Followers

Tuesday, January 29, 2013

குவைத்தில் கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை!


குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை!

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் கேரளா மாநில இளைஞர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

சவூதி அரேபியாவில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி கேரளா இளைஞருக்கு குவைத் சட்டம் மன்னிப்பு வழங்கியுள்ளது.

குவைத்தில் மரணதருவாயிலிருந்த 32 வயதான சசி என்பவரே இவ்வாறு மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சசி, தன்னோடு பணிபுரிந்த சுரேஷ் என்பவரை கத்தியால் குத்திவிட அவர் மரணமாகியுள்ளார். இந்நிலையில், கொலைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சசிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

கிரிக்கெட் போட்டியொன்று தொடர்பான சர்ச்சையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த மரணத்தை ஏற்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சசிக்கு 26 வயதாகும்.

கிரிக்கெட்டில் தனது அறிவை பறி கொடுத்துக கொண்டிருக்கும் இந்த அறிவிலிகள் விளையாட்டை ஏன் இந்த அளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்நிலையில், சசிக்கு மரண தண்டனை விதித்த குவைத் நீதிமன்றம், மரணமானவரின் மனைவி மன்னிப்பு வழங்கினால் மட்டுமே சசியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து கேரளாவின் எதிர்க்கட்சியிலிருந்த உம்மன் சாண்டி, சசியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

குவைத்திலிருந்த தனது நண்பர்களைத் தொடர்புகொண்ட உம்மன் சாண்டி, அவர்கள் மூலம் 10 இலட்சம் ரூபா நிதியைத் திரட்டினார். அத்துடன், ஆந்திர மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியும் 5 இலட்சம் ரூபாவினை வழங்கினார்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதி, சம்பவத்தின் போது உயிரிழந்த சுரேஷின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சசிக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சசி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கான சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.

அந்த சிறைத்தண்டனை முடிந்த நிலையில் அவர் இம்மாதம் விடுதலையானார். நாடு திரும்பிய அவர் ஆலப்புளாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டார்.

அத்துடன், தனது விடுதலைக்காகப் போராடிய கேரளாவின் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரும் தற்போதைய கேரள முதலமைச்சருமான உம்மன் சாண்டியையும் அவர் கடந்த புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நன்றி கூறுவதற்காக சசி, தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் முதலமைச்சர் , தனது கூட்டத்தையும் விரைவில் முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அவமுதலமைச்சரைக் கண்டதும் ஓடிப்போய் அவரை ஆரத்தழுவிக்கொண்ட சசி கண்ணீர் விட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ‘உங்களது முயற்சியினால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன்’ என்றும் கூறி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சசி.

ஒரு சிறந்த முதலமைச்சருக்குரிய எளிமையும் பண்பும் அடக்கமும் ஒன்றாக அமைந்தவராக உம்மண் சாண்டி நமக்கு காட்சியளிக்கிறார். ம்...ம்...நாம் பெரு மூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான் :-)

தகவல் உதவி: நல்ல நண்பன்

http://www.indiansinkuwait.com/ShowArticle.aspx?ID=21849&SECTION=0

முன்பு ரிசானா இஸ்லாமியராக இருந்தும் பாதிககப்பட்ட குடும்பத்தினர் மன்னிக்காததால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டார். சசி இஸ்லாமிய மதத்தை சேராதவராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இறந்தவரின் மனைவி மன்னித்ததால் இன்று மரண தண்டனையிலிருந்து விடுதலையாகி உள்ளதை பார்க்கிறோம். எந்த ஒரு சம்பவத்திலுமே நஷ்டமடைந்தவரின் குடும்பத்தவரின் மன்னிப்பைத்தான் இஸ்லாம் முக்கியமாக பார்க்கிறது. ஏனெனில் அவர்களுக்குத்தான் அந்த இழப்பின் உண்மையான வலி தெரியும். நமது நாட்டில் ஐந்து வருடம் ரப்பர் ஸ்டாம்பாக தனது கடமையை கழிக்கும் ஜனாதிபதிக்கு மரண தண்டனையை நீக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது சரிதானா என்பதை இங்கு சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

-----------------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட அந்த மருத்துவக் கல்லுரி மாணவியின் தந்தை இன்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைப் பார்ப்போம்.

டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தூக்கு தண்டனைக்கு குறைந்து, அவனுக்கு, வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அதை எதிர்ப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறதோ, அதே தண்டனையைத் தான், இவனுக்கும் கொடுக்க வேண்டும்.சிறார் நீதி வாரிய உத்தரவை எதிர்த்து, விரைவில், மேல் முறையீடு செய்யவுள்ளோம். இதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிறார் வயது வரம்பை குறைக்க, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த தேதியின் அடிப்படையில், அவனை, மைனராக, சிறார் கோர்ட் அறிவித்துள்ளது. பள்ளிச் சான்றிதழில், மோசடி செய்ய, வாய்ப்புள்ளது அல்லவா?இவ்வாறு அவர் கூறினார்.

18 வயதானவன்தான் மேஜரானவன் என்று முடிவு செய்தது யார்? மகளை இழந்த இந்த தந்தையின் கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?

இஸ்லாமிய சட்டத்தின்படி குழந்தை பெறும் பக்குவத்தை ஒரு ஆணோ பெண்ணோ அடைந்து விட்டால் அவர்கள் மேஜருக்கான தகுதி வந்து விடுவதாக இஸ்லாம் கூறுகிறது. எனவே தான் 10 வயது தாண்டி விட்டால் உங்கள் குழந்தைகளின் படுக்கையை உங்களிடமிருந்து அப்புறப் படுத்துங்கள் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் நமது நாடோ 18 வயதானவன்தான் மேஜரானவன் என்ற சட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு இந்த தந்தையின் கேள்விக்கு பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. மனிதர்கள் இயற்றிய சட்டங்களில் எங்கெல்லாம் குளறுபடிகள் வருகின்றது என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சிறந்த உதாரணம்.

----------------------------------------------------------



கமலின் சமீபத்திய பேட்டி....


Sunday, January 27, 2013

பிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்பு!

பிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்பு!

இந்த விபத்தில் இறந்த அதிகமானோர் பல்கலைக் கழக மாணவர்களாம். படித்து தனது குடும்பத்தை காக்க வேண்டிய வயதில் இரவு விடுதி கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்று தங்களின் உயிரையும் இழந்து நிற்கிறார்கள்.





நாட்டின் அதிபர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். கிளப்பின் கதவுகள் அனைத்தும் மூடப்படடிருந்ததால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் பிள்ளைகளை தேடி ஒவ்வொரு பெற்றோரும் கதறியபடி அலைந்தது பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



உறவினர்களை இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


-------------------------------------------------------------

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

இஸ்லாத்தை தழுவிய BAE Officer.............!!


BAE SYSTEMS என்ற இங்கிலாந்து நாட்டை தலைமையாக வைத்து செயல்படும் உலகளாவிய நிறுவனமான British Aerospace நிறுவனத்தின் Training Officer உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்,



சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

Saturday, January 26, 2013

அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்! கமல் கவனிப்பாரா?

அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்! கமல் கவனிப்பாரா?



நேற்று வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கிகளின் உரிமங்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். தினமும் துப்பாக்கிகளால் பள்ளி சிறுவர்கள் துளைக்கப்படுவது அந்த நாட்டையே அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. மித மிஞ்சிய சுதந்திரம் சமூகத்தை அமைதியாக வைக்காது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள்.

உலகின் பல நாடுகளில் தீவிரவாதம் பரவ முதல் காரணியாக செயல்படுவது அமெரிக்காதான். பல நாடுகளின் தங்களின் படைத் தளங்களை நிறுவி அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட்டு அந்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தனது மக்களை குஷி படுதத நினைத்தால் விளங்குமா? தவறான வழியில் வந்த பணம் அந்த மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுக்காது பலரை மன நோயாளிகளாக மாற்றியிருக்கிறது. தாய் தந்தையர் சிறு வயதிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதால் ஆதரவின்றி நிர்க்கதியாக நிற்கும் அந்த இளைஞன் சமூகத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் உள்ள கோபத்தை உயிரிகளை எடுப்பதன் மூலம் தீர்த்துக் கொள்கிறான்.

உலகில் தீவிரவாதத்தை அப்பட்டமாக தைரியத்தோடு செயல்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா! ஆப்கன், ஈராக், லிபியா, ஏமன், ஆப்ரிக்க நாடுகள் என்று எங்கு பார்த்தாலும் தற்போது நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா என்றால் மிகையாகாது. ஒழுங்காக ஆட்சி செய்து வந்த தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்து அங்கு ஒரு பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியம் எங்கோ இருக்கும் அமெரிக்காவுக்கு ஏன்? சதாமை பொய் குற்றம் சுமத்தி கீழிறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எனவே கோபப்பட்டு அவன் ஆயுதத்தை தூக்குகிறான். அந்நிய படைகள் மீது குண்டுகளை வீசுகிறான். நம் நாட்டில் அந்நியர் ஆண்டபோது இதனை செய்தவர்களை நாம் தியாகி என்று போற்றவில்லையா?

