Followers

Showing posts with label ஏகத்துவம். Show all posts
Showing posts with label ஏகத்துவம். Show all posts

Monday, February 01, 2016

மது ஒழிப்பா? - ஷிர்க் ஒழிப்பா? - காலைமலர் பெருமிதம்!







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் சார்பில் நேற்று ஜனவரி 31 அன்று திருச்சியில் திண்டுக்கல் செல்லும் வழியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் குழுமிய 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டு பிராட்டியூரை ஆக்கிரமித்தது.

லட்சக்கணக்கான மக்கள் திரண்ட திடலில் இன்று எங்கு தேடிப்பார்த்தும் ஒரு பீடித்துண்டோ , சிகரெட் பாக்கெட்டோ , மது பாட்டிலோ காணவில்லை.

என்னது மதுபாடிலே இல்லையா? . மது பாட்டில் இல்லாத ஒரு மாநாடா ? அப்படியென்றால் இது சரித்திரப்புகழ் பெற்ற மாநாடாயிற்றே! என வியந்தோம்.

அங்கிருந்த ஒரு முஸ்லிம் சகோதரரிடம் வினவியபோது இறைவனுக்கு இணைவைக்காத எந்த முஸ்லிமும் மதுவுக்கு மயங்கமாட்டான் என்றார்.

இக்காட்சியைப்பார்த்தும் நீங்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துவதுடன் மதுஒழிப்பு மாநாட்டையும் நடத்திவிட்டீர்கள் .

என்றும் நம் தமிழகம் ஜன31 தவ்ஹீத் ஜமாத் மாநாட்டுத்திடலாக அமைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டோம்

http://kaalaimalar.net/liquer-eradication/

Wednesday, January 27, 2016

ஆறிலிருந்து அறுபது வரை - இணை கற்பித்தல்

ஆறு வயதோ அல்லது ஏழு வயதோ இருக்கும் அந்த சிறுவனுக்கு இருக்கும் உணர்வு 60 வயதை தாண்டிய அந்த முதியருக்கு இல்லை. கைலியை வரிந...

Posted by Nazeer Ahamed on Wednesday, January 27, 2016

ஆறு வயதோ அல்லது ஏழு வயதோ இருக்கும் அந்த சிறுவனுக்கு இருக்கும் உணர்வு 60 வயதை தாண்டிய அந்த முதியருக்கு இல்லை. கைலியை வரிந்து கட்டிக் கொண்டு 'யா முஹய்யதீன்'... 'யா முஹய்யதீன்' என்று பித்து பிடித்தவர் போல் அங்கும் இங்கும் அலைகிறார். இத்தனை சப்தங்களுக்கு இடையிலும் 'படைப்பினங்களை விடுத்து படைத்தவனையே வணங்குவோம்' என்று அந்த சிறுவன் இன்னும் குரலை உயர்த்துகிறான். 'அல்லாஹ் அக்பர்'

எல்லா புகழும் இறைவனுக்கே!

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்குர்ஆன் (9:31)

Tuesday, January 19, 2016

இறைவனிடம் பரிந்துரைக்க யாரையும் அணுகலாமா?





1985 தஞ்சாவூரில் வலிமார்கள் மாநாட்டில் பேசிய ஒரு அறிவுஜீவி, அல்லாஹ் நெருப்பு போன்றவன், நம் பிரார்த்தனைகள் மாவு போன்றது, அவ்லியாக்கள் சட்டி போன்றவர்கள்.,எனவே பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க முடியுமா? மாவை நேரடியாக அடுப்பில் ஊற்றினால் நெருப்பு அணைந்து விடாதா என்று கேட்க, அன்றைக்குத்தான் அந்த இடத்திலிருந்து ஏகத்துவ சிந்தனையின் ஊற்றுக் கண் துவக்கி வைக்கப்பட்டது.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' என்று கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)


நபிகள் நாயகம் காலத்தில் அன்றைய அரபுகள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

Monday, January 18, 2016

இந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு!



பரங்கிப் பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரதாப், தியாகராஜன், மணிகண்டன், குப்புசாமி ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகளும் சென்ற ஜனவரி ஏழாம் தேதி தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஏழைகளான இவர்கள் நால்வரும் வீட்டை புணரமைக்க முடியாமல் திகைத்து நின்றனர். இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரங்கிப் பட்டை கிளை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்தது. 60 ஆயிரம் செலவு செய்து அந்த ஏழை மக்களின் கூரை வீடுகளை செப்பனிட்டுக் கொடுத்தது.

மத நல்லிணக்கம் என்பதற்கு பெயர் இதுதான். ஒரு மதத்தவரின் பழக்கங்களை மற்ற மதத்தவர் பின் பற்றுவதன் மூலம் மத நல்லிணக்கம் வளராது. குழப்பமே மிஞ்சும். ஏகத்துவவாதிகளை பொறுத்த வரை மார்க்க விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதே நேரம் மனிதாபிமான உதவிகள் செய்வதில் மத வேறுபாடுகளைக் கடந்து முன்னணியில் இருப்பார்கள். சென்னை மழை வெள்ளத்திலும் அந்த மனிதாபிமானத்தைப் பார்த்தோம். இன்று பரங்கிப் பேட்டையிலும் அதே மனிதாபிமானத்தைப் பார்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!...

Saturday, January 09, 2016

கண்டியூரில் இன்று நடைபெற்ற ஏகத்துவ கூட்டம்!







ஏகத்துவ பிரசாரத்துக்கு மக்கள் நாளுக்கு நாள் ஆதரவை அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்கள். தஞ்சை மாவட்டம் கண்டியூர் என்ற சிறிய கிராமத்தில் இன்று நடந்த கூட்டத்தைத்தான் பார்க்கிறீர்கள். சாதாரண கூட்டத்துக்குக் கூட மக்கள் மாநாட்டைப் போல குழுமி விடுகிறார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, January 02, 2016

ஆவூரில் இறந்த உடலை தூக்கிச் சென்ற பெண்கள்!



