பற்றி எந்த நாடும் வாய் திறக்காது. எந்த ஊடகமும் வாய் திறக்காது.

உன்னை வணங்குவதற்கு கூட அனுமதி மறுக்கும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களை இறைவா! நாசமாக்குவாயாக!

இந்த ஜூம்ஆவில் பாலஸ்தீன மக்களுக்காகவும் நமது நாட்டு இந்துத்வ அராஜக ஆட்சிக்காகவும் ஒரு முடிவு கட்ட இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்திப்போமாக!

தகவல் உதவி
dailysabah.com
09-10-2015

Friday, August 28, 2015

குவான்டோனோமோ சிறைக் கொடுமை ஒரு அதிகாரியை மாற்றியது!



டெர்ரி ஹோல்ட் ப்ரோக் முன்பு கியுபாவின் குவாண்டோனோமோ சிறையில் அதிகாரியாக பணி புரிந்துள்ளார். அங்குள்ள கைதிகள் அனைவரும் அமெரிக்க அரசால் பொய் வழக்கு போட்டு கொண்டு வரப்பட்டவர்கள். பெரும்பான்மை கைதிகள் அனைவரும் இஸ்லாமியர்களே! அமெரிக்கா அத்து மீறி நுழைந்த நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் சுதந்திர வேட்கையால் சிறிய போராட்டம் நடத்தினாலும் அவர்களை கைது செய்து குவாண்டானோமோ கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். இஸ்ரேலியர் மற்றும் அமெரிக்கர்களின் கூட்டு சதியினால் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

சிறையில் அடைபட்டுள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழக் கூடியவர்கள். இந்த கைதிகள் தொழும் அழகையும் இவர்களின் பேசும் பண்பையும் கண்டு நெகிழ்ந்து போன அதிகாரி டெர்ரிக்கு இஸ்லாத்தின் மேல் இனம் புரியாத ஈர்ப்பு வந்துள்ளது. இந்த அதிகாரி குர்ஆனை படிக்கிறார். இஸ்லாமிய சட்டங்களை ஆய்வு செய்கிறார். முடிவில் இறை மார்க்கமான இஸ்லாத்தை 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக் கொள்கிறார். அது முதல் அங்கு அடைப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுவிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத சக ஊழியர்கள் இவரை கொலை செய்ய பலமுறை முயன்றார்களாம்.

'குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள இஸ்லாமியர்கள் மிகவும் துரதிஷ்டவாசிகள். நிம்மதியாக தொழ அனுமதிப்பதில்லை. இசையை தொடர்ந்து கேட்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக குளிரூட்டப்பட்ட அறைகளில் பல மணி அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இதை எல்லாம் நேரில் கண்டு தூக்கம் வராமல் பல முறை சிரமப்பட்டேன். இதனால் போதை மருந்தும் உட் கொண்டேன். மன நிம்மதி இழந்து தவித்தேன். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது அனைத்து தீய பழக்கங்களும் என்னை விட்டு அகன்று விட்டது. குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதே எனது லட்சியம். என்னால் முடிந்த வரை இதற்காக முயற்சிப்பேன்.

குர்ஆன் உலகிலேயே மிகவும் இலகுவாக எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு இறை வேதமாகும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதனை மிக இலகுவாக சொல்லிச் செல்கிறது குர்ஆன். இந்த அதிசயம் நம் கண் முன்னே நடந்து வருகிறது' என்று நெகிழ்வோடு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ஹோல்ட் ப்ரூக். தற்போது சிகரெட், மது, மங்கை, போதை வஸ்துகள் என்று அனைத்தையும் விட்டு தூரமாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா குவாண்டானோமோ சிறையை மூடி விடுவதாக தனது தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். நம் நாட்டு அரசியல் வாதியின் வாக்குறுதி போல் இன்று வரை அது நிறைவேறாமல் உள்ளது. டெர்ரி ஹோல்ட் ப்ரூக் குவான்டானோமோ சிறை வாசிகளுக்காக தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நன்கொடைகளும் வசூலித்து அவர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வருகிறார். சிறை வாசிகள் சீக்கிரம் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போம்.



தகவல் உதவி
நியூயார்க் டெய்லி நியூஸ்

http://www.nydailynews.com/news/national/gitmo-guard-converts-islam-demands-release-detainees-article-1.1357918

Saturday, August 22, 2015

மனதை கலங்க வைத்த புகைப்படம்!