தாலிபான்கள் செய்யும் அனைத்து செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதே நேரம் அவர்கள் பெயரால் வெளி வரும் செய்திகள் யாவும் வெளியிடுவது அமெரிக்க படைகளே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் சமீப காலம் வரை நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று பலரும் நம்பி வந்தோம். தற்போதுதான் இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இந்துத்வாவினர் உள்ளது தெரிய வந்தது. இவ்வளவு சுதந்திரமாக செயல்படும் நமது நாட்டிலேயே எந்த அளவு உண்மைகள் மறைக்கப்பட்டன என்பது நமக்கு தெரியும். ஆப்கானின் முழு கட்டுப்பாடும் அமெரிக்கா வசம் இருக்கும் போது தாலிபான்களைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முல்லா உமரும் அமெரிக்கா சொல்லும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம். எல்லாம் அமெரிக்கர்களின் கட்டுக் கதை என்ற பெருநாள் செய்தியையும் நாம் முன்பு பார்த்தோம். ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று பொய் கூறி சதாமை வேட்டையாடி அந்த நாட்டை சின்னா பின்னப் படுத்தியதும் அமெரிக்காதான். இனி டாலரில் பெட்ரோல் வியாபாரம் இல்லை. யூரோவுக்கு மாறப் போகிறேன் என்று சொன்ன காரணம் தானே இத்தனை பிரச்னைகளையும் கொண்டு வந்து விட்டது.

எனவே முஸ்லிம் ஆயுதம் தூக்குகிறான் என்று சொன்னால் எதற்காக அவன் தூக்க வேண்டும்? அதன் சூத்திதாரி யார்? என்று தேடி அந்த நாட்டின் உண்மை முகத்தையல்லவா கமல் தோலுரிக்க வேண்டும். மாற்றாக தனது படத்தில் அமெரிக்கர்களை நலன் விரும்பிகள் போலவும் ஆப்கானிய முஸ்லிம்கள் குர்ஆனோடு ஜிஹாதுக்கு கிளம்புவதாகவும் காட்டுவது நேர் எதிர் கருத்துக்கள அல்லவா? மனுஷ்ய புத்திரன் ஒரு பேட்டியில் அமெரிக்கா தனது ஆளுமைகளை நியாயப்படுத்த பல தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்வதாக சொல்லியிருந்தார். தனது ஹாலிவுட் படங்களுக்கு பணத்தை திரட்ட இது போன்ற யுக்திகளை கையாண்டால் பணம் கொட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!

நாங்கள் முன்பு விரும்பிய கமலாக திரும்ப வர வேண்டும். இந்த தீவிரவாதங்களுக்கெல்லாம் மூல காரணியான அமெரிக்க தீவிரவாதத்தையும் அதன் உண்மையான காரணங்களையும் விசுவரூபம் பார்ட் 2 வில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே இழந்த தனது பெயரை கமல் திரும்ப சம்பாதிக்க முடியும். மனித நேயத்தை கமல் உண்மையாகவே விரும்புபவராக இருந்தால் இதனை செய்து முடிக்கட்டும்.

மற்றபடி நாளை படத்தை பார்த்து நீதிபதிகள் திரையிட அனுமதி வழங்கி விட்டால் இதற்கு மேலும் இந்த பிரச்னையை வளர்க்காமல் அதன் போக்கில் விட்டு விடுவதே நல்லது. தியேட்டரில் சென்று பிரச்னை பண்ணுவது சில விஷமிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள சாதகமாக்கி விடும். பெண்கள் குழந்தைகளோடு தியேட்டருக்கு படம் பார்க்க பலரும் வருவர். நாம் நமது எதிர்ப்பை காட்டி விட்டோம். பலரும் உண்மையை புரிந்து கொண்டனர். எனவே தீர்ப்பு கமலுக்கு சாதகமாக வந்தால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சட்டத்துக்கு கட்டுப்படுவதே நமது கடமை. அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் சகோதர பாசத்தோடு பழகி வரும் பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் நம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் பாழ்பட்டு விடக் கூடாது. முஸ்லிம்கள் தங்களின பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக!

