Followers

Thursday, April 17, 2014

மோடி பிரதமரானால் இந்தியா எப்படி உருமாற்றப்படும்!



நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளைச் செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.

அவர் அந்த நூலில் எழுதுகிறார்:

“I do not believe that they are doing this job just to sustain their livelihood had this been so, they would not have continued with this type of job, generation after generation... at some point of time somebody might have got the enlightenment, that it is their duty to work for the happiness of the entire society and god so. That they have to do this job, bestowed upon them by god so, and that his job of cleaning shared continue as a spiritual activity for centuries. This shared have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have choice of adopting any other job or business.”

இதன் பொருள்:

நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியைத் தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்தக் கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.

இந்தத் துப்புரவுப் பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மீக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இதல்லாமல் இந்தத் துப்புரவுப் பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்கவில்லை என நம்ப முடியவில்லை. இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது, பிணம் தூக்குவது முதலான பணிகள் ஆன்மிகத் தேடலும், நாடலுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.

இந்த நூல் வேறொரு விதத்தில் ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.

இந்த நூல், மோடி பேசிய அல்லது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் அவர் முதலமைச்சர் என்ற தோரணையில், அய்.ஏ.எஸ். என்ற மாவட்ட ஆட்சியர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளிடம் நிகழ்த்தியது. அப்படியானால் தான் மட்டும் தலித் பெருங்குடி மக்களைப் பற்றி இப்படித் தரக்குறைவான ஒரு பார்வையைக் கொண்டிருக்க வில்லை. மாறாக, அதனை அதிகாரிகள் வட்டத்திலும் பதிய வைத்திருக்கின்றார்.

மோடி, இப்படியொரு கருத்தைத் தனது உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் பதிய வைத்திருக்கின்றார். திமிரோடு அதை நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவலாயின. அதனை நவம்பர் 2007இ-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடும் வெளியிட்டது. இதனைத் தலித் மக்கள், - குறிப்பாக தமிழக தலித் மக்கள் எதிர்த்தார்கள். உடனேயே மோடிக்கு ஆதரவாக சங் பரிவாரங்கள் களத்தில் குதித்தன. ஆனால், நாடெங்குமுள்ள தலித் மக்கள் கொதித்தார்கள்.

மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலைத் தடை செய்ய வேண்டும். மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டத்தின்படி சட்டத்தின்முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார். இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. நூல் ஒருவேளை திரும்பப் பெறப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று மாவட்ட ஆட்சியர் அளவிலுள்ள அதிகாரிகளின் மனதில் மோடி பதிய வைத்த சிந்தனைப் போக்கை யார் திரும்பப் பெறுவது? மோடியை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிடும் பொறுப்பு ஆப்கோ - என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மோடியின் உரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும். மோடியை ஒரு சீரிய சிந்தனையாளனாகக் காட்டிட வேண்டும் என்ற பொறுப்பும் ஆப்கோ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பல கோடிப் பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தக் கீழ்த்தரமான நூல் வெளியீட்டுப் பணியைச் செய்தது. இந்த மொத்தக் குழப்பத்திலும் பெறப்படும் உண்மை என்னவெனில், மோடி தலித் மக்களை அவர்களின் அந்தக் கீழான தொழிலிலும், நிலையிலுமே வைத்திருப்பார். இன்று குஜராத்தில் நடந்து கொண்டிருப்பவை இதனை உறுதி செய்கின்றன.

குஜராத்தில் டீக்கடை உட்பட அனைத்துப் பொதுத்தலங்களிலும் தலித்களுக்குத் தனிப் பாத்திரமாம். அதற்குப் பெயர் இராம பாத்திரமாம். Ram palia பிக்கா பாய் என்ற இந்த தலித், ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்கின்றார். அந்தப் பண்ணையில் அவருக்கென ஒரு தேனீர்க் குவளை வைக்கப்பட்டிருக்கும். அவருக்கான தேனீர் அந்தக் குவளையில் ஊற்றப்படும். தேனீரைக் குவளையில் ஊற்றுபவர் அந்தக் குவளையைத் தொடுவதுமில்லை. அதேபோல் உணவு வாங்கிடவும் தனி பாத்திரம். அந்தப் பாத்திரத்தையும் தொட்டு அல்லது கையில் வாங்கி யாரும் உணவைத் தருவதில்லை. மாறாக, சற்று தூரத்திலிருந்து உணவை வழங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தனிப் பாத்திரத்திற்கு குஜராத்தில் ராம் பாத்திரம் என்று பெயர்.

அங்காடிகளில் அவர்கள் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்கிட முடியாது. எட்டத்தில் நின்று சமிக்ஞைகள் செய்திட வேண்டும். தருவதை வாங்கிக் கொண்டு காசை அங்குள்ள கூடையில் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். இதுதான் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றது. அன்றைய நாள்களில் அந்த இராம பாத்திரம், களிமண் குவளையாக இருந்தது. இன்றைய நாட்களில் அது ஸ்டீல் சொம்புகளாக மாறி இருக்கின்றன. பல தேனீர்க் கடைகளில் இப்போது டீயைக் குடித்து விட்டுத் தூக்கி வீசப்படும் அளவிலுள்ள பிளாஸ்டிக் குவளைகளிலேயே டீ வழங்கப்படுகின்றது. தலித் மக்கள் பரவிக் கிடக்கும் குஜராத்தின் 22 மாவட்டங்களிலும் இந்தத் தனிக் குவளை முறை பின்பற்றப்படுகின்றது.

நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது, நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

நன்றி: தமிழ் வெப் துனியா மார்ச் 12,2014
-

Wednesday, April 16, 2014

நடிகை மம்தா குல்கர்னியும் நடிகர் ஜெய்யும் இஸ்லாத்தை ஏற்றனர்!



அதென்னமோ தெரியலை! என்ன மாயமோ புரியலை! இந்த சினிமா நடிகர்களுக்கு இஸ்லாத்தின் மேல் நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ் கதாநாயகன் ஜெய் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியை மாலை மலர் வெளியிட்டுள்ளது. அது சம்பந்தமாக விபரம் திரட்ட கூகுளில் தேடினால் இந்தி நடிகை மம்தா குல்கர்னி இஸ்லாத்தை ஏற்ற விபரமும் தெரிய வந்தது.

1997 ஆம் ஆண்டு விக்கி கோஸ்வாமி ஐக்கிய அரபு அமீரகத்தில் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தண்டனை காலம் 25 வருடங்கள். தனது தண்டனை காலங்களில் செய்த தவறுகளை எண்ணி வருந்தி சிறைச்சாலையில் இஸ்லாத்தை படிக்க ஆரம்பிக்கிறார். அங்கு அவருக்கு மாற்றங்கள் ஏற்படுகிறது. இஸ்லாத்தை தனது வாழ்வியலாக மாற்றிக் கொள்கிறார் கோஸ்வாமி.(பெயரைப் பார்த்தால் இவர் ஒரு பார்பனர் என்று தெரிகிறது)

நல்ல நடத்தைகளால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 2012ல் விடுதலையடைந்து அதன் பிறகு கென்யாவின் நெய்ரோபியில் தங்குகிறார். அங்கு முன்பே பழக்கமான ஹிந்தி நடிகை மம்தா குல்கர்னியோடு மேலும் நெருக்கமடைகிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அவருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை கொடுக்கிறார் கோஸ்வாமி. பிறகென்ன.... வழக்கம் போல் மம்தா குல்கர்னியையும் இஸ்லாம் தனது அன்பு கரங்களால் அரவணைத்துக் கொள்கிறது. ஹிந்தி திரை உலகில் முன்பு செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தத்தை இஸ்லாத்தை தழுவியதன் மூலம் கழுவிக் கொண்டார். மே பத்து 2013ல் இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. 90 களில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர் மம்தா குல்கர்னி. 1991 லிருந்து 2002 வரை பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர். கலங்கிய அந்த நீரோடையானது இஸ்லாத்தை ஏற்றதனால் புனிதமடைந்துள்ளது. இனி இந்த ஓடையானது இஸ்லாமிய வழியில் பயணிக்கும். தம்பதிகள் இருவரும் தவறுகளிலிருந்து விலகி சிறந்த இஸ்லாமியர்களாக வாழ நாமும் வாழ்த்துவோம்.

http://thenewsfocus.blogspot.com/2013/05/former-bollywood-actress-mamta-kulkarni.html

அடுத்து தமிழ் சினிமா ஹீரோ ஜெய் இஸ்லாத்தை தழுவிய செய்தியையும் மாலை மலர் தருகிறது. அதையும் பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே முஸ்லீம் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக மாறியுள்ளார். இதையடுத்தே இவர் முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது.

http://cinema.maalaimalar.com/2014/04/16170641/actor-jai-change-to-muslim-cas.html

இந்த நடிகரும் நடிகையும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த மதிப்பும் கூடி விடப் போவதில்லை. மாறாக இந்த நடிகரும் நடிகையும் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய வாழ்வு முறையை இறப்பு வரை தொடர்ந்தால் இறப்புக்கு பிறகும் நிம்மதியான வாழ்வைப் பெற்றுக் கொள்வார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பணமும் புகழும் எப்படியும் வாழலாம் என்ற தான்தோன்றித் தனமான வாழ்க்கையும் மட்டுமே ஒரு மனிதனுக்கு நிம்மதியை தந்து விடாது. எனவே தான் மன நிம்மதியைத் தரும் இறை மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இந்துத்வாவாதிகளின் ஆதிக்கம் இந்து மதத்துக்குள் இன்னும் அதிகமானால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இஸ்லாத்தை நோக்கி இன்னும் வேகமாக வருவார்கள். தற்போது தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் மர்கஜ்களில் தினமும் இஸ்லாத்தை ஏற்கும் சொந்தங்களை தினமும் பார்த்து படித்து வருகிறோம்.

மோடி பிரதமராக ஒருக்காலும் முடியாது. அப்படியே ஆனாலும் அதுதான் இந்தியாவில் இஸ்லாம் மேலும் வளர பெரும் காரணமாக இருக்கும். ஏனெனில் எங்கெல்லாம் எதிர்ப்பு அதிகம் வலுக்கிறதோ அங்கு தான் இஸ்லாம் மிக வேகமாக பரவியதாக வரலாறு. ஆரம்ப கால மக்கா வாழ்க்கையும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.


Tuesday, April 15, 2014

பாகிஸ்தான் அனாதை சிறுவர்களுக்கு சவுதியின் உதவி!



சென்ற திங்கட்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சவுதி மன்னர் அப்துல்லாவின் உத்தரவின் பேரில் 8000 க்கும் அதிகமான அனாதை சிறுவர் சிறுமியருக்கு பள்ளி சீருடைகளும், புத்தகங்களும், ஸ்கூல் பேக்குகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது. இயற்கை பேரிடர்களில் சிக்கி அதனால் தங்களது சொத்து சுகங்களை இழந்த ஏழைகளுக்கு இந்த உதவியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. செல்வந்த நாடுகள் இது போன்ற வறிய நாட்டு குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏற்றுக் கொண்டால் இன்னும் சில ஆண்டுகளிலேயே உலகம் முழுவதிலும் உள்ள படிப்பறிவின்மையை ஒழித்து விடலாம். செல்வந்த நாடுகள் மனது வைக்க வேண்டும்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
15-04-2014

'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்'
-குர்ஆன் 2:276


சிலர் நினைப்பது போல் செல்வம் ஒருவனிடம் குவிவது அவனது திறமையினால் அல்ல. அவனை செல்வந்தனாக்குவது இறைவனே! இறைவன் சிலருக்கு பொருளை கொடுத்து சோதிப்பான்: இன்னும் சிலருக்கு பொருளை எடுத்து சோதிப்பான். கொடுத்த அந்த இறைவன் சொல்கிறான் உனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடு. அதில் நான் அபிவிருத்தியை கொடுக்கிறேன் என்று. ஆனால் பல செல்வந்தர்களோ வங்கியில் பணத்தை சேமித்து வைத்து அதில் வரும் வட்டியில் தங்களின் குடும்பத்தை ஓட்டுகின்றனர். அதனை இஸ்லாமியர்களும் செய்வதுதான் ஆச்சரியம். இது போன்றவர்களைப் பார்த்துதான் 'நன்றி கெட்டவர்கள்' என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான். ஏழைகளுக்கு உதவும் மன நிலையை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக!

மோடி எவ்வளவு நேர்மையாளர்?

“சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர்மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.’’ என்பது ஷேக்ஸ்பியரின் வாசகம். இதில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மூன்றாவது வகை. ‘எல்லாப் புகழும் மோடிக்கே’ என்பது பா.ஜ.க-வின் தாரக மந்திரமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றும் தனிநபர் வழிபாடு என்பது சில மாதங்களுக்கு முன்னர் வரை சங் பரிவாரத்தினருக்கு அந்நியமான விஷயமாக இருந்தது.

இயக்கமும் கொள்கைகளுமே முதன்மையானவை என்பதில் சமீப காலம் வரை உறுதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று கட்சியையோ கொள்கைகளையோ சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்காமல் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் மோடியை முன்னிறுத்துகிறது என்றால் மோடியின் சாதனை மகத்துவமானதுதான்.

அசாதாரணமான திறன்கள்

இந்த நிலைக்கு அவரை உயர்த்த உதவிய அவரது ‘திறன்கள்’ அசாதாரணமானவை. 2002 கலவரத்தின்போது மோடி அரச நீதியிலிருந்து வழுவிவிட்டார், ஆகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அடுத்த ஓரிரு நாட்களில் கோவா மாநாட்டில் மோடியின் மொழியில் பேச வேண்டிய நிலைக்கு ஆளானது மோடியின் திறமைக்கு ஒரு உதாரணம் என்றால் தொழிற்துறை வளர்ச்சிக்குக் கலவரங்கள் பாதகமான சூழலை உருவாக்கும் என்று கூறி மோடியைக் கண்டித்த ‘இந்தியத் தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு’ அடுத்த சில நாட்களில் மோடியிடம் மன்னிப்பு கோரியது மற்றொரு உதாரணம்.

தன்னை விட பெரிய தலைவர்களாக இருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேசுபாய் படேல், தனக்கு நிகரான தலைவர்களாக இருந்த ஹரேன் பாண்டியா மற்றும் சஞ்சய் ஜோஷி ஆகியோரைக் கையாண்ட விதங்களும் மோடியின் திறன்களுக்குச் சாட்சியங்கள்.

ஆர்வெல் பிரச்சினை

மோடி இன்று பெருநிறுவனங்களால், ஊடகங்களால், படித்த நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரால் பெரிதும் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இரண்டு: 1. மோடியின் தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி; 2. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்! இன்று இந்தியாவை ஊழல், தொழில்துறை தேக்கம், வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு என சகல நோய்களிலிருந்தும் விடுவிக்கும் ஆற்றல் கொண்ட அதிமனிதராக மோடி சித்தரிக்கப் படுகிறார்.

ஆகவே, மீண்டும் மீண்டும் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை, நாம் அதைத் தாண்டிச் சென்றாக வேண்டும் என்று அறிவுஜீவிகளில் ஒரு சாரார் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மோடி உயர்த்திப் பிடிக்கப்படுவதற்கான இரண்டு காரணங்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பவை என்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நோம் சோம்ஸ்கி கூறும் ‘ஆர்வெல் பிரச்சினை’க்கு நல்ல உதாரணம் இது. தாங்கள் நம்பும் விஷயத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் ஏன் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதையே ‘ஆர்வெல் பிரச்சினை’ குறிக்கிறது.

‘குஜராத் மாதிரி’

மோடியின் தலைமையிலான ‘குஜராத் மாதிரி’ இந்தியாவுக்கே வழிகாட்டி என்று பல தரப்பினரால் புகழப்படுகிறது. இந்த குஜராத் மாதிரியைக் கட்டியமைத்தது மோடியே என்ற கருத்தும் மக்களிடையே வலுவாகவே பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்துறை செழித்து வளர்ந்த ஒரு சில பகுதிகளில் குஜராத்தும் ஒன்று என்பது இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தொழிற்துறையில் சிறந்து விளங்கியவை என்பது குறிப்பிடப்படுவதில்லை.

மேலும் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும், 1980-கள் மற்றும் 90-களில் இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் கண்டிருந்த முதல் மூன்று அல்லது நான்கு மாநிலங்களுள் ஒன்றாக எப்போதும் குஜராத் இருந்துவந்துள்ளது என்பதும் இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. 2001 - 2012 காலகட்டத்தில் மோடியின் தலைமையில் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சி எந்த வகையிலும் அதன் முந்தைய காலகட்ட வளர்ச்சி வீதங்களிலிருந்து அசாதாரணமான விதத்தில் வேறுபட்டதல்ல என்பதும் நடுநிலையான பொருளாதார நிபுணர்களால் பல முறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உலக அளவில், அமர்த்திய சென் உட்பட பல பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் ‘கேரளா மாதிரி’ போன்று ‘குஜராத் மாதிரி’ ஒருபோதும் ஏற்கப்பட்டதுமில்லை, கொண்டாடப்பட்டதுமில்லை. குஜராத் அடைந்துள்ள தொழில்துறை வளர்ச்சிக்கும் அதன் சமூக வளர்ச்சிக்குமான இடைவெளியின் அளவு ‘குஜராத் மாதிரி’ பின்பற்றத் தகுந்ததல்ல என்பதையே காட்டுகிறது.

கல்வியின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைவு என பல விஷயங்களில் குஜராத் பின்தங்கியிருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் அறிக்கை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி விஷயத்திலும் கடந்த பத்தாண்டுகளில் நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் சாதித்திருப்பதைவிட குஜராத் சாதித்திருப்பது குறைவே. இத்தனைக்கும் பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொழில்துறை வளர்ச்சிக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து பெருநிறுவனங்களுக்கு மோடி வாரியிறைத்திருப்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரானது.

இதனால்தான் டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி என அனைத்து பெரு முதலாளிகளும் மோடியின் பின் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மோடியின் நேர்மை

மோடியின் நேர்மை அவரது ஆதரவாளர்களால் வானளாவப் புகழப்படுகிறது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை குஜராத்தில் அமைய விடாமல் பத்தாண்டுகளாகத் தடுத்துவந்த மோடியின் செயல் அவரது ஆட்சியின் ‘நேர்மை’க்குக் கட்டியம் கூறுகிறது.



பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையிலும் இந்திய ஊடகங்கள் எதற்கும் மோடி பேட்டியளிக்காததற்குக் காரணம் அவரது பிம்பம் முற்றிலுமாகக் குலைந்துபோகும் என்பதே. சில ஆண்டுகளுக்கு முன்னர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த புகழ்பெற்ற அந்த மூன்று நிமிடப் பேட்டி மோடி எவ்வளவு நேர்மையாகப் பதிலளிப்பார் என்பதற்கு ஒரு உதாரணம்.

சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மோடி அந்தப் பேட்டிக்கு வைத்த முக்கிய நிபந்தனை குஜராத் கலவரம் குறித்து ஒரு கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது என்பது. எவ்வளவு புத்திசாலித்தனமான நிபந்தனை! கர்நாடகத்தில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக ஊழலில் மூழ்கித் திளைத்திருக்கும் எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க-வுக்குக் கொண்டுவருவதில் மோடி ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, நேர்மையான நிர்வாகத்தின் மீதான மோடியின் காதலுக்கு மற்றுமொரு உதாரணம்.

பாசிசத்தின் கூறுகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர் மோடியைப் பேட்டி கண்ட ஆசிஷ் நந்தி, பாசிசத்தின் முக்கியக் கூறுகள் பலவற்றை மோடியிடம் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி, மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக உயர்ந்த பிறகு மக்களாட்சியின் முக்கியமான நிறுவனங்களான நாடாளுமன்றம், சுதந்திரமான நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறையைப் பெரிதும் சீர்குலைத்தார்.

‘‘இந்திராவே இந்தியா! இந்தியாவே இந்திரா” என்று சொல்ல வைத்தார். காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம்நஞ்சம் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை முற்றிலுமாக ஒழித்தார். இதுவே மோடியின் தலைமையிலும் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசியலறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளால் ஜெர்மனிமீது திணிக்கப்பட்ட வெர்ஸாய் உடன்படிக்கை ஹிட்லர் ஆட்சிக்கு வர உதவியது என்றால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அளவற்ற ஊழல்கள் மோடி ஆட்சிக்கு வர உதவக் கூடும்.

மோடி திறமையானவராக, உறுதியானவராக, அல்லது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கக் கூடும். ஆனால், நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article5912677.ece

Monday, April 14, 2014

பிஜேபி கோமாளிகள் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

கோமாளிகளின் ஒட்டு மொத்த கூட்டணியான பிஜேபி கூட்டணியில் மீண்டும் சலசலப்பு! நேற்றைய மீனம்பாக்கம் கூட்டத்தில் எந்த கூட்டணி கட்சி தலைவர்களும் மோடியோடு மேடை ஏறாதது இதனை பட்டவர்த்தனமாக வெளிக் காட்டியது. ரஜினியை சந்திக்க செல்லும் விஷயம் விஜயகாந்துக்கும் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் சொல்லப்படவே இல்லையாம். வெகுண்டெழுந்த விஜயகாந்த் முறைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிககும் ராமதாஸூக்கும் ஏற்கெனவே ஆகாது. இதில் மோடி ரஜினியை சந்தித்தது ராமதாஸூக்கு ஏக கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவுக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்கை சொல்லவே வேண்டாம்.

சோ ராமசாமி வேறு தனது பூணூலை முறுக்கிக் கொண்டு 'பிஜேபி நிற்கும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு ஓட்டளியுங்கள்' என்று தனது பங்குக்கு நாரத முனி வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்று அனைவருமே ஒட்டு மொத்தமாக மோடியை நஞ்சாக வெறுக்கின்றனர். விஜகாந்துக்கு ராமதாஸை பிடிக்காது. ராமதாஸூக்கும் விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவை பிடிக்காது. நரேந்திர மோடிக்கு தனது கூட்டணி கட்சி தலைவர்களை விட அதிமுக தலைவி ஜெயலலிதாவின் மீதே அதிக கரிசனம். இத்தனை உள்ளடி வேலைகளையும் மீறி பிஜேபி கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்கும்? :-)



(தின மலரில் இன்று நான் ரசித்த கார்ட்டூன்)

அடுத்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போடுவது போல் பிஜேபியையும், மோடியையும் இன்று வரை எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்ததால் தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவை இன்று ஜெயலலிதா இழந்துள்ளார். இது அதிமுக வெற்றிக்கு மிகப் பெரிய பின்னடைவு. ஐந்து முனை போட்டி நிலவும் தற்போதய சூழலில் லட்சக்கணக்கான வாக்குகளை இன்று இழந்துள்ளது அதிமுக. இனி கலைஞர் காட்டில் மழை. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் 30 சீட்டுகள் தாராளமாக கலைஞருக்கு செல்ல வாய்ப்புள்ளது.