Followers

Showing posts with label SLAVERY. Show all posts
Showing posts with label SLAVERY. Show all posts

Monday, August 24, 2020

விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

 விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

பக்தி என்பது மனதில் உதிப்பது. இறைவனை அன்போடும் பக்தியோடும் அணுகி நமது கோரிக்கைகளை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு நடப்பது பக்தியா? 10 வயது சிறுவனும் 20 வயது இளைஞர்களும் சாராயத்தை உள்ளே தள்ளி விட்டு கடைகளை உடைப்பதும் நடைபாதைகளை சேதப்படுத்துவதும்தான் விநாயக சதுர்த்தியா?

இங்கு குத்தாட்டம் போடும் சிறுவர்களில் யாராவது ஹெச்.ராஜா குடும்பத்து பார்பன குழந்தைகள் உண்டா? நாராணயன், கே.டி. ராகவன் குடும்பத்து பிள்ளைகள் யாராவது இந்த கும்பலில் இருக்கிறார்களா. கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். கலவரம் வரலாம்: வெட்டு குத்துகள் நடக்கலாம்: வழக்கும் பதியப்படலாம். எனவே இங்கெல்லாம் ஹெச்.ராஜா தனது குடும்ப உறுப்பினர்களை அனுப்ப மாட்டார். ஆண்மையற்ற அரசு என்று அறிக்கை விடும் ஹெச்.ராஜா தனது குடும்பத்து உறுப்பினர்களை இந்த கூட்டத்துக்கு அனுப்பியிருக்க வேண்டுமல்லவா?

பார்பன குழந்தைகள் சிறந்த பள்ளி, கல்லூரிகளாக பார்த்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருப்பார்கள். மறந்தும் ராஜாக்களும் நாராயணன்களும் தங்களின் குழந்தைகளை ஊர்வலத்துக்கு அனுப்ப மாட்டார்கள்.

இங்கு பின்னால் இருந்து ஹெச்.ராஜா, ராகவன் போன்றவர்கள் பணம் கொடுத்து பிரியாணியும், சாராயத்தையும் கொடுத்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இனி விநாயகர் சதுர்த்தியில் குத்தாட்டம் போடும் இந்த இளைஞர்களின் வாழ்வு இப்படியே தான் கழியும். குற்றப் பரம்பரைகளாக வளருவர். இதைத்தான் ஹெச்.ராஜா போன்றவர்கள் விரும்புகின்றனர். இதனை உணர்ந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அப்பாவி மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுவார்களோ?



Friday, January 23, 2015

நிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....



ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களான அபோரிஜின்களை (aborigines) வஞ்சகமாக வீழ்த்தி வந்தேறிகளான ஐரோப்பியர்கள் அந்த மக்களை அடிமைகளாக்கினர். நாயை விடக் கேவலமாக நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த மக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரயை விரட்டிய கதைதான் இங்கு நடந்தது. நம் நாட்டிலும் கூட இதே கதைதான் :-)

ஆனால் இஸ்லாம் அரபுலகை எட்டிப் பார்த்த 50 வருடங்களுக்குள்ளேயே அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமானவர்களான மாறிப் போயினர். நாங்கள் தான் நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்று கூறிடும் ஐரோப்பியர்கள் 1960 வரை இந்த பழங்குடி மக்களை அடிமைகளாகவே நடத்தினர்.