Followers

Showing posts with label INDIA. Show all posts
Showing posts with label INDIA. Show all posts

Sunday, June 04, 2017

மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம்!

மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம்!

சென்ற சனிக்கிழமை உத்தர பிரதேசத்தில் ஹரியா நகரத்தில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுள்ளது. சாலையில் அந்த நேரம் பல பசுக்கள் ஒய்யாரமாக சென்று கொண்டிருந்தன. வாகனம் பசுக்கள் மேல் மோதினால் கோமாதா காவலர்களால் தாக்கப்படக் கூடும் என்று அஞ்சிய ஓட்டுனர் சாலை ஓரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்தில் வாகனத்தை ஓட விட்டு நிறுத்தியுள்ளார். அங்கு நடந்து சென்ற உஷா தேவி (60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவரது இரண்டு வயது நான்கு வயதையொத்த பேத்திகள் கடுமையான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் கட்டிப் போட வேண்டிய உனது பசு தெய்வத்தை ஏனடா ரோட்டில் பொறுக்க விட்டாய் என்று எந்த தேச பக்தனும் கேள்வி எழுப்பவில்லை. காவிகளின் ஆட்சியில் மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம் போல.....

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
03-06-2017





  


http://www.hindustantimes.com/india-news/uttar-pradesh-police-jeep-tries-to-save-cow-kills-woman/story-mGnuCtCLVvs5P2tBTizFTM.html

Tuesday, January 26, 2016

கோவை புரட்சியில் தூக்கிலிடப்பட்ட 38 முஸ்லிம்கள்!



(படத்தில் உள்ளது இந்திய சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பாடுபட்ட இந்திய இஸ்லாமிய தலைவர்கள்)

1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் திண்டுக்கல் காட்டுப் பகுதியிலிருந்து 5 புரட்சிப் படைப்பிரிவினர் ஆங்கில ராணுவ மையங்களைத் தாக்கிட கோவைக்குச் சென்று அதற்காக ஆயத்தமானார்கள். திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின் துவக்கப்பட்ட புரட்சியின் ஆரம்பக் கட்டம் இதுவாகும். எல்லா புரட்சியாளர்களும் ஆயுதம் தாங்கியிருந்தனர் அவர்களது பயணம் ரகசியமாக இருந்தது. திப்பு சுல்தான் படையில் போர் வீரர்களாகவும் தளபதிகளாகவும் பணியாற்றியவர்களும் விவசாயிகளும் இந்தப் புரட்சிப் படையில் இருந்தனர்.

இந்தப் புரட்சிப் படைக்கு ஹசம், அப்பாச்சிக் கவுண்டர், சாமையா ஆகியோர் தலைமையேற்று கோயம்பத்தூரை நோக்கி வழி நடத்திச் சென்றனர். தீரன் சின்னமலை இந்த வீரர்களுக்கு உரிய ஆணையை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அரவாக்குறிச்சியைச் சேர்ந்த கௌரவக் கவுண்டரும், ஓசூரைச் சேர்ந்த புத்தே முஹம்மதுவும் தாராபுரத்தை நோக்கி புரட்சிப் படையை வழி நடத்திச் சென்றனர்.

இச்சப்பட்டியைச் சேர்ந்த ருனவ்னுல்லா கான் தலைமையில் புரட்சிப் படையின் இரண்டாவது அணி காங்கேயத்தை நோக்கிச் சென்றது.

1800, ஜூன் 3ஆம் நாள் கோவை நகரின் முக்கிய இடங்களிலெல்லாம் ஆங்கிலேய எதிரிகளை தாக்குவதற்கு புரட்சிப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.

நன்கு ஆலோசிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த கோயம்புத்தூரின் ராணுவ கோட்டையை முற்றுகையிடும் திட்டம் ஆங்கிலேயருக்கு இரகசிய ஒற்றர்கள் மூலமாக தெரிந்தது. ஒரு சில இடங்களில் புரட்சிப் படைகள் தாக்குதல் நடத்தின. மற்ற பகுதிகளில் புரட்சிப் படையினர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டனர்.

கோவைப் புரட்சித் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தேசியப் புரட்சிவாதிகளுக்கு உயர்ந்த அளவு தண்டனை வழங்குமாறும் பிடிபட்டவர்கள் அனைவரையும் இராணுவ முறைப்படி ஒரே விசாரணை நடத்தி அதில் எது அதிக அளவு தண்டனை என்று கலெக்டர் கருதுகிறாரோ அந்த தண்டனையையோ அல்லது மரண தண்டனையோ உடனடியாக வழங்கிடுமாறு கவர்னர் எட்வர்ட் கிளைவ் சேலம் கலெக்டருக்கு ஆணை பிறப்பித்தார். கவர்னரின் ஆணைக்கினங்க சேலம் மாவட்டக் கலெக்டர் வில்லியம் மாக்ஸிலியார்டு கோவைப் புரட்சியாளர்கள் 42 பேர்களை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த 42 பேரில் 38 பேர் முஸ்லிம் வீரர்கள். 4 பேர் இந்து வீரர்கள். அனைவருக்கும் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.

பல பகுதி மக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக தாராபுரத்தில் 8 பேரையும் சத்திய மங்கலத்தில் 7 பேரையும் கோயம்புத்தூரில் 6 பேரையும் மற்றவர்களைப் பல்வேறு புரட்சி மையங்களிலும் பொது இடங்களிலும் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தூக்கிலிட்டுக் கொன்றனர் ஆங்கிலேயர்கள்.

கோவைப் புரட்சியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்கள்:

1.ஷம்னஸ்கான்

2.மொஹைதீன் கான்

3.தாராபுரம் சையது இமாம்

4.மான் கான்

5.பீர் சாஹிப்

6.ஷேக் மியான்

7.கோவை கலீஃபா அமீர்தான்

8.ருனா முஸ்டாஹ் கான்

9.குலாம் பாய் ஹைதர் கான்

10.ஜமாஷ் கான் அலி சாஹிப்

11.கொடிக்கால் ஷேக் அலி

12.செவான் கான்

13.அலி சாஹிப்

14.முடா சாஹிப்

15.முஹம்மது சாஹிப்

16.மிர் கமருத்தீன் கான்

17.ஷேக் மொஹைதீன்

18.கமருத்தீன்

19.சோலை மலை ஜமீன்தார்

20.ஃபதே முஹம்மது

21.ஷேக் மதார்

22.ஷேக் புத்தீன்

23.குலாம் உசேன் ஷேக் அலி

24.பீர் முஹம்மது

25.குலாம் அலி

26.சோட்டா அப்துல் காதர்

27.முஹம்மது ஷெரீஃப்

28.ஷேக் மீரா

29.ஷேக் முஹம்மது திவாஹர்

30.பீர் முங்கப்பா அலி

31.சையது மொஹர்தீன்

32.ஹைதர்கான்

33.மொஹிர்தீன் கான்

34.ஷேக் முஹம்மது

35.தீதார் ஷேக் இமாம்

36.பீனா ஷேக் மியான்

37.ஓசூர் புத்தே முஹம்மது

38.ருவைனுல்லா கான்

தகவல் உதவி
விடியல் வெள்ளி
ஆகஸ்ட்-செப்டம்பர்-2008

இத்தனை பேர் விடுதலைப் போரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். நமது வரலாற்று பாடநூல்களில் இந்த செய்தியை நாம் என்றாவது பார்த்திருக்கிறோமா?

'நாங்கள் இனி வெள்ளையருக்கு எதிராக போராட மாட்டோம்' என்று மன்னிப்பு கடிதம்எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் 'விடுதலை போராட்ட வீரர்கள்' என்று நாட்டில் வலம் வருகின்றனர். உண்மையிலேயே இந்த நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை இழந்த சமுதாயம் துரோகி பட்டம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளது.

நமது நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினத்தில் தூக்கிலிடப்பட்ட அந்த வீர புருஷர்களை நினைவு கூர்வோம்.







Wednesday, January 06, 2016

முன்னுக்குப் பின் முரணான தகவலால் சந்தேகம் வலுக்கிறது



பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மாநில எஸ்பி சல்விந்தர் சிங், அவரது சமையல்காரர் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட மூவரிடமும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எத்தனை தீவிரவாதிகள் கடத்தி னார்கள் என்பது உட்பட இவர்கள் மூவரும் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்ப தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் என்ஐஏ மூத்த அதிகாரி சரத் குமார் கூறும்போது, “விசா ரணை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஊடகங்களில் வந்துள்ள தகவலின் அடிப்படையில் எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப் படும்” என்றார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் டில் உள்ள விமானப்படை தளத் துக்குள் 2-ம் தேதி அதிகாலையில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுப்பட்ட 7 பாதுகாப்புப்படை வீரர் கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர். 6 தீவிரவாதி களும் கொல்லப்பட்டனர். 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த சண்டை செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சல்விந்தர் சிங், அவரது சமையல் காரர் மதன் கோபால், நகை தொழிலாளி ராஜேஷ் வர்மா ஆகிய 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்துள்ள கருத்து கள் முரண்பட்டதாக இருப்பதால் அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோயிலுக்கு வந்ததில்லை

தான் வழக்கமாக செல்லும் பஞ்ச் பிர் தர்கா கோயிலுக்குச் சென்று திரும்பும்போது தீவிரவாதிகள் தன்னை கடத்தியதாக சல்விந்தர் சிங் கூறியிருந்த நிலையில், அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று கோயிலின் பாதுகாவலர் சோம் கூறியுள்ளார்.

சோம் மேலும் கூறும்போது, “டிசம்பர் 31-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சல்விந்தர் சிங் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசி னார். தான் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பதால் வரும் வரை கோயிலை திறந்து வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். கோயிலை மூடும் நேரம் வந்துவிட்டதாக நான் கூறியபோது, திறந்து வைத்திருக்கு மாறு கட்டளையிட்டார். ஆனால் இதற்கு முன்பு அவர் கோயிலுக்கு வந்ததில்லை. மேலும் அவரது நண்பர் ராஜேஷ் வர்மா அன்றைய தினம் 2 முறை கோயிலுக்கு வந்தார்” என்றார்.

இதனிடையே, இந்தக் கோயி லுக்கு அருகே உள்ள பாமியல் பகுதியில் பாகிஸ்தானின் எப்காட் பிராண்ட் காலணியின் பதிவுகள் இருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில்தான் இந்த கோயில் அமைந்துள்ளது.

ஏற்கெனவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச் சரிக்கை விடுத்திருந்த நிலையில், சல்விந்தர் சிங் நள்ளிரவில் ஆயுதம் இல்லாமல் கோயிலுக்கு சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் பதான்கோட் தாக்குதலில் சல்விந்தர் சிங் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்றும் தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்து வருகிறது.

இவ்வாறு முன்னுக்குப்பின் முரணான தகவல் வெளியாகி வருவதால் சல்விந்தர் சிங்கை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

தீவிரவாத தாக்குதலுக்குள்ளான பதான்கோட் விமானப்படை தளம் 4 நாட்களுக்குப் பிறகு ஊடகங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்த இடங்களை செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.

ஏகே-47 ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், கத்திகள், கமாண்டோ கத்திகள், 40 முதல் 50 கிலோ புல்லட்கள் மற்றும் 3 முதல் 4 டஜன் மார்டர்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தகவல் உதவி
தமிழ இந்து நாளிதழ
07-01-2016