தஞ்சை மாவட்டம் ஆவூரில் சென்ற வியாழன் இரவு ஏகத்துவ வாதியின் தந்தை சுகவீனமாக இருந்து இறந்து விட்டார். அவரது மகன் துபாயில் பணியில் உள்ளார். ஏகத்துவ சிந்தனையில் இருந்த அந்த சகோதரர் தனது தந்தைக்கு தானே தொழ வைத்து பிரார்த்தனை செய்ய ஆசைப்பட்டார். நபிகள் நாயகம் இவ்வாறு உறவினர்கள் விருப்பப்பட்டால் அந்த ரத்த பந்தங்களே தொழ வைக்க அனுமதி வழங்கியுள்ளார்கள். புரோகிதத்தை ஒழிக்க இதுவும் ஒரு வழி என்பதால் ஏகத்துவ வாதிகளில் சிலர் தங்கள் உறவினர்களுக்கு தாங்களே தொழ வைப்போம் என்று கூறி வருகின்றனர்.

இதனடிப்படையில் மகன் துபாயிலிருந்து ஆவூருக்கு வந்து விட்டார். ஆனால் மார்க்கம் விளங்காத ஊர் மக்களில் சிலரும் ஒரு சில புரோகிதர்களும் இதற்கு அனுமதி தர மறுக்கின்றனர். இரண்டு பக்கமும் தங்கள் தரப்பை விட்டுக் கொடுக்காமல் நின்றனர். ஊர் முழுக்க பெரும் அளவிலான காவலர்களும் இறக்கப்பட்டனர். 'எந்த நிலையிலும் புரோகிதர்களை அனுமதிக்க மாட்டேன்' என்று மகன் பிடிவாதம் பிடிக்க நிலைமை மோசமானது. இறந்த உடலை தூக்க சுன்னத் ஜமாத்தினருக்கு பயம். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இறந்தவரின் சொந்தக்கார பெண்களை இறந்த உடலை தூக்கவைத்து பள்ளி வாசலுக்கு கொண்டு வந்து விட்டனர். பெண்களாக இருப்பதால் ஏகத்துவ வாதிகளும் வேறு வழியின்றி உடல் செல்ல அனுமதித்தனர். வழக்கம் போல் புரோகிதர் தொழ வைக்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகன் முடிந்த வரை தடுத்துப் பார்த்தார். முடியாத பட்சத்துக்கு இறைவன் எதையும் நிர்பந்திப்பதில்லை.

இந்துத்வாவாதிகளால் நாளுக்கு நாள் பிரச்னை உண்டாகும் போது நமக்குள் பிரிவினை தேவையா? என்று சிலர் கேட்கக் கூடும். இதனை காரணம் காட்டி நம்மிடம் உள்ள அனாச்சாரங்களை மூடி வைக்க வேண்டும் என்று சொல்வது சரியான வாதமாகாது. அன்று மக்காவில் சிலை வணங்கிகளால் உயிருக்கு ஆபத்து இருந்த நிலையிலும் நபிகள் நாயகம் ஏகத்துவ பிரசாரத்தை முடக்கி விடவில்லை. நபிகள் நாயகம், அபூபக்கர், உமர், என்று அனைவரின் குடும்பத்திலும் பிரச்னை. ஆனால் முடிவு சிறந்ததாக இருந்தது. அத்தகைய நிலை இறைவன் நாடினால் தமிழகத்திலும் ஏற்படும். அதுவரை பொறுப்போம்.

'நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7288

Friday, November 20, 2015

கிளி கூட்டமல்ல... கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்!

//இந்திய தேசியத்திற்கு எதிராக சவுதி தேசியத்தை விதைவைத்து நீர் ஊற்றி முளைக்கச்செய்யும் டி.என்.டி.ஜே கிளிக்கூட்டம் மற்றும் கிளிக்கூட்ட ஓனர் பி.ஜேவுக்கும் எதிரானதாக என்றும் என்றென்றும் தொடரும் எம்முடைய எதிர்ப்பு.....
இதில் மாற்றுக்கருத்தென்பதே இல்லை.....// RAM NIVAS

பார்பனியத்துக்கு ஆப்பு வைக்க வந்தது கிளி கூட்டமல்ல.. ராம்...

அந்த ஏக இறைவனை மட்டுமே வணங்கும் ஏகத்துவ கூட்டம்..

உங்களுக்கு தர்ஹா வணங்கிகளைப் பற்றி பிரச்னை இல்லை!

உங்களுக்கு தப்லீக் ஜமாத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

உங்களுக்கு ஷியா கூட்டத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

ஹனபி, ஷாஃபி, ஹம்பலி, மாலிகியாலும் பிரச்னையில்லை

தவ்ஹீத் ஜமாத்தினால்தான் உங்களுக்கு பிரச்னையில்லையா?

எனவேதான் சொல்கிறோம் நாங்கள் கிளி கூட்டமல்ல...

உங்களுக்கு கிலி எற்படுத்தியிருக்கும் ஏகத்துவ கூட்டம்....

பட்டி தொட்டி எல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சி நடத்தி மத மோதல்களை தடுத்தவர் பிஜே அண்ணன்....

உமது தலைவன் ராம் கோபாலய்யரிடம் சொல்லி இதே போல்

ஒரே ஒரு நிகழ்ச்சியையாவது நடத்திவிட முடியுமா உம்மால்...

சவால் விட்டு கேட்கிறேன்... 'இந்து ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதற்கு எங்களை அழைக்கலாமே...

அங்கு வந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரலாமே...

ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தையும்

நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்... முடியுமா உங்களால் ராம்...

முடியவே முடியாது... இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும்...

எங்களைப் போன்ற நிகழ்ச்சி நடத்த உங்களால் முடியாது...

எனவேதான் நான் மீண்டும் சொல்கிறேன்... நாங்கள் கிளி கூட்டமல்ல

உங்கள் பிடறியை பிடித்து கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்





Sunday, October 11, 2015

ஏகத்துவ வாதிகளின் எழுச்சி மிகு பணிகள்!



மறுமை வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு இரவு பகல் பாராது ஏகத்துவ சிந்தனையை மக்கள் மனதில் எத்தி வைக்க பாடுபடும் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்' இளம் வீரர்கள்.

