Followers

Tuesday, May 10, 2011

ஏர்வாடி தர்ஹாவில் திரும்பவும் மனநலம் பிறழ்ந்தவர்கள்!


முன்பு ஏர்வாடி தர்ஹாவில் தீ விபத்து ஏற்பட்டு பல நோயாளிகள் உடல் கருகி இறந்தது நினைவிருக்கலாம். பலர் மனநலகாப்பகத்தை குடிசைத் தொழிலாக அங்கு நடத்தி வந்தனர். கட்டிப் போடப்பட்டிருந்த பல நோயாளிகள் தப்ப வழியில்லாமல் பரிதாபமாக இறந்தனர். உடன் அரசு விழித்துக் கொண்டு ராமதாஸ் கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனின் உத்தரவுப்படி அரசே மனநல விடுதியை ஒரு பிரிவாக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ மனையில் தொடங்கியது. முறையான மன நல காப்பகம் இல்லாததால் மனநல பிரிவு மருத்துவ மனையில் தொடங்கியும் அதன் பலன் நோயாளிகளை சென்றடையவில்லை. தற்போது பழையபடியே தனியார்கள் குடிசை தொழிலாக மனநலகாப்பகத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவரிடம் கொண்டு செல்லாமல் தர்ஹாவுக்கு ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதில் இந்து மதத்தவரும் அதிகம் வருவதுதான் விசேஷம். தர்ஹாவில் கட்டிப் போடுவதால் நோயாளிக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். படித்தவர் பாமரர் என்று எல்லோரும் தர்ஹாவில் வீழ்ந்து கிடப்பதுதான் விந்தை. முன்பு இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இன்று அனைத்து மன வியாதிகளுக்கும் மருத்துவர்கள் திறம்பட வைத்தியம் பார்க்கின்றனர். இன்றும் கூட வியாதியஸ்தர்களின் உறவினர்கள் பல ஆண்டுகள் தர்ஹாக்களில் தங்கி விமோசனம் கிடைக்காதா என்று ஏங்கி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்ஹாவில் விமோசனம் கிடைக்கும் என்று குர்ஆனிலோ, நபிமொழியிலோ ஏதும் ஆதாரம் இருக்கிறதா என்றால் அப்படியும் ஒன்றும் இல்லை. தர்ஹாவை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் அங்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காக கூலிக்கு ஆட்களை பிடித்து வந்து பேயாட வைப்பார்கள். நாகூர் தர்ஹாவில் இப்படி பேயாடிவிட்டு நடுநிசியில் முல்லாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பல பெண்களை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலையில் ஏமாந்த பாமரர்கள் தங்கள் பணத்தையும் இழந்து நோயையும் அதிகப்படுத்தி விடுகிறார்கள். அரசு இது போன்று மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் தர்ஹா நிர்வாகத்தை கண்காணித்து இது போன்ற மூடப் பழக்கங்களை முடக்க முன்வர வேண்டும்.

முகமது நபி தனது மருமகன் அலியிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப்பட்ட எந்த சமாதியையும் இடித்து தரை மட்டமாக்காமல் விடாதே!' என்று அறிவுருத்தியதை இங்கு நாம் நினைத்துப் பார்க்கிறோம். இஸ்லாம் வெறுக்கும் இந்த தர்ஹா வழிபாட்டை அனைத்து மக்களும் விட்டொழித்து மனநலம் பிறழ்ந்தவர்களை தக்க மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இது சம்பந்தமாக தினமலர் தரும் செய்தியை பார்ப்போம்:

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.

விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்.

Monday, May 09, 2011

இந்து வேதங்களைப் பற்றி ஜாகிர் நாயக்!



இஸ்லாத்துக்கும் இந்து மத வேதங்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை நான் கோடிட்டுக் காட்டியதை இக்பால் செல்வன் தவறு என்று பதிவிட்டிருக்கிறார். தவறு என்று சொன்னவர் 'எனக்கும் அர்த்தம் தெரியவில்லை. சமஸ்கிரதம் தெரிந்தவர்கள் விளக்குங்கள்' என்கிறார். என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம். திரு ஜாகிர்நாயக் அவர்கள் இது விஷயமாக என்ன வாதங்களை வைக்கிறார் என்பதை காணொளியில் பாருங்கள். இந்த பதிவு தொடர்ந்து விவாதித்து வரும் திரு கணேசனுக்கும் பதிலாக அமைந்திருக்கிறது.

Saturday, May 07, 2011

குர்ஆன் வசனங்களை (வேண்டுமென்றே)தவறாக புரிந்து கொண்டோர்!

குர்ஆனின் சில வசனங்கள் வன்முறையை தூண்டுவதுபோல் உள்ளதே என்ற கேள்விக்கு ஆயிரம் முறை விளக்கம் சொன்னாலும் திரும்பவும் அதே கேள்வியே வைக்கப்படுகிறது. காரணம் வேறு விதங்களில் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க சரியான காரணம் கிடைக்கவில்லை. இது ஒன்றையே திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் பத்தோடு இந்த மதமும் ஒன்று என்ற முடிவுக்கு நடுநிலயாளர்கள் வந்து விடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம். இனி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளான வசனங்கள் எந்த நேரத்தில் இறங்கப்பட்டது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

'உங்களால் இயன்ற அளவு பலத்தையும் போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் இறைவனின் எதிரிகளையும் உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். இறைவனே அவர்களை அறிவான்.'

-குர்ஆன் 8:60

இது இஸ்லாமிய அரசுக்கு சொல்லப்பட்ட வசனம். முகமது நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய போது அருகில் உள்ள சிறு சிறு யூத, கிறித்தவ, சிலை வணக்கம் புரியும் அரசுகள் ஓயாது தொல்லை கொடுத்து வந்தன. இந்த நேரத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரையை இறைவன் வழங்குகிறான். நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமையால் பல தொல்லைகளை நமது அண்டை நாடு நமக்கு கொடுத்து வருகிறது. இதைக் கண்டு இந்தியர்களாகிய நாம் அந்நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் நமது படை பலத்தை அதிகப்படுத்த முயற்ச்சிப்பது தவறாகுமா? இதையேதான் அன்றைய முஸ்லிம்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். முஸ்லிம்களிலேயே சிலர் இது தனிப்பட்ட மனிதனுக்கு சொல்லப்பட்ட வசனம் என்று தவறாக விளங்கிக் கொள்வதாலேயே சமூகத்தில் சில தீவிரவாதங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது. இதற்கு ஒரே வழி இந்த வசனம் எந்த நேரத்தில் யாருக்கு இறங்கியது என்ற விபரத்தை விளங்காத மக்களுக்கு எடுத்துச் சொன்னால் பிரச்னை சுலபமாக தீரும்.

மதினாவில் சிறந்து ஆட்சி செய்யும் முகமது நபிக்கு மக்காவில் உள்ள பல தெய்வ வணக்கத்தை உடையவர்கள் பெரும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மக்காவில் முஸ்லிம்களாகிய சிறுபான்மையினரை மிகுந்த தொல்லை கொடுத்து வந்தனர் சிலை வணங்கிகள். பல முஸ்லிம்களை கோபத்தில் கொலையும் செய்தனர். மக்காவில் உள்ள எஞ்சிய முஸ்லிம்களை காப்பாற்றவே அன்று போர் கடமையாக்கப்பட்டு போரும் நடை பெறுகிறது. அப்பொழுது இறங்கிய வசனம்

'ஏக இறைவனை மறுப்போரைப் போர்களத்தில் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள். முடிவில் அவர்களை வென்றால் தனது ஆயுதங்களை கீழே போடும் வரை கட்டுக்களைப் பலப்படுத்துங்கள். அதன்பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம். இதுவே இறைக் கட்டளை. இறைவன் நாடி இருந்தால் அவர்களை அவனே தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.'

-குர்ஆன் 47:4

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும் யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு இருந்தனர். பல போர்கள் நடந்தது. முஸ்லிம்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கினர். பெண்களின் பிறப்புறுப்பில் ஈட்டியைப் பாய்த்து கொல்வது, இரண்டு ஒட்டகங்களில் முஸ்லிம்களை கட்டி இரு வேறு திசைகளில் அவைகளை ஓட விட்டு முஸ்லிம்களின் உடலை இரண்டாக கிழிப்பது, இவை எல்லாம் மக்காவில் நடந்த கொடுமைகள். காரணம் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றது. இந்த நேரத்தில் சில முஸ்லிம்களின் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் எதிரிகளுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்க்காகவே இவ்வாறு கட்டளை பிற்பிக்கப்பட்டது.

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

-குர்ஆன் 4:89

'கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் இறைவனுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக் கொல்வார்களானால் இறைவன் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்'

-குர்ஆன் 8:39

மனிதர்களுக்குள் அன்பையும் நல்லலொழுக்கத்தையும் போதிக்க வேண்டிய இறைவன் ஏன் இவ்வாறு கடுமையான நிலையை எடுக்க வேண்டும் என்ற கேள்வி வரலாம். சில போராட்டங்களை அடக்க அரசு சில நேரங்களில் காவல்துறை, ராணுவத்தின் துணை கொண்டு தனது மக்கள் மீதே பலத்தை பிரயோகிக்கும். இந்த நடவடிக்கை நாடு அமைதியாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடத்தப்படுகிறது. இதே அளவு கோலைத்தான் இறைவனும் இங்கு கையாள்கிறான். அப்படி போர் நடந்தாலும் சில விதிமுறைகளை முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அவைகள்:

'உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.'

-குர்ஆன் 2:190

அதாவது எதிரிகளாக போரை துவக்கும் போது நீங்களும் போர் புரியுங்கள். அதிலும் கூட வரம்பு மீறக் கூடாது என்கிறான் இறைவன்.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே!' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.

-குர்ஆன் 22:40

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக சொந்த வீடுகளை விட்டு விரட்டப்பட்டவர்களிடமே போர் செய்ய குர்ஆன் கட்டளையிடுகிறது.

இப்படி ஒரு பலப்பிரயோகம் இல்லாவிட்டால் பல மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்கிறான் இறைவன். இதன் மூலம் பிற நம்பிக்கையாளர்களின் புனித இடங்களை அழிப்பது குர்ஆனுக்கு எதிரானது என்று விளங்கலாம்.

'விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர மற்றவர்கள் மீது எந்த வரம்பு மீறுதலும் கூடாது.'

-குர்ஆன்

எதிரிகள் போரிலிருந்து விலகி சமாதானத்துக்கு வந்தால் அதனை ஏற்று போரை நிறுத்தி காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். எதிரி நாட்டு பொது மக்களை வரம்பு மீறி எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்கிறது குர்ஆன்.

'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'

-குர்ஆன் 2:256

'உங்கள் மார்க்கம் உங்களுக்கு: என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக!'

-குர்ஆன்

இந்த வசனங்களின் மூலம் மதத்தைப் பரப்புவதற்காக போர் புரிதல் கூடாது என்பதை விளங்கலாம். வாளினால் இஸ்லாம் பரவியது என்று கூறுபவர்கள் இந்த வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டவர்கள். வற்புறுத்தலினால் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால் உளப்பூர்வமான ஈடுபாடு அவரிடத்தில் எதிர்பார்க்க முடியாது.

குர்ஆனின் போர் வசனங்களுக்கு மாற்றாக இந்து மதத்தில் நடைபெற்ற ஆதிகால போர்கள், கிறித்தவ மதத்தில் நடைபெற்ற அனைத்து போர்களையும் அதன் கொடூரங்களையும் வரலாற்று ஆதாரங்களோடு என்னால் எடுத்து தர முடியும். குர்ஆனில் சொல்லப்பட்ட நியாயமான காரணங்கள் கூட அந்தப் போர்களுக்கு பொருந்தாது. எனினும் அதனை நான் எடுத்து எழுதவில்லை. போர்களை பற்றி குறை கூறும் அனைத்து பதிவர்களுக்கும் இந்த ஒரு பதிவே பதிலாகும்.

முடிவில் இந்து மதத்தில் கூறப்பட்ட ஏக இறை கோட்பாடுகள் சிலவற்றை சொல்லி இப்பதிவை முடிக்கிறேன்.

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சா த்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறியீர்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!

--வள்ளலார்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை

காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே

இறைவனைக் காணுதல் பொருட்டு கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் கால்கள் நோவ நோவ சுற்றி வரினும் பயன் கிட்டாது, மனித உயிர்களிடத்தின் பால் கொள்ளும் அன்பின் மூலம் கடவுள் வசிக்கும் இடத்தை அறியலாம் என்கிறார் திருமூலர். மனித இனத்தைப் பிரித்துப் பார்க்காமல், அணைத்து ஜீவ ராசிகளிடத்தும் அன்பு புரிதலின் அவசியத்தையும் கூறுகிறார் திருமூலர்.

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே

இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தயைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். அசைவற்ற நீர் போல் சிந்தனை தெளிந்தார்க்கு மாசு மறு அற்றவன் வெளிபட்டு அருள் செய்வான்.

உன்னத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவாரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே

மனத்தின் தன்மையை மாற்றுவதன் மூலமாகவே ஆன்மீக அனுபவத்தைப் பெற முடியும். உள்ளத்தினுள்ளேயே திருக்கோயில்களிலுள்ள இறைவனைச் சந்திக்கலாம். இந்த அனுபவத்தை உதறிவிட்டுப் பள்ளமும் மேடும் திரிந்து என்ன பயன்?

'இறைவனையும, இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். '

'அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. தன்னை அஞ்சுவோரை இறைவன் நன்கு அறிந்தவன்.'

-குர்ஆன் 3:114,115

Wednesday, May 04, 2011

'தலித் முஸ்லிம்' என்ற வார்த்தை சரியானதுதானா?


முஸ்லிம்களில் இப்படி ஒரு பிரிவு இருப்பது போல் நிரூபிக்க பலர் மிகுந்த சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவன் தனக்கு இந்து மதத்தில் இனி விமோசனமே இல்லை என்று முடிவெடுத்து பல கதவுகளையும் தட்டுகிறான். எங்கும் அதே தீண்டாமைப் பேய் அவனை விரட்ட முடிவில் இஸ்லாத்தில் வந்து ஐக்கியமாகிறான். சில வருடங்களிலேயே பரம்பரை முஸ்லிம்களைப் போல் நடை உடை பாவனைகள் வந்து இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடுகிறான். பல குடும்பங்களில் இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் எங்கே நமது ஆதிக்கம் கைகழுவி போய்விடுமோ என்ற பயத்தில் சிலர் 'தலித் முஸ்லிம்' என்ற பதத்தை அடிக்கடி உபயோகப்படுத்திக் கொண்டு இணையத்திலும் பதிந்து வருகிறார்கள்.

இவர்கள் வைக்கும் வாதம் முஸ்லிமாக மாறியும் அவர்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது. எனவே அவர்களை மதம் மாறினாலும் 'தலித் முஸ்லிம்' என்று பிரித்து இட ஒதுக்கீடு போன்றவற்றை மற்ற தலித்களுக்கு கொடுப்பது போல் கொடுக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கிறார்கள். இந்த வாதம் எடுத்தவுடன் ஏதோ தலித் மக்களின் தீராத பாசத்தில் சொல்லப்பட்ட வார்த்தையைப் போல் தெரியும். இதன் உள்ளே மறைந்திருக்கும் வர்ணாசிரம தந்திரத்தை புரிந்து கொண்டால் வீறு கொண்டு முஸ்லிம்கள் இதனை எதிர்ப்பர்.

சச்சார் கமிட்டியின் அறிக்கை முழு இந்தியாவிலும் முஸ்லிம்களின் நிலை படிப்பிலும், வேலை வாய்ப்பிலும், வசதியிலும் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலமே இதற்கு சரியான தீர்வு காண முடியும் என்ற அறிக்கையை அளித்துள்ளது. ஆக ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் பொதுவாக இட ஒதுக்கீட்டை அளிப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

முஸ்லிம்கள் அனைவரும் மற்ற முன்னேறிய சாதிகளைப் போல் மிகுந்த தன்னிறைவு பெற்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய தாழ்த்தப்பட்டவர்கள் வறுமையில் இருந்தால் இவர்களின் வாதத்தில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும். மூன்றில் இரண்டு சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் போது தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பது இஸ்லாத்திலும் சாதியை கொண்டு வரும் மறைமுக உக்தியே தவிர வேறில்லை.

இஸ்லாத்தை தழுவிய எந்த தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களும் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம், கிறித்தவ மதம் என்று அனைததையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே ஆக்கியாகி விட்டது. இனி மிஞ்சி இருப்பது இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான். அதையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் வளைக்கப் பார்க்கிறது இந்துத்வா. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த முயற்ச்சியில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.

இவர்கள் வைக்கும் வாதங்களில் முக்கியமானது மத்ரஸாக்களில் கற்ப்பிக்கப்படும் பாடத் திட்டத்தில் சாதியை வலியுறுத்தும் கருத்துக்கள் உள்ளன என்பது. ஃபத்வா என்ற பெயரில் மார்க்க அறிஞர்கள் கொடுக்கும் எந்த செய்தியும், அல்லது மத்ரஸாக்களில் சில புத்தகங்களில் சொல்லப்பட்ட கருத்துகள் முதலானவை குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் மொகலாயர்க்ள் ஆட்சி காலத்தில் அரசர்களை மகிழ்விக்க இஸ்லாத்தை விளங்காத சிலரால் எழுதப்பட்டவை. இது போன்ற கற்பனை கதைகளை குர்ஆனை விளங்கி விபரம் தெரிந்த இஸ்லாமியர்கள் முற்றாக ஒதுக்கி விட்டனர். தமிழகத்தில் இருக்கும் ஒரு சில தவ்ஹீத் மதரஸாக்களை நீங்கள் சென்று பார்த்தால் குறிப்பிட்ட அந்த கற்பனை கதைகள் எல்லாம் அங்கு சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறியலாம்.

முகமது நபியின் வாழ்க்கையில் தீண்டாமைக்கு எதிராக பல உபதேசங்களை பார்க்க முடியும். கறுப்பு நிற அடிமையான பிலால் அவர்களை தனது மிக நெருக்கமான தோழர்களில் ஒருவராக்கிக் கொண்டார் முகமது நபி. ஆப்ரிக்க மக்களுக்கும் அரேபிய மக்களுக்கும் திருமண பந்தத்தை உண்டாக்கி சாதி வேற்றுமையையும் ஒழித்தார். அந்த முறைதான் இன்று வரை தமிழகம் வரை தொடர்கிறது. 'ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உங்களை உண்டாக்கினேன்' என்று குர்ஆன் உலக மக்களைப் பார்த்து கூறுவதிலிருந்து உலக மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறி இன வேற்றுமையை தகர்க்கிறது. இந்த கொள்கைகளுக்கு மாற்றமாக எவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் சொன்னாலும் அதை குப்பைக் கூடையில் தூக்கிப் போட வேண்டியதே! பின் பற்றுவதற்கு அல்ல.

என் பள்ளி நண்பன் செல்வராஜை போன முறை ஊரில் சந்தித்தேன். என்னைப் பார்த்தவுடன் 'அஸ்ஸலாமு அலைக்கும்! சௌகரியமா?' என்று கேட்டுக் கொண்டு வந்தான். 'என்ன செல்வராஜ்! நீ சௌக்கியமா?' என்று கேட்டதற்கு, 'ஹே! நான் இப்போ அப்துல் அஜீஸ். உங்கள் ஊரிலேயேதான்பா திருமணம் முடித்திருக்கிறேன்' என்று சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாகி விட்டது. பள்ளியில் அதிகம் பேசாமல் ஒடுக்கப்பட்ட சாதி என்பதால் தாழ்வு மனப்பான்மையில் ரிசர்வ்ட் டைப்பாக இருப்பான். இப்பொழுது நெஞசை நிமிர்த்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லி கலகலப்பாக பேசியது எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிறகு வீட்டுக்கு அழைத்து சென்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னிடம் இருந்த முக்கியமான சில புத்தகங்களையும் பரிசாகக் கொடுத்தேன். 'இறைவன் ஒருவனே! முகமது நபி அவனின் இறுதித் தூதர்' என்ற இந்த இரண்டு வரி ஒரு மனிதனின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று நினைத்து வியந்தேன். எங்கள் ஊரிலேயே பரம்பரை முஸ்லிம்கள் வீட்டிலேயே அவனுக்கு பெண்ணும் கொடுத்துள்ளார்கள். பி.காம் பட்டதாரி.

----------------------------------------------

அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்...

//வாழ்வாதாரங்கள் ஏதுமின்றி விளிம்புநிலையினராக இருக்கின்ற ஏழை முஸ்லிம்களாக பாவித்து அரசின் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தருவதற்கு தடையாக இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தின் காவலர்களேயாவர்.பட்டினியால் கிடந்து செத்தாலும் தலித் முத்திரை மட்டும் விழாமல் பாதுகாப்பதற்கு பெயர்தான் மதாபிமானம் போலும். //

அதாவது இஸ்லாமியரான இவர் சொல்ல வருவது வறுமையிலும் சமூகத்தில் பின் தங்கியும் இருப்பதால் தலித் முஸ்லிம் என்ற முத்திரையோடு அரசு வேலைகளை பெற் வெண்டும் என்கிறார். ஒரு மனிதனை செருப்பால் அடித்து விட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து 'வைத்துக் கொள்ளுங்கள். நான் அடித்ததற்கு பகரம்' என்று சொன்னால் அந்த மனிதன் ஒத்துக் கொள்வானா? ரசூல்தான் ஒத்துக் கொள்வாரா? அந்த மக்கள் வசதியற்று இருந்தால் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆக வேண்டிய பணிகளை செய்ய வேண்டுமே யொழிய கிறுக்குத் தனமாக 'தலித் முஸ்லிம்' என்ற வார்த்தையை பிரயோகித்து அந்த மக்களுக்கு இருக்கும் ஒரே வாசலையும் அடைத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

---------------------------------------------------------------------------

படித்தவர்கள் மத்தியிலும் சாதிப் பேய் வந்த அளவு ஊறிப் போயுள்ளது என்பதற்கு கேரளாவில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். இது தின மலரில் வந்த செய்தி:

கல்வியறிவிலும், சமூக உரிமைகளிலும் முதன்மை மாநிலம் எனப் பெயர் வாங்கிய கேரளத்தில் ஒரு அரசு அதிகாரி ஓய்வுப் பெற்றப் பின் அவர் பயன்படுத்திய பொருட்களையும், காரினையும், அந்த அலுவலகம் முழுதையும் சாணம் தெளித்து சுத்தப்படுத்தி உள்ளனர். இச் செயலை அறிந்த 55 வயதான ஓய்வுப் பெற்ற அதிகாரி ஏ வி ராமகிருட்ணன் கேரள மனித உரிமை கமிசனிடம் புகார் செய்துள்ளார்.

இந்த சுத்தப்படுத்துதல் வழக்கமான ஒரு நடைமுறையோ, அரசாங்க நடைமுறையோ இல்லை. ஏ வி ராமகிருட்ணன் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பொதுவாக அவரது கண்டிப்பான நடைமுறைகளும், லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக மிகவும் கண்டிப்பாக நடந்து வந்துள்ள ஒரு நேர்மையான அதிகாரி ஆவார். இதனால் வெறுப்புற்ற பிற ஆதிக்கச் சாதி அலுவலகர்கள் இப்படியான ஒரு சுத்தப்படுத்தும் இந்து மத சடங்கை நடத்தி தமது சாதி வெறியினைக் காட்டியுள்ளனர்.

என்டிடிவி தொலைக்காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் இது என்னைப் போன்ற தனிமனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, இது நான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையே அவமானப்படுத்தும் செயலாகும், இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை, ஒரு முடிவு எடுக்கும் வரை ஓயமாட்டேன் என்றுக் கூறினார் ராமகிருட்ணன்.

மனித உரிமை ஆணையம் முழு விவரத்தையும் மே – 7 க்குள் அந்த அலுவலகம் சமர்பிக்கும் படி உத்தரவு அனுப்பி உள்ளது.

மாட்டுச் சாணத்துக்கு கொடுக்கப்பட்ட மதிப்பை சக மனிதனுக்கு கொடுக்க முடியாத இந்த ஈனப் பிறவிகளை என்ன சொல்வது. மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பக்குவம் இந்நாட்டில் என்று தான் வருமோ. அன்று தான் இந்திய நாட்டுக்கு முழு சுதந்திர நாளாகும்.

------------------------------------------------------------

Ganapathypalayam Panchayat Primary School, 15 km from Erode, Tamil Nadu State, has taken the concept of "dignity of labour" too far: Barefoot students have been ordered to clean the school toilets by the authorities.

Two students, studying in III and IV standards, were found cleaning the toilets on Thursday by District Collector D. Karthikeyan.

Nobody knows how long the practice has been going on. But it came to light by chance on the day the Collector came on a visit to the school.

Mr. Karthikeyan was in the village to inaugurate a district-level intensive motivation campaign for school children. Even as classes were going on, the two students were busy cleaning the school toilets. They admitted to the Collector that their teacher had deputed them to do the task. In fact, students took turns to clean the toilets and the classrooms, the Collector was told.

In a district that is striving to eradicate child labour in any form, children were being forced to clean toilets.[10-06-2005]

http://www.hindu.com/2005/06/11/stories/2005061104030400.htm

Headmistress suspended for asking boys to clean toilet

ERODE: : The headmistress of the Ganapathypalayam Panchayat Primary School near here was suspended on Friday by Chief Educational Officer P. Kuppuswamy for deputing students to clean the school toilet.

இந்த நிலையில் ஒரு தலித்துக்கு இந்த சமூகம் என்ன பதிலை வைத்திருக்கிறது?

Monday, May 02, 2011

உசாமா பின் லாடன்!



பிரபல எழுத்தாளர் ஷிமோர் ஹெர்ஷ் கூறுவதாவது:

'பெண்டகன்' இது அமெரிக்காவின் இராணுவ தலைமையகத்தின் பெயர்.வேறு சொற்களில் சொன்னால் உலகில் கொலை பாதகங்களை நிகழ்த்தும் தலைமையகம். அமெரிக்காவின் இந்த இராணுவ தலைமையகம் உலகில் தாம் விரும்பும் இடத்தில் குண்டுகளை வெடிக்க வைத்திடும் திறமை கொண்டது. இதற்காக இது கைக்கொள்ளும் தந்திரங்கள் பலப்பல.

அந்த யுக்திகளுள் ஒன்று தனது முகவர்களை முஸ்லிம் அமைப்புகளுக்குள் திணித்து விடுவது. பின்னர் தான் விரும்பும் இடத்தில் குண்டுகளை வெடிக்க வைப்பது. பழி தானாகவே அந்த முஸ்லிம் அமைப்புகளின் மீது விழும். அந்த அமைப்புகளுக்கும் வேறு வழி இருக்காது. இப்படி செய்வதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு.

ஒன்று முஸ்லிம் அமைப்புகளை அவை எத்துணைதான் சாத்வீகமான அமைதியான அமைப்புகளாக இருந்தாலும் அவற்றை தீவிரவாத அமைப்புகளாக மாற்றி விடலாம்.

இரண்டு அந்த அமைப்புகள் செயல்படும் நாடுகளில் குண்டு மழையை பொழியச் செய்து அமெரிக்க ராணுவத்தை நிரந்தரமாக தங்க வைப்பது. குண்டு வெடித்த நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்று புழுகி அந்நாட்டின் பாதுகாப்பைத் தன் வயப்படுத்தி விடுவது. தற்போது இதைத்தான் அரபு நாடுகள் முழுக்க அமெரிக்கா செய்து வருகிறது.

-ஷிமோர் ஹெர்ஷ்

'பெண்டகன் தானே சில தீவிரவாத குழுக்களையும் தற்கொலைப் படைகளையும் உருவாக்கி விடும்.'

-American terror MG: Feb 16- 2005

இதே போன்ற சூழ்நிலையில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்தான் இந்த உசாமா பின் லேடன். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நபர் தங்களுக்கே தலைவலியாக வருவார் என்று அமெரிக்க ராணுவம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

இன்று அமெரிக்க ராணுவத்தால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியோடு உசாமாவை கொன்று விட்டோம் என்று அமெரிக்க தரப்பு கூறுகிறது. ஆனால் உசாமா முன்பே நோய்வாய் பட்டு இறந்து விட்டதாகவும், ஒபாமா தனது சரிந்து வரும் செல்வாக்கை மீட்பதற்காக நடத்தும் நாடகம் என்றும் வரும் செய்தியை மறுக்க இயலாது. ஏனெனில் இறந்த உடலை எந்த வொரு சோதனையும் செய்யாமல் அவசர அவசரமாக கடலில் இறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்த இடத்தையும் யாரிடமும் சொல்ல மாட்டார்களாம். எப்படியோ இனி உசாமாவின் பெயரால் நாசகார செயல்களை மற்ற நாடுகளில் அமெரிக்காவால் இனி அரங்கேற்ற முடியாது. இந்த செயல்களுக்கு வேறொரு ஆளை பெண்டகன் இனி தயார் படுத்த வேண்டும்.

மிக்ப் பெரும் செல்வந்தருக்கு மகனாகப் பிறந்த உசாமா சிவில் என்ஜினியரிங் முடித்தவர். படிப்பும் பணமும் அந்தஸ்தும் இருந்ததால் இவரது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக் கொண்டிருக்கலாம். இன்றும் ஜெத்தாவில் இவரது குடும்ப பெயரில் லேடன் ஸ்ட்ரீட் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. பல வெளி நாட்டு குடும்பங்கள் இவரது குடும்ப தொழிலில் இன்றும் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் வல்லரசுகளால் முஸ்லிம்கள் பந்தாடப்படுவதை காண சகிக்காமல் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தார். இப்படிப்பட்ட ஒரு நிலையை ஆட்சியாளர்தான் எடுக்க வேண்டும். தனி ஒரு மனிதனாக முடிவு எடுத்து பிறகு வன்முறைப் பாதையிலிருந்து மீள முடியாத அளவுக்கு சென்று விட்டார் உசாமா.

உலக வர்தத்க மைய கட்டிடத்தை தகர்த்தது யார் என்று முடிவாக இன்னும் தெரியவில்லை. உசாமாவின் தூண்டுதலில் செய்திருந்தால் அந்த செயல் இஸ்லாமிய நடவடிக்கைக்கு விரோதமானது. ஏனெனில் அதில் இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்கள். இவருக்கு கோபம் அமெரிக்க ராணுவத்தின் மீது இருந்திருந்தால் ராணுவ கேம்புகளை ஒழிக்க திட்டம் தீட்டியிருக்கலாம். அதே போல் லண்டனில் நடந்த குண்டு வெடிப்பு, ஆப்ரிக்க நாடுகளில் நடந்த குண்டு வெடிப்பு அனைத்திற்கும் உசாமாவே காரணமாக்கப்பட்டார். மூன்று விமானங்களை கடத்தி மிகச்சரியான இடத்தில் மோதி அவ்வளவு பெரிய கட்டிடத்தை இடிப்பது வெளிநாட்டவருக்கு சாத்தியமில்லை. அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த செயல் நடக்க சாத்தியமே இல்லை என்று அமெரிக்காவிலேயே பலர் இன்றும் வாதிட்டு வருகிறார்கள்.

பெண்டகன் தரும் செய்திகளே ஊடகங்களுக்கு கிடைப்பதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை உள்ளிருப்பவர்களும் இறைவனும் மட்டுமே அறிய முடியும்.

உசாமா சிறந்த சிந்தனையாளரும் கூட என்பதற்கு அவரது சமீபத்திய பிரசார ஒளி நாடாவும் சான்றாக இருக்கிறது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கும், புவிவெப்ப அதிகரிப்புக்கும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்தான் காரணம்.

மூன்றாவது உலக நாடுகளில் அதிகரித்து வரும் வெள்ளம், பட்டினி, பஞ்சம், காடுகள் அழிவது ஆகிய அனைத்துக்கும் அமெரிக்காதான் காரணம்.

புவிவெப்ப மாற்றம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமானது. ஆடம்பர நாடுகளின் வசதிக்கேற்ப இதைப் பேச முடியாது.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியை முறிக்க வேண்டும். அதற்கு அமெரிக்க டாலரையும், அமெரிக்க பொருட்களையும் உலக மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.

இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் ஆக்கிரமித்து போர் நடத்தி வரும் அமெரிக்க ராணுவம் பெரும் பாதிப்பை சந்திக்கும். இதன் மூலம் அமெரிக்காவின் அடிமைத் தளையிலிருந்து இந்த நாடுகளை மீட்க முடியும் என்று கூறியுள்ளார் லேடன்.

-நன்றி அல்ஜஜீரா

உசாமா இறந்ததற்கு அமெரிக்க மக்கள் மிகுந்த குதூகலத்தில் இருக்கிறார்கள். தங்கள் ஆட்சியாளர்கள் செய்யும் சூழ்ச்சிகள், வேலையில்லா திண்டாட்டம், கல்லூரிகளில் தினமும் நடக்கும் துப்பாக்கிச் சூடு, சரிந்து வரும் ஒபாமாவின் செல்வாக்கு அனைத்தும் இனி கொஞ்ச காலத்துக்கு மறக்கடிக்கப்படும். ஒபாமா போட்ட கணக்கும் சரியாகவே செல்கிறது.

அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சீர் தூக்க மற்ற நாடுகளை சீர்குலைக்கும் நாலாந்தர அரசியலை என்று விடுகிறதோ அன்று தான் தீவிரவாதம் ஒழியும். அதுவரை ஒரு உசாமா போனால் ஆயிரம் உசாமாக்கள் உண்டாவார்கள்.

மேலே உள்ள புகைப்படமும் கிராஃபிக்ஸ்ஸாக இருக்கலாம். முழு உண்மையும் சில நாட்களில் தெரியும்.

'எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களையும் உறுதிப்படுத்துவாயாக! உன்னை மறுக்கும் கூட்டத்துக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

-குர்ஆன் 3:147