Followers

Friday, August 29, 2014

நமது தேசிய கீதத்தின் பொருளை தெரிந்து கொள்வோமா!



ஜன கன மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

இந்தியத் திரு நாடே! இந்திய மக்களின் வாழ்வுக்குக் காரணமான
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்,

வங்காளத்தையும், இன்பத்தால் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;

இந்தியக் கடலலைகளால் போற்றப்படுகிறது:.
அவை உனது பெருமையை போற்றுகின்றன: நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியர்களின் வாழ்வுக்குக் காரணமான என் தாய் நாடே...
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

தகவல் உதவி: விக்கி பீடியா

நமது தேசிய கீதத்தை கென்யர்கள் பாடினால் எப்படி இருக்கும்? :-)


3 comments:

Anonymous said...

சுவனபிரியர், இந்த பாடலும் பொருளும் தான் ஏற்கனவே பாட புத்தகங்களில் படித்து வீட்டோமே. அதை என்ன நோக்கத்திற்காக பதிவிட்டிருக்கிறீர்கள் என்று விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். மேலும் கொரியர்கள் எதற்காக இந்திய தேசிய கீதத்தை பாட வேண்டும்.

suvanappiriyan said...

//சுவனபிரியர், இந்த பாடலும் பொருளும் தான் ஏற்கனவே பாட புத்தகங்களில் படித்து வீட்டோமே. அதை என்ன நோக்கத்திற்காக பதிவிட்டிருக்கிறீர்கள் என்று விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். மேலும் கொரியர்கள் எதற்காக இந்திய தேசிய கீதத்தை பாட வேண்டும். //

ஒரு நாளில் 1500 பேர் ப்ளாக்கரில் எனது பதிவுகளை படிக்கின்றனர். முக நூல் கணக்கு தனி. எனவே படிக்கும் அனைவருக்குமே முன்பு படித்தது ஞாபகம் இருக்குமா என்று சொல்ல முடியாது. எனவெதான் இந்த ஞாபக மூட்டல்.

கென்யர்களே இவ்வளவு ஆர்வமாக பாடும் போது இந்தியர்கள் பலருக்கு நமது தேசிய கீதத்தை பிழையின்றி பாடவே தெரியாது. அதன் பொருளும் தெரியாது. இந்த காணொளியைப் பார்த்தாவது தங்களை திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்பதால்தான் இந்த பதிவு.

ரூபன் புஷ்பராஜ் said...

தாயக என்று உச்சரிப்பதற்கு பதிலாக நாயக என்று உச்சரித்து பாடுகிறார்கள். தவறை திருத்திக் கொள்ளுங்கள்.