அஜீத்துக்கும் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் அமைத்து தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் இதே தமிழகத்தில்தான் ஏகத்துவ இளைஞர்களும் உள்ளனர். இறைவன் இந்த இளைஞர்களின் மகத்தான பணியை பொருந்திக் கொண்டு தமிழகத்தில் ஏகத்துவம் எழுச்சி பெற அருள் புரிவானாக! இந்த இளைஞர்களையும் பொருந்திக் கொள்வானாக!

Friday, September 25, 2015

மேலப் பாயைத்தில் நடந்த பெருநாள் தொழுகை!








கடந்த 30 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மன மாற்றம். ஏகத்துவ வாதிகள் 30 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு 2 பேர் மூன்று பேர் இருந்தனர். தர்ஹா வணங்கிகளால் மிரட்டப்பட்டு ஊர் விலக்கமும் செய்யப்பட்டனர். ஆனால் இன்று தமிழகத்திலேயே அதிக அளவில் மக்கள் பெருநாள் தொழுகைக்கு குழுமும் இடமாக மேலப் பாளையம் மாறிப் போயுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஏகத்துவ வாதிகளின் திடல் தொழுகையை நோக்கி மக்கள் வந்த வண்ணம் உள்'ளனர்.

மக்கள் ஆதரவு அதிகமானால் வழக்கமாக வரும் பெருமையும் கர்வமும் ஏகத்துவ வாதிகளை அண்டாது எந்ந நிலையிலும் இறைவனை போற்றி புகழக் கூடியவர்களாக ஏகத்துவ வாதிகளை இறைவன் மாற்றுவானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

Monday, September 21, 2015

தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பற்றி இந்து பத்திரிக்கை புகழாரம்!



700 மருத்துவ முகாம்களை நடத்தி 10000 ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ பரிசோதனை களையும் மருந்துகளையும் பெற்றுச் செல்கின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பின்தங்கிய ஊரான மேலப் பாளையத்தில் 350 நபர்கள் தங்கள் கண்களை பரிசோதித்துக் கொண்டு மருத்துவ உதவிகளையும் பெற்றுச் செல்கிறார்கள். இது கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பெருநாளன்று திருநெல்வேலி டிஎன்டிஜே கிளை சார்பாக 15 டன் இறைச்சியை 15000 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர். மேலப் பாளையம், பாளையங்கோட்டை, ஏர்வாடி, அம்பா சமுத்திரம், பொட்டல் புதூர், கடைய நல்லூர், தென்காசி, புளியங்குடி, சங்கரன் கோவில், செங்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த இறைச்சியை வருடா வருடம் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பின்பற்றி வேறு சில அமைப்புகளும் தற்போது மருத்துவ முகாம்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

தகவல் உதவி
தி ஹிந்து நாளிதழ்
15-09-2014

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வைத்து நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிகளை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முதல் வேன்.. 19-09-2015



அரசியலில் ஓட்டுக்காக எவரிடம் இந்த அமைப்பு செல்வதில்லை. அரசு அதிகாரங்கள் எதுவும் இந்த அமைப்பிடம் இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட பல லட்சம் இளைஞர் பட்டாளம் மட்டுமே இந்த அமைப்பின் சொத்து. மக்களின் நன்கொடைகளை வைத்தே ஒரு அரசாங்கத்தைப் போன்று இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வா அமைப்புகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் இருந்து பாடம் பயின்று கொள்ளட்டும். பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மத அமைப்பு எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தவ்ஹீத் ஜமாத்தை முன்னோடியாகக் கொண்டு இந்துத்வாவாதிகள் தங்களை திருத்திக் கொள்வார்களாக! மதுவிலும், மூடப் பழக்கத்திலும் சாதி வெறியிலும் சிக்கி சிதறிக் கிடக்கும் எனது சகோதர இந்து மக்களை இனியாவது அழிவின் பக்கம் கொண்டு செல்லாமல் ஆக்கபூர்வ பணிகளை இந்துத்வாவாதிகள் முன்னெடுப்பார்களாக!

Sunday, August 02, 2015

ஆடுதுறை மற்றும் மன்னார்குடியில் எதிர்ப்பை மீறி உடல் அடக்கம்!



ஆடுதுறை சம்பவத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கம் அறியாத மூடர்கள் நபி வழியில் இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்தனர். இதற்கு காவல் துறையும் துணை போனது.

இந்த அடாவடித்தனத்தைக் கண்டு பொறுக்காத தவ்ஹீத் ஜமாத்தினர் தடையை மீறி உடலை அடக்கம் செய்தனர். ஆடுதுறையிலும் இதே போன்று தடையை மீறி இறந்த உடலை அடக்கம் செய்துள்ளனர். இனி மேல் எதிர்ப்பு தெரிவித்தால் இதே போன்று தடையை மீறி உடலை அடக்கம் செய்ய தமிழகம் முழுவதும் தவ்ஹீத் வாதிகள் தயாராக வேண்டும்.

இதே போன்று சென்ற ரமலானில் பண்டாரவாடையில் இறந்த உடலை அடக்கம் செய்ய ஒரு கூட்டம் மறுத்தது. பள்ளி வாசலின் உள்ளே ஒரு இளைஞன் சரியான குடி போதையில் இடையிடேயே வெளியே வந்து 'உயிரே போனாலும் உடலை அடக்க விட மாட்டோம்' என்று வெறித் தனமாக கத்தி விட்டு சென்றான். காவலுக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர் 'எங்கள் கோவிலில் தான் இது போன்று சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் செய்வார்கள். உங்கள் பள்ளி வாசலில் இவ்வாறு ஒருவன் குடித்து விட்டு கத்திக் கொண்டு நிற்பதை முதல் முறையாக பார்க்கிறேன்' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

பண்டாரவாடையில் இவ்வாறு பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது மாலை நேரத் தொழுகைக்கும் இரவு நேரத் தொழுகைக்கும் பாங்கு கொடுக்கப்பட்டது. பாங்கு கொடுத்தவுடன் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளியின் உள்ளே 'உடலை அடக்கக் கூடாது' என்று கோஷமிட்ட ஒரு பெரும் கும்பல் பள்ளிக்கு வெளியே தொழாமல் வந்தது. சில அடி தூரத்தில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் வெளியே கூடியிருந்த அனைத்து மக்களும் தொழ பள்ளிக்கு சென்றனர். ஆனால் தொழ பள்ளியில் இடமில்லை. இரண்டாவது ஜமாத், மூன்றாவது ஜமாத், நான்காவது ஜமாத் என்று தொழுது தங்கள் கடமையை தவ்ஹீத் இளைஞர்கள் நிறைவேற்றினர்.

பெரிய பள்ளியில் குடித்து விட்டு கும்மாளமிட்ட சுன்னத் ஜமாத் இளைஞர்களையும் ஆறு நோன்பு வைத்துக் கொண்டு கடமையான தொழுகைகளையும் நிறைவேற்றிய தவ்ஹீத் பள்ளியில் தொழுத ஏகத்துவ இளைஞர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். சாராயத்தில் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் நேர்வழிக்காக பிரார்த்தனை செய்தேன்.

ஐந்து வேளை தொழாதவன், சாராயம் குடிப்பவன், வட்டி வாங்குபவன், விபசாரம் புரிந்தவன், பள்ளி வாசல் சொத்தை கொள்ளை அடித்தவன், அரபு நாடுகளில் வேலை செய்து கம்பெனி பணத்தை சுருட்டிக் கொண்டு வந்து ஊரில் பெரிய மனிதனாக உலா வருபவன் இவனது குடும்பத்தாருக்கெல்லாம் இறந்த உடலை அடக்கம் செய்ய எந்த வித கட்டுப்பாடுகளையும் பள்ளிவாசல் நிர்வாகம் விதிப்பதில்லை.

ஆனால் நபி சென்னபடி தனது வாழ்வை அமைத்துக் கொண்டு ஏகத்துவத்தைக் கடை பிடிக்கும் இளைஞனின் வீட்டு இறந்த உடலை இந்த பள்ளி நிர்வாகிகள் அடக்க இடம் தர மறுக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களை இந்த உலகிலேயே இறைவன் இழிவுபடுத்துவான். மறு உலகிலும் உலக மக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனையை தருவான். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

Monday, July 13, 2015

வழுத்தூரில் ஏகத்துவத்தின் எழுச்சி!





நான் ப்ளஸ் டூ முடித்தது வழுத்தூரில்தான். இந்த ஊர் தர்ஹா வணக்கத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கும் ஊர். கொடி சீலை என்று ஒரு விழாவும் எடுப்பார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள வெளி நாடுகளில் இருந்து எல்லாம் ஊர் காரர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு கலந்து கொள்வார்கள். வெகு விமரிசையாக இந்து கூத்துக்கள் அரங்கேறும்.

இந்த நிலையில்தான் தவ்ஹீத் பிரசாரம் வழுத்தூரையும் எட்டியது. விடுவார்களா கபுர் வணங்கிகள்? பல தொல்லைகளை தவ்ஹீத்வாதிகளுக்கு கொடுத்துப் பார்த்தார்கள். வழக்கம் பொல் கபுர் வணங்கிகளுக்கு தோல்வியை இறைவன் தந்தான். இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ சிந்தனை எதிர்ப்பினால் மிகுதியானது. இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று தவ்ஹீத் பள்ளியை வழுத்தூர் மக்கள் கடுமையான சிரமத்திற்கு மத்தியில் திறந்துள்ளார்கள்.

சென்ற மாதம் நடந்த 'மஸ்ஜித் தவ்ஹீத்' திறப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். 'கியாமுல் லைல்' எனப்படும் இரவுத் தொழுகைக்கு வந்துள்ள இளைஞர் பட்டாளத்தைப் பாருங்கள். இந்த ஏகத்துவ எழுச்சி இன்னும் சில ஆண்டுகளில் முழு வழுத்தூரையும் ஆட்கொள்ளும் இன்ஷா அல்லாஹ்.

சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டும், டாஸ்மாக் கடையே கதியாகவும் கிடந்த இளைஞர் சமூகத்தை இன்று குர்ஆனை கையில் எடுக்க வைத்துள்ளது இந்த ஏகத்தவ இயக்கம். இதற்கு காரணமான உலமாக்கள், இளைஞர்கள், வசதி படைத்தவர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் ஈருலகிலும் கண்ணியத்தை தந்தருள்வானாக!


(இரவுத் தொழுகை முடிந்தவுடன் உணவு பரிமாறப்படுகிறது. மற்றொரு படத்தில் நோன்பு திறக்க மஸ்ஜித் தவ்ஹீதில் காத்திருக்கும் ஏகத்துவவாதிகள்)

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, July 11, 2015

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

25 வருடங்களுக்கு முன்பு ரியாத்தில் ரமலான் இருபதுக்கு பிறகு இரவு இரண்டு மணிக்கு 'கியாமுல் லைல்' என்ற இரவுத் தொழுகை நடைபெறும். இந்த தொழுகையை நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி தொழுது வந்துள்ளார்கள். தனது குடும்பத்து பெண்களையும் தொழச் சொல்லி ஏவுவார்கள். சஹாபாக்களும் இந்த தொழுகையை விரும்பி தொழுது வந்தனர். இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை இறைவன் செவி மடுத்து அதற்கு உடன் பதிலளிக்கிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக பள்ளிக்கு வருவர். இது எனக்கு புதுமையாக இருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நான் தமிழகத்தில் கண்டதில்லை. தமிழகத்துக்கு ஒரு இஸ்லாம்: சவுதிக்கு ஒரு இஸ்லாமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் உருவானது. நபி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குர்ஆனின் மொழி பெயர்ப்பு வீடுகள் தோறும் மக்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தனர். நபிகள் நாயகம் வலியுறுத்திய அந்த இரவுத் தொழுகையை தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு தங்கள் குடும்பத்தாரோடு இரவு இரண்டு மணிக்கு தொழுது கொண்டிருந்தனர். ஊருக்கு வரும் சமயம் நானும் வீடுகளில்தான் தொழுது கொள்வேன். ஏனெனில் அப்போது தவ்ஹீத் பள்ளிகள் கட்டப்படாத சமயம். ஊரில் பயங்கர எதிர்ப்பு இருந்த சமயம். ரகசியமாகவும் இந்த இரவுத் தொழுகையை தொழுது வந்தோம்.

காலம் உருண்டோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறைதான் ரமலானில் ஊரில் உள்ளேன். 25 வருடங்களுக்குப் பிறகு இன்று எனது கிராமத்தில் மூன்று தவ்ஹீத் பள்ளிகள் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளிகளை நோக்கி நடந்தும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களிலும் அணி வகுத்து செல்கின்றனர். அங்கு பள்ளியில் அன்று நான் ரியாத்தில் பார்த்த காட்சிகளைப் பார்க்கிறேன். இரவு 9 மணிக்கு எவ்வளவு பேர் தொழுவார்களோ அந்த எண்ணிக்கை சற்றும் குறைவில்லாமல் மூன்று வரிசைகள், நான்கு வரிசைகளில் ஆண்களும் பெண்களும் நின்று நள்ளிரவு இரண்டு மணிக்கு தங்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சியைப் பார்த்தேன். அழுது இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் ஆட்டோக்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ள காட்சியானது கண் கொள்ளாக் காட்சியாகும். ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் ததும்பியது.

25 வருட சத்திய தவ்ஹீத் பிரச்சாரத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா? இறைவனின் ஆசியும் கிருபையும் இல்லா விட்டால் இது சாத்தியப்படுமா? எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

இதற்காக உடலாலும் பொருளாதாரத்தாலும் உழைத்த தவ்ஹீத்வாதிகளுக்கு இறைவன் தனது கருணையை பொழிவானாக! அவர்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

------------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க....... ராஜகிரி கீழப்பள்ளியின் இமாம் சாஹூல் ஹமீது என்பவரின் பள்ளிவாசலில் நடைபெற்ற ஒரு பயானை கேட்டேன். அதில் அவர் 'எந்த படித்த அறிவுள்ள இளைஞனும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க மாட்டான்: நல்ல குடும்பத்தில் நல்ல குடும்ப பாரம்பரியத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க மாட்டார்கள். உங்கள் குழந்தைகளை தவ்ஹீத் ஜமாத்தில் சேர விடாதீர்கள்' என்று அல்லாஹ்வுடைய பள்ளியில் நின்று கொண்டு சொல்கிறார். அதனை அந்த ஊர் பள்ளி நிர்வாகிகளும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

மார்க்கம் அனுமதிக்காத வகையில் ஊர் மக்களிடம் பொருளீட்டும் இந்த இமாம் நல்ல பாரம்பரியம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவராம். அதே நேரம் ஏகத்துவ பணிகளுக்காக சொந்த பணத்தை செலவு செய்து உடல் உழைப்பையும் கொடுத்து வரும் என்னைப் போன்றவர்கள் நல்ல இஸ்லாமிய குடும்ப பாரம்பரியம் இல்லாதவர்களாம். இந்த ஒன்றுக்காகவே மறுமையில் இறைவனின் முன்னால் இந்த இமாம் ஷாகுல் ஹமீதுக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்.

தட்டு, தாயத்து, முரீது வியாபாரங்கள் படுத்து விட்டது. இறந்து போன வீடுகளில் கத்தம் பாத்திஹா என்ற பெயரில் 3ம் நாள், 10 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று வரிசையாக ஃபாத்திஹா ஓதி காசு பார்த்த காலம் மலையேறி விட்டது. அங்கு சென்று பிரியாணி சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது. ஊர் மக்கள் ஃபித்ரா பணத்தை முன்பு பள்ளி இமாமுக்கு மாத்திரமே கொடுத்து வந்தனர். ஆனால் தவ்ஹீத்வாதிகள் வீடு வீடாக வசூலித்து ஒரு லட்சம் இரண்டு லட்ச ரூபாய் வரை வசூல் செய்து ஊரில் உள்ள ஏழைகளுக்கு பிரியாணி அரிசி, மற்றும் சமையல் செய்ய பணம் என்று ஏழை வீடுகளாக தேடிச் சென்று கொடுத்து வருகின்றனர். இதனால் பெருநாள் அன்று எங்கள் ஊர் ஏழைகள் கவுரவமாக பிச்சையெடுக்காமல் அவர்கள் வீட்டில் அன்று சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இது நபிகள் நாயகம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறை. சுய மரியாதை மிளிரக் கூடிய தருணம் இது. வரதட்சணை வாங்காத திருமணங்கள் பல நடந்துள்ளன தவ்ஹீத் வாதிகளின் பிரசாரத்தால். முன்பு தவறுதலாக வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. தர்ஹா வணக்கம் கிட்டத்தட்ட ஒழியும் நிலைக்கு வந்துள்ளது. இதை எல்லாம் பார்த்து அரண்டு போன கீழப் பள்ளி இமாம் ஷாகுல் ஹமீது முன்பு தனக்கு கிடைத்த வருமானங்கள் பாழாகிறதே என்று எண்ணி தனது மனம் போன போக்கில் அல்லாஹ்வுடைய பள்ளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

ஊரில் ஒரு சிலர் இவரது பேச்சை ஆமோதிக்கலாம். நிர்வாகிகளும் அனுமதியளிக்கலாம். ஆனால் நாளை மறுமையில் இறைவனின் முன்னால் கேவலப்பட்டு இந்த இமாம் நிற்கும் காலமும் வரும். தவ்ஹீத் ஜமாத்தை எதிர்த்தால் ஊரில் எல்லோராலும் பேசப்படும் ஒரு இமாமாக தான் வலம் வரலாம் என்ற அற்ப ஆசையைத்தான் பார்க்கிறோம். சென்ற வாரத்தில் கூட இந்த இமாமை காவல் நியைத்தில் வைத்து இறைவன் இழிவு படுத்தினான். விசாரணை செய்த காவல் துறை அதிகாரி 'நீங்கள் பேசியது தவறு' என்று அறிவுரை கூறக் கூடிய நிலையைத்தான் பார்தோம்.மாற்று மத காவல் துறை அதிகாரி முன்னால் கூனிக் குறுகி குற்ற உணர்ச்சியில் நின்றதைத்தான் பார்தோம். ஏனெனில் சத்தியம் எது என்று தெரிந்து கொண்டே அற்ப உலக ஆதாயங்களுக்காக மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கும் இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் இழிவையே பரிசாகத் தருவான். இவரும் சத்தியத்தை உணர்ந்து நேர் வழியில் வர இந்த இரவுத் தொழுகைகளில் பிரார்த்திப்போமாக!

Sunday, June 28, 2015

தஞ்சை மாவட்டம் ஆவூரிலும் ஏகத்துவத்தின் எழுச்சி........




தஞ்சை மாவட்டம் ஆவூருக்கு சில வேலைகள் காரணமாக இரண்டு வாரங்கள் முன்பு சென்றிருந்தேன். வேலைகளுக்கு நடுவே தொழுகைக்கான நேரம் வரவே பள்ளியை தேட ஆரம்பித்தேன். நான் சென்ற இடத்துக்கு அருகிலேயே 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' கண்காணிப்பில் இயங்கும் தவ்ஹீத் பள்ளியை பார்த்தேன். மாலை நேரத் தொழுகையை அங்கு நிறைவேற்றி விட்டு அங்கு வந்த இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தேன்.

தொழ வந்த அனைவருமே இளைஞர்கள். கல்லூரிகளில் படித்து வருபவர்கள். வயதானவர்கள் மிக சொற்பமே. இந்த சிறு வயதிலே ஆங்காங்கே தாடி அந்த இளைஞர்களின் முகத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சினிமா கூத்தாடிகளுக்கு ஒரு காலத்தில் ரசிகர் மன்றங்கள் அமைத்து வாழ்வை சீரழித்துக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம் நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு பய பக்தியோடு ஏக இறைவனை வணங்கிக் கொண்டிருந்தது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

இந்த பள்ளியின் அருகில் சமாதிகள் ஏதும் கிடையாது. நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு தொழுதார்களோ அந்த முறையில் தொழுகை நடத்தப்படும். தட்டு. தூயத்து, மாந்த்ரீகங்கள் இந்த பள்ளியில் பார்க்கப் படாது. பேய் ஓட்டுகிறேன் என்று இங்குள்ள ஆலிம் எந்த வீட்டுக்கும் வர மாட்டார். இறந்து போனவர்கள் வீட்டில் இனி விருந்துகள் எல்லாம் நடக்காது. அவ்வாறு நடத்தப்படும் விருந்துகளுக்கும் இங்குள்ள மதகுரு செல்ல மாட்டார்.

ஆவூர், கொவிந்த குடி, வலங்கைமான் போன்ற குக்கிராமங்களில் முன்பு இஸ்லாமியர்கள் இந்துக்களோடு ஒன்றர கலந்து வாழ்ந்ததால் அவர்களின் கலாசாரமும் முஸ்லிம்களிடமும் ஆங்காங்கே தென்படும். சமாதி வழிபாடு, தட்டு, தாயத்து, மூடப் பழக்கங்கள் என்று இந்துக்களுக்கு நாங்கள் சற்றும் குறைவில்லை என்று முன்பு வாழ்ந்து வந்தனர்.

கடந்த 25 ஆண்டுகால தொடர் பிரசாரத்தின் காரணமாக இன்று தவ்ஹீதின் எண்ணம் அந்த மக்களிடத்தில் துளிர் விடத் தொடங்கியுள்ளது. அதன் அச்சாரமாக ஊருக்கு மத்தியில் மிகப் பிரமாண்டமாக தவ்ஹீத் பள்ளியை சகோதரர்கள் கட்டி முடித்துள்ளார்கள். வெள்ளிக் கிழமைகளில் மூன்று தளங்களும் நிரம்பி வழிகின்றதாம். பெண்களுக்கென்றே ஒரு தளத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். நான் தொழ சென்ற நேரம் மூன்று வரிசைகளில் மக்கள் நின்று தங்களின் இறை கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். பள்ளியின் உள்ளே சலவைக் கற்களால் மிக கச்சிதமாக அழகுற கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் வெளி வேலைகள் இன்னும் சற்று பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அந்த பணிகளும் நிறைவேறி விடும்.

ஊரின் எதிர்ப்பு: ஊரை விட்டு விலக்கி வைப்போம் என்ற மிரட்டல்: குழப்பவாதிகள் என்ற அவச் சொல்: தாய் தந்தை மாமன் மச்சான்களிடம் கூட இதனால் குடும்பத்தில் குழப்பம். இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் இன்று இவ்வளவு அழகிய பள்ளியைக் கட்டி பெருந் திரளாக மக்களும் தொழ வருவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னல்களை அனுபவித்த அந்த இளைஞர்களுக்கு இறைவன் மறுமையில் மகத்தான இடங்களை தேர்வு செய்வான். அந்த கூட்டத்தில் நம்மையும் இறைவன் இணைத்துக் கொள்வானாக!

சுன்னத் ஜமாத் பள்ளியிலிருந்து தொழுது கொண்டு வெளி வந்த ஒருவரிடம் இந்த பள்ளியைப் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் கேட்டவுடன் பட படவென பொரிய ஆரம்பித்தார்......

'இந்த நஜாத் காரன்களால பெரிய தொல்லையா இருக்குது பாய். முதல்ல மூணு பேர்தான் இருந்தானுங்க. அப்புறம் 30 ஆனானுங்க.. இப்ப 300 க்கு மேல போய்ட்டானுங்க.... ஏதாவுது கேட்டா குர்ஆனை தூக்கிட்டு வரானுங்க... எங்களால ஒன்னும் பண்ண முடியல பாய்....' என்றார் வருத்தமாக. நான் என்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். :-)

இவ்வாறு இறைவனின் மூலம் வெற்றிகள் நம்மை அடையும் போது நமது நிலை கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல் குர்ஆன் : 110:1

Saturday, May 23, 2015

‪‎நரி‬ ‪‎குறவர்‬ ‪‎சமுதாயத்திற்க்கும்‬ சென்றடைகிறது சத்திய மார்க்கம்

‪‎

நரி‬ ‪‎குறவர்‬ ‪‎சமுதாயத்திற்க்கும்‬ சென்றடைகிறது சத்திய மார்க்கம்

‎TNTJ‬ ‪‎நாகை‬ #‎வடக்கு‬ மாவட்டம் சார்பாக ‪‎செம்பனார்‬கோவில் என்ற ஊரில் 22/05/2015 அன்று நரி குறவர்கள் வசித்து வரும் பகுதிக்கு சென்று அந்த மக்களை அழைத்து " ‎கடவுள் ‎என்றால்‬ யார்? ", " கடவுளுக்கான இலக்கணம் ‎என்ன‬? ", " அவனை ‎வணங்குவதனால்‬ என்ன பயன்? " & "மனிதன்‪ ‎தோன்றிய‬ வரலாறு" என்ற செய்திகளை அம்மக்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.மேலும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டும் குடும்பவியல் பற்றி பேசும் பொழுது ஆங்காங்கே இருந்த பெண்கள் தங்கள் குழந்தைகளோடு ஆர்வமாக அருகில் வந்து நமது உரையை கேட்டனர்.
இறுதியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தாராளமாக நீங்கள் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது.அதற்கு அம்மக்கள் நீங்கள் கூறிய கடவுள் கொள்கை தெளிவாக புரிந்தது என்று கூறினார்கள்.

மேலும் எங்கள் மக்கள் அதிகம் வாழும் அரசூர் ஜே.ஜே.நகர் என்ற பகுதிக்கு வந்து இது போன்ற விளக்கத்தை தரும்படி நமது ஜமாஅத்தினர்க்கு அன்பான அழைப்பையும் விடுத்தனர்.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருகிறோம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றனர்

இஸ்லாமிய மார்க்கத்தை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு சான்று , ‪#‎தீண்டாமை‬என்ற மனோஇச்சையை தூக்கி எறிந்த ஒரே ‪#‎மார்க்கம்‬இஸ்லாம் மட்டுமே !!! , அல்லாஹூ அக்பர் , விரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி தருவானாக!!!

49:13. மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு:- இவ்வாறான தாவா பணியை அனைத்து கிளைகளும்.,அனைத்து இயக்கங்களும் செய்தால்.,நன்றாக அமையும்.

-Muhammad Siddiq Ibn Kalifullah

Saturday, April 25, 2015

நபி வழியில் உடலை அடக்கம் செய்ய மறுத்த நிர்வாகம்!













24-04-2015 அன்று இரவு தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள செக்கடித் தெருவில் சகோதரர் அப்பாஸ் அவர்களின் தாயார் மும்தாஜ் அம்மாள் அவர்கள் சுகவீனம் காரணமாக இறந்து விட்டார். மறுநாள் காலையில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். இறந்தவர் உயிரோடு இருக்கும் போது 'தன்னை நபி வழியில் அடக்கம் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். சகோதரர் அப்பாஸ் ஓரிறைக் கொள்கையை (ஏகத்துவம்) ஏற்றுக் கொண்டிருப்பதால் தனது தாயாருக்கு தானே தொழ வைப்பதாக சொல்லியுள்ளார். இதனை ராஜகிரி பெரிய பள்ளி நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை. பள்ளியின் இமாம் தொழ வைத்தால்தான் மையவாடி (கபுர்ஸ்தான்) யில் அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்பது பள்ளி நிர்வாகிகளின் வாதம்.

தகடு, தாயத்து, மவுலூது, கபுர் வணக்கம், ஃபாத்திஹாக்கள் என்று இணை வைப்பிலும் மூடப்பழக்கத்திலும் மூழ்கி திளைத்துக் கொண்டு அதனை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை பின்பற்றி நான் எப்படி தொழுவது? என்பது சகோ அப்பாஸின் வாதம். எனது தாயாருக்கு கடைசி மரியாதையான பிரார்த்தனை தொழுகையை என்னை தொழ வைக்க அனுமதியுங்கள் என்று அப்பாஸ் அலி பிடிவாதமாக இருக்க பள்ளி நிர்வாகிகளும் அனுமதி தர மாட்டோம் என்று சொல்ல விஷயம் காவல் துறை வரை சென்று விட்டது. பிறகென்ன... ராஜகிரி கடைத் தெரு முழுக்க காவல்துறையினர்தான். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். பிறகு காவல் துறை ஆய்வாளர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரண்டு பக்கத்திலும் ஐந்து ஐந்து பேராக அமர்ந்து காரசாரமான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையில் நேரமாகிக் கொண்டே செல்வதால் சகோ அப்பாஸ் அவர்களின் வீட்டில் எல்லோரும் குழுமி தொழுகை நடத்த தயாரானோம். இறந்து போன தனது தாயார் யாருக்கும் கடன் பாக்கி வைத்திருந்தால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக சகோ அப்பாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு தனது தாயாருக்காக பிரார்த்தனை தொழுகையை சகோதரர் அப்பாஸ் அவர்களே நடத்தினார். அதிக எண்ணிக்கையில் மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி பயணித்தோம். மையவாடிக்கருகில் உடலை கொண்டு வந்தவுடன் 'பேச்சு வார்த்தை முடியவில்லை. அதற்குள் உடலை ஏன் கொண்டு வந்தீர்கள்' என்று காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கவே அனைவரும் உடலை எடுத்துக் கொண்டு ராஜகிரி மெயின் ரோட்டுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 நிமிடத்துக்கு போக்குவரத்து தடைபட்டது. உடன் காவல் துறையினர் குறுக்கிட்டு 'உடலை அடக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உடலை ஓரமாக வைத்து போக்குவத்துக்கு வழி விட்டனர்.

இதன்பின் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு 'மூன்று மாதத்துக்குள் அடக்கத் தளம் உங்களுக்கு தனியாக ஒதுக்கித் தருகிறோம்' என்ற உத்தரவாதத்தின் பேரில் உடலை அடக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தந்தது. அடக்கத்தளத்தின் பூட்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் குழி வெட்டி முடிக்கப்பட்டு சகோ அப்பாஸ் விரும்பியபடி நபி வழியில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் அவரின் தாயாருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக களைந்து சென்றோம்.

பள்ளி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள்...

