Followers

Sunday, March 01, 2020

வாட்ஸ்அப்பின் பலத்தினை புரிந்து கொள்ள முடிந்தது.

தொடக்கத்தில் இதனை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து வாட்ஸ்ஆப்பில் பரப்பப்படும் செய்திகளால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும் என்று தான் தோன்றியது. ஆனால் புல்வாமா , பாலகோட் தாக்குதலின்போது எந்த ஆதரமும் இல்லாமல் செய்திகள் அதிகளவில் திரும்பத் திரும்பப் பரப்பப்பட்டபோது தான் வாட்ஸ்அப்பின் பலத்தினை புரிந்து கொள்ள முடிந்தது.
2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம் சமூக வலைதளங்களும் தான். குறிப்பாக வாட்ஸ் ஆப்கள். ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதெல்லாம் இங்கு தேவையில்லாதது. ‘இந்த செய்தி எனக்கு விருப்பமானதாக இருக்கிறது, இல்லை’ என்பது மட்டும் தான் இங்கே விதி. விருப்பம் என்றால் ஒரு பார்வர்ட் செய்தால் போதும். இதனை தேசத்துக்கு செய்யும் சேவையாக மாற்றியது எல்லாம் தந்திரம்.
2014 ல் 155 மில்லியன் பேர் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தியவர்கள். 2019 ல் இதுவே மும்மடங்கானது. 450 மில்லியன் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். இதனை பாஜக தனது தேர்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது. ஊடகத்தைக் காட்டிலும் வலிமையானதாக வாட்ஸ் ஆப் மாற்றப்பட்டது.
உஜ்வல் பரிக் போன்றவர்கள் இதற்காக தன்னுடைய வேலையை விட்டு பாஜக தேர்தலில் வாட்ஸ் அப் மூலம் மக்களிடம் மோடி குறித்த செய்திகளைப் பரப்பியது பற்றி தனியாக எழுதலாம்.
பாராளுமன்றத் தேர்தலின் போது 9,00,000 செல்போன் பிரமுகர்களை பாஜக நியமித்திருந்தது. இது சாதாரண எண்ணிக்கை அல்ல. இவர்கள் ஏற்றி வைப்பதை பக்தாள்கள் கொளுத்திப் பரப்பினர்.
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய ஓரே வாரத்தில் இதற்கு ஆதரவாக வாட்ஸ் அப் க்ரூப்கள் எண்ணிகையில் அடங்காத அளவுக்கு உருவாகின. அதில் பரப்பப்பட்டவை அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல்கள், எப்போதும் போல. அதில் சிலவற்றை thewire தனது கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறது.
அரசாங்க மருத்துவமனையில் 45சதவீதம் பேர் இஸ்லாமிய நோயாளிகளால் நிரம்பியுள்ளதால் இந்து நோயாளிகள் சிகிச்சை இல்லாமல் அவதிபடுகின்றனர் என்றது ஒரு வதந்தி. இந்தியாவில் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டவர்களில் 44சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்றது மற்றொரு செய்தி. இவையெல்லாம் எந்த அரசாங்க மருத்துவக் குறிப்பிலும், குற்றவியல் ஆவணப் புள்ளி விவரங்களிலும் இல்லாத தகவல்கள்.
இதோடு ஒரு படி மேலே போய் ஒவ்வொரு முஸ்லிம் கல்லறை கட்டப்பட்டபோதும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை 16 இலட்சம் என்றது ஒரு வாட்ஸ்அப் வதந்தி.
இது போன்ற வதந்திகளை சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் உள்ளவர்களும் பரப்புகிறார்கள் என்பது தான் இன்று நாடு சந்திக்கும் பேராபத்து. டெல்லி கலவரத்தின் போது கூட இந்துக் கோயில் இடிக்கப்பட்டது என்கிற வாட்ஸ்ஆப் வதந்தி மேலும் வன்முறையைத் தூண்டியிருக்கிறது.
மக்கள் செய்திகளை நம்புவதை விட அதைப் பரப்புவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. இதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
இணையதளம் மற்றும் வாட்ஸ்ஆப் பயன்பாடு பற்றித் தெரிந்திருப்பதால் தான் காஷ்மீரிலும், டெல்லி கலவரப்பகுதிகளிலும் முதலில் இணைய சேவையை முடக்கியது அரசு. இந்த மாபெரும் பொய்த் தகவல்களுக்கு மத்தியில் மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பது தான் ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்.
Deepa Janakiraman

சகோதர‌ மதத்தைச் சேர்ந்த முகநூல் பயனாளரான ஒரு சகோதரரின் பதிவு

சகோதர‌ மதத்தைச் சேர்ந்த முகநூல் பயனாளரான ஒரு சகோதரரின் பதிவு. அவசியம் வாசிக்கவும்.

சுதந்திரம் கிடைத்த நேரத்தில் (அந்த கடினமான காலத்தில்) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்தான்!

"இஸ்லாமியர்கள் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்" எனவும், "தேசத்தைப் பாதுகாக்க இந்திய பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும்" எனவும் இந்து மத சார்பு இயக்கங்கள் அறைகூவல் விடுவது வழக்கமாகி விட்டது. இஸ்லாமியர்கள் தேச நலனில் அக்கறை இல்லாதவர் போலவும், தேச வளர்ச்சியில் பங்களிக்காதவர்கள் போலவும் நினைக்க வைக்கிற முயற்சியே இந்த அறைகூவல்கள். இந்த சிந்தனையை இந்து மத சார்பு இயக்கங்கள் பரப்ப முடிவதற்கு காரணம் "தேச விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பெரும் பணிகள்" பற்றி நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டதுதான்.

மகாத்மா காந்தி 'கள்ளுக்கடை மறியல்' நடத்த அறிவித்தபோது மதுரையில் பங்கு பெற்றவர்கள் பத்தொன்பதுபேர். அதில் இஸ்லாமியர்கள் பத்துபேர்! கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது! மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! அதே போன்று, காந்திஜி "வெள்ளையர் அளித்த பட்டம் பதவிகளைத் துறக்க வேண்டும்" என அறிவுறுத்தியபோது பெருமளவில் முஸ்லிம்கள் தங்கள் கல்வி, பதவி, பட்டங்களைத் துறந்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். பலரும் ஆங்கிலேயர் கொடுத்த பட்டங்களைத் துறக்காமல் இருந்த நேரம் அது! அந்த நேரத்தில் காயிதே மில்லத் அவர்கள் தனது படிப்பை நிறுத்தி இருக்கா விட்டால் குறைந்த பட்சம் ஒரு பாரிஸ்டராகி இருக்க மாட்டாரா?

இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் துவங்கியபோது ரங்கூன் சென்று அங்குள்ள இந்தியரிடம் உதவி வேண்டியபோது, வள்ளல் ஹபீப் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய் (அந்த காலத்தில்). மேலும், நேதாஜி அவர்கள் ஐ.என்.ஏ.வில் முதல் ராணுவ ஜெனரலாக நியமித்தது ஷா நவாஸ் கான் என்கிற வீரனைத்தான்! நேதாஜி அமைத்த "மாதிரி அமைச்சரவை"யில் இருபது மந்திரிகள் இருந்தனர். அதில் ஐந்து பேர் முஸ்லிம்கள்!

சுதந்திரம் கிடைத்த நேரத்தில் (அந்த கடினமான காலத்தில்) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்தான்! இவ்வாறு இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற நூற்றுக் கணக்கான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகிகளைப் பற்றி படித்துப் பாருங்கள்! அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?

- தஞ்சை வெங்கட்ராஜ் (கீற்று)

பேனா, பென்சில், புத்தகம் சுமக்க வேண்டிய இவர்கள் கையில்....



ஆர்எஸ்எஸ்ன் மற்றொரு தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் இந்து சிறுவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிப்பதைத்தான் இக் காணொளியில் காண்கிறோம்.. பேனா, பென்சில், புத்தகம் சுமக்க வேண்டிய இவர்கள் கையில் வேல், சூலாயுதம், துப்பாக்கி கொடுத்து பயிற்று விக்கிறார்கள்.
பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இந்தியாவில் இந்து மதத்துக்கு என்ன ஆபத்து? யார் அவர்களை கொல்கின்றனர்? எந்த முஸ்லிமாவது கும்பலாக வந்து இந்துக்களின் சொத்தை சூறையாடினார்களா? கட்டாய மத மாற்றம் எங்காவது நடந்துள்ளதா? பிறகு எதற்கு இந்த பயிற்சி?
முஸ்லிம்களை கிருத்துவர்களை கொன்றொழித்து அவர்கள் சொத்துக்களை அடைவதற்காக சிறு வயது முதலே நஞ்சை விதைத்து வளர்த்தெடுக்கிறார்கள். பார்பனர்களின் குழந்தைகள் நன்றாக படித்து அமெரிக்க ஐரோப்பா, வளை குடாக்களில் லட்சங்களில் பணம் சம்பாதித்து வளமாக வாழ்கிறார்கள்.
ஆனால் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளை மட்டும் ஆயுதபாணிகளாக வெறியர்களாக மனநோயாளிகளாக மாற்றி வருகிறார்கள். அரசுக்கு அனைத்தும் தெரிந்தே நடக்கிறது. அரசும் வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. காலம் பூராவும் குற்றப் பரம்பரைகளாக வாழ வேண்டும் என்று இந்துத்வா விரும்புகிறது.
டெல்லி கலவரத்தில் எவ்வளவு மூர்க்கமாக பள்ளிக் கூடங்களை அழித்துள்ளார்கள் என்பதனை காணொளியில் பார்த்தோம். அவர்கள் பார்வையில் இருந்த குரோதம், வெறுப்பு அவர்களை மன நோயாளிகளாகவே மாற்றியுள்ளது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.... மோடி அமித்ஷா ஆட்சியில் இருக்கும் காலமெல்லாம் இந்து மதம் வீழ்ச்சியை சந்திக்கும். இஸ்லாமும் கிருத்தவும் அசுர வேகத்தில் வளர்ச்சியுறும். வருங்கால இந்தியா அதனை நமக்கு உணர்த்தும்.


இஸ்லாமும் கிறுத்துவமும் இல்லை எனில் மனுதர்மம் தலைவிரித்தாடும்

//ஆரியர்கள் தான் வந்தேறிகள் முஸ்லிம்கள் பூர்வ குடிகள் இந்துப் பெண்களின் மானம் காத்து மகுடம் ஏற்றியவர் திப்பு சுல்தான்
இஸ்லாமும் கிறுத்துவமும் இல்லை எனில் மனுதர்மம் தலைவிரித்தாடும்//
இதனை கூறுபவர் இந்து மதத்தை உண்மையாக பின்பற்றும் அய்யா வழி பால பிரஜாபதி.
இவரது கருத்தில் முற்றிலும் நான் உடன் படுகிறேன். ஏனெனில் பார்பனியம் தனது வாலை சுருட்டிக் கொண்டு சற்று பட்டும் படாமலும் செல்வதன் காரணமே தலித்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் தீண்டாமை கொடுமை தாங்காமல் இஸ்லாத்துக்கு ஓடி விடுவார்கள் என்ற பயத்தினால்தான். தலித்களும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாத்தை நோக்கி ஓடி விட்டால் இந்தியாவில் இஸ்லாம் பெரும்பான்மை மதமாகி விடும். அப்போது வழக்கம் போல் பார்பனிய ஆதிக்கம் துடைத்தெறியப்படும். இந் நிலை வராமல் தடுக்கத்தான் குடியுரிமை சட்டம்.
நேரிடையாக இஸ்லாத்தை எதிர்த்தால் பிரச்னையாகி விடும் என்பதால் மூன்று நாட்டு மக்களுக்கு மட்டும் முஸ்லிம்களைத் தவிர அனைவருக்கும் குடியுரிமை என்ற போர்வையில் நுழைகிறது பார்பனியம்.
அமித்ஷாவுக்கும் முஸ்லிம்களுக்கும் வாய்க்கா வரப்பு  தகராறா என்ன? ஒன்றுமில்லை. இன்று இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடி "பார்பனியத்தை ஏற்றுக் கொள்கிறோம். பார்பனிய கலாசாரத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம்களாகவும் இருந்து கொள்கிறோம். கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்த பங்கும் கேட்க மாட்டோம். கூலி தொழிலாளிகளாக வாழ்ந்து கொள்கிறோம்" என்று பிரகடப்படுத்தினால் முஸ்லிம்கள் தேசம் காப்பவர்கள் என்று அமித்ஷாவே முழங்குவார்.
முஸ்லிம்கள் அந்த நிலைக்கு போகப் போவதுமில்லை. உலக முடிவு நாள் வரையில் அமித்ஷாக்களோடு (ஃப்ரவுன்களோடு) நடக்கும் போராட்டமும் நிற்கப் போவதில்லை.


3% ஆரியர்கள் தான் வந்தேறிகள் | முஸ்லிம்கள் பூர்வ குடிகள்



ஆரியர்கள் தான் வந்தேறிகள் முஸ்லிம்கள் பூர்வ குடிகள் இந்துப் பெண்களின் மானம் காத்து மகுடம் ஏற்றியவர் திப்பு சுல்தான்
இஸ்லாமும் கிறுத்துவமும் இல்லை எனில் மனுதர்மம் தலைவிரித்தாடும்