Friday, January 25, 2013

விஸ்வரூபத்தால் ஆஸ்கார் வராது! ஆஸ்துமாதான் வரும்!

// அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை? மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.//

இது நண்பர் கணேசனின் பின்னூட்டம். "முஸ்லிம்கள் விமர்சனத்தையே எதிர்க்கிற சுபாவம் உடையவர்கள்" என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். இன்று உலகம் முழுவதும் மேலும் இணைய தளம் முழுவதுமே இஸ்லாத்துக்கு எதிரான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஊடகங்கள் ஒரு சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்தால் அதன் பலன் எது வரை கொண்டு விடும் என்பதற்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சில சம்பவங்களை அனுபவித்திருப்போம். முன்பு இவர்களால் ஊடகம் கைகளில் இருந்தால் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறுகளை சபை ஏற்ற முடிந்தது. எதிர்த்து பதில் கொடுக்க முஸ்லிம்களிடம் எந்த ஒரு ஊடகமும் இல்லை. இன்று வரை அதுதான் நிலை.

ஆனால பத்திரிக்கை, டிவி, சினிமா போன்ற ஊடகங்கள் முஸ்லிம்களிடம் தற்போதும் இல்லை என்றாலும் இணையம் என்ற மகத்தான தகவல் தொடர்பு சாதனம் ஒரு நொடியில் பல லட்சக்கணக்கான மக்களிடம் செய்திகளை சேர்ப்பித்து விடுகின்றது. இத்தனை காலம் இவர்கள் முஸ்லிம்களைப் பற்றி பரப்பி வந்த அவதூறுகள் வரிசையாக சரிந்து வருவதை பார்தது மனம் நொந்து போய் உள்ளார்கள். அந்த ஆற்றாமையால் வரக் கூடிய வார்த்தைகளே விமரிசனத்தை எதிர்க்கிறோம் என்பது.

நாம் என்று விமரிசனத்தை எதிர்த்தோம். தமிழகத்தில் எந்த ஒரு மதமாவது முஸ்லிம்கள் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியைப் போன்று எங்காவது நடத்தியதுண்டா? தமிழகத்தின் அனைத்து மாவடடங்களின குக் கிராமங்களை கூட விட்டு விடாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்துக்களும் கிறித்தவர்களும் நாத்திகர்களும் எவ்வளவு கோபம் வரக் கூடிய கேள்விகளைக் கேட்டாலும் புன் சிரிப்பு மாறாது முஸ்லிம்கள் தரப்பு பதிலளித்துக் கொண்டிருக்கிறது. கேள்வி கேட்பவரிடம் என்ன கேள்வி என்று முன்பே கேட்டு வாங்கிக் கொள்வதும் இல்லை. இந்த அளவு அனுமதி கொடுக்கப்பட்டு தமிழகத்தில் எங்காவது வேறுமதங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியது உண்டா? 'இந்து ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'கிறித்தவம் ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'நாத்திகம் ஓர் இனிய மார்க்கம்' என்று நிகழ்ச்சிகளை நீங்கள் எங்காவது நடத்தியது உண்டா? உங்களால் இவ்வளவு சுதந்திரமாக மாற்று மதத்தவர்களை கேள்வி கேட்க வைக்க முடியுமா? அவர்கள் வைக்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லத்தான் முடியுமா? அத்தனை இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் மறுஒலிபரப்பும் செய்யப்பட்டு உலக மெங்கும் நிகழச்சிகள் போய் சேருகின்றன. தீவிரவாதம், குழந்தை திருமணம், ஜிஹாத், பலதார மணம், முகமது நபி பல திருமணங்கள் செய்தது, தற்போது உலகில் நடக்கும் குண்டு வெடிப்புகள், இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகள் என்று ஒன்று விடாமல் ஹிந்துக்களையே கேள்விகள் கேட்க வைத்து நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே எங்களைப் பார்த்தா சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்கிறீர்கள்?

//எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள். //

அடுத்து இது சார்வாகனின் பிதற்றல். லத்தீப், சமது காலங்களில் முஸ்லிம்களிடம் கல்வியறிவு இல்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. வீட்டுக்கு ஒரு பட்டதாரி வருடந்தோறும் வந்து கொண்டிருக்கிறார். சொத்தை விற்றாவது குழந்தைகளை படிக்க வைக்கும் மனப்பாங்கு முஸ்லிம்களிடம் தற்போது உள்ளது. இனியும் திராவிடம் பேசியோ, நோன்பு கஞ்சி குடிததோ, மணி மண்டபம் கட்டியோ, மீலாது மேடைகளில் வீர வசனம் பேசியோ இஸ்லாமியர்களின் ஓட்டை வாங்க முடியாது.

மேலும் எண்ணெய் வளம் இருக்கும் வரைதான் இந்த வஹாபிய எழுச்சிகளெல்லாம். எண்ணெய் தீர்ந்து விட்டால் வஹாபியமும் படுத்து விடுமாம். சார்வாகனுக்கு வரலாறு தெரியவில்லை என்பதால் நாம் அவர் மேல் கோபம் கொள்ள முடியாது. இஸ்லாமிய வரலாறு மிக எழுச்சியாக இருந்த காலமெல்லாம் முஸ்லிம்கள் வறுமையில் இருந்த காலங்களே! இரண்டு பேரிச்சை மழங்களை தின்றும், காய்ந்த இலைகளை கசக்கி தண்ணீரில் நனைத்து குடித்தும் வாழ்ந்த காலங்களில் இஸ்லாம் எழுச்சியோடு இருந்தது. என்று அரபு நாடுகளில் பெட்ரோல் வந்து பணம் புழங்க ஆரம்பித்ததோ அன்று இஸ்லாம் தனது எழுச்சியை சிறிது இழக்க ஆரம்பித்தது. சார்வாகன் சொல்வது போல் அரபு நாடுகளில் பெட்ரோல் தீர்ந்தால் தவ்ஹீது (வஹாபி) இயக்கம் முன்னை விட மிக வீரியமாக தனது செயல்பாடுகளை உலகமெங்கும் கொண்டு வரும்.

யாருக்குமே கையில் பணம் இருந்தால் வம்பு தும்புக்கு போகாமல் தனது சொத்துக்களை காக்கவே முயற்சிப்பர். அதுதான் இன்று உலக ரௌடி அமெரிக்காவுக்கு கேட்பதை கொடுக்கும கட்டாயத்துக்கு சில நாடுகள் தள்ளப்படுகின்றன.

அடுத்து இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதுதான் நமது குறிக்கோள் என்று பொய்யான பரப்புரையை பலர் பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய ஆட்சி அமைப்பது என்பது ஒரு முஸ்லிமுக்கு இடப்பட்ட கட்டளை அல்ல. ஐந்து முக்கிய கடமைகளில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதும் வராது. இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரித்துக் கொண்டு போன பாகிஸ்தானின் இன்றைய நிலையை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குர்ஆனோ, ஹதீதுதுகளோ இவ்வாறு ஆட்சி அமைக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு கட்டளையும் இட வில்லை. யதார்த்தத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள நாடுகளை விட சிறுபான்மையாக உள்ள நாடுகளில்தான் முஸ்லிம்கள் தங்களின் கடமைகளை சரிவர செய்து வருவதைப் பார்க்கிறோம். எனவே இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்ற பீதி தேவையில்லாத ஒன்று.

//மிதவாதிகள் எப்போதுமே இவ்வாறான கடும்போக்கு கட்சிகளிடம் இருந்து விலகி நிற்பதே சாலச் சிறந்தது. இல்லை என்றால் மூளைச் சலவை செய்தும், போலி வாக்குறுதிகளைக் கொடுத்தும் பயன்களை அனுபவித்து விட்டு இயலாக் கட்டத்தில் நட்டாற்றில் அதோகதியாக விட்டுவிட்டு மறைந்துவிடுவார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்குத் தேவை தொலைநோக்கு சிந்தனையும், சமத்துவம், ஜனநாயகம் மீது நம்பிக்கைக் கொண்ட காயிதே மில்லத் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் தான். //

'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்'. அது போல் முஸ்லிம்களின் அரசியல் எதிர் காலத்துக்கு இக்பால் செல்வன் ஆலோசனை வழங்குகிறார். அதிலும் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற கட்சிகளில் சில ஆயிரம் பேர்தான் ஆதரவாளர்கள் என்று கூறுவதை இவரது சகாக்களான ராஜ நடராஜனோ, சார்வாகனோ கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சிறிய போராட்டத்துக்குக் கூட எந்த ஆரவாரமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விடுவதை நமது நாட்டு உளவுத் துறை நன்கு அறியும். கனடாவில் உட்கார்ந்து கொண்டு பொஃபேக்களில் தனது பைங்கிளிக்காக காத்துக் கொண்டிருக்கும் இக்பால் செல்வனுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா! :-)

முஸலிம்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள், சிறந்த அரசியல் தலைமைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறி வருகிறார்கள், சமீப காலமாக இந்து முஸ்லிம் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இன விடுதலை அடைய பெரியாரின் வழி காட்டுதலான இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஆதிக்க சாதிகளக்கு பொருக்குமா? இந்துத்வாவுக்கு பொருக்குமா!

எனவே சார்வாகன் என்ற பெயரிலும், இக்பால் செல்வன் என்ற பெயரிலும், நச்சுப் பாம்புகள் படமெடுத்து வருகிறது. விஷப் பல்லை எந்த ரீதியில் பிடுங்கி சமூகத்தில் அமைதியை கொண்டு வருவது என்பது முஸ்லிம்களுக்கும் இந்து நடுநிலையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதை கச்சிதமாக செய்தும் முடிப்பர்.

விஸ்வரூபம் போராட்டத்துக்கு பிறகாவது நமது சென்சார் துறை சற்று விழித்துக் கொண்டு இது போன்ற பிரச்னைக்குரிய படங்களை வெளியிடுவதை தடை செய்ய முன்வர வேண்டும். இஸ்லாமியரகளை எதை சொன்னாலும் பொருத்துக் கொண்டு செல்வார்கள் என்ற காலம் மலையேறி விட்டது. இடைக்காலத் தடை இந்த படத்துக்கு வந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு தனது படத்தை கமல் வெளியிட்டுக் கொள்ளட்டும். அமெரிக்காவை புகழ்ந்தும் முஸ்லிம்களை இகழ்ந்தும் பட்ம் எடுத்தால் ஆஸ்கார் உடனே கிடைத்து விடும் என்று இந்த உலக நாயகனுக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போல. அதான் இந்த அம்பி அவசப்பட்டுடுத்து.

'முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்' என்று முன்பு பெரியார் சொன்னது தற்போது ஞாபகத்தில் வருகிறது.

அவதூறுகளை படமாக எடுத்தால் ஆஸ்கார் வராது அம்பி! படம் நஷ்டமாயிடுத்தே என்று ஆஸ்துமாதான் வரும்! :-) இனி பார்த்து சூதனமா நடந்துக்கோ...வர்ட்டா...

டிஸ்கி: சில வேலைகள் காரணமாக இரண்டு நாள் இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. உடன் போனிலும், மெயிலும் பல நாடுகளிலிருந்து 'என்ன ஆச்சு பாய்! உடம்பு சரியில்லையா' என்று அன்போடு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி! நலமுடன் உள்ளேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!




Tuesday, January 22, 2013

உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

'ஆஸ்கார் வாங்கி இந்தியாவை தலைநிமிர வைக்கப் போகிறார் என்று முன்பு ஒரே அமர்க்களப்படுத்தினார்கள். ஆனால் வெளியில் சொல்லாமல் அமைதியாக சென்று ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ரஹ்மான் கொண்டு வந்து விட்டார். தற்போது 'உலகநாயனே' என்று பலராலும் போற்றப்பட்டு 'ஐநாவும் உன்னை அழைக்கும்' என்றெல்லாம் ஏகத்துக்கும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். திறமை இருந்து அந்த அங்கீகாரங்களெல்லாம் கிடைத்தால் இந்தியன் என்ற முறையில் எல்லோரும் பெருமைப்படலாம்.

ஆனால் இவரது தொடர்ச்சியான பல படங்கள் ஆன்மீகத்தை குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. இவர் சார்ந்த இந்து மதத்தில் உள்ள குறைகளை படங்களில் சொல்வது அவருக்கு ஓரளவு உரிமை இருப்பதாக சொல்லலாம். ஆனால் இஸ்லாத்தை தனது படங்களில் நுழைக்கும் பொது உண்மை நிகழ்வுகளை கதைக் கருவாக கொண்டால் யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து இஸ்லாமிய அமைப்பினருமே ஒட்டு மொத்த குரலில் 'இந்தியாவில் இதுவரை இந்த அளவு முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு படம் வந்ததில்லை' என்று சொல்லும் போது அந்த படத்தின் தரத்தைப் பற்றி நாம் ஓரளவு கணித்து விடலாம்.

இவருடைய அப்பா சுதந்திர போராட்டக் காலத்தில் வெள்ளையர்களால் சிறையில் அடைக்கப்பட்டபோது அதே செல்லில் ஹாஸன் என்ற ஒரு முஸ்லிம் பழக்கமாகி இருக்கிறார். சிறைக்கு வெளியேயும் அந்த நட்பு தொடர்கிறது. அவரது அன்பின் ஞாபகார்த்தமாக தனது மூன்று குழந்தைகளுக்கும் சந்திர ஹாஸன், சாரு ஹாஸன், கமல ஹாஸன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் இவரின் தந்தை. தந்தை இவ்வாறு இருக்க பிள்ளையோ இஸ்லாத்தை எந்த வழியிலாவது கொச்சைப் படுத்த வேண்டும்: அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தனது படத்தில் முஸ்லிம்களை மிகக் கேவலமாக சித்தரிக்க முயல்கிறது. தனது குழந்தைகளுக்கு ஒரு இஸ்லாமியரின் பெயரை வைக்கும் அளவுக்கு அந்த முஸ்லிம் கமலின் தந்தையோடு அன்போடு பழகியிருந்துள்ளார். அதேபோன்று தமிழக கிராமங்களை சென்று கொஞ்சம் பாருங்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் உறவு முறை யோடு அன்போடு நட்பாக பழகி வருகின்றனர். அது பொருக்கவில்லையா தங்களுக்கு. இவ்வாறு சமூகங்களுக்கிடையே பிணக்கை உண்டு பண்ணித்தான் கலை சேவை செய்ய வேண்டுமா கமலஹாஸா! சிந்திக்க மாட்டீரா!

பிஜேபியின் ஊது குழலாக இருந்த இவரது துணைவி கவுதமியின் பேச்சை கேட்டு இப்படி கதையை வைத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். இந்த கூத்தாடிகள் பணம் பண்ணுவதற்காக எதையாவது சிக்கலான பிரச்னையை கையிலெடுத்து காசு பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். இது போன்ற படங்களை நமது சென்சார் எவ்வாறு அனுமதிக்கிறது? ஒரு சமூகத்தை குற்றவாளிகளாக சிததரித்தால் அதனால் சமூகங்களில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்கு தெரியாதா?

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் முஸ்லிம்களை கைது செய்வது காவல் துறையின் வேலையாக இருந்தது. 10 வருடங்கள் 20 வருடங்கள் விசாரணைக் கைதிகளாகவே இருந்து பின்னர் விடுவிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போது உண்மை குற்றவாளிகள் அனைவருமே இந்து பாசிச அமைப்புகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று புலனாய்வு சொல்கிறது. வரிசையாக உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று கூட நமது உள்துறை அமைச்சர் இந்திய நாட்டின் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னாலும் ஆர்எஸஎஸ, பிஜேபி உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு ஆதாரங்களும் உள்ளதாக சொல்லியிருப்பது பலரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு குற்றம் எவனோ செய்திருக்க அதன் பலனை முஸ்லிம்கள் இதுவரை அனுபவித்தது பத்தாதா? இன்னுமா முஸ்லிம்களின் ரத்தம் வேண்டும்?

தனது படத்தில் இந்துத்வாவாதிகள் மாலேகானிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸிலும், மக்கா மஸ்ஜிதிலும் எவ்வாறு குண்டு வைத்தாரகள். எவ்வாறு அதை காரணமாக வைத்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டனர் என்ற கதையை எடுக்க தைரியம் உள்ளதா? அப்படி எடுத்தால் படத்தை முதலில் சென்சார் போர்டுதான் அனுமதிக்குமா?

சமூகத்தை சீர்திருத்த வருபவன் தனது சொந்த வாழ்வில் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இந்த யோக்கிய சிகாமணி தனது சொந்த வாழ்விலாவது தூய்மையை கடைபிடித்தது உண்டா? வாணி கணபதி போய், சரிஹா போய் தற்போது உள்ளது கவுதமி. கவுதமியையும் இவர் இதுவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. 'உங்களுக்கு ஆண்மை இல்லையாமே?' என்று ஒரு நிருபர் குதர்க்கமாக கேட்க 'என்னோடு கூட நடித்த நடிகைகளிடம் கேட்டுப் பாருங்கள்' என்று அருள் வாக்கு சொன்னவர்தான் இந்த ஒலக நாயகன். இந்த சூழலில் வளர்ந்த இவர் மகள் இன்று எந்த அளவு உடையை களைய வேண்டுமோ அந்த அளவு களைந்து கலைச் சேவை செய்து வருகிறார். மகளின் திறமையைக் கண்டு தகப்பனுக்கு அவ்வளவு பூரிப்பு. இப்படி தனது சொந்நத வாழ்விலேயே அநேக அசிங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் இவர் சமூகத்தை எந்த முகத்தோடு திருத்த வருகிறார்? திருத்துவதாக இருந்தாலும் உண்மை நிகழ்வுகளை அல்லவா கதைக் கருவாக அமைக்க வேண்டும்? ஏற்கெனவே இங்குள்ள பத்திரிக்கைகள் முழுவதும் காவி மயமாகி முஸ்லிம்களை தூற்றியே எழுதி வருகின்றன. தற்போதுதான் தகுந்த பதிலடி கொடுக்க ஆரம்பித்தவுடன் தினமலரும், தினமணியும் தங்கள் வாலை சுருட்டிக் கொண்டு நிதானமாக செய்திகளை தருகின்றன. இந்த நிலையில் இந்த உலக நாயகன் திரும்பவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தனது அரிப்பை தீர்த்து கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

முஸ்லிம்கள் வன்முறைக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காமல் சட்டத்தின் துணை கொண்டு இந்த படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க முயற்சிக்க வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் இதனை கமலால் செய்து விட முடியும். முடியவில்லை என்றால் இன்னும் ஒரு வாரம் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யலாம். ஒரு கலை வியாபாரியான கமல் தனது படத்தின் சில காட்சிகளை மாற்றியே தீர வேண்டும் என்று உரிமையோடு கோரிக்கை வைக்கிறோம்.

--------------------------------------------------------

அடுத்து இவர் உலக நாயனாம். ஹாலிவுட் படங்களையும் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக கேள்விப்பட்டேன். ஆனால் இவரின் அதிகமான தமிழ் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுட்டவையாகவே உள்ளன. ஒரு கால் ஹாலிவுட் படங்களை இயக்க ஆரம்பித்தால் நம் தமிழ்நாட்டின் பழங் கதைகளையெல்லாம் சுட்டு மோல்டு பண்ணி ஆஸ்கார் வாங்க முயற்சிப்பாரோ...

சமீபத்தில் இணையத்தில் உலா வந்தபோது கமல் எந்தெந்த படங்களிலிருந்தெல்லாம் கதைகளை சுட்டுள்ளார் என்ற விபரத்தைப் பார்த்தேன். மேலதிக தகவலுக்காக அதனைத் தருகிறேன்.


1. பஞ்ச தந்திரம் – Very bad things

2. அன்பே சிவம் – Planes, traines & automobiles

3. அவ்வை சண்முகி – Mrs. doubtfire

4. தெனாலி – What about Bob?

5. மஹாநதி – Hard core

6. இந்திரன் சந்திரன் - Moon over parador

7. மகளிர் மட்டும் – 9 to 5

8. சதிலீலாவதி – She devil

9. சூரசம்ஹாரம் – Witness

10. நள தமயந்தி – Green card

11. நம்மவர் – The Principal

12. ராஜ பார்வை – Butterfiles are free

13. குணா – Tie me up, Tie me down

14. பம்மல் கே சம்பந்தம் – The Bachelor

15. மன்மதன் அம்பு – Romance on the high seas

16. விருமாண்டி – Rashomon, Life of David Gale

17. நாயகன் – God father

18. வாழ்வே மாயம் – Premabhisekham

19. நீல மலர்கள் – Anuraag

20. உன்னைப் போல் ஒருவன் – A Wednesday

21. குருதி புனல் – Drohkaal

22. வசூல் ராஜா எம்பிபிஎஸ் – Munnabhai m.b.b.s

23. எனக்குள் ஒருவன் – Karz (in turn from the reincarnation of Peter proud)

ஹாலிவுட் படங்களையும் மற்ற மொழி படங்களையும் எவ்வாறு திறமையாக காப்பி அடிப்பது என்பதற்கு வேண்டுமானால் ஒரு ஆஸ்கார் விருதை உருவாக்கி அதற்கு நமது கமலை பரிந்துரைக்கலாம். :-)

நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலியையும், ராஜ பார்வையையும், மூன்றாம் பிறையையும் பலமுறை பார்த்துள்ளேன். அந்த அளவு அபிமானத்துக்குரிய நடிகர். தற்போது இணையத்தில் எழுத வந்தவுடன் சினிமா அதிகம் பார்ப்பதும் இல்லை. இன்றும் இவர் மேல் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை பொய்க்காமல் இருக்க ஆட்சேபகரமான சீன்களை நீக்கி விட்டு ஆஸகார் ம்ட்டுமல்ல ஐநாவுக்கே சென்று வரட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை.