Followers

Tuesday, February 05, 2019

'உளவு' பார்க்கச் சென்றோம்...! முழு 'நிலவு' பார்த்து நின்றோம்...!

'உளவு' பார்க்கச் சென்றோம்...!

முழு 'நிலவு' பார்த்து நின்றோம்...!

அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள்,
பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள்,
மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து,
எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் 'ஜேம்ஸ் பி கொமி'யும் அதன் முன்னாள் அதிகாரி 'கேசி ஹன்னா'வும்
சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் சாராம்சம் இது!]
🌸 உலக மதங்களில் மிகப்பெரிய மதம் இஸ்லாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அது எந்த அளவு சர்வதேச அளவில் எல்லாரையும் ஈர்க்கத்தக்க மதம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொண்டோம்.
🌸 இஸ்லாமிய உலகம் எத்துணை அதி அற்புத மான செயல்திறன் மிக்க பகுதிகளைக் கொண்டி ருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டோம்.
🌸 முஸ்லிம்களின் பல இல்லங்களுக்குள் நாங்கள் ஊடுருவி ஆய்வு செய்தபோது, உணர்வுப்பூர்வ மான அறபு எழுத்துக்களையும் திரைச்சீலைகளை யும் கண்டோம்.
🌸 இஸ்லாமிய இல்லங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்த நூலகங்களில் - நூல்களில் விரவிக் கிடந்த இறைத்தூதர் முஹம்மதின் நேரடி வார்த்தைகளான ஹதீஸ் (நபிமொழி)களால் பெரிதும் கவரப்பட்டோம்.
🌸 பல வகையான அரேபிய இந்தோனேசிய மற்றும் ஆப்பிரிக்க உணவுகளை ருசித்து உண்டோம். அத்தகைய உணவுகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சுவைத்ததே இல்லை. அவர்கள் அருந்தும் தேநீர் கூட தேனாமிர்தமாக இருந்தது. அதையும் அவர்கள் ரசித்து, ருசித்து அருந்தினார்கள்.
🌸 மேற்கத்திய பெண்கள் பெற்றுவரும் சொத்து ரிமையை விட அதிகமான சொத்துரிமையை, முஸ்லிம் பெண்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் புரிந்து கொண்டோம்.
🌸 ஏன் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி உண்ப தில்லை என்பது முதல், முஸ்லிம்களின் விடுமுறை நாள்கள் எவை, முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மூடியவாறு உடையணிகிறார்கள் என்பது வரை யிலான பல்வேறு வினாக்களுக்கு விடைகள் பெற்றோம்.
🌸 சில முஸ்லிம் குடிமக்களை அவர்களது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி பல நாள்களாக, பல வாரங்களாக, ஏன், சிலநேரம் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைத்திருந்த போது, அவர்களிடமிருந்து இஸ்லாமின் உன்னதத் தன்மையை உணர்ந்தோம்.
🌸 பல்லாயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம் களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களது கடன் திட்டங்கள், கணக்குகள் அனைத்திலும் வட்டி தவிர்ந்து கொள்ளப்பட்டி ருந்தமையைக் கண்டு, எப்படி இப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.
🌸 சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐம்பெரும் தூண்களாகக் கருதப்படும் இஸ்லாமின் ஐந்து கடமைகளே முஸ்லிம்களின் ஆன்மிக வாழ்வை வழிநடத்துகின்றன என்ற கருத்தில் நம்பிக்கை யற்று இருந்தோம். ஆனால், அது உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.
🌸 இறுதியாக, 'என்னே, இனிமையான மக்கள்;
என்னே, இனிய மார்க்கம்' என்று அதிசயித்து, 'இத்தருணத்தில் இஸ்லாமையும் அதன் உயரிய கலாச்சாரத்தையும் எங்களுக்குக் கற்றுத் தந்த மைக்காக அமெரிக்க வாழ் முஸ்லிம்களுக்கு எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம்' என அறிக்கை முடிவுற்றிருந்தது.
(இலங்கை அல்ஹஸனாத் -ஜன 2017 இதழ் - இரண்டு பக்கக் கட்டுரையின் சுருக்கம்)
🌸 சுப்ஹானல்லாஹ்! என்னே, ஆச்சரியம்...!
காற்று வாங்கப் போனேன்; ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற பாடலுக்கொப்ப, 'உளவு பார்க்கச்
சென்றோம்; முழு நிலவு பார்த்து நின்றோம்' என்ற உன்னத நிலை பாருங்கள்...!
 அனைத்துப் புகழும் இறைவனுக்கே...!
FBI Discontinues Surveillance Of Muslim Americans After Completing 15-Year Study Of Beautiful Culture https://www.theonion.com/fbi-discontinues-surveillance-of-m… via



3 comments:

Dr.Anburaj said...

சர்க்கரையை அறியாதவன் இலுப்பம் புவை பெரிதாக நினைப்பான். இந்த விபரம் கெட்டவர்களுக்கு காவல்துறை பணிகள் தெரியும்.ஆனால் பண்பாடு கலாச்சாரம் போன்ற எந்த அம்சங்களையும் இவர்கள் கற்றதில்லை. அரேபிய நாகரீகம் குறித்து இவ்வளவு கதைகள் பேசும் இந்த முட்டாள்கள் இந்துஸ்தான் சீனா எகிப்துபோன்ற நாடுகளின் தொன்மைகளை அறியாத விபரம் கெட்டவா்கள்.திருக்குறளை படித்தார்களா.நாலடியாரை படித்தரா ? பகவத்கீதையை படித்தாரா ? யோகசுத்திரத்தைப் படித்தாரா ? இப்படி ஆயிரம் ஆயிரம் விசயங்களை அறியாத இவர்களின் சான்று எதற்கு யாருக்கு வேண்டும்.

தன்னைத்தான் மெச்சிக்குமாம் தவிட்டாங்கொளுக்கட்டை.

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து -குறள்.

Dr.Anburaj said...

கணவன் முஸ்லீம் ஆக இருக்கின்றான்.மனைவி கத்தோலிக்க கிறிஸ்தவராக இருக்கின்றார்.இரண்டு பேரும் ஐக்கியமாக வாழ முடிகின்றது. போப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு நடத்தப்படும் பிராத்ததனையில் மனைவி கலந்து கொள்ள கணவன் காரில் அழைத்துச் செல்கின்றான்.அருமை. அரேபியாவில் மனிதம் வாழ்கிறது.
ஆனால் இந்திய முஸ்லீம்கள் ஏன் இப்படி இந்துக்களை அழிக்க துடிக்கின்றார்கள் எனபது விளங்கவில்லை எனக்கு.

How A Muslim Tried To Help His Christian Wife Attend Papal Mass in UAE

February 5, 2019

Bernice was among hundreds who queued up outside the church to grab last-minute tickets for the mass.

When Filipina expat Bernice Soroosh, a devout Catholic, was waiting for hours to get her chance to get a ticket to attend the papal mass, her husband, Yousef Soroosh, an Emirati, was patiently waiting in the parking lot of St. Mary's Catholic Church.

"I told my husband that I would like to attend the papal mass and he offered to drive me to St. Mary's Church to get a ticket. I was really touched by his offer. This Papal visit has proven that people, even a married couple like us, who come from different religious backgrounds and cultures, can arrive at a common ground," said Bernice. "My husband is a Muslim and I'm Catholic, but there is deep respect for culture and faith in our family."

The couple met four years ago at Bernice's workplace. "We may have different religions but we have the same faith and belief in one God. We look at the similarities rather than differences of our religions," said Bernice, who has been married to Yousef for over a year now.

Bernice said they have not decided yet which religion their future children would follow, but "respect, compromise, love and tolerance" will be the hallmarks of their healthy relationship.

Bernice was among hundreds who queued up outside the church to grab last-minute tickets for the mass. She was not lucky enough to get a ticket to the mass, but expressed happiness for those who did.

https://www.khaleejtimes.com/nation/dubai/how-a-muslim-tried-to-help-his-christian-wife-attend-papal-mass-in-uae-

--------

Dr.Anburaj said...

யாதும் ஊரே யாவரும் கேளீா் என்ற பொன்மொழியை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று மலா்மன்னனிடம் கேள்வி கேட்டுள்ளீரகள்.
யாதும் ஊரே யாவரும் கேளீா் என்ற கருத்து நிபந்தனை அற்றது.உலக மக்கள் அனைவரையும் மொழி வயது கலாச்சாரம் பண்பாடு ஆகிய எந்த நிபந்தனையையும் விதிக்காது நேசிக்கவேண்டும். உறவு நட்பு பாராட்ட வேண்டும்.ஆதரிக்க வேண்டும் என்ற பொருளில் “யாவரும்“ என்ற சொல்வருகின்றது. உலக சகோதரத்துவம் இது.

ஆனால் இசுலாமிய சகோதரத்துவம் அரேபிய வல்லாதிக்க விஷத்தைக் உள்ளீடாகக் கொண்டது. அரேபியன் அல்லது அரேபியன் போல் வாழ்பவனை நேசி உதவு மற்றவர்கள் காபீர்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கி அழிக்க வேண்டும் என்பது.யாதும் ஊரே யாவரும் கேளீா் என்பது உலகிற்கு அமிா்தம் போன்றது. இசுலாமிய சகோதரத்துவம் என்பது விஷம். படுகொலைகள் போர்கள் நாச வேலை்கள் பயங்கரவாதச் செயல்கள் அனைத்திற்கும் காரணம் வாகாபியிசம்தான்.