இஸ்ரேலும் வல்லரசுகளும் சேர்ந்து செய்த சதியில் இன்று சிரியாவெங்கும் பற்றி எரிகிறது. வளைகுடாவில் ஆயுதத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது சிரியா. இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்தது. யூதர்கள் சதி வலை பிண்ணி இன்று சிரிய குடும்பங்களை சின்னா பின்னமாக்கி விட்டனர்.

தந்தையை பிரிந்து அழும் குழந்தை. இது போல் ஆயிரமாயிரம் சோகக் கதைகள். இங்கு சிரமத்தை ஏற்றுக் கொண்டாலும் நிரந்தர உலகமான மறுமையில் நிம்மதியாக இருப்பர். சகோதரர்களின் நல் வாழ்வுக்காக பிராரத்திப்போம் சகோதரர்களே!

Saturday, January 31, 2015

நெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்!



இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வின் மனைவி சாரா தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்காக இஸ்ரேலிய மக்களிடமிருந்து பொது நிதி திரட்டியுள்ளனர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை சாரா தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேலின் தினப்பத்திரிக்கைக்கு நெதன்யாஹூவின் விடு;டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெனி நேஃபாளி இந்த குற்றச் சாட்டை வைத்துள்ளார்.

சாரா நெதன்யாஹூ 4000 டாலர் பொது மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதாக இவரது குற்றச்சாட்டு உள்ளது. (இந்திய அரசியல்வாதிகளைப்போல் 100 கோடி 200 கோடி என்று சுருட்டாமல் மிக குறைந்த தொகையாக உள்ளதே. :-) ) நஃப்தாலி 20 மாதங்கள் நெதன்யாஹூவின் வீட்டில் வேலை செய்துள்ளார். நெதன்யாஹூவின் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும் இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். மார்க்கரெட் தாட்சர் இரங்கல் விழாவில் செலவழிக்கப்பட்ட தொகையிலும் கணிசமான தொகையை அம்மணி சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்மணி ப்யூட்டி பார்லருக்கு அதிகம் செலவழிப்பதாக நினைக்கிறேன். :-) இது அனைத்தும் இஸ்ரேலிய தினப் பத்திரிக்கை யூதியோத் ஆரோனாத் Yedioth Ahronoth தில் வந்துள்ளது. ஐஸ்கிரீம் சப்ளை செய்வது சம்பந்தமாக பட்ஜெட் தாக்கல் செய்ததில் நெதன்யாஹூ ஊழல் செய்துள்ளதாக முன்பு செய்தி வந்து இவருக்கு அரசியல் அரங்கில் பின்னடைவையும் ஏற்படுத்தியது. வரும் மார்ச்சில் இஸ்ரேலில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் நெதன்யாஹூவின் அரசியல் வாழ்வை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. பொறுத்திருந்து நல்ல செய்தியை எதிர்பார்போம்.

தகவல் உதவி

By Inna Lazareva, Tel Aviv

telegraph.co.uk

30 Jan 2015

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/israel/11379902/Israeli-PMs-wife-obsessively-recycled-bottles-for-cash.html

Wednesday, January 21, 2015

அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது!




பெயரிலேயே குள்ள நரித் தனத்தைக் கொண்டுள்ள அமெரிக்க செய்தி ஸ்தாபனம் ஃபாக்ஸ் நியூஸ் சில நாட்களுக்கு முன்பு பாரிஸிலும் இங்கிலாந்திலும் சில ஏரியாக்கள் 'முஸ்லிம்களுக்கான ஏரியாக்களாக சொந்தமாக்கப்பட்டு விட்டது' என்று கூறியது. பாரிஸிலும் இங்கிலாந்திலும் குறிப்பிட்ட சில ஏரியாக்களில் முஸ்லிம் அல்லாதவர்களோ, காவல் துறையினரோ நுழைய முடியாத படி அறிவிக்கப்படாத ஒரு தடை உள்ளது என்று தனது செய்தியில் குறிப்பிட்டது. சில பகுதிகள் ஆப்கானிஸானிலும் ஈராக்கிலும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்றும் ஆதங்கப்பட்டிருந்தது.

செக்யூரிடி அனலைஸ் ஸ்டீவன் எமர்ஸன் சில நாட்களுக்கு முன்பு சொன்னதாவது 'இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் முஸ்லிம் அல்லாதவர்கள் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அறிவிக்கப்படாத தடை ஒன்று அந்த ஏரியாக்களில் உள்ளது' என்ற விஷக் கருத்தை விதைத்தார். இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் 'எமர்ஸன் கருத்து முற்றிலுமாக முட்டாள்தனமானது' என்று காட்டமாக விமரிசித்தார். இங்கிலாந்து பிரதமரின் இந்த பேச்சானது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. உண்மையை உரத்துச் சொன்ன பிரதமரை பாராட்டுவோம்.

உலகின் பல இடங்களிலும் இந்த செய்திக்கு எதிர்ப்பு கிளம்புவதைக் கண்ட ஃபாக்ஸ் நியூஸ் 'செய்தி சேகரிப்பில் சில இடங்களில் தவறு நடந்து விட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம்' என்று பல முறை இந்த மன்னிப்பை வெளியிட்டது.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள எங்கள் ஊரிலும் மாற்று மதத்தவர்கள் அதிகம் வருவதில்லை. காவல் துறையினரும் எங்கள் ஊருக்கு வந்ததில்லை. காய்கறி விற்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும்தான் மாற்று மதத்தவர்களாக எங்கள் கிராமங்களில் பார்க்க முடியும். இதற்கு காரணம் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் வசிப்பதே. அடுத்து இந்து மத கிறித்தவ மத கலாசாரங்களுக்கும் இஸ்லாமிய காலசாரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதும் காரணம். மற்றபடி திருமணம் இறப்பு போன்ற சுக துக்கங்களில் அனைத்து மதத்தவரும் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தியே வருகிறார்கள். சில நேரங்களில் இந்துத்வாவாதிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு பல கிராமங்கள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன என்ற அச்சத்தை வெளியிடுகின்றனர். அதே போன்ற தவறான ஒரு செய்தியை வெளியிட்டு ஃபாக்ஸ் நியூஸூம் தனது மன்னிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

குற்றம் நடக்கும் இடத்தில் தானே காவலருக்கு வேலை இருக்கும்? பொதுவாக இஸ்லாமிய கிராமங்களில் எழும் சிறு பூசல்களை எல்லாம் ஜமாத்துகளே கண்டித்து சரி செய்து விடுவார்கள். எனவே வெகு அரிதாகத்தான் இஸ்லாமிய கிராமங்களுக்கு காவல் துறையினர் வருவதை தமிழகத்திலும் நாம் பார்க்க முடியும். இதே போன்றுதான் ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் நகரங்களில் காவலர்களுக்கு வேலையில்லாமல் இருக்கிறது. குற்ற செயல்களும் அதிகம் நடைபெறுவதில்லை. மேற்கத்திய கலாசாரத்தில் ஊறிப் போன அந்த நகரங்கள் இன்று இஸ்லாமியர்களால் புனிதமடைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

இந்துத்வாவாதிகளின் எண்ணமும் யூதர்களின் எண்ணமும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை இங்கும் நாம் பார்க்கிறோம். :-)


Saturday, August 16, 2014

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது யூதர்களா?



நெதர்லாந்தின் அரசுத் துறையில் பணி புரியும் யாஸ்மினா ஹைஃபீ ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் பதிந்துள்ளார். 'இஸ்லாத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாத்தின் பெயரை உலக அளவில் களங்கப்படுத்துவதற்காக யூதர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு' - இதுவே அந்த பெண்மணி பதிந்த செய்தியின் சாரம். செய்தியை ட்விட்டரில் பதிந்த இந்த பெண்மணி யூதர்களால் மிரட்டப்பட்டுள்ளார். உண்மை வெளி வந்து விட்டதே என்ற கோபமாகவும் இருக்கலாம்.


இதை என்னால் நம்பவும் முடியவில்லை: நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

ஏனெனில் ஆரம்பத்தில் நமது நாட்டு செவிலியர்கள் விடுதலை போன்ற சில நல்ல செயல்களை செய்த போது அனைவரும் பாராட்டினோம். ஆனால் இந்த அமைப்பு தற்போது தனது சொந்த நாட்டு மக்களை கொல்வதாகவும், அந்த மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் செய்திகள் படிக்கிறோம். குர்ஆனையும் நபி மொழிகளையும் பின் பற்றும் ஒரு அமைப்பு இத்தகைய செயல்களை ஒரு போதும் செய்யாது. நபி அவர்களின் காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் சுதந்திரமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆட்சியாளராக இருந்த முகமது நபிக்கே கடன் கொடுக்கும் நிலையில்தான் வசதியாக அன்று யூதர்கள் இருந்தனர். இஸ்லாமிய ஆட்சியை அமுல்படுத்துவதாக இருந்தால் முதலில் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய வழிமுறை. அனால் இவர்கள் செய்வதோ நேர்மாறான வேலை. இதனால் உலகம் முழுக்க இஸ்லாத்துக்கு கெட்ட பெயரே ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம்.

தற்போது ஈராக்கில் யஜீதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் உண்மையிலேயே கொல்லப்பட்டும் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டால் கண்டிப்பாக இந்த அமைப்பு இஸ்லாத்தை சேர்ந்ததாக இருக்காது என்ற முடிவுக்கு வந்து விடலாம். ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம் ஒன்று கூடும் நேட்டோ அமைப்பினர் ஐஎஸ்ஐஎஸ் செய்யும் அடாவடிகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் இந்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பானது இஸ்ரேலைப் பற்றியோ அது பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ளது பற்றியோ இதுவரை வாயை திறக்காததும் நமது சந்தேகத்தை அதிகமாக்குகிறது.


ஆனால் தற்போது ஈராக்கின் செய்தி ஸ்தாபனம் முதற்கொண்டு அனைத்தும் அமெரிக்க இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் என்ற இந்த அமைப்பின் பெயரைக் களங்கப்படுத்த அமெரிக்கர்களே இந்த கொடுமைகளை செய்து விட்டு அதனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீதும் போடலாம்.

இதன் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல பயன்களை பெறும். சிறுபான்மையினரைக் காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் மேலும் ராணுவத்தை இறக்கி அதற்கான சம்பள தொகையை ஈராக் அரசிடமிருந்தே கறந்து விடலாம். மற்றொரு பயன் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு யஜீதிகளையும் கிறித்தவர்களையும் கொன்ற பழியைச் சுமப்பதால் இந்த அமைப்பினரை உலக அளவில் தனிமைப் படுத்தி விடலாம். பாலஸ்தீனை குறி வைத்து தாக்கிக் கொண்டுள்ள சமயம் யஜீதிகளின் கொலை செய்தி வந்தால் உலகத்தின் கவனம் அந்த பக்கமும் திரும்பும். இதன் மூலம் இஸ்ரேலின் கொடூர தாக்குதலை மீடியாக்கள் பார்வையிலிருந்து சிறிது மறைக்கலாம். ஒரே கல்லில் மூன்று மாங்காய்.


இந்த செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும் வரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து தூரமாகவே இருப்போம். தாலிபான்களை ஒழிக்க இரட்டை கோபுர தாக்குதலை அவர்களே நடத்தி விட்டு பழியை முஸ்லிம்களின் மேல் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அதற்கும் இஸ்லாமிய ஜிஹாத் என்றுதான் பெயரிட்டனர். எனவே யூதர்கள் தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள எதையும் செய்யத் தயங்காதவர்கள். எனவே உணர்ச்சி வசப்பட்டு எந்த அமைப்பையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாமல் சற்று தூர இருந்தே நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிப்போம்.

இறைவனே அனைத்து உண்மைகளையும் அறிந்தவன்.

http://www.jpost.com/Jewish-World/Jewish-News/Netherlands-suspends-official-who-said-Zionists-created-ISIS-371240

Monday, July 21, 2014

தெலுங்கானா அரசு மசூதிகளுக்கு 2 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு!



ரமலான் மாதத்தில் மசூதிகளையும் தர்ஹாக்களையும் புணரமைப்பு செய்து தூய்மைப்படுத்துவதற்காக தெலுங்கானா அரசு 2 கோடியே 20 லட்ச ரூபாயை அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல பள்ளி வாசல்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும். ரமலானில் மக்கள் தொழுவதற்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அந்த மக்களின் நலனைக் கருதி தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ள இந்த நிதி பாராட்டத்தக்க ஒன்றாகும். இதே போல் தமிழக அரசும் பராமரிப்பு வசதியின்றி இருக்கும் பள்ளி வாசல்களை கணக்கிட்டு அரசு நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை வைப்போம்.

---------------------------------------------------------------

ஆந்திராவின் சிங்கம் அஸாவுத்தீன் உவைசி பள்ளிவாசலில் தனது ரமலான் உரையில் பேசிய அழகிய பேச்சின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். 'யா அல்லாஹ்! மறுமை நாளில் காசாவில் இறந்த அந்த பிஞ்சு குழந்தைகள் உனது முன்னால் அந்த யூதர்களை காட்டி 'எந்த பாவமும் செய்யாத எங்களை இலக்காக்கிய இந்த இஸ்ரேலியர்களை இறைவா! தண்டிப்பாயாக!' என்று கேட்கும். பெஞ்சமின் நெதன்யாகுவே! அந்த நாளும் வரும். நீ செய்து வரும் அத்தனை அட்டூழியத்திற்கும் இன்றில்லா விட்டாலும் மறுமையில் இதற்கான தண்டனையை அடைந்து கொள்வாய்'

'எனது இளைய சமுதாயமே! 300 மக்கள் தொடர் குண்டு வெடிப்பில் இறந்தாலும் பாலஸ்தீன வீடுகளில் அந்த மக்கள் நோன்பிருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். 300 க்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களை இழந்தாலும் அந்த மக்கள் தொழுகையை விட்டு விடவில்லை. எனவே இளைய சமுதாயமே! நோன்பிருக்க பழகிக் கொள் தொழுகையை கடைபிடி. முன்பு நம்மிடம் இறை நம்பிக்கை மிகைத்து இருந்தது. எனவே எதிரிகள் நம்மைக் கண்டு பயந்தனர். நம்மிடம் இறை நம்பிக்கை இல்லாது போனது. இன்று கண்டவனும் நம்மை சீண்டிப் பார்க்கிறான். இந்த இழி நிலைக்கு காரணம் நாம் தான். முன்பெல்லாம் மிகச் சிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருந்தோம். கல்வியிலும் சிறந்து விளங்கியிருந்தோம். நமக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைத்தது. இன்று படிப்பை தொலைத்தோம்: அரசு வேலைகளை தொலைத்தோம். இன்று பலராலும் எள்ளி நகையாடப்படுகிறோம். எனது இளைய சமுதாயமே! படிப்பதில் ஆர்வம் கொள். இறைவனை நினைப்பதில் ஆர்வம் கொள். இழந்த நமது கௌரவத்தை இறைவன் நாடினால் திரும்பவும் பெறலாம்.'

Sunday, July 20, 2014

இந்துத்வாவுக்கும் இஸ்ரேலியருக்கும் என்ன தொடர்பு?



இந்துத்வாவுக்குள் மறைந்து இருப்பது இஸ்ரேலிய சிந்தனை என்பதனை விளக்கும் அழகிய கருத்துப்படம். நன்றி: கார்டுனிஸ்டு யூசுப் முன்னா.

நமக்கு ஆச்சரியமாக இருக்கும். எங்கோ ஒரு தமிழகத்தின் மூலையில் இருக்கும் ஒரு பார்ப்பனர் தனது பூணூலை உருவி விட்டுக் கொண்டு இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கலாம். பிஜேபி ஆட்சியில் எப்போதெல்லாம் அமருகிறதோ அப்போதெல்லாம் இஸ்ரேலிய உறவும் நமது நாட்டு உறவும் பலப்படும். அன்றைய வாஜ்பாய் ஆட்சியிலும் அதுதான் நடந்தது. இன்றைய மோடியின் ஆட்சியிலும் அதே உறவு மேலும் மேம்படுகிறது. இது ஏன் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ஆரியர்கள் பல பிரிவுகளாக உலகெங்கும் பிரிந்துள்ளனர். எகிப்தியர்கள், யூதர்கள், ஈரானியர்கள், ரஷ்யர்களில் சில பிரிவினர் மற்றும் நம் ஊர் பாரப்பனர்கள் என்று இவர்கள் அனைவருமே ஒரே இனமாக இருந்து காலப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நாடோடிகளாக சுற்றித் திரிந்து பல நாடுகளிலும் நிரந்தரமாக தங்கி விட்டனர். இவர்களின் முக சாயலும், எந்த செயலிலும் தங்களை முன்னிறுத்தி மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுவதிலும், வாழ்க்கையில் முன்னேற பாவ புண்ணியம் பார்க்காமல் எதனையும் செய்திட துணிந்து விடும் இயல்பும் ஏறத்தாழ அனைவருக்குமே ஒத்து வருவதை நாம் கவனித்திருப்போம். எனவே தான் எங்கோ இருக்கும் சுப்ரமணியம் சுவாமி இஸ்ரேலுக்காக துடிக்கிறார். நமது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நமது பார்லிமெண்டில் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். அதே போல் ஆர்எஸ்எஸில் அங்கம் வகிப்பதில் முன்னணியில் இருப்பதும் பார்ப்பன அம்பிகள் என்பதும் நமக்குத் தெரியும். ஆர்எஸ்எஸூக்கும் இஸ்ரேலுக்கும் எந்த வகையிலெல்லாம் முன்பு தொடர்பு இருந்தது. அது நமது நாட்டை எந்த வகையிலெல்லாம் இன்று வரை அச்சுறுத்திக் கொண்டுள்ளது என்பதை பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் சாராம்சத்தைப் பார்ப்போம்.

ஆசிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக விளங்குவது நமது இந்தியா. பாகிஸ்தானும் ஓரளவு மனித வளங்களை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் தொழில் துறைகளில் நெருங்கி வர ஆரம்பித்தால் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறுவதில் நேரிடையாக பாதிக்கப்படுவது வேறு இரு நாடுகள். அவை முறையே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தியாவிற்கு மிகவும் அதிகமான இராணுவ தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பது அமெரிக்காதான். பாகிஸ்தானுக்கு அதிக அளவில் இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பதும் அமெரிக்காவே! இராணுவத் தளவாடங்களை வளரும் நாடுகளான இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதில்தான் அமெரிக்காவின் பொருளாதாரமே நிலை கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நாடு இஸ்ரேல். 2007 முதல் 2012 வரை இந்திய அரசு 50000 கோடி ரூபாயை இராணுவத் தளவாடங்களுக்கு செலவிட இருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தான் செல்ல இருக்கிறது.

இப்படி நமது நாடு ஏராளமான தொகையை ராணுவத்துக்கு செலவிடக் காரணம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைதான். உள் நாட்டு பிரச்னைகளை நமது காவல் துறையை வைத்தே சமாளித்து விடலாம். எனவே நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதில் நஷ்டத்திற்கு உள்ளாகும் நாடுகள் முதலில் அமெரிக்கா அடுத்து இஸ்ரேல் மூன்றாவது ரஷ்யா. மேலும் நமது நாட்டிலுள்ள வகுப்பு வெறி பாசிஸ்டுகள் என்று பட்டியல் நீள்கிறது.

தங்கள் நாட்டின் பொருளாதார வருவாயை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பல சூழ்ச்சிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாத்தும் இந்தியாவில் முழு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொஸாத் மும்பைக்குப் பக்கத்திலுள்ள தானா என்ற இடத்தில் 770000 சதுர அடியில் 'ப்ளாஸா' என்ற பெயரில் தனது அலுவலகத்தை நிறுவி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.

இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது.

'முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.'

-ஆதாரம்
தி ஹிந்து 29-06-2006

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் இகத்நிரீடன்(22), மோர்ட்சரீலூஷ்(25) அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவா வந்தனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்ல நேற்று கோவா விமான நிலையம் வந்தனர். அவர்களை போலீஸார் சோதனையிட்டபோது அவர்களிடம் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கோவா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

-தினகரன் 27.02.2007

இஸ்ரேல் மற்றும் நேபாளிகளின் துணையோடு இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றத்தான் சங்பரிவார் தீவிரவாதி பிகேட் வெடிகுணடு தாக்குதலை நடத்தியதாக தீவிரவாத தடுப்புப் படையின் அறிக்கை கூறுகிறது.

தயானந்த பாண்டேயிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் சங்பரிவார் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட போன் நம்பர்கள், தொலைபேசி உரையாடல்கள், வீடியோ காட்சிகள் எல்லாம் இருப்பதாக 4000 பக்கங்கள் கொண்ட ஏ.டி.எஸ்ஸின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் சங்பரிவாரின் ஒரு அலுவலகம் திறக்கவும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற அரசியல் ஆதரவு, மற்றும் ஐ.நா வின் ஒத்துழைப்பு போன்றவற்றை தாங்கள் இஸ்ரேலிடம் கேட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை லேப்டாப்பிலிருந்து ஆதாரமாக காட்டியுள்ளது ஏ.டி.எஸ். இவை அனைத்து விபரங்களையும் புரோகித் சங்பரிவாருக்கு விளக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இது சம்பந்தமாக இஸ்ரேலுக்கு சங் பரிவாரை சேர்ந்த ஒருவர் போய் வந்ததாகவும் இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும் மாலேகான் வெடிகுண்டு புகழ் பார்பனரான ஜெனரல் புரோகித் இந்த லேப்டாப்பில் விவரிக்கிறார். முழு அறிக்கையும் வெளி வந்தால்தான் பலரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் பல உண்மைகள் வெளி வருவதற்கு முன்பே ஹேமந்த் கர்கரேயை திட்டமிட்டு பாகிஸ்தான் ஆட்களை வைத்து முடித்து விட்டது இந்துத்வா.

செய்திகள் ஆதாரம்
உணர்வு 18-01-2009

மேலே உள்ள பத்திரிக்கை செய்திகளை படித்தால் நமது நாட்டில் இஸ்ரேலின் கை எந்த அளவு நீண்டுள்ளது: அதற்கு நமது நாட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த வகையிலெல்லாம் வழி அமைத்துக் கொடுக்கிறது என்ற உண்மைகள் தெரிந்திருக்கும். ஆனால் ஒன்று. இந்த இந்திய நாட்டில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை இந்த நாட்டை இன்னும் எத்தனை இஸ்ரேல்கள் சேர்ந்தாலும் இந்துத்வா நாடாக மாற்றி விட முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொழுதுதான் சமஸ்கிரதத்தை கட்டாய பாடமாக்க மோடி அரசு முயற்சிக்கிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வரவும் முயற்சிக்கிறது. இப்படி கொஞ்சம் சொஞ்சமாக தனது இந்துத்வ முகத்தை மோடி அரசு காட்டவும் தொடங்கியுள்ளது. இது மேலும் தொடர்ந்தால் இதனால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் அல்ல. 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே பாதிப்புக்கு உள்ளாவர். பாதிப்புக்குள்ளான அவர்களே இந்த இந்துத்வாவை இந்த மண்ணில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது வரை நாமும் பொறுமை காப்போம்.


Wednesday, May 14, 2014

இஸ்ரேலையும் விடவில்லை இஸ்லாம்!



//வைரஸ் இருந்தால் அதற்க்கான ஆண்டி வைருஷ் வரும் நண்பா - பர்மாவில் பார்த்தாயா, அது தான் ஆண்டி வைருஷ், அது போன்ற ஆண்டி vairusமுறையால் மட்டுமே இவர்கள் கொட்டத்தை அடக்க முடியும். இவர்களுக்கு சிறந்த ஆண்டி வைருஷ் யூதர்கள் தான், எங்கெல்லாம் வைரஸ் வருகிறதோ அங்கெல்லாம் ஆண்டி வைருஷ் வரும் கடைசியில் அழிவு வைரசுக்கு தான்.//

முந்தய பதிவில் ஒரு இந்துத்வாவாதியின் பின்னூட்டம் இது. இந்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் இஸ்ரேலில் இஸ்லாத்தின் வளர்ச்சி என்பது எந்த அளவில் உள்ளது என்று கூகுளில் தேடிப் பார்த்தேன். இனி அதனை அப்படியே தமிழ்ப் படுத்தி தருகிறேன்.

இஸ்ரேல் இன்று இஸ்லாத்துக்கு மிகப் பெரிய சிக்கலை உலகம் முழுவதும் தந்து கொண்டிருக்கிறது. மொஸாத் பல குழுவினரை பல நாடுகளுக்கும் அனுப்பி தீவிரவாத செயல்களை செய்து அந்த பழியை இஸ்லாத்தின் மீது போட்டு வருகிறது. நமது நாட்டிலும் இந்துத்வாவாதிகளோடு கை கோர்த்துக் கொண்டு பல நாசகார செயல்களை நமது நாட்டில் அரங்கேற்றி அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் தங்கள் நாடான இஸ்ரேலை எந்த வகையிலாவது உலக மக்களை அங்கீகரிக்க வைத்துவிட வேண்டும் என்ற வேட்கைதான். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகின்றனர்.

ஆனால் காலம் இப்படியே சென்று விடுவதில்லை. இன்று இஸ்லாத்தின் தாக்கமானது இஸ்ரேலையும் விட்டு வைக்கவில்லை. இஸ்ரேலில் உள்ள காஃப்ர் கரா என்ற கிராமத்தில் குரோஷியாவிலிருந்து புலம் பெயர்ந்து இன்று இஸ்ரேலை தனது நாடாக ஆக்கிக் கொண்ட யூதப் பெண் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஆயிஷா என்று மாற்றிக் கொண்டுள்ளார். அங்கு செயல்பட்டு வரும் 'தாருல் இஸ்லாம்' என்ற அமைப்பானது இஸ்லாம் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. 'அமைதி வாழ்வுக்கான வழி' என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் அவருக்கு கிடைத்தது. அதனை படித்ததில் இருந்து அவரது மனம் நிலை கொள்ளவில்லை. உண்மையை தேடி மனது அலைபாய்ந்தது. அதனை தொடர்ந்து படித்து வந்த இவர் உண்மையை விளங்கி சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார்.

தனக்கு பிரசுரங்களை விநியோகித்த 'தாருல் இஸ்லாம்' என்ற அமைப்பை தொடர்பு கொண்டு ஆறு மாதங்களாக யாருக்கும் தெரியாமல் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். தான் இஸ்லாமாக மாறவிருப்பதை ரகசியகமாக வைத்திருந்தார். முடிவில் தனது தந்தையிடமும் தாயிடமும் தனது மனமாற்ற முடிவை எப்படியோ தைரியத்தை வர வழைத்துக் கொண்டு சொல்லி விட்டார். பிறகென்ன... ஒரே போராட்டம்தான். இவரது தாயார் யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வரும் பழமைவாதி. அவர் தனது மகளை நோக்கி 'போயும் போயும் வன்முறை மார்க்கம்தானா உனக்கு கிடைத்தது?' என்று கோபப்பட்டார். உடன் அங்கிருந்து வெளியேறிய ஆயிஷா 'தாருல் இஸ்லாம்' அலுவலகத்தை வந்தடைந்தார். அங்கு ஏற்கெனவே இதே போல் வீட்டை துறந்து தஞ்சமடைந்த ஐந்து யூத பெண்கள் இவரை இன்முகத்தோடு வரவேற்றனர். அந்த ஐந்து பெண்களில் ஒருவரான ஹெனின் குரோஷியாவில் இருந்து வந்து இஸ்ரேலை தனது நாடாக்கிக் கொண்டவர். ஆயிஷாவுக்கும் பழக்கமானவர். ஹெனின் ஆயிஷாவிடம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். இது தற்போது பல குடும்பங்களிலும் தொடர்கதையாகி வரகிறது.

'தாருல் இஸ்லாமின்' டைரக்டர் ஷேக் ரஷான் கூறுகிறார் 'நான் இங்குள்ள அல் ஹக் பள்ளியின் இமாமாகவும் பணியாற்றுகிறேன். குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும், நபி மொழிகளையும் ஹுப்ரூ மொழியில் ஆயிரக்கணக்கில் அச்சடித்து இலவசமாக விநியோகிக்கிறோம். எங்களின் நோக்கம் இந்த யூதர்களுக்கு சத்திய இஸ்லாத்தை எத்தி வைப்பதே. வரவேற்கத்தக்க மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.' என்கிறார்.

இஸ்ரேல் முழுக்க மேற்கத்திய கலாசார தாக்கத்தால் குடும்ப வாழ்வு தொலைந்து பல பெண்கள் நிம்மதியற்று அலைகின்றனர். இவ்வாறு வாழ்வை தொலைத்து மன உளைச்சலுக்கு ஆட்பட்டு அலைந்து திரியும் பெண்களை இந்த அமைப்பு ஆதரவு கரம் கொடுத்து தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வருகிறது. அவர்களிடம் இந்த மனித வாழ்வு எவ்வளவு சிறந்த ஒன்று என்பதை விளக்கி அவர்களுக்கு குடும்ப வாழ்வின் அவசியத்தை விளக்கி போதனைகள் நடத்தப்படுகிறது. தெளிவு பெற்ற பல பெண்கள் உடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மனநிறைவோடு வெளியேறுகின்றனர். இஸ்ரேலை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருப்பதை விட அந்நாட்டையும் இஸ்லாமிய நாடாக மாற்றி விட்டால் பல பிரச்னைகள் தீர்ந்து விடும். சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளும் நேசக் கரம் நீட்ட தொடங்கி விடும். அத்தகைய நிலையை நோக்கித்தான் இஸ்ரேல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை மேலும் வலுவாக்க தாருஸ் ஸலாம் போன்ற அமைப்புகள் இன்னும் அதிக முனைப்புடன் தங்கள் பிரசாரங்களை முடுக்கி விடுவார்களாக! இந்த அமைப்புக்கு தேவையான பொருளாதார உதவிகளை முஸ்லிம் செல்வந்த நாடுகள் மனமுவந்து கொடுக்க முன் வர வேண்டும். அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

http://www.israelnationalnews.com/News/News.aspx/175699#.U3IohEDZncs