Followers

Showing posts with label HINDUTWA. Show all posts
Showing posts with label HINDUTWA. Show all posts

Wednesday, August 16, 2017

பூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிடிப்பு!

பூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிடிப்பு!

போபால்(03 ஆகஸ்ட் 2017): மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவலிங்க பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்குள் பூட்டிவைத்து கைதிகள் போல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போபால் கமலா நேரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிவலிங்க பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மாணவிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளி முதல்வர் நிஷா கமரானி கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அங்கு பயிலும் சுமார் 100 முஸ்லிம் மாணவிகள் இதுபோன்ற பூஜை செய்வது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்பதால் அதை செய்யமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இதனால் முஸ்லிம் மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத பள்ளி ஆசிரியை தெரிவிக்கையில், "மத்திய பிரதேசத்தில் சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால் அனைத்து மதத்தினரும் பயிலும் அரசு பள்ளிகளில் இதுபோன்ற ஒரு சார்பு மத பூஜைகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்" என்றார்.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க காவிகள் இந்துத்வாவை அனைத்து மட்டத்திலும் புகுத்த பல வழிகளிலும் முயல்கிறார்கள். பெரும்பான்மை இந்து மக்களாலேயே சனாதன தர்மம் ஒதுக்கி வைக்கப்பட்டு நாத்திகர்களாக வாழ்கின்றனர். உண்மை இவ்வாறு இருக்க இந்த உலுத்துப் போன பார்பனீய பழக்கங்களை முஸ்லிம் மாணவிகள் மேல் திணித்து எதனை சாதிக்கப் பொகிறது பிஜேபி. இதனால் இந்தியாவின் வறுமை ஒழிந்து விடுமா? இவ்வாறு கட்டாயப்படுத்துவதால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெகுண்டெழும் நாள் வெகு தொலைவில் இல்லை.



Muslim girl students were locked up in a classroom after they denied participating in the ‘religious Shivlings aka Shiva Lingams making workshop’.




Sunday, June 04, 2017

மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம்!

மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம்!

சென்ற சனிக்கிழமை உத்தர பிரதேசத்தில் ஹரியா நகரத்தில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுள்ளது. சாலையில் அந்த நேரம் பல பசுக்கள் ஒய்யாரமாக சென்று கொண்டிருந்தன. வாகனம் பசுக்கள் மேல் மோதினால் கோமாதா காவலர்களால் தாக்கப்படக் கூடும் என்று அஞ்சிய ஓட்டுனர் சாலை ஓரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்தில் வாகனத்தை ஓட விட்டு நிறுத்தியுள்ளார். அங்கு நடந்து சென்ற உஷா தேவி (60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவரது இரண்டு வயது நான்கு வயதையொத்த பேத்திகள் கடுமையான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் கட்டிப் போட வேண்டிய உனது பசு தெய்வத்தை ஏனடா ரோட்டில் பொறுக்க விட்டாய் என்று எந்த தேச பக்தனும் கேள்வி எழுப்பவில்லை. காவிகளின் ஆட்சியில் மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம் போல.....

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
03-06-2017





  


http://www.hindustantimes.com/india-news/uttar-pradesh-police-jeep-tries-to-save-cow-kills-woman/story-mGnuCtCLVvs5P2tBTizFTM.html

Sunday, March 06, 2016

'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தோடு சர்ச் உடைக்கப்பட்டது!



சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் கிருத்தவர்களின் சர்ச் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்துத்வா அமைப்பில் ஒரு பிரிவான 'பஜ்ரங் தள்' அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 வெறியர்கள் (மனித உருவில் உலவும் மிருகங்கள்) சர்ச்சின் உள்ளே புகுந்து அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். அவ்வாறு உடைக்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பியுள்ளனர். இவர்களின் ராமன் கிருத்தவர்களின் வழி பாட்டுத் தலத்தை உடைக்க சொன்னாரா? என்பதை இந்துத்வாவாதிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

காவல் துறையினர் விபரமறிந்து சர்ச்சில் பிரவேசித்தவுடன் வெருண்டோடியிருக்கிறது இந்த வானரக் கூட்டம். போலீஸார் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர். இந்துத்வாவாதிகளைப் பொருத்த வரை தேச பக்தி என்பது இதுதான். தலைவன் எவ்வழியோ அவ்வழியே இந்துத்வாவினரும் செயல்படுகின்றனர்.

எனது நாட்டு எதிர்காலத்தினை நினைத்து கவலை கொள்கிறேன். கன்ஹயா போன்ற இளைஞர்களின் கையில் இந்த நாடு செல்ல வேண்டும்.

தகவல் உதவி
NDTV.COM
07-03-2016

http://www.ndtv.com/india-news/7-arrested-for-attacking-church-in-chhattisgarh-during-sunday-prayer-1284615