வட்டி வாங்கி வாழ்வை ஓட்டுபவன், விபசாரம் செய்பவன், பள்ளி வாசல் சொத்தை திருடி தின்பவன், பங்காளிக்கு துரோகம் செய்பவன், சாராயம் குடிப்பவன் என்று இவர்களை அடக்கம் பண்ணுவதற்கு உங்கள் நிர்வாகம் எந்த தடையும் விதிப்பதில்லை. ஆனால் நபி அவர்களும் குர்ஆனும் காட்டித் தந்த வழியில் ஒருவன் வாழ முயற்சித்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த தொல்லைகளை தருகிறீர்கள். தாயை இழந்து ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையாளனை மேலும் மன உளைச்சலைக் கொடுத்து சந்தோஷப்படுகிறீர்கள். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். ஒரு நரம்பை இறைவன் பிடித்து இழுத்தான் என்றால் உங்கள் கதி அதோ கதி தான். இறைவனின் கோபம் மிகக் கடுமையானது. சிறிதாவது மார்க்கத்தை விளங்க முயற்சி செய்யுங்கள். இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக!

Thursday, April 02, 2015

நான் என்றுமே இளையராஜாவின் மகனே - யுவன்




நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முக நூல் பக்கத்தில் நான் பார்த்த ஒரு பதிவு இது. இந்த பதிவுக்காக சிலர் அவரை தூற்றியும் மற்றும் சிலர் பாராட்டியும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிக அழகாக தனது கருத்தை பதிவாக்கியுள்ளார் யுவன்.

'உலக முடிவு நாளன்று நான் இளையராஜாவின் மகனாகத்தான் இருப்பேன்: இளையராஜா எனது தந்தையாகத்தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் நடந்து விடப் போவதில்லை' - யுவன் சங்கர் ராஜா

ஆம்... கண்டிப்பாக..... இன்று யுவன் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டிருக்கலாம். தனது பெயரைக் கூட 'அப்துல் ஹாலிக் யுவன்' என்று மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் இளையராஜாவின் மகன் என்ற அடையாளம் உலக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும். அவர் தமிழன் என்ற அடையாளமும் எந்த நாளும் மாறப் போவதில்லை. அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதை இஸ்லாமும் தடை செய்யச் சொல்லவில்லை.

இன்று அவருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் இறை வழிபாட்டில் மட்டுமே. இந்த மாற்றம் அவர்களை நிரந்தரமாக பிரித்து விட இஸ்லாம் கட்டளையிடவில்லை. ஒரு முறை ஒரு நபித் தோழர் 'இறைவனின் தூதரே! எனது பெற்றோர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. வயதான அந்த பெற்றோருக்கு முஸ்லிமான நான் பணிவிடை செய்ய வெண்டுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்... அவர்கள் இஸ்லாத்தை எற்கா விட்டாலும் கண்டிப்பாக நீ பணிவிடை செய்ய வேண்டும்' என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

எனவே இளையராஜா இஸ்லாத்தை எற்கா விட்டாலும் யுவன் தனது தந்தைக்கு செலுத்த வேண்டிய மரியாதையை குறைத்து விடச் சொல்லி கட்டளையிடவில்லை இஸ்லாம். பெற்றோருக்கு செய்யும் மரியாதையில் சில மாற்றங்களை இஸ்லாம் செய்யச் சொல்கிறது. முன்பு இளையராஜாவின் காலில் விழுந்து தனது அன்பை யுவன் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மனிதன் மற்ற மனிதனின் காலில் விழுவதை இஸ்லாம் தடுக்கிறது. கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தனது தலையை ஒரு முஸ்லிம் சாய்க்க மாட்டான். எனவேதான் ஏ ஆர் ரஹ்மான் கூட இது வரை பொது மேடைகளில் தனது சீனியர்களான எம்எஸ்வி, இளையராஜா போன்றோரின் கால்களில் விழுந்ததில்லை. தாய் தந்தையருக்கு மரியாதை எந்த விதத்தில் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அந்த இலக்கணத்திலிருந்து சற்றும் பிறழாமல் தனது வாழ்வை யுவன் அமைத்துக் கொள்வாராக! ஏகத்துவ கொள்கையிலிருந்து சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்வாராக!

Wednesday, March 11, 2015

வாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு!

வாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு!





"கடவுளை வழிபடுவதற்கு ஏக தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது. தமிழ் மறையாம் தேவாரம் பாடிய மூவரும் மாணிக்க வாசகரும் ஏக தெய்வ வழிபாட்டைக் கையாண்டுள்ளனர். ஏக தெய்வ வழிபாடு என்றால் இதர தெய்வ ஆலயங்களுக்கோ மற்ற மதத்தினர் வழிபடும் இடங்களுக்கோ செல்லக் கூடாது என்பது அல்ல பொருள். முருக பக்தன் ஒருவன் வைணவக் கோவிலுக்குச் சென்றாலும் மசூதி மற்றும் மாதா கோவிலுக்குச் சென்றாலும் அங்கு இருக்கும் இறைவனை தான் வணங்கும் முருகனாக கருதி வழிபட வேண்டும்.

நால்வருக்கு பிறகு அருணகிரி நாதர்தான் ஏக தெய்வ வழிபாட்டைச் செய்தவர். அவர் முருகனைத் தவிர யாரையும் பாடியதில்லை.

கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா? என்று பலர் பிரச்னையை எழுப்புகிறார்கள். கடவுளுக்கு உருவம் இல்லை என்பது இந்து மதத் தத்துவம். ஆனால் இந்துக்கள் உருவ வழிபாடு செய்கிறார்கள். தண்ணீர் அதிக குளிர்ச்சியின் காரணமாக பனிக் கட்டியாவது போல் உருவமில்லாத இறைவன் பக்தர்களின் நம்பிக்கை காரணமாக உருவமுள்ளவனாகிறான்".

-தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சமய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அருணகிரி நாதர் 600 வது ஆண்டு நிறைவு விழாவில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவின் ஒரு பகுதி இது.

-தினமணி
12-12-1975

இந்து மத கொள்கைகளை வாரியார் சுவாமிகள் ஆய்வு செய்து இறைவனுக்கு உருவம் கற்பித்து வணங்குவதை இந்து மதம் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறுகிறார். இந்துக்கள் உருவ வழிபாடு தற்போது செய்து வருவதால் அதற்காக ஒரு சமாதானத்தைத்தான் வாரியார் சுவாமிகள் சொல்கிறார். எனவே அடிப்படையில் இந்து மதம் இஸ்லாம் கூறும் ஏக தெய்வ கொள்கையையே கொண்டிருப்பதாக ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது.