Followers

Showing posts with label அப்துல்கலாம். Show all posts
Showing posts with label அப்துல்கலாம். Show all posts

Thursday, August 10, 2017

அபுல் கலாம் ஆசாத் - அப்துல் கலாம் ஒரு ஒப்பீடு

அபுல் கலாம் ஆசாத் - அப்துல் கலாம் ஒரு ஒப்பீடு

அபுல் கலாம் ஆசாத் இந்திய விடுதலைக்காக பாடுபட்டார். நேரு, காந்தி, படேல் போன்ற தலைவர்களோடு சரி சமமாக அமர்ந்து அரசியல் செய்தார். பாகிஸ்தான் பிரிந்து சென்றால் இரு நாட்டுக்குமே இழப்பு என்று ஜின்னாவிடம் கடைசி வரை போராடினார்.  இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்தவர்கள் என்று அனைவரையும் அன்போடு அரவணைத்தார். சுதந்திர இந்தியாவின் கல்வி மந்திரியாக பணிபுரிந்து கல்வித் துறையில் பல புரட்சிகளை செய்தார். இந்திய மண்ணுக்காக உழைத்து இந்திய மண்ணிலேயே இறந்தார்.

அதே நேரம் தனது வணக்க வழிபாடுகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. தர்ஹா வழிபாட்டை எதிர்த்தார். இறைவனுக்கு இணை வைக்கும் எதனையும் அவர் தனது வாழ்நாளில் செய்ததில்லை. ஐந்து நேரமும் தொழக் கூடியவராக இருந்தார்.  


அடுத்து நம்ம அப்துல் கலாமுக்கு வருவோம். அப்துல் கலாமும் இந்தியாவுக்காக உழைத்தார். ராக்கெட் தொழில் நுட்பம் மேலோங்க பல அரிய கண்டு பிடிப்புகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடெங்கும் மரங்களை வளர்க்க பிரியப்பட்டார். ஜனாதியாகவும் பணி புரிந்தார். குழந்தைகளை நேசித்தார். அனைத்து மத மக்களையும் அன்போடு பார்த்தார். இதிலெல்லாம் எந்த தவறையும் அவர் செய்யவில்லை.

அதே நேரம் ஒரு இஸ்லாமியராக அவரால் பரிணமிக்க முடியவில்லை. தான் மேலும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டுமானால் மற்ற மத சடங்குகளையும் தனது வாழ்நாளில் கொண்டு வர வேண்டும் என்று தவறாக கணித்து விட்டார். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து தனது திறமையினால் இன்னும் பல சாதனைகளை செய்திருக்கலாம். இந்து மத சடங்குகளை இவர் செய்யப் போய்தான் இவருக்கு ஜனாதிபதி பதவியையும் வாஜ்பாய் கொடுத்தார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு சிறந்த இந்தியனாகவும் ஒரு சிறந்த முஸ்லிமாகவும் வாழ்ந்த அபுல் கலாம் ஆசாத்தைப் போல் அப்துல் கலாம் தனது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அற்ப உலக சுகங்களுக்காக தனது இறைக் கொள்கையை விட்டுக் கொடுத்தது நம்மைப் போன்றவர்களுக்கு வருத்தமே. இறைவன் அவரது பாவங்களை மன்னித்து நல் அமல்களை முன்னிறுத்தி அவரை நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக!

எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை விளைச்சலை நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மையின் பயிரை மட்டும் விரும்புகிறானோ, நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.

அல்குர்அன் 42:20.









Wednesday, July 29, 2015

யாகூப் மேமனை விடுவிப்பதே கலாமுக்கு செலுத்தும் அஞ்சலி!



யாகூப் மேமன் கருணை மனுவை மறு பரிசீலனை செய்து அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் எனக் கோரி மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவின் முழு விவரம்:

வணக்கம்!

இந்த தேசமே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், மரண தண்டனையை வெகுவாக எதிர்த்த அவருக்கு செலுத்தும் மரியாதையாக, யாகூப் மேமன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

அப்துல் கலாம், ஒரு மாதத்துக்கு முன்னதாக பேசியபோதுகூட, மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சட்ட ஆணையத்துக்கு அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார். எனவே, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கு செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

1997-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மா, மஹாஸ்வேதா தேவி போன்ற சான்றோர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆந்திராவைச் சேர்ந்த இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதுவும், அவர்களுக்கு தூக்கு விதிக்கப்பட இருந்த முந்தைய நாளில் கருணை செய்தார். இதன் மூலம், அரசியல் சாசன சட்டப் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை அவர் முழுமையாக பயன்படுத்தி முன் உதாரணம் செய்திருந்தார்.

யாகூப் மேமன் இந்திய நீதித்துறைக்கு தலைவணங்கி சரணடைந்தார். இந்திய உளவுத்துறையின் மரியாதைக்குரிய அதிகாரி ஒருவர் யாகூப் மேமன் விசாரணைக்கு எப்படியெல்லாம் ஒத்துழைத்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நியாயமாகாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

இத்தகைய எதிர்ப்பு அதுவும் இப்பேர்பட்ட நபர்களிடம் இருந்தே வருவது மிகவும் அரிதானது. எனவே யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். யாகூப் மேமனை இந்தியா அழைத்து வந்தபோது அவரிடம் ரகசியமாக என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டதோ அதை மீறுவது ஆகாது.

யாகூப் மேமனை தூக்கிலிட்டால், இந்தியா அமைப்புகளின் நேர்மை நெறி மீது மீளாச் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகும்.

மேதகு குடியரசுத் தலைவரே, ஏற்கெனவே தங்களிடம் 300-க்கும் மேற்பட்ட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை சார்ந்த அறிஞர்கள் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் "இந்திய குடியரசின் தலைவர், அரசியல் சாசனம் அவருக்கும் அளிக்கும் தனியுரிமையால் வழிநடத்தப்படுகிறார். அதே வேளையில் மனசாட்சி கூறும் நன்னெறிகள் அதில் தலையிடுவது என்பதும் அவருக்கு சாத்தியமே" குறிப்பிட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன்.

15 நாட்களுக்கு முன்னர்தான் சட்ட ஆணையம், தூக்கு தண்டனை தேவையா என்பது குறித்து ஒரு நாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது. அந்த கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எட்டப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் யாகூப் மேமன் போன்ற கருணைக்காக காத்திருக்கும் பலரது கோரிக்கைக்கும் பின்னால் இருக்கும் நியாயம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியானால் புரியவரும்.

இக்கடிதத்தை அவசரம் கருதி, பொதுநலன் கருதி இப்போது நான் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எனது கோரிக்கை மனுவை நீங்கள் பரிசீலனை செய்வீர்கள் என நான் ஆழமாக நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

கோபாலகிருஷ்ண காந்தி

Saturday, May 16, 2015

ஏசு, நபிகள் கடவுளின் பிள்ளை என்றால் நான் யார்?

ஏசு, நபிகள் கடவுளின் பிள்ளை என்றால் நான் யார்?

//நபிகள், ஏசு இவர்கள் எல்லாம் கடவுளின் பிள்ளைகள் என்றால் நான் மட்டும் என்ன தேவடியாவின் பிள்ளையா? ஏசுவை போல, நபிகள் போல, நாம் எல்லாருமே கடவுளின் பிள்ளைகள் தான்.. // Eash vijaytv

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'
-குர்ஆன் 4:1

உலகில் உள்ள நாம் அனைவருமே 'ஒரு தாய் மக்கள்' என்றுதான் குர்ஆனும் கூறுகிறது. அதனடிப்படையில் நீங்களும் எனது சகோதரரே!

அனால் நீங்கள் பின் பற்றும் இந்து மதம் பார்பனர்களைத் தவிர மற்ற சாதியினரை சூத்திரன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன அர்த்தம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று கூறும் இஸ்லாத்தை விட்டு விட்டு இவரை சூத்திரனாக பார்க்கும் இந்து மதத்தை நோக்கி ஏன் இவர் ஓட வேண்டும் என்பதே என் கேள்வி. மற்றபடி திரு அப்துல் கலாம் இந்து மதத்தை ஏற்பதிலோ இஸ்லாத்தை துறப்பதிலோ முஸ்லிம்களுக்கு எந்த நஷ்டமும் வந்து விடப் பொவதில்லை. மாறாக அவர்தான் நஷ்டவாளியாகிறார். அதனை எடுத்துச் சொல்வது எங்களின் கடமை.

அப்துல் கலாமை முஸ்லிம்கள் ஏன் கௌரவிப்பதில்லை?






//அப்துல் கலாமை இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கமும் ஏன் கௌரவிக்கவில்லை, ஏன் அவரை பா. ஜ.க வினர் கௌரவிக்கிரார்கள்???// -சென்னி மலை

அப்துல் கலாமை ஒரு சிறந்த இந்தியனாக முஸ்லிம்கள் பாராட்டவே செய்தனர். ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் அவரை தனிப்பட்ட முறையில் கௌரவிக்காததற்கு காரணம் உள்ளது. அவர் சிறந்த இந்தியனாக இருந்தார். ஆனால் சிறந்த இஸ்லாமியராக இல்லை. பெயரைத் தவிர வேறு எந்த இஸ்லாமிய அடையாளமோ நடவடிக்கையோ அவரிடம் இல்லை. இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹஜ் செய்யவில்லை. நபிகள் நாயகம் வலியுறுத்திய திருமணத்தை முடிக்கவில்லை.

பிஜேபி கௌரவிப்பதற்கான காரணம் அப்துல் கலாம் இஸ்லாத்தை துறந்து இந்து மத சடங்குகளை பார்பனியத்தை சுவீகரித்தக் கொண்டதால். ஆர்எஸ்எஸ் வைக்கும் கோரிக்கையும் இதுதானே... 'நீங்கள் அல்லாவையும் வணங்கிக் கொள்ளுங்கள். அதோடு ராமனையும் வணங்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் இஸ்லாமியர்களை நாங்கள் அரவணைப்போம்' என்று தானே சொல்கிறார்கள். அதனை அப்துல் கலாம் சிறப்பாக நிறைவேற்றுகிறார். எனவே வாஜ்பாய் முதல் அத்வானி வரை அவரை போற்றுகின்றனர்: புகழ்கின்றனர். தனது இஸ்லாமிய நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டதாலேயே அவரை ராக்கெட் தொழில் நுட்பத்துக்கு தலைவராகவும் ஆக்கினர் இந்துத்வாவாதிகள். பின்னர் ஜனாதிபதியாகவும் ஆக்கினர். உலகில் கிடைக்கும் அற்ப புகழுக்காக அழகிய மார்க்கத்தை அப்துல் கலாம் தூற எறிந்தார். இதனால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த நட்டமும் இல்லை.

மாறாக நாளை இறப்புக்கு பின்னால் 'உலகில் எத்தனையோ பேர் வறுமையில் வாட உன்னை ராக்கெட் தொழில் நுட்ப அறிவைக் கொடுத்து அதன் தலைவனாகும் தகுதியையும் கொடுத்தேன். யாருக்கும் எளிதில் கிடைத்து விடாத இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பையும் வழங்கினேனே! அதற்கு நன்றிக் கடனாக என்னை வணங்கினாயா? எனக்கு நன்றி செலுத்தினாயா?' என்று இறைவன் கேட்டால் என்ன பதிலை திரு கலாம் அவர்கள் தரப் போகிறார்கள்?

இவர் இறந்தவுடன் அரசு மரியாதையோடு பீரங்கிகள் முழங்க உடல் அடக்கம் நடைபெறும். அதன் பிறகுதான் அவரது நிரந்தர வாழ்வே துவங்குகிறது. 'அக்னி சிறகுகள்' என்ற அவரது நூலில் பல குர்ஆன் வசனங்களையும் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்து குர்ஆனையும் விளங்கிய இவர் ஐந்து வேளை தொழுகையையும் கடை பிடித்து மனிதர்களை வணங்காமல் நமது நாட்டுக்காக சிறந்து உழைத்திருப்பாரேயானால் அவரது இரு உலக வாழ்வும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

ஏனெனில் ஒருவனின் தாய் மொழியையும், தாய் நாட்டையும் நேசிக்க குர்ஆன் எந்த வகையிலும் தடை சொல்லவில்லை. அனைத்து பாவங்களையும் மன்னிப்பேன். ஆனால் எனக்கு நிகராக எவரையும் வணங்கினால் அந்த பாவங்களை நான் மன்னிக்க மாட்டேன் என்று இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்.

ஆனால் திரு கலாமோ தன்னை இந்து மதத்தின் பற்றாளராக மீடியாக்களுக்கு காட்டிக் கொள்வதில்தான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். இப்படி காட்டிக் கொண்டால்தான் தனக்கு உயர் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். அவரை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. அது அவருடைய விருப்பம். அவர் நல்லவரா? கெட்டவரா? அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? நரகம் கிடைக்குமா? என்ற அய்வுகளும் என்னைப் பொருத்த வரை தேவையில்லாதது. அவருக்கும் இறைவனுக்கும் உள்ள கணக்கு அது. எனவே முஸ்லிம்கள் அப்துல் கலாமிடமிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

இதை வாசிக்கும் அப்துல் கலாமின் நண்பர்கள் இந்த பதிவை அவரின் கவனத்தக்கு கொண்டு சென்றால் நல்லது. வரும் காலத்திலாவது ஏகத்துவத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு கடைசி காலங்களை பயனுள்ள வழியில் செலவழிப்பாராக!

நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்:

இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. அவற்றில் அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